Labels

About myself Name : Kumari S. Arunachalam alias Aruna S. Shanmugam Occupation : Form

Tuesday, August 15, 2017

வேண்டாமே வேறு பவித்ரா ...(14)

Image result for image of village lady and man of tamilnadu
தனக்கு எய்ட்ஸ்  என்று சிரித்துக் கொண்டே சொன்ன பவித்ராவிடம்  "என்ன?" என்று அதிர்ச்சியுடன் கேட்டபடி நாற்காலியை விட்டு எழுந்தவிட்ட  பிரபுவின் அருகில்  வந்து அவனது தோள்களைப் பற்றி மீண்டும் நாற்காலியில் உட்கார வைத்த பவித்ரா, "ஹலோ .. எனக்குதான் எய்ட்ஸ் என்று சொன்னேனே தவிர உங்களுக்குன்னா சொன்னேன். இப்படி அதிர்ந்துபோய் நிக்கிறீங்க ?" என்று கேட்டாள். 
"என்னங்க... உங்களுக்கு ஜோக் சொல்ல வேறே மேட்டர் கிடைக்கலையா.. எதில் எதில்தான் விளையாடறதுங்கிற வரைமுறை இல்லையா ?" என்று கோபத்துடன் கேட்டான் பிரபு.
"ரிலாக்ஸ்... ரிலாக்ஸ் யுவர் ஸெல்ப் .. நேத்து  பேசிட்டு இருக்கிறப்ப என்னைப் பார்த்து முருகய்யன் பயப்படறார்னு சொன்னேனே.. அந்த பயத்துக்கு காரணம் எனக்கு இப்படியொரு நோய் இருக்கிறதாலேதான்."
"சரி... ட்ரீட்மெண்ட் எடுக்கிறதுதானே ?"
"எதுக்கு ?"
"நீங்க சொல்ற நோய்க்குத்தான்."
"அப்படி ஒண்ணு இருந்தாத்தானே ட்ரீட்மெண்ட் எடுக்கணும் "
"என்னங்க..முன்னுக்குப்பின்னா பேசி குழப்பறீங்க."
"அப்படியா?"
"உங்களுக்கு அப்படியொண்ணு  இருக்குனு சொன்னது யார்? " 
"எங்க ஊர் சயின்டிஸ்ட் "
"டாக்டர்ஸ்தான் சொல்வாங்க .. சயின்டிஸ்ட் கூடவா சொல்றாங்க?"
"சும்மா ஜோக்கா எதையாது சொன்னாக்கூட நீங்க  அதை அப்படியே நம்பறீங்க .. ஒரு  ரோக் எங்க ஊரில் .. ஐ மீன் டில்லியில் ... எங்க கம்பெனியில் ஒர்க் பண்ணிட்டு இருந்தான். ஒருமுறை அவனை நான் முட்டாள்னு திட்டினேன். யூனியனில் சொல்லி அப்படியே என் தலையை வாங்கிடுவேனு  சொன்னான். அய்யய்யோ.. அப்படியெல்லாம் செஞ்சுடாதே... தலையில்லாமல் வெளியே போனா ரொம்ப அசிங்கமா இருக்கும். உன்னை முட்டாள்னு திட்டினது தப்பு தான்... இனிமே உன்னை ஜீனியஸ்.  சயின்டிஸ்ட்னு எல்லார் கிட்டேயும்  நான் சொல்றேன்னு   சொல்லிட்டு, அன்னிலேருந்து அவனை   சயின்டிஸ்ட் ஸார்,     ஜீனியஸ் ஸார்னுதான் கூப்பிடுவேன்"
"உங்ககிட்டே நிறைய விஷயங்களைப் பேசி கிளியர் பண்ண வேண்டியது இருக்குது "
"ஓ .. பண்ணிடலாமே "  .
"டில்லியில் பிறந்து வளர்ந்ததா சொல்றீங்க.. உங்க பேச்சில் கொஞ்சங்கூட ஹிந்தி வாடையே இல்லையே ?"
"ஹலோ.. நான் பிறந்தது டில்லியில்.. எங்க அம்மா அப்பாவுக்கு பூர்விகம் தமிழ்நாடு.. சென்னைதான்.. பிஸினஸ் பண்ண டில்லிக்கு இடம் பெயர்ந்த அப்பா அங்கேயே செட்டில் ஆயிட்டார்.. தட்ஸ் ஆல்..எங்க கம்பெனியில் வேலை பார்த்தவங்க நிறையபேர் தமிழ்க்காரங்க.. வீட்டில் தமிழ்தான் பேசுவோம். நான் இங்கே வந்து எட்டு வருஷம் ஆச்சு. டில்லி இருக்கிற திசையில்கூட தலை வச்சு படுத்தது கிடையாது.. ஹிந்தியில் பேச இங்கே யாரும் கிடையாது. அதனால் தமிழில் ஊறுகாய் மாதிரி நல்லா ஊறிட்டேன்.  குழப்பம் தீர்ந்ததா ?"
"நீங்க இங்கே வந்து.... இங்கே தனியா இருக்க காரணம் ?"
"அது என்னோட ஃபேட் "
"அதைத்தான் விவரமா சொல்லுங்க "
"உங்களுக்கு ஆவி ... பேய்பிசாசு நம்பிக்கை உண்டா ?"
"இல்லை... அதெல்லாம் பைத்தியக்காரத்தனம்"
"நான் அப்படி நினைச்ச காலம் ஒண்ணு உண்டு.. ஆனா எந்தவொரு மோட்டிவ்   இல்லாமே. நம்ம இயல்பை மீறி நம்மளையறியாமலே எதையாது ஒண்ணை   ..  நம்மையும் மீறிய காரியங்களை செய்துவிட்டு.. அதன் பின்விளைவுகளை பார்க்கும்போது, 'நாமளா இப்படி செஞ்சோம் ? ஏன் செஞ்சோம்'னு நினைச்சுப் பார்க்கும்போது, அதுக்கு விடை எதுவும்  கிடைக்காது. அந்தமாதிரி டைமில் நாம என்ன நினைப்போம் தெரியுமா ?"
"அதையும் நீங்களே சொல்லுங்க"
"திட்டம்போட்டு நாம எதையும் செய்யலையே.. நம்ம உடம்புக்குள் ஏதாவது ஆவி இல்லாட்டா பேய்பிசாசு புகுந்து டேரா போட்டு உக்காந்துகிட்டு நம்மள இந்த  மாதிரி எல்லாம் செய்ய வைக்குதானு நினைக்கத் தோணும். அப்படி   அடாவடிகளை நான் நிறையவே செஞ்சிருக்கேன்."
"ப்ளீஸ்.. புரியும்படி சொல்லுங்க."
"புரியும்படி என்ன.. எழுத்து வடிவத்திலேயே தர்றேன் "
"நீங்களும் எழுதுவீங்களா ?"
"என்னோட சக்திக்கு மீறிய விஷயங்கள் நடந்து முடிந்தபின் அதையெல்லாம் செய்தது நானான்னு கேட்டு ஃபீல் பண்றதப் பார்த்த என் அக்கா, என்னோட சின்ன வயசிலே இருந்து இந்த ஊருக்கு நான் வரும்வரை நடந்த அத்தனை சம்பவத்தையும் .. அவ பார்த்த விஷயங்களை, மத்தவங்க என்னைப்பத்தி சொன்ன விஷயங்களை ஒவ்வொரு ஸ்கிரிப்ட்டா எழுதி என் கையில் குடுத்து 'இதல்லாந்தான் நடந்துச்சு. பைபிள், குரான், பாகவதம் படிக்கிறாப்லே தினமும் படிச்சுப் பார்.. நேரங் கிடைக்கிறப்பல்லாம் படின்னு கொடுத்தா.. இதனோட பிற்சேர்க்கையா இங்கே நான் வந்தபிறகு நடந்த அத்தனை சம்பவத்தையும் ஒண்ணுவிடாமே  எழுதி வச்சிருக்கிறேன். படிச்சுப் பாருங்க " என்று சொல்லி விட்டு  மேஜை அலமாரியைத் திறந்து இரண்டு டைரிகளை எடுத்து வந்து அவன் கையில் கொடுத்து "நேரம் கிடைக்கிறப்ப படியுங்க.. உங்களோட எல்லா சந்தேகங்களுக்கும் இதில் பதில் இருக்குது " என்றாள்.
அதை வாங்கி மேலோட்டமாகப் படித்த பிரபு, "என்னங்க..நிறைய இடத்தில் ஹிந்தியில் எழுதியிருந்ததை அடிச்சிட்டு அதில் தமிழில் எழுதி இருக்குது .. ஏன் ?" என்றான்.
"ஓ .. அதுவா ... நீங்க கேட்ட இதே கேள்வியை சில வருஷம் முன்னயே வள்ளி கேட்டாங்க.. அவங்க கையில் இதே டைரியை எடுத்துக் குடுத்தேன். ஹிந்தி வார்த்தைகளை பார்த்துட்டு அலற ஆரம்பிச்சிட்டாங்க.. அவங்களுக்குப் புரிய வேணுங்கிறதுக்காக ஹிந்தி வார்த்தைகள் இருந்த இடத்தில் தமிழில்  மொழி பெயர்ப்பு செஞ்சேன்.. அவ்வளவுதான்.!"  
"இன்னிக்கே இதை படிச்சு முடிச்சிட்டுதான் மறுவேலை."
"இன்னொரு முக்கியமான விஷயம்.. நான் ராம்குமார் ஸாரோட வீட்டில்தான் தங்கி இருக்கிறதா ஸாரும் ஷோபா மேடமும் நினைச்சிட்டு இருக்கிறாங்க. நான் இங்கே.. ஊருக்கு வெளியே ஒரு குடிலைப் போட்டு தங்கி இருக்கிறது  விஷயம் தெரியாது. நீங்க உங்க அண்ணனுக்குப் போன் பண்றப்ப மறந்தும் கூட அவங்க கிட்டே சொல்லிடாதீங்க .. ப்ளீஸ் .."
"சொல்ல மாட்டேன் ..நான் இங்கே வர்றது முருகய்யனுக்கு தெரியக் கூடாது னு  ஏன் நினைக்கிறீங்க ?"
"முருகய்யன், வள்ளி சொல்ற கிழட்டு நாய், பக்கத்துக்கு ஊரில் இருக்கிற.. இஸ்திரி போடற  டோபி எல்லாம் பைத்தியக்காரங்க லிஸ்ட்டில் சேர்க்க வேண்டிய ஆளுங்க.."
"எப்பவும் காரணமே இல்லாமே பல்லை இளிச்சுகிட்டே இருப்பானே, அந்த டோபியா .. அவன் வொய்ப் கூட துணி துவைச்சு எடுத்துட்டு வருவாங்களே.. அவங்கள பத்தி வள்ளி சொல்லி இருக்கிறாங்க.. அவன் கொஞ்சம் வசதியான ஆள் போலிருக்கு.."
"ஊரில் இருக்கிற.. ரொட்டி துண்டை வீசுகிற நாய்களுக்கு பொம்பளைங்களை ஏற்பாடு பண்ணிக் குடுக்கிற வேலையைப் பார்த்தா கையில் காசு புரளத்தான் செய்யும். அவன் அந்த வேலையத்தானே செய்றான்..இது மெயின் பிஸினஸ் .. இஸ்திரி போடறது ஸைட் பிஸினஸ் "
"இதையெல்லாம் கிராமத்தில் .. இங்கே இருக்கிறவங்க எப்படிங்க  அலவ் பண்றாங்க?"
"ஆமா .. ரொம்ப கண்ணியமான வேலை... இதுக்கு லைஸென்ஸ் வேணுமா என்ன ? எவனாது வீசுற ரொட்டி துண்டுக்கு இதுங்க வாலை ஆட்டிட்டு வேலை பார்க்கும் "
"ஸார் கிட்டே சொல்லி ஒரு வழி பண்றதுதானே "
"கோழியை அடிக்க குறுந்தடியா ? இதுங்களை தடுக்கவே கூடாது. உன் தலை எழுத்து அதுதான்னா நீ அப்படியே பிழைச்சுக்கோனு  விட்டுடணும்.. சாக்கடை யில் குளிக்கிறோம்னு தெரியாமே அதுங்க என்னவோ அதை ஒரு சாதனை மாதிரி பண்ணிட்டு இருக்குதுங்க.  சாக்கடைனு சொல்லி நாம அதை விட்டு ஒதுங்கணும்.  அவ்வளவுதான்."
"இதையெல்லாம் சும்மா விடக்கூடாது."
"எனக்குன்னு ஒரு வட்டத்தை என்னை சுத்தி போட்டு வச்சிருக்கிறேன். அதை விட்டு நான் விலக மாட்டேன். தோற்றால் கூட ஒரு ஆண்மகனிடம் தோற்க வேண்டும். கூலிக்காரங்க பின்னாடி ஒளிஞ்சு நின்னுகிட்டு வீராப்பு பேசற ஒரு பொட்டையை சாக்கடையை ஜெயிச்சி என்ன பண்ணப்போறோம். அதுங்க தத்துவமா நினைச்சு உதிர்க்கிற வார்த்தைக்கெல்லாம் பைத்தியக்காரனோட உளறல் என்கிற அளவுக்குத்தான் மதிப்பு கொடுக்கணும். அவனவன் பிறந்து வளர்ந்த குடும்ப சூழ்நிலைக்கு தகுந்தாப்லே தான் அவனவன் பழக்க வழக்கம் இருக்கும். அதுங்ககிட்டே பேசி நம்ம குடும்ப கவுரவத்தை  ஏன் இழக்கணும் ? .. காசியில் ஓடினாலும் சாக்கடை சாக்கடைதானே. ஓடுற இடம் காசிங்கிறதால   அது கங்கையா ஆயிட முடியுமா? எனக்கென்னவோ இதுங்களைப் பாத்தா கோபம் வராது. பரிதாபம் தான் வரும்.. பாவம்.. இப்படி பிழைக்கும்படி  இதுங்க தலையிலே ஆண்டவன் எழுதி வச்சிட்டானேனு நினைச்சு பரிதாபப்படுவேன். ஆனா அதுங்க என்னவோ அது ஒரு வீரதீர செயல் மாதிரி பொம்பளைங்களை ஏற்பாடு பண்ற வேலைய செஞ்சிட்டு இருக்குதுங்க."
"என்ன ஒரு கேவலமான மனிதர்கள்.."
"இந்த சாக்கடை எல்லாமே வயல்வெளிக்கு அந்தப்பக்கம்தான் இருக்குதே தவிர உள்ளே இல்லை. உள்ளே இருக்கிற ஒரே ஒரு முட்டாள் முருகய்யன் மட்டுந்தான்..அவனுக்கு பணம்காசு எதுவும் பெரிசில்லே.. வியாதி.. வியாதிய   பத்தின பயந்தான் அவனை முரடனா மாத்தி இருக்குது. மத்தபடி அவர்  நல்ல மனுஷங்க  லிஸ்டில் சேர்க்கப்பட வேண்டிய ஆள் இல்லாட்டாலுங்கூட   அயோக்கியர்கள் லிஸ்டில் சேர்க்க முடியாது. முட்டாள்களை ஒரு லிஸ்ட் எடுத்தால் அந்த லிஸ்டில் இவர் பேர்தான் முதலில் இருக்கும் " என்று சொல்லிவிட்டு சிரித்தாள் பவித்ரா..
அதை மனசுக்குள் ரசித்த பிரபு, "நான் கிளம்பறேன்" என்று சொல்லிவிட்டு பவித்ரா கொடுத்த டைரியை எடுத்துக்கொண்டு அங்கிருந்து கிளம்பினான்.

                                                                       ----------------  தொடரும் ----------------

No comments:

Post a Comment