முருகய்யனின் செருப்பு சத்தம் கேட்டதுமே வாசலுக்கு ஓடி வந்தாள் வள்ளி.
"வந்திட்டீகளா மாமா! நாளைக்குத்தான் வருவீகன்னு நெனச்சிட்டு இருந்தேன். வாங்க வாத்தியாரய்யா .. தாகத்துக்கு என்ன சாப்பிடுதீக "
"நீ என்ன குடுத்தாலும் சரிதான்."
தலைச்சுமையை கீழே இறக்கியதுமே முருகய்யன் கேட்ட முதல் கேள்வி, " பட்டணத்து தம்பி எப்படி இருக்காக ? வேணுங்கிறத செஞ்சு குடுக்கிறே தானே ? ஆவலாதி ஒண்ணும் இல்லையே ?" என்பதுதான்.
"முருகய்யா .. நீ அந்த தம்பி பத்தி அன்னிக்கே சொன்னே. ஆளு கண்ணிலயே காண்களையே ? வீட்டில் இருக்குதா இல்லாட்டா வெளியில் போயிட்டாகளா ? நம்ம ஊர் தண்ணி சாப்பாடெல்லாம் தம்பிக்கு ஒத்துக்கிட்டுதானே?" என்று உண்மையான அக்கறையுடன் விசாரித்தார் வாத்தியாரய்யா.
வீட்டுக்குள் ஓடிச்சென்று ஒரு செம்பு நிறைய கடைந்த மோரைக் கொண்டு வந்து கொடுத்து விட்டு "இன்னிக்கு நாட்டுலே என்ன விஷேஷம்.. நாட்டு நடப்பெல்லாம் எப்படி?" என்று கேட்ட வள்ளியின் குரலில் கிண்டல் இருந்ததை பிரபு கவனிக்கத்தான் செய்தான். ஆனால் அதை வாத்தியார் பெரிதாக எடுத்துக் கொள்ளவில்லை.
"நாட்டு நடப்புதானே? அங்கிட்டு அவன் அணைக்கட்டு கட்டுதான். இங்கிட்டு இவன் அணைக்கட்டு கட்டுதான்னு நம்ம ஜனங்க கொதிச்சுப்போய் நிக்கிறாக. கோடையில் தண்ணியில்லாமே வறட்சி.. அழிவு. ஐப்பசி கார்த்திகையிலே மழையினாலே அழிவு. வீட்டு வாசலை தேடி வந்து நிக்கிற தண்ணியைக்கூட கடலில்கொண்டு போய்சேர்த்துட்டு நிவாரணங்கிற பேரில் ரொட்டி துண்டை த் தூக்கிப்போட்டுடறாங்க. அந்ததண்ணிய சேர்த்து வைக்க இங்கிட்டு இருக்கிறவ களுக்கு துப்பு இல்லேதானே. அடுத்தவீட்டுக்காரனுக்கு எதிர்த்த வீட்டுக்காரனு க்கு தன்னோடகுடும்பத்தை நல்லபடியாவச்சு பாதுகாக்கணும்ங்கிற எண்ணம் இருக்குது. உனக்கும் அப்படியொரு எண்ணம் இருந்தா நீயும் கடல்லே போய் சேருத தண்ணிய சேர்த்து வை. உனக்கு இடம் இருக்குதுதானே.. "
"வாஸ்தவந்தான் வாத்தியாரய்யா "
"இந்தமாதிரி விஷயத்திலல்லாம் நான் அந்தக்கட்சி நீ இந்தக்கட்சிங்கிற கொடி பிடிக்கிற வேலையை விட்டுட்டு ஜனங்களுக்கு எதுநல்லதோ அதை அத்தனை பேருமா சேர்ந்து செய்யணும்.. ஊர் கூடி தேர் இழுக்கணும். இங்கிட்டு அதுக்கெல்லாம் யாருக்கும் நேரமில்லே...அவன் அரசியலுக்கு வந்திருவானோ .. இவன் அரசியலுக்கு வந்திருவானோங்கிற சண்டைக்குத்தான் நேரம் சரியா இருக்குது. "
"வாத்தியாரய்யா .. உங்ககிட்ட ஒண்ணு கேக்கணும் "
"ஒண்ணு என்ன.. ஒம்பது கேளு தாயீ... இப்படி யாராச்சும் எதையாது கேட்க மாட்டாகளானு நான் தவிச்சிட்டு இருக்கேன்."
"சினிமாகாரனுக அரசியலுக்கு வந்தா, ஏற்கனவே அதில இருக்கிறவக ஏன் கோபப்படுதாக ?"
"நல்ல கேள்வி கேட்டே போ "
"பதில சொல்லுங்க வாத்தியாரய்யா "
"பதில சொல்லுங்க வாத்தியாரய்யா "
"இங்கே நூத்துக்கு தொண்ணூறு பேருக்கு ஜனங்களுக்கு நல்லது செய்யணும்.. உழைக்கணும்ங்கிற எண்ணத்தைவிட நாற்காலியப் பிடிச்சு உக்காரணும்.. அது ஒண்ணுதான் கனவு. ஜனங்களுக்கு நல்லவழி காட்ட கட்சியில இருந்து தான் காட்டணுமா என்ன ? இல்லியே. எல்லாருக்கும் பதவி மோகம். அப்படி எதும் எங்களுக்கு இல்லேனு யாராவது சொல்வாகளானு கொஞ்சம் கேட்டு தான் சொல்லேன் . அண்ணன் எப்போ சாவான் .. திண்ணை எப்போ காலி ஆகும்னு அவனவன் காத்திட்டு இருக்கும்போது திடீர்னு முளைச்சு யாரோ ஒருத்தன் நாற்காலிய பிடிச்சிட்டா இவங்க பாடு 'இலவு காத்த கிளி'ங்கிற நிலைமை தானே ?"
"புரியலீங்க அய்யா "
"நம்ம ஜனங்களை நல்லா புரிஞ்சு வச்சவங்க இவங்க. ஒரு சினிமாக்காரன் வந்து நின்னு ஒண்ணு சொன்னா அதை அப்படியே நம்ம ஆட்டுமந்தை நம்பும். அவனுக சொல்ற இடத்தில முத்திரையைக் குத்திட்டு கையில் மையை வச்சிட்டு வந்துடும்னு இவங்களுக்கு நல்லா தெரியும்"
"அதெப்படி அய்யா ? ஜெயிக்காமே போன சினிமாக்காரங்க எத்தனை பேர் ?"
"அவங்க ஜெயிக்காமே போனா அதுக்கு காரணம், அவங்களைவிட வலுவான சக்தியா வேறே சிலர் இருந்தாங்க.. அம்புட்டுதான். அவனவன் நாற்காலிய காப்பாத்தவும், நாற்காலிய பிடிக்கவுமே படாதபாடுபடுதாக.. அதுக்கே நேரம் போதலே. அப்படி இருக்கறச்சே இவங்களுக்கு அணைக்கட்டை எங்கிட்டு கட்டினா அது ஜனங்களுக்கு நல்லதா இருக்கும்னு நினச்சு பார்க்க நேரங்கூட இருக்குதா என்ன ? பேசாமே போன வெள்ளைக்காரனை திரும்ப கூப்பிடலாம் போலிருக்குது. துப்பாக்கியக்காட்டி மிரட்டி மிரட்டியாவது எல்லாரையும் ஒரு இடத்திலே உக்கார வைப்பான். "
"அய்யா .. இப்படில்லாம் பேசினா போலீஸ் பிடிச்சிறாதா ? ஜெயில்ல புடிச்சு போட்டுறாதா ?"
"ஆமா.. இப்ப வீட்டில எல்லாரும் ரொம்ப சௌக்கியமா சந்தோஷமாத்தானே இருக்கோம். அட போம்மா.. நமக்கு வீடும் ஜெயிலும் ஒண்ணுதான்."
"வள்ளி .. வீட்டுக்கு ஏதாச்சும் வேணுமா ?"
"ஏன் கேக்கீக மாமா ?"
"நான் திருச்செந்தூர் வரை போயிட்டு வரலாம்னு இருக்கேன். திரும்ப ஒண்ணு ரெண்டு நாள் ஆகும். அதான் கேக்கேன்."
"அம்புட்டுதானே ? இப்போதைக்கு எல்லாம் இருக்கு. வேணும்னா நான் போய் வாங்கிக்கிடுதேன். சாப்பாடு எடுத்து வைக்கட்டுமா ?"
"வேண்டாம்.. ஒரேயடியா ராத்திரி சாப்பிடுதேன். இப்ப களத்துமேடு வரை போயிட்டு வந்திடுதேன். ஏற்கனவே உரிச்சு வச்ச தேங்கா இருந்தா வாத்தியா ரய்யா கையில நாலஞ்சு கொடுத்தனுப்பு. அய்யா .. நீங்க சித்த நேரம் இருந்து களைப்பாறிட்டு போறீகளா ?"
"இல்லேப்பா... நானும் கிளம்ப வேண்டியதுதான்" என்ற வாத்தியார், வள்ளி கொடுத்த தேங்காய்களை எடுத்துக்கொண்டு கிளம்ப, முருகய்யன் அவரைப் பின் தொடர்ந்தான்.
அவர்கள் அங்கிருந்து போனதும் மீண்டும் படுக்கையில் சாய்ந்து கொண்டு டைரியின் பக்கங்களைப் புரட்டலானான் பிரபு.
விதியின் கரங்களிலே நாம் விரைந்து பயணம் செய்தால்
மதியும் மயங்குதடா .. சிலர் மனமும் கலங்குதடா !
என்ற ஹைலைட் செய்யப்பட்ட சினிமாப் பாடல் வரிகள் அவனை வெகுவாகக் கவர்ந்தது.
மாலை ஐந்தரை மணி அளவில்தான் பவித்ராவை அழைத்துச் செல்ல கார் வந்தது.
"இன்னிக்கு ஏன் லேட் ?"
"ஸாரும் மேடமும் ஆடிட்டர் ஆபீஸ் வரை போகணும்னு சொன்னாங்க. அவங்க ரெண்டு பேரையும் அங்கே டிராப் பண்ணிட்டு திரும்ப லேட் ஆயிடுச்சு." என்று பதில் சொன்னார் ட்ரைவர்.
"ஆபீஸில் அக்காவும் டாடியும் இல்லைன்னா வீட்டுக்குப் போயிடலாம்தானே ?"
"இல்லேம்மா..வழக்கம்போல இங்கே கொண்டுவந்து விடணும்னு சொல்லி இருக்கிறார் ஸார். அவங்க வந்து உங்களை பிக்கப் பண்ணிப்பாங்க. லேபர்ஸ் எல்லாரையுங்கூட கொஞ்சம் முன்னாடி கிளம்பிப் போறதுன்னா போங்கனு சொல்லிட்டார் ஸார் "
கம்பெனி வாசலுக்கு கார் வந்து நின்றதும் ஓடி வந்து சல்யூட் அடித்து கதவைத் திறந்து விட்டான் செக்யூரிட்டி.
பவித்ரா வாசலில் இறங்கி கொண்டதும் காரை பார்க் பண்ண அங்கிருந்து ஓட்டி சென்றார் ட்ரைவர்.
பிளாட்பார்ம் ஓரமாக நின்றுகொண்டு ரமேஷ் சிகரெட் பிடித்துக்கொண்டிருந்த ஸ்டைல் பவித்ரா கண்ணில் பட்டது.
இப்போ டாடி இல்லே. அக்காவும் இல்லே..இவன் சரியான சண்டைக்கோழினு அக்கா அடிக்கடி சொல்லிஇருக்கிறா.. ஆனா ரொம்ப திறமைசாலியாம். இப்போ அதை டெஸ்ட் பண்ணிப்பார்த்திடலாம். நம்ம டார்ச்சரை இவன்கிட்டே இருந்து ஆரம்பிக்கலாம் என்று பவித்ராவின் உள்மனது சொன்னது.
"ஏய் .. மிஸ்டர்.. இங்கே என்ன பண்றே ?" என்று பவித்ரா குரல் கொடுத்ததுமே, "என்னம்மா ?" என்று கேட்டபடி அங்கு ஓடி வந்தான் ரமேஷ்.
"இங்கே என்ன பண்றேனு கேட்டேன் ?"
"ஒர்க் முடிஞ்சு போச்சு. சும்மா நிக்கிறேன் "
"ஓஹோ.. எல்லாரும் போனப்பறம் எதை சுருட்டலாம்னு பிளானா ?"
இதைக்கேட்டு கோபத்தின் எல்லைக்கே போன ரமேஷ், மீசையை முறுக்கிய படி, "பேபி.. வேண்டாம்.. " என்றான்
"என்ன வேண்டாம்? நீ மீசையை முறுக்கினா நான் பயந்திடுவேனா ? நீ என்ன பெரிய தாதாவா? எங்க வீட்டில் இருக்கிற பூனைக்குக் கூட முகத்திலே ரெண்டு முடி இருக்குது. கரப்பான்பூச்சிக்கு இருக்குது.. ஓவரா ஸீன் போடாதே.. சொல்லிட்டேன்.. "
காரை ஷெட்டில் பார்க் செய்துவிட்டு வந்த ட்ரைவர் காதில் பவித்ரா சொன்னது கேட்டது. இந்தப் பெண்ணுக்கு என்ன ஆச்சு என்ற நினைப்புடன் அவளருகில் வந்தவன், "நீங்க ஸாரோட ரூமுக்கு போங்கம்மா " என்றான்.
"ஒருத்தர் பேசிட்டு இருக்கிறப்ப குறுக்கே பேசக்கூடாதுங்கிற மேனர்ஸ் கூட தெரியாதா? மண்டை நிறைய முடி இருந்தால் மட்டும் பத்தாது. மண்டைக்கு உள்ளே மூளைன்னு ஒண்ணு இருக்கணும்." என்று சத்தமாக பவித்ரா சொல்ல தனது இடத்தைவிட்டு ஓடி வந்தார் வாட்ச்மேன்.
"என்னம்மா ?"
"வந்திட்டார் தர்த்தி .. இவருக்கு தலைக்கு மேலேயும் எதுவும் கிடையாது. உள்ளேயும் எதுவும் கிடையாது..இப்போ நான் கூப்பிட்டேனா ?"
அங்கிள்.. அங்கிள்"னு எவ்வளவு மரியாதையா பேசும் இந்தப் பொண்ணு. இன்னிக்கு என்னாச்சு? பெரியவங்க இல்லைங்கிற தெனாவெட்டில் முதலாளி திமிரை காட்டுதா?என்கிற குழப்பத்தில் பதிலேதும்சொல்லாமல் அங்கிருந்து நகர்ந்து தன்னுடைய இடத்தில் போய் அமர்ந்து கொண்டார். இருந்தாலும் மனம் கேட்காமல், "பேபிம்மா..ஸார் ரூமில் உங்களுக்கு காபியும் டிபனுக்கு இருக்குது" என்றார்.
"தேங்க்ஸ் அங்கிள் " என்று சொல்லிவிட்டு மாடியறைக்கு ஓடினாள் பவித்ரா.
தன்னைக் கிள்ளிப்பார்த்துக் கொண்டார் ட்ரைவர். வலித்தது. நடக்கிறது எல்லாமே நிஜந்தான்.. எதுவும் கனவு இல்லை.. இந்த பேபிக்கு என்ன ஆச்சு என்ற கவலை அவரை தொற்றிக் கொண்டது.
சிறிதுநேரம் சென்றதும் வாட்ச்மேன் அறையில் இருந்த இன்டெர்காம் ஒலித்தது.
"யெஸ் மேடம் "
"ஐயோ அங்கிள் ... நான் பவி .. சுமி இல்லே. டிபன் அதிகமா இருக்குது.. அக்கா ஷேரும் இங்கே இருக்குது.. அவங்க வர லேட் ஆகுமே.. நீங்க சாப்பிடுறீங்களா ?"
"வேண்டாம்பேபி. இப்போ நான் டியூட்டி மாறிடுவேன்..வீட்டில் போய் சாப்பிட்டு க்கறேன். நீங்க சாப்பிடுங்கம்மா "
"ஓகே "
சற்றுநேரத்தில் நைட் சர்வீஸ் வாட்ச்மேன் அங்குவந்துவிட, பழைய நபர் டியூட்டியை மாற்றிவிட்டு அங்கிருந்து கிளம்பினார். போவதற்கு முன்பாக "இன்னிக்கு அம்மா மூட் அவுட்.. ஜாக்கிரதையா இரு. தேவையில்லாமே பேச்சு கொடுக்காதே. அவங்க என்ன சொல்றாங்களோ அதைமட்டும் செய்!" என்று எச்சரித்துவிட்டுப் போனார்.
ஹோம் ஒர்க்கை முடித்துவிட்டு, புத்தகங்களை அடுக்கி வைப்பதில் பவித்ரா கவனமாக இருந்தாள். இந்த நோட்டை மறந்து இங்கே விட்டுடக்கூடாது. இது இல்லாமல் போனால் நாளைக்கு கணக்கு மிஸ் பின்னி எடுத்துடுவாங்க என்ற நினைப்பு வந்தபோது அன்று காலையிலிருந்து நடந்து முடிந்த சம்பவங்களும் நினைவுக்கு வந்தது.
யுனிபார்மை மாற்றிவிட்டு யோகாசனம் செய்ய ஆரம்பித்தாள்.
இன்டெர்காம் ஒலித்தது.
"யெஸ்"
"உங்களைப்பார்த்து பேச ரமேஷுக்கு உறவுக்காரங்கனு சொல்லிட்டு ஒருத்தர் வந்திருக்கிறார். அனுப்பவா ?"
"வொய் ?"
"அவருக்கு பெண் கொடுக்கிறவங்க அவரைப் பத்தி கம்பெனியில் விசாரிக்க சொன்னாங்களாம். மேலே அனுப்பட்டுமா ?".
"நோ.. போனை அவர்கிட்டே கொடுங்க "
சரியான லூஸ் இந்த செக்யூரிட்டி .. சுமினு நினைச்சு என்கிட்டே பேசறான் என்று சந்தோசப்பட்ட பவித்ரா "யெஸ்" என்றாள்.
'மேடம் உங்க கம்பெனியில் வொர்க் பண்ற ரமேஷுக்கு பெண் குடுக்கிறவங்க அவரைப்பத்தி விசாரிச்சு சொல்ல சொன்னாங்க. ஆள் எப்படி மேடம் ?"
காலையில் டீவீ சீரியல் ஷூட்டிங் போது அந்த இரண்டுபேர் பேசிய வசனம், பவித்ரா மனப்பாடம் செய்திருந்த வசனம் அப்போது நினைவுக்கு வர அதை அப்படியே ஒப்பித்தாள்.
"அவனா? அவன் ஒண்ணாம் நம்பர் அயோக்கியனாச்சே.. அவனுக்குப் பொண்ணைக் குடுக்கிறதுக்குப் பதில் ஏதாவது ஒரு கிணத்தில் கொண்டுபோய் தள்ளலாம். அது உங்க பொண்ணுக்கு நீங்க செய்ற உபகாரமா இருக்கும். அவன் ரொம்ப நல்ல பையன்னு அவன் வீட்டு ஆளுங்க சொல்லி இருப்பாங்க.. எல்லாவனும் நல்லவன் வேஷத்தைப் போட்டிருக்கிறான். நல்லவன் யாரு கெட்டவன்யாருனு கண்டு பிடிக்கிற மிஷின் ஒண்ணை யாராவது கண்டு பிடிச்சா அவனுக்கு கோவிலே கட்டலாம்" .
இதைக்கேட்டு அதிர்ந்த அந்த விசாரணைக்கமிட்டி மெம்பர். பதிலேதும் சொல்லாமல் ரிஸீவரைக் கீழே வைத்துவிட்டு அங்கிருந்து நகர்ந்தார்.
-----------------------தொடரும் -------------------------

No comments:
Post a Comment