பவித்ராவால் சிரிப்பை அடக்க முடியவில்லை.
இன்டெர்காமில் பேசின ஆள் சரியான மாங்காய் மடையன் போலிருக்குது. நான் சொன்னதுமே என்ன ஏதுன்னு கேட்காமே ரிஸீவரைக் கீழே வச்சிட்டானே. இப்போ அக்கா இருந்தால் எவ்வளவு நல்லா இருக்கும். அக்காகிட்ட இதை சொன்னா அவளாலே சிரிப்பை அடக்கவே முடியாது.. ஆமா... இன்னும் அக்காவைக் காணலியே...
கேட்வாசலில் ஒலித்த டூ வீலர் ஹார்ன் சத்தத்தைக்கேட்டு ஓடிவந்து கதவை திறந்த செக்யூரிட்டி அதிர்ச்சியில் உறைந்து போனான் .
"மேம்.. மேலே...."
"மேலே சின்ன மேடம் இருப்பாங்க.." என்று சொல்லிவிட்டு மாடிக்கு ஓடி பவித்ராவை அழைத்துக்கொண்டு கீழேவந்து டூ வீலரில் அங்கிருந்து கிளம்பிப் போகும் வரை நடந்த அத்தனையும் செக்யூரிட்டி வாய் மூடிய நிலையில் வேடிக்கை பார்த்துக் கொண்டிருந்தான்.
அப்படின்னா ரமேஷ்ஸாரைப் பத்தி விசாரிச்சவங்க கிட்டே பேசினது பேபிம்மா தானா ?
இதை மேம் கிட்டே சொல்லலாமா? நான் உள்ளே இருக்கிறேனா இல்லையா ங்கிறது கூட தெரியாமல்தான் நீ டியூட்டி பார்க்கிறியானு செருப்பால் அடிக்கிற மாதிரி கேட்பாங்களே.. இப்போ என்ன செய்றது? நடந்ததை சொல்லலாமா ? வேண்டாம்.. அவங்களுக்கு விஷயம் தெரிஞ்சு கேட்கிறப்ப எதையாவது சொல்லி சமாளிக்கலாம்.
"அக்கா.. டாடி எங்கே? ரெண்டுபேரும் ஆடிட்டரைப்பார்க்க போயிருக்கிறதா ட்ரைவர் சொன்னார் "
"ட்ரைவர் அங்கிள்னு சொல்லணும்னு சொன்னேன்தானே?"
"ஓகே ..ஓகே. ட்ரைவர் அங்கிள் சொன்னார். நீ மட்டும் வந்திருக்கிறே! டாடி எங்கே ? "
"டாடிக்கு உடம்பு சரியில்லே. வீட்டில் இருக்கிறார் "
"டாடிக்கு என்ன ?"
"செஸ்ட் பெயின் "
"அக்கா."
"வீட்டுக்கு போனதும் பேசிக்கலாம். கம்முனு வா"
வீட்டு வாசலுக்கு வண்டி வந்து நின்றதும் குதித்து இறங்கிய பவித்ரா ஸ்கூல் பேக்கைக்கூட எடுக்காமல் டாடியின் ரூமுக்கு ஓடினாள் .
அவள் பின்னாலேயே, "பவி" என்று கத்தியபடி வேகமாக வந்து தடுத்து நிறுத்தி "டாடிக்கு மெடிசின்ஸ் கொடுத்திருக்கிறாங்க. தூங்கறார். டிஸ்டர்ப் பண்ண கூடாது. டாக்டர்ஸ் சொல்லி இருக்கிறாங்க!"
இதைக்கேட்டதும் பெருங்குரலில் அழ ஆரம்பித்துவிட்டாள் பவித்ரா..
"லூஸ் .. ஏன்டி அழறே ? ட்ரீட்மெண்ட் கொடுத்திருக்காங்க. இன்னும் ஒரு வாரத்தில் ரொட்டின் ஒர்க் பண்ண ஆரம்பிச்சிடுவார். அதுவரை யாரும் அவரை டிஸ்டர்ப் பண்ணாமே பார்த்துக்கணும் .. ஓகே?"
"ஓகே"
"டிரஸ் சேஞ்ச் பண்ணிட்டு வா. டிபன் ரெடி பண்ணி தரேன் "
"வேண்டாம் "
"ஏன்?"
"பசிக்கலே .. டாடி எழும்பவும் டாடியோடு சேர்ந்து சாப்பிடலாம். வா அக்கா.. நாம டாடியைப் பார்க்கலாம்"
உன்னைப்பார்த்தாலே டாடி டென்சனாயிடுவாரே.. அவர் கவலையே உன்னை பத்தித்தானே என்று சொல்ல நினைத்தாலும் சொல்ல முடியவில்லை.
"சரி.. வா.. அவர் தூங்கிட்டு இருந்தா எழுப்பக்கூடாது "
"சரி "
கதவு திறக்கும் சத்தம் கேட்டதும் வாசலைப் பார்த்த டாடி, பவித்ராவை நோக்கி கைகளை நீட்டினார்.
"டாடி " என்று சொல்லி அவர் கழுத்தைக் கட்டிக்கொண்டு பவித்ரா தேம்பிய போது டாடியும் கண்கலங்கினார்.
"உங்களுக்கு என்ன டாடி? ஆடிட்டர் ஆபீஸ் போயிருக்கிறதா சொன்னாங்க. அது பொய்யா ?"
"நான்தான் சுமியிடம் அப்படி சொல்லசொன்னேன். ஸ்டாப்புங்க தேவை யில்லாமே டென்சன் ஆவாங்க .. அதை அவாய்ட் பண்ணத்தான்.. சாப்பிட்டியா ?"
"உம் "
"எனக்கு ஒண்ணுமில்லே.. நீ போய்த்தூங்கு.. சுமி.. அவளை தூங்கப்பண்ணிட்டு என்னோடு வந்து பேசிட்டு இரு"
"நானே போய்த் தூங்கிக்கறேன்.. அக்கா நீ டாடிக்கு துணையா இரு " என்று சொல்லி விட்டு கண்களைத் துடைத்தபடி வெளியேறிய பவியைப் பார்த்து டாடி கண்கலங்கினார்.
கதவைத் தாளிட்டு விட்டு டாடி அருகில் வந்து உட்கார்ந்ததும், "சுமி, நான் சொல்லப் போறத பொறுமையா கேளு.. டென்சன் ஆகாதே.. நான் இன்னும் ரொம்ப நாள் இருக்க மாட்டேன்." என்றார் டாடி .
"நோ. டாடி ... அப்படில்லாம் சொல்லாதீங்க.. ட்ரீட்மெண்ட் எடுக்கறீங்க. யூ வில் பீ ஆல்ரைட் வித் இன் எ வீக்ஸ் டைம் "
"அது நம்மள நாமே ஏமாத்திக்கிற மாதிரி..பவித்ரா குழந்தை மாதிரி. அவளை கோழிக்குஞ்சை கோழி பாதுகாக்கிற மாதிரி காப்பாத்தணும். நீ கெட்டிக்காரி.. எந்த சூழ்நிலையில் எப்படி செயல்படணும்னு உனக்கு சொல்லித்தர வேண்டிய அவசியமில்லே.ஆனா அவ அப்படி இல்லே. எப்பவும்விளையாட்டு.. எல்லாமே விளையாட்டுதான் .. எவ்வளவு சீக்கிரம் உனக்கு கல்யாணம் பண்ணி வைக்க முடியுமோ அவ்வளவு சீக்கிரமா அதை நடத்தி முடிக்கணும். நீ வேறே வீட்டுக்கு போனால் கூட பவியை நீ இப்போ எப்படி கேர் எடுத்து பார்க்கிறியோ அதே மாதிரி பாத்துக்கணும்."
"என்ன டாடி.. நாங்க நல்லா இருக்கிறதை நீங்க பார்க்கத்தான் போறீங்க "
"இல்லேம்மா.. நாளைக்கு முதல் வேலையா அந்தப் பையன் நரேந்திரனுக்கு போன் பண்ணி அவங்க அப்பாகிட்டே பேசி அவரை இங்கே அழைச்சிட்டு வர சொல்லு"
"டாடி.. அவர் இப்போ இங்கே இல்லை.. வெளிநாட்டுக்கு பிசினெஸ் விஷயமா போயிருக்கிறதா ரெண்டு நாள் முன்னாடி நரேன் சொன்னார்."
"போச்சா... சரி ... வந்ததும் என்னை வந்து பார்க்க சொல்"
"சரி டாடி "
இப்போதுதான் க்ளினிக் வரை போய்விட்டு வந்தமாதிரி இருக்கிறது. அதற்குள் முப்பதுநாள் ஓடிவிட்டது என்றால் நம்பமுடியவில்லை.
டாடி ஆபீஸ் பக்கம் வரக்கூடாது என்று 144 போட்டாச்சு. டாடி இடத்தில் உட்கார்ந்து வேலை பார்க்கும்போதுதான் அவர் எந்த அளவுக்கு டிப்ளமேட்டிக் ஆக ஒர்க் பண்ணிக்கொண்டு இருந்திருக்கிறார் என்பது புரிந்தது.
அட்டெண்டென்ஸ் பார்க்கும்போதுதான் ரமேஷ் இருபது நாட்களுக்கும் மேல் வராதது தெரிந்தது.
இது எப்படி கவனத்துக்கு வராமல் போனது என்ற கேள்வி வந்த அதே நிமிடம், இந்த வேலையையெல்லாம் டாடியே கவனித்துக் கொண்டு இருந்ததால் இந்த மாதிரி விஷயங்கள் பெரிதாக மைன்ட்டில் ரெக்கார்ட் ஆகியிருக்கவில்லை என்ற உண்மையும் உரைத்தது.
அவருக்கு பெண் பார்ப்பதாக சொன்னாரே ... ஒருவேளை மேரேஜ் செட்டில் ஆகி அவர் ஊரிலேயே தங்கிட்டாரா ? அப்படின்னா பத்திரிகை வந்திருக்குமே என்ற எண்ணத்தில் அதை மேனேஜருக்கு போன் செய்து கேட்டபோது "அவர் கிட்டே இருந்து எந்த தகவலும் இல்லை. யாரைக் கேட்டாலும் தெரியாதுனு தான் சொல்றாங்க.. வேணும்னா போலீஸ் விசாரிக்க சொல்லலாமா ?" என்று எதிர் கேள்வி கேட்டார் மேனேஜர்.
"வேண்டாம்... இந்த அளவுக்குக்கூட பொறுப்பில்லாமல் ஓடிப்போறவங்களைப் பத்தி நாம துப்பு துலக்கணும்ங்கிற அவசியம் இல்லை " என்று பேச்சுவாக்கில் சொன்னாலும், ரமேஷை பற்றின கவலை இருக்கத்தான் செய்தது.
அதனால்மீண்டும் மேனேஜருக்கு போன் போட்டு எதற்கும் ஒரு மெமோ அவர் வீட்டு அட்ரெஸ்க்கு அனுப்பி வைங்க என்றபோது, "ஒருத்தர் மூணு நாளைக்கு மேல் வராட்டா... வராதது குறித்து விளக்கம் சொல்ல சொல்லி மெமோ அனுப்பற வழக்கம் உண்டு. அப்படி அனுப்பின மெமோ ரிட்டர்ன் ஆயிட்டுது மேடம்.. அதை கோட் பண்ணி ஸார் டேபிளுக்கு நான் ஏற்கனவே ஃபைல் அனுப்பி இருக்கிறேன். அது ஸார் ரூமில்தான் இருக்கும்.. ஸார் ஒருவாரத்தில் வந்திடுவார்னு எதிர்பார்த்தோம். அதான் அவர் ரூமில் பியூன் ஃபைலை வைக்க சொன்னேன்"னு மேனேஜரிடம் இருந்து கேஷுவல் ஆக பதில் வந்தது.
இனிமேல் பேசிப் பயனொன்றும் கிடையாது.
கார் ஷெட் பக்கமிருந்து இனம்புரியாத பேச்சுக்குரல்கள் ஒரே சமயத்தில் கேட்டது.
ஜன்னல் வழியாக எட்டிப்பார்த்தாள்.
தலையிலிருந்து ரத்தம் வடிய சண்டைக்கோழி ரமேஷ் நின்றுகொண்டிருக்க அவனைச் சுற்றி நின்ற லேபர்ஸ் ஆளாளுக்கு ஒரு கட்டளை கொடுத்துக் கொண்டிருந்தனர். அவர்களின் நடுவில் பவித்ரா நிற்பது தெரிந்தது. இந்தப் பெண்ணுக்கு அங்கே என்ன வேலை என்ற கேள்வி எழுந்த நேரத்தில், பவித்ரா செய்த காரியங்கள் ஆச்சரியத்தில் ஆழ்த்தின.
"ரமேஷ் அண்ணா.. பயப்படாதீங்க. ஒண்ணுமில்லே... சின்ன காயந்தான் .. லோட் இருக்கிறப்ப கவனம் வேண்டாமா? வாட்ச்மேன் அங்கிள்.. அண்ணா வுக்கு சூடா ஒரு கப் டீ கொண்டு வந்து கொடுங்க..ட்ரைவர் அங்கிள்.. நீங்க அண்ணாவை டாக்டர்கிட்டே அழைச்சிட்டு போங்க" என்று சொல்லிக் கொண்டி ருந்தாள்.
மீன் குஞ்சுக்கு நீந்தக் கற்றுக்கொடுக்க வேண்டுமா? என்று நினைத்தபோது பெருமையாக இருந்தது.
ஆனால் அந்த பெருமை.. சந்தோசம் அதிக நாள் நீடிக்கவில்லை.
வானவில் மாதிரி தோன்றிய வேகத்திலேயே மறைந்து விட்டது.
------------------------- தொடரும் ---------------------------

No comments:
Post a Comment