அடுத்த பக்கத்தில் கொட்டை எழுத்தில் சுமித்ரா எதை கோட் பண்ணி எழுதி இருப்பாங்க என்ற ஆவலுடன் பக்கத்தைப் புரட்டினான் பிரபு.
பிரபுவின் எதிர்பார்ப்பு வீணாகவில்லை.
வஞ்சம் அறியாத பிஞ்சு மனங்களில்
வாழத் துடிக்கின்ற வேகம் இருக்குது !
என்ற வரிகளைப் படித்ததும் பவியின் அக்கா நிறைய தமிழ்ப்படங்கள் பார்க்கிற டைப் போலிருக்குது என்று நினைத்தபடி மேற்கொண்டு படிக்கத் தொடங்கினான்.
பவி படுக்கையில் புரண்டு கொண்டிருந்தாள்.
"செல்லம்.. எழுந்திரு செல்லம்.. இட்ஸ் ஆல்ரெடி லேட்... மணி இப்போ எட்டு !" என்றதும் வாரிச்சுருட்டிக் கொண்டு எழுந்தாள் பவி.
கடிகாரத்தைப் பார்த்துவிட்டு, "சுமி.. உனக்கு டைம் பார்க்கக்கூட தெரியாதா ? மணி ஏழுதான் ஆகுது !" என்று கத்திய பவியிடம், "டைமை அதிகமா சொன்னா தானே உன்னை எழுப்பி உக்கார முடியும் செல்லம்" என்று சொல்லி சிரித்த போது பவிக்கு கோபமும் அழுகையும் சேர்ந்து வந்தது.
"ஸாரிடா..செல்லம்..நீ ஸ்கூலுக்கு ரெடியாகு... நான் இன்னும் அரைமணி நேரத்தில் எல்லாத்தையும் ஃ பினிஷ் பண்ணிடுவேன் "
மணி 7.15 என்பதை கடிகாரம் காட்டியது. அப்பா இன்னும் எழும்பவில்லை.
சரி.. தூங்கட்டும். நேற்று நைட் அவர் தூங்க ஆரம்பிக்கும்போதே மிட்நைட் ஆகி விட்டதே.. தூங்கட்டும்.
"கவிதா ..."
"என்னம்மா... ?"
"அய்யா தூங்கறார்.. அவரே எழும்பறப்ப எழும்பட்டும். நீ ரூம் கதவை தட்டி அவரை டிஸ்டர்ப் பண்ண வேண்டாம். பவியை ஸ்கூலில் ட்ராப் பண்ணிட்டு நான் ஆபீஸுக்கு போயிட்டதா அவர் எழும்பினதும் சொல்லு "
"சரிம்மா "
மணி 7.20
முதுகுக்குப் பின்னால் ஏதோ நிழலாடியது போல இருந்தது.
"எப்படி வந்தே நீ?" என்று கேட்டபடி கையிலிருந்த போட்டோவை மறைத்த போது "ஓஹோ.. இதான் என்னை ஸ்கூலுக்கு ரெடி பண்ற லட்சணமா? போட்டோவை நான் பார்த்துட்டேன்.. யார் அது? உன்னோட பிரெண்டா இல்லே லவ்வரா ? என்று பவி கேட்டாள்.
"ரெண்டுந்தான்.."
" ஆள் ஹீரோ மாதிரி இருக்கிறார்..எப்படி அவர் வலையில் நீ மாட்டினே ?"
" ஆள் ஹீரோ மாதிரி இருக்கிறார்..எப்படி அவர் வலையில் நீ மாட்டினே ?"
"காலேஜில் என்னோட படிச்சவர் "
"டாடிக்கு தெரியுமா ?"
""லைட்டா தெரியும்"
"லவ் மேட்டர் என்ன காபியா ? லைட் ஸ்ட்ராங்னு வெதர் ரிப்போர்ட் சொல்ல?"
"அதெல்லாம் எனக்கு தெரியாது. ஆனா இந்த மேட்டர் அவரோட அப்பாவுக்கு தெரியாது ?"
"ஏன் ?"
"அவர் அப்பாவுக்கு பயப்படற பிள்ளை. அப்பாகிட்டே பேச பயப்படறார். தோப்பு க்கரணம் போடுன்னு அவரோட அப்பா சொன்னா. "எண்ணுங்க டாடி . இதோ போடறேன்'னு போடஆரம்பிச்சிடுவேன்னு அவரே சொல்லி இருக்கிறார் . "
"ப்பூ .. இவ்வளவுதானா ? அட்ரஸ் குடு. லவ் மேட்டரை அந்த வீட்டில் போட்டு உடைச்சிட்டு வந்திடறேன்! நல்லவேளை அவருக்கு கொஞ்சூண்டு தைரியம் இருக்கும் போலிருக்கு. தோப்புக்கரணம் போடறதை எண்ணுங்கனு அப்பா கிட்டே துணிஞ்சு சொல்றாரே. "உங்களுக்கு எண்ணுற சிரமம்கூட வேண்டாம்.. நானே எண்ணி எண்ணிப் போடறேனு சொல்லாமே. சீக்கிரம் மாத்திடலாம்."
"அம்மா... தாயே.. நீ செஞ்சாலும் செய்வே.. டிபன் ரெடியா இருக்குது. சாப்பிடு . க்விக்.. நான் டிரஸ் சேஞ்ஜ் பண்ணிட்டு வந்துடறேன்."
பவியை ஸ்கூல் வாசலில் இறக்கி விட்டுவிட்டு கம்பெனிக்கு வந்தபோது 9.30 ஆகி இருந்தது.
ஸ்கூலுக்குள் பவி நுழைந்தபோது "ஹாய்..ப்ரிசன் நம்பர் ஒன் வந்தாச்சு !" என்ற குரல் கோரஸாக அவளை வரவேற்றது
"ஸ்டுப்பிட்.. என் பேர் பவி என்கிற பவித்ரா.. "கைதி நம்பர் ஒன்"னு நீங்களாவே என் பேரை மாத்திட்டீங்களேடி .. இது நியாயமா ?"
"இதிலே ஒண்ணும் கொறச்சல் இல்லே.. நீ இன்னும் ஜெயில் கைதி மாதிரி தானே இருக்கிறே? உங்க வீட்டில் உங்க டாடி உன்னை அப்படித்தானே ட்ரீட் பண்றார் .. எங்களைப்போல நினைச்ச இடத்துக்கு உன்னாலே கிளம்பி வர முடியுமா? அட்லீஸ்ட் விளையாட,கோவிலுக்குக்கூடஉன்னால் வர முடியாது . என்னவோ கோபம் மட்டும் வருது. ஸ்கூல் வாசலில் இறக்கி ஏத்தி உன்னை கம்பெனி ரூமில் அர்ரெஸ்ட் பண்ணி வைக்கிறாங்க. இல்லே வீட்டில் ஹவுஸ் அர்ரெஸ்ட்டா இருக்கிறே!!"
இதை கேட்டு மற்றஸ்டூடண்ட்ஸ் கைதட்டிசிரிக்க அவமானப்படுத்தப்படுவது போன்ற மனநிலைக்கு ஆளானாள் பவித்ரா.
"எனக்கும் உங்களைப் போல ஃப்ரீ பேர்ட் ஆக பறக்கணும்ங்கிற ஆசை இல்லையா என்ன ? எங்க வீட்டில் எதுவும் நடக்காது. ஆர்மி ரூல்ஸ்தான். டாடி நிக்க சொன்னா நிக்கணும்..ஓட சொன்னா ஓடணும். ஸ்கூல் முடிஞ்சதும் நீங்க எவ்வளவு ஜாலியா அவங்கவங்க வீட்டுக்குப் போயிடறீங்க. நான் நேரா கம்பெனிக்குப் போகணும். அங்கே உட்கார்ந்து ஹோம் வொர்க் பண்ணனும். படிக்கணும். எனக்கு ரொம்பபோரடிக்குதுடீ .. உங்களைப் போல இருக்கணும்னு ஆசையா இருக்குதுடீ"
"இதெல்லாம் ஒரு மேட்டரா ?" என்ற கோரஸ் குரலில் திகைத்துப் போனாள் பவித்ரா .
"எவ்வளவு ஈஸியா சொல்லிட்டீங்க. இதுக்கு ஸலூஷன் ஏதாவது இருக்கா என்ன ?"
"ஏன் இல்லை? வெரி சிம்பிள்!"
"உங்க டாடி அவர் வாயாலேயே 'இனி நீ கம்பெனி பக்கமே வரக்கூடாது'னு சொல்ற அளவுக்கு அவருக்கு டார்ச்சர் குடு "
"அதெல்லாம் எங்க டாடிகிட்டே நடக்காது. ஆமா.. அப்படி என்னத்த பெரிசா பண்ணிட முடியும் ?"
"சோ சிம்பிள்.. உங்க கம்பெனி ஒர்க்கர்ஸ் நிறைய பேர் இருப்பாங்களே .. அதில் யார் எதுக்கெடுத்தாலும் சண்டைக்கோழி மாதிரி தலையை சிலுப்பறவன்.. மத்தவங்க தலையை வாங்கிடுவேன்னு சவால் விடறவன்னு கண்டுபிடி !"
"கண்டுபிடிச்சு ...?"
"அவன்கிட்டே வம்பு பண்ணு "
"எங்க வொர்க்கர்ஸ் எல்லாருமே என்கிட்டே 'பேபி..பேபி'னு ரொம்ப பிரியமா இருப்பாங்க !" என்று பவித்ரா சொல்ல, "நீங்க ஏனடி இந்த லூஸ் கிட்டே உங்க எனர்ஜி வேஸ்ட் பண்றீங்க.. இது என்னிக்குமே தேறாத கேஸ்.. இது ஆயுள் கைதி " என்று மாலா சொன்ன வார்த்தைகள் பவித்ராவை மிகவும் பாதித்தது.
அன்று வகுப்பில்தான் அவள் இருந்தாலே தவிர மனம் முழுவதும் ஒர்க்கர்ஸ் நடுவில் எப்படி குழப்பத்தை ஏற்படுத்துவது என்பதிலேயே இருந்தது.
கணக்குப் பாடம் நடத்திக் கொண்டிருந்த மிஸ் பிளாக் போர்டில் ஒரு "ஸம்"மை எழுதி, "பவித்ரா.. இதை சால்வ் பண்ணு !" என்றபோது, "அது தெரியாமத்தான் நான் குழப்பத்தில் இருக்கிறேன்" என்று பவித்ரா சொல்ல மொத்த வகுப்பும் கை கொட்டி சிரித்தது.
"கெட் அவுட்" என்ற கணக்கு மிஸ்ஸின் அலறல் அறைக்கு வெளியில் வரை கேட்டது.
புத்தக மூட்டையை முதுகில் சுமந்தபடி வாசலுக்கு வந்தாள் பவித்ரா.
கேட் பூட்டப்பட்டிருந்தது.
ஸ்கூல் பெல் அடிக்கிறவரை, அழைத்துப்போக கார் வரும்வரை இங்கிருந்து போகமுடியாது என்பது அவளது மரமண்டையில் அப்போதுதான் உரைத்தது.
திரும்பவும் வந்து லைப்ரரி ரூம் படிக்கட்டில் உட்கார்ந்தாள். அங்கிருந்து பார்த்தால் மெய்ன் ரோட் நன்றாக தெரியும். வழக்கத்துக்கு மாறாக ஸ்கூல் சுற்றுச்சுவர் அருகில் ஆட்கள் நடமாட்டம் அதிகம் இருப்பது தெரிந்தது. அது ஏன் என்று தெரியாவிட்டால் தலைவெடித்துவிடும் போலிருந்தது.
பில்ட்டிங் விரிவுபடுத்துவதற்காக, கட்டிட வேலைக்காக அடுக்கி வைக்கப் பட்டிருந்த செங்கல் அவள் கண்ணில் பட்டது.
அதன்மீது ஏறி தெருவை எட்டிப்பார்த்தபோது ஷூட்டிங் நடப்பது தெரிந்தது. அவர்கள் பேசுவதைக் கொண்டு, அது ஒரு டீவீ சீரியலுக்கான ஷூட்டிங் என்பது பவித்ராவுக்குப் புரிந்தது.
"அவனா? அவன் ஒண்ணாம் நம்பர் அயோக்கியனாச்சே.. அவனுக்குப் பொண்ணைக் குடுக்கிறதுக்குப் பதில் ஏதாவது ஒரு கிணத்தில் கொண்டுபோய் தள்ளலாம். அது உங்க பொண்ணுக்கு நீங்க செய்ற உபகாரமா இருக்கும் "
"ரொம்ப நல்ல பையன்னு சொன்னாங்க "
"அவன் வீட்டு ஆளுங்க சொல்லி இருப்பாங்க.. எல்லாவனும் நல்லவன் வேஷத்தைப் போட்டிருக்கிறான். நல்லவன் யாரு கெட்டவன் யாருனு கண்டு பிடிக்கிற மிஷின் ஒண்ணை யாராவது கண்டுபிடிச்சா அவனுக்கு கோவிலே கட்டலாம்"
இரண்டு பேர் பேசுவதாக அமைந்த ஒரு காட்சியை அரைமணி நேரத்துக்கும் மேலாக ரிஹர்சல் பார்த்து மீண்டும்மீண்டும் படமாக்கிக் கொண்டிருந்தார்கள்.
"அட .. லூஸுங்களா .. இந்த டயலாக் எனக்கே மனப்பாடம் ஆகிட்டது. உங்க ரெண்டு பேர் மாதிரியும் நானே பேசுவேன். இதை ரெண்டுபேரும் தனித்தனியா பேச இத்தனை டேக்கா ?" என்று நினைத்துக் கொண்டாள்.
ஷூட்டிங்கை பார்ப்பதும் போராக இருந்தது.
கம்பெனியில் வரவுசெலவு கணக்கைப் பார்த்துக் கொண்டிருந்தபோது "மேம்" என்ற குரல் நிமிர செய்தது.
"யெஸ் .. கம் இன்"
"ஸாரி .. டிஸ்டர்ப் பண் றேனா?
"ரமேஷ்...நீங்க விஷயத்த சொல்லுங்க ..எனக்கு ஒர்க்லோட் அதிகம். சொல்ல நினைக்கிறதை ஷார்ட்டா சொல்லு "
"எனக்கு பெண் பார்க்கிறாங்க மேடம் . இது செட்டில் ஆனா என்னோட டோடல் லைஃப்பும் சேஞ்ஜ் ஆயிடும். கல்யாணத்துக்குப் பிறகு சொந்தமா பிசினெஸ் பண்ண ஏற்பாடு பண்றதா சொல்லி இருக்காங்க.. என்னைப்பத்தி விசாரிக்க வருவாங்கனு ரகசிய தகவல் கிடைச்சது. அப்படி யாராச்சும் வந்தால் என்னைப் பத்தி நல்லவிதமா சொல்லணும்."
"இவ்வளவுதானே! இதுக்கா இத்தனை பீடிகை.. உங்கமேலே எனக்கு, டாடிக்கு நல்ல ரிமார்க்ஸ் உண்டு. அந்த ரமேஷாவது அடிதடிக்கு கிளம்பற ஆள். நீங்க ரொம்ப சாஃப்ட்.. உள்ளதை உள்ளபடி சொல்றோம். போதுமா ? எப்ப வருவாங்க ? ஏன்னு கேட்டா, ஈவினிங் பைவ் ஓ க்ளாக் ஒரு மீட்டிங் இருக்குது. நானும் டாடியும் கிளம்பிப் போயிடுவோம்."
"இன்னும் ரெண்டு நாளில் வருவாங்க மேம் "
"சரி.. நீங்க போகலாம்"
அதனுடன் அந்த பக்கம் முடிவடைந்திருந்தது. அடுத்த பக்கத்தை திருப்பும் முன்பாக சேரிலிருந்து எழுந்து பெட் ரூமுக்கு வந்து படுக்கையில் சாய்ந்து கொண்ட பிரபு மூணு பேருக்கும் ... பவித்ரா.. சுமித்ரா.. ரமேஷ்.. மூணுவிதமான ஆசைகள்.. கற்பனைகள்.. அடுத்தது என்ன நடந்ததுனு படிச்சுப் பார்ப்போம் என்று நினைத்தபோது, வாசலில் முருகய்யன் குரல் கேட்டது.. பெட் ரூம் ஜன்னல் வழியாக எட்டிப்பார்த்தான்..முருகய்யனைத் தொடர்ந்து கிழட்டு நாயும் வருவது தெரிந்தது.
------------------------ தொடரும் ------------------------
No comments:
Post a Comment