மயக்க நிலையில் இருந்த வள்ளி, "என்னங்க... என்னங்க " என்ற குரல் கேட்டு மெதுவாக கண்களைத் திறந்து பார்த்தாள்.
"என்னங்க.. மாமா வீட்டில் இல்லாததால் அவர் பார்க்க வேண்டிய தோட்ட வேலையையும் நீங்களே பார்த்தீங்களா ? ரொம்பவும் களைப்பா சுவத்திலே சாய்ஞ்சு தூங்கறீங்க. எங்கே உங்க கயித்துக்கட்டில்? அதில் படுத்து தூங்கறது தானே ?" என்று கேட்டபடி தன் முன்னால் பிரபு நிற்பதைக் கண்ட வள்ளி, "என்னவோ ஒரு அசதி... அதான் தூங்கிட்டேன். தம்பி .. சாப்பாடு எடுத்து வச்சிருந்தேனே.. சாப்பிட்டீகளா ?" என்று கேட்டாள்.
"ஓ .. வழக்கமா நான் சாப்பிட்டதும் பாத்திரத்தை எடுத்துட்டுப் போக வருவீங்க. இன்னிக்கு வரக்காணுமேன்னுதான் உங்க வீட்டுப்பக்கம் வந்தேன். தூங்கிட்டு இருந்தவங்களை டிஸ்டர்ப் பண்ணிட்டேனு நினைக்கிறேன் "
"அதெல்லாம் இல்லை " என்று பதில் சொல்லும்போதே, "நல்லவேளை... இந்த தம்பிக்கு மயக்கத்துக்கும் தூக்கத்துக்கும் வித்தியாசம் தெரியலே" என்று நினைத்து சந்தோஷப்பட்டாள் வள்ளி .
"குடிக்க ஏதாது வேணுமா தம்பி ?"
"வேண்டாம்.. நான் அம்மாவுக்கு போன் பண்ணிட்டு வரேன் " என்று சொல்லி விட்டு நடக்க ஆரம்பித்தான் பிரபு.
அவன் போவதைப் பார்த்தபடி மரநிழலில் வந்து உட்கார்ந்தவள், யார் இந்த தம்பி கண்ணில்பட்டுடக் கூடாதுனு நினைச்சு பயந்தேனோ, அந்த ஆள் இந்த அய்யா கண்ணில் பட்டாச்சு .. பேசியாச்சு போலிருக்கே என்ற கவலையில் ஆழ்ந்தாள்.
உங்க பிரெண்டை பார்த்தேன்னு என்கிட்டேயே அடிச்சு சொல்லுதாகளே. ஈஸ்வரா .. இது எங்கேபோய் முடியுமோ தெரியலையே? விஷயத்தை குமார் அய்யா காதிலே போட்டுடலாமா ? என்ற நினைப்பு வந்த போதே பெரிய இடத்து பொல்லாப்பு நமக்கு ஏன் என்ற எச்சரிக்கை உணர்வும் வந்தது.
சொல்லலாமா வேண்டாமா என்ற குழப்பத்தில் இருந்தவள், 'நாம சொல்றத சொல்லிருவோம். அவக என்ன வேணா பண்ணிட்டுப் போகட்டும் என்ற முடிவுடன் வீட்டுக்குள் சென்று கையில் கிடைத்த பணத்தை அள்ளி பையில் போட்டுக்கொண்டு வீட்டைப் பூட்டினாள்.
அம்மாவுக்கு போன் பண்ணி பேச தம்பி டவுனுக்குப் போயிருக்கே.. நாம பக்கத்து ஊர் நாடார் கடையிலே போன் பண்ணிட்டு வந்துறலாம் என்ற முடிவுடன் நடக்க ஆரம்பித்தாள்.
போன் நம்பரை அழுத்தும் போதே மனதில் ஒரு இனந்தெரியாத படபடப்பு.
"என்ன வள்ளி.. எப்படி இருக்கிறே ? என்ன விஷயம் ?" என்ற ஷோபாவின் குரல் கேட்டதுமே, "வணக்கம்மா. எப்படி இருக்கீக? அய்யா, குழந்தை எல்லாரும் எப்படி இருக்காக?" என்றாள் வள்ளி.
"எல்லாரும் நல்லா இருக்கோம். உங்க ஸார் பெங்களூரு போயிருக்கிறார். அங்கே என்ன நிலவரம்? தம்பி வந்ததே.. ஊர் சீதோஷ்ணம், உன்னோட சமையல் சாப்பாடு எல்லாம் தம்பிக்கு ஓகேதானே ?"
"அதுவேணும்..இதுவேணும்னு அந்த தம்பி எதுவும் கேட்கிறது கிடையாது . ஆள் வெளியில்போறதும் வீட்டுக்குள்வர்றதும் தெரியாது! ரொம்பவும் அமைதி யான தம்பி "
"பவித்ரா எப்படி இருக்கிறா ? வாயாடி.. அரட்டை பார்ட்டி ..கொஞ்சநாளா போன் பேசறதே கிடையாது... எங்கிட்டே பேச சொல்லு... நான் சொன்னேன்னு சொல்லு"
"சரிம்மா" என்ற வள்ளி, மனத்தைத் திடப்படுத்திக் கொண்டு, "அம்மா ... அந்த தம்பி ஏதோ கதை எழுத..." என்று சொல்லும்போதே ஷோபா சிரிக்கும் சத்தம் கேட்டு, "என்னங்கம்மா ?" என்றாள் வள்ளி.
"கதையாவது ... கத்திரிக்காயாவது.. அது உங்க குமார் ஸார், அந்த தம்பி கிட்டே விட்ட கதை... புருடா...அந்தப் பொண்ணுக்கும் இந்த தம்பிக்கும் முடிச்சு போட்டுப் பார்க்கணும்னு உங்க குமார் ஸாருக்கு ஆசை.. ஒருத்தரை ஒருத்தர் பார்த்து பேசி ஒருத்தரை ஒருத்தர் புரிஞ்சுக்கணும்னு நினைச்சு, 'கதை எழுது .. களம் பாரு... அங்குள்ளவங்க பழக்க வழக்கம் பத்தி தெரிஞ்சுக்கோனு இவரே ஒரு கதை சொல்லி அந்த தம்பியை அங்கே அனுப்பி இருக்கிறார். இரண்டு பேருக்குள்ளேயும் நல்ல அண்டர்ஸ்டாண்டிங் இருந்தா, ரெண்டு வீட்டிலேயும் பேசி, கல்யாணம் பண்ணி வைக்கணும்னு இவருக்கு ஒரு ஆசை.. அவங்க பார்த்துக்கற மாதிரி ஏதாவது சந்தர்ப்பம் கிடைச்சுதா?" என்று ஷோபா பேசிக்கொண்டே போக, வாயடைத்துப்போய் அதைக் கேட்டபடி இருந்தாள் வள்ளி.
"பவித்ரா சரியான அரட்டை கேஸ்... முதல்முதலா ஒருத்தரை பார்க்கிறப்பவே ஏதோ பத்துவருஷம் பழக்கம் போல பேச ஆரம்பிச்சிடுவா.. பிரபு அதற்க்கு நேர் எதிர் கேஸ்..ரெண்டும் ஜோடி சேர்ந்தா நல்லாத்தான் இருக்கும்" என்று சொல்லி மீண்டும் சிரித்தாள் ஷோபா.
குழப்பமான மனநிலைக்கு ஆளான வள்ளி, ஷோபாவின் பேச்சை இடை மறிக்காமல் "சரிதான்ம்மா..சரிதான்ம்மா" என்று கம்ப்யூட்டரைஸ்ட் வாய்சாக சொல்லிக் கொண்டிருந்தாள்.
"இந்த டைமில் நீ போன் பண்ண மாட்டியே.. ஏதாவது முக்கியமான விஷயமா ?"
"அதெல்லாமில்லேம்மா. பேசி ரெண்டுவாரம் ஆச்சே.. பேசணும்னு தோணுச்சு.. வேறே ஒண்ணுமில்லே .. போனை வச்சிடறேன்ம்மா"
எதிர் முனையிலும் போன் துண்டிக்கப்பட்டது.
கடவுளே.. தலைவலிபோய் திருகுவலி வந்த கதையா போச்சே.. ரெண்டு வருஷத்துக்கு முன்னே வந்துட்டுப் போன ஸாருக்கும் அம்மாவுக்கும் இங்கே நடந்தது எதுவுமே தெரியாது..தெரியக்கூடாதுனு சொல்லி அந்தப்பொண்ணு சத்தியம் வேறே வாங்கிட்டுது. இப்போ சொல்லவும் முடியலே.. மெல்லவும் முடியலையே...
குமார் அய்யா நினைக்கிறாப்லே எல்லாம் நல்லபடியா நடந்தா சரிதான்.
நடந்த விஷயம் எல்லாம் குமார் அய்யா காதுக்குப் போனா, மாமனை உண்டு இல்லைனு பண்ணிடுவாக.
ஆனா இந்தப்பாவி என்னென்ன செய்வானோ தெரியலையே.
நடந்த விஷயம் அவகளுக்கு தெரியுதப்ப, "நீயும் இதுக்கு உடந்தையா?"னு கேட்டு ஒரு பார்வை பார்த்தாலே போதுமே.. செருப்பாலே அடிச்சாப்பிலே இருக்குமே. "கடவுளே.. இந்த சிக்கலை நீதான் அவுக்கணும்" என்று மனதுக்குள் வேண்டியபடி வீட்டை நோக்கி நடக்க ஆரம்பித்தாள்.
அதேநேரம், டவுணிலிருந்து பஸ் பிடித்து வயல்வெளிக்கு வந்து கொண்டிருந்த பிரபு, 'இன்னிக்கு எப்படியும் பவித்ரா பயோ டேட்டாவை தெரிஞ்சுட்டுத்தான் மறுவேலை' என்ற முடிவுடன் இருந்தான்.
டில்லியில் பிறந்து வளர்ந்த ஒரு பெண்ணுக்கு அப்படி என்ன தலைபோகிற வேலை இந்த கிராமத்தில் ?
எல்லாம் மர்மமாக இருக்கிறதே ?
அவளைப்பற்றி கேள்வி கேட்டால், பதிலே சொல்லாமல் நழுவுகிறாள். பொது விஷயம்பத்தி பேசினா பெரிசா லெக்ஸரே குடுக்கிறா.. இன்னிக்கு நீயா நானான்னு பார்த்திட வேண்டியதுதான் என்ற வெறியில் இருந்த பிரபு அருகில் வந்த பஸ் கண்டக்டர், "ஸார் .. நீங்க டிக்கெட் வாங்கின வயல்வெளி வந்தாச்சு. நீங்களே இறங்கிக்குவீங்களா .. இல்லாட்டா நாங்க இறக்கிவிடணுமா ?. . எப்படி வசதி ?" என்று கிண்டலாக கேட்டார்.
"ஸாரிங்க "
"நானும் ஒவ்வொரு நாளும் கவனிக்கேன்.. படிப்பு அறிவு இல்லாதவங்ககூட எந்த இடத்துக்கு டிக்கெட் வாங்குதாகளோ அந்த இடம் வாறதுக்கு முன்னாடி ரெடியா இருக்காக. இறங்கிற இடம் வந்ததும் அவகளே இறங்கிப் போயிடுதாக. உங்களை ஒவ்வொருவாட்டியும் நான்தான் இறக்கி விடவேண்டி இருக்குது .. பஸ்லே ஏறினா நல்லா தூங்க வேண்டியது.. பொறகு இறங்கவேண்டிய இடம் கடந்ததும் அங்கிட்டு நிக்காமே பஸ் வந்துட்டுனு ரகளை பண்ண வேண்டியது. படிச்சவங்க மாதிரி தெரியுதீக.. பார்த்து நடந்துக்கங்க." என்ற கண்டக்டரிடம், "ஸாரி .. ஸாரி " என்று காலில் விழாத குறையாக மன்னிப்பு கேட்டபடி பஸ்ஸை விட்டு இறங்கி பவித்ரா வீட்டை நோக்கி நடக்க ஆரம்பித்தான் பிரபு.
வேலிப்படலில் இருந்த கதவு திறந்தே இருந்தது.
அப்பாடா.. வீட்டில்தான் இருக்காங்க..
"மேடம் "
ஓலைப்பாயில் படுத்திருந்த பவித்ரா அதை சுருட்டி ஒரு ஓரமாக வீசிவிட்டு, "வாங்க.. வாங்க.. நிலா காயுதா என்ன ?" என்றாள்
"நிலாவா? வெயில் சுட்டெரிக்குது !"
"அதைத்தான் நான் கிண்டலாக சொன்னேன் " என்று சொல்லி சிரித்த பவித்ரா அவன் குடிலுக்குள் வந்ததுமே, நாற்காலியை இழுத்து அவன் முன்பாகப் போட்டுவிட்டு ஒரு செம்பு நிறைய மண்பானை நீரைக் கொண்டு வந்து அவன் முன்பாக நீட்டினாள்.
அதை வாங்கி மடமடவென்று குடித்த பிரபு, "உஷ்............" என்று நீண்ட பெருமூச்சு விட்டான்.
"இந்த வெயிலில் எங்கே போனீங்க? உங்களை பார்த்தால் பெரிய வீட்டிலிருந்து வர்ற மாதிரி தெரியலியே !"
"டவுணுக்கு அம்மாவுக்கு போன் பண்ண போனேன். ரிங்க் போகுது.. ஆனா அம்மா போன் அட்டென்ட் பண்ணலே. ராஜேஷை ஆபீஸ் அவர்ஸ்ஸில் டிஸ்டர்ப் பண்ண முடியாது.. இந்த அம்மா ஏன் இப்படி இருக்காங்கனு தெரியலே.. கவலையா இருக்குது "
"அவ்வளவு ஃபீல் பண்ற ஆள் ஊரைப்பார்த்து போக வேண்டியதுதானே.. இங்கே அப்படி என்ன தலைபோகிற வேலை ?"
"என்னையும் ஒரு ஆளா மதிச்சு, அண்ணன் ஒரு பொறுப்பைக் குடுத்ததை நினைக்கிறப்ப வேறு எதுவுமே பெரிசா தெரியல.. ஆனா அம்மா பத்தின ஒரு உறுத்தல் மட்டும் இருக்குது "
"உங்களுக்கு அம்மான்னா ரொம்ப பிடிக்குமா ?"
"ஆமா.. எனக்கு உறவுன்னு சொல்லிக்க அவங்களைத்தவிர பூமியில் யாருமே கிடையாதே.. உங்களுக்கு யாரை ரொம்ப பிடிக்கும் ?"
"நான் அம்மாவை பார்த்ததே இல்லை!" - என்று வருத்தம் தோய்ந்த குரலில் சொன்னாள் பவித்ரா.
"நிஜமாவா ?"
"ஆமாம்.. நான் பிறந்தப்பவே அவங்க செத்துட்டாங்க. என்னோட அக்காதான் என்னை அம்மா ஸ்தானத்தில் இருந்து வளர்த்தா.. அவளுக்கும் எனக்கும் எட்டு வயது வித்தியாசம். அம்மாவுக்கு டெலிவரி எல்லாமே நார்மலாகத்தானாம். ஆனா அன்னிக்கு நைட் வந்த ஜன்னி அவங்களை விழுங்கிடுச்சு. எனக்கும் அம்மானு ஒருத்தி இருந்திருந்தால் நான் இங்கெல்லாம் வரவேண்டிய அவசியமே இருந்திருக்காது"
"இங்கே ஏன் வந்தீங்க.. எதனாலே தனியா இருக்கீங்க.? உங்க காஸ்ட் ஆஃப் லிவ்விங்கை எப்படி மேனேஜ் பண்றீங்க ?"
"இங்குள்ள பேங்க் அக்கவுண்ட்டில் எனக்கு பணம் கிரெடிட் ஆயிடும். இஷ்டத்துக்கு செலவு பண்ணுவேன்."
"அக்கா வேலை பார்த்து பணம் அனுப்பினா... நீங்க இஷ்டத்துக்கு செலவு பண்ணுவீங்களா ?"
"அக்கா, நூத்துக்கணக்கில் ஆளுங்களை வச்சு வேலை வாங்கிறா..என் பேரில் கோடிக்கணக்கில் சொத்து இருக்குது ... டில்லியில்..."
"அப்படியா ?" என்று ஆச்சரியத்துடன் கேட்ட பிரபு , "எதனால் இந்த காட்டுக்குள் அஞ்ஞான வாசம் ?"
"அது நான் வாங்கி வந்த வரம் ?"
"அது என்ன வரம்?"
"எனக்கு எய்ட்ஸ் !" என்று சிரித்துக் கொண்டே பவித்ரா சொல்ல, "என்ன ?!" என்று அதிர்ச்சியுடன் கேட்டபடி நாற்காலியைவிட்டு எழும்பிவிட்டான் பிரபு.
------------------ தொடரும் -----------------

No comments:
Post a Comment