Labels

About myself Name : Kumari S. Arunachalam alias Aruna S. Shanmugam Occupation : Form

Sunday, August 13, 2017

வேண்டாமே வேறு பவித்ரா ...(12)


Image result for cartoon of  village girl and boy under the tree

"என்னது ? நீங்க டில்லிவாலாவா?' என்று வியப்புடன் கேட்டான் பிரபு.
"அதை அப்புறம் டிஸ்கஸ் பண்ணலாம்.  இப்போ உங்க மேட்டருக்கு வாங்க.. உங்களுக்கு எழுதுவதில் ஆர்வம் உண்டா ?"
"முதல்ல ஒண்ணு தெரிஞ்சுக்கோங்க.. எழுதறது என்னோட தொழில் இல்லை. நல்லவிஷயமோ..  கெட்டவிஷயமோ..எதையாவது பார்க்கும் போது உணர்ச்சி வசப்பட்டு எழுதுவேன். எழுதறது எல்லாத்தையும் பத்திரிக்கைக்கு அனுப்பும் பழக்கம் கிடையாது. அம்மாவிடம் காட்டி படிக்க சொல்வேன். என் பிரெண்ட் ராஜேஷ்கிட்டே குடுத்து அவனோட ஒபினியன் கேட்பேன். படிக்க சொல்லி அவங்கிட்ட நான் குடுத்த ஒரு கதையை அவன் என்னோட பேரில் விகடனுக்கு அனுப்ப அது க்ளிக் ஆச்சு. அவ்வளவுதான். லட்சக்கணக்கில் எனக்கு வாசக அன்பர்கள் இருக்கணும்ங்கிற எண்ணமெல்லாம் எனக்கு கிடையாது. எழுத்து வடிவில் நான் வெளிப்படுத்தும் என்னோட மனஉணர்வுகளை பகிர்ந்து கொள்ள ஒரேயொரு வாசகன் போதும். அந்த ஒரு வாசகனுக்காக நான் எழுதுவேன்"  
"ஒரு எழுத்தாளனுடைய திறமைனு நீங்க எதை நினைக்கிறீங்க ?"
"ஒரு எழுத்தாளனுக்கு இருக்கவேண்டிய தனித்தன்மை, அவன் தன்னோட வாசகர்களை,  கதை .. அதாவது சம்பவம் நடக்கும் இடத்துக்கு கையைப்பிடிச்சு அழைச்சிட்டுப் போணும். கதைபடிக்கிறோம்கிற உணர்வு அவனுக்கு இருக்கக் கூடாது. சம்பவம் நடக்கிற இடத்தில் இருக்கிறதா அவன் நினைக்கணும்."
"அப்புறம் ?"
"காலேஜ் படிப்பு முடிஞ்சதுமே எனக்கு கதை படிக்கிற பழக்கம் போயிட்டுது. காலேஜ் டேய்ஸில் பாடப்புத்தகத்தைவிட கதை புக்ஸ்தான் அதிகம் படிச்சேன். நான் எழுத ஆரம்பிச்சதும் மத்தவங்க எழுத்தை படிக்கிறதை விட்டுட்டேன். கல்கியோட நாவல் எனக்கு ரொம்பவும் பிடிக்கும். நம்ம கையைப் பிடிச்சு நம்மளை சோழர் காலத்துக்கும் பல்லவர்கள் காலத்துக்கும் அழைச்சிட்டு போவார். பொன்னியின் செல்வன்... பார்த்திபன் கனவு... அப்பப்பா... என்ன மாதிரியான படைப்பு.. சிந்தனை ஓட்டம். அந்த இடம் இன்னிக்குவரை கூட வெறுமையாதான் இருக்குது. தமிழ்வாணன், சுஜாதா  கதைகளைப் படிக்கிறப்ப நாமும் துப்பறிய கிளம்பற  பீலிங் வரும்... இப்போ நினைச்சா எந்த நாட்டுக்கு வேணும்னாலும் போயிட்டு வந்திடலாங்கிற அளவுக்கு வசதிகளும் வாய்ப்பும் பெருகிப் போச்சு. ஐம்பதுவருஷத்துக்கு முன்னே மெட்ராஸ்ங்கிறது தெக்கத்தி காரங்களுக்கு .. ஐ மீன் திருநெல்வேலி, தூத்துக்குடி பக்கம் இருந்தவர்களுக்கு ஒரு கனவு உலகம் மாதிரிதான். மெட்ராஸ்கிறது இதுதான் .. அது இப்படித்தான் இருக்கும்னு எழுத்தில் படம்பிடித்து காட்டினவர் எழுத்தாளர் மணியன்.. அப்போ மெட்ராஸ்.. இப்போதைய சென்னையை.. மெரீனா பீச்சை வார்த்தை களாலே படம்பிடித்துக் காட்டிய எழுத்தாளர் அவர் . அவங்க இடம் எல்லாம் இன்னும் காலியா இருக்குது. இந்த ஜெனெரேஷனுக்கு அவங்க யார்ங்கிறது கூட தெரியாதுன்னு நினைக்கிறேன்... அதுக்காக இவங்களுக்குப் பிறகு வேறே ரைட்டர்ஸ் யாரும் வரலேன்னு சொல்லலே. அவங்கவங்க தங்களோட தனிப் பாணியை நிரூபிச்சாங்க.  உங்களுக்கு யாரோட ரைட்டிங்ஸ் பிடிக்கும்?" என்று பிரபு கேட்டான். 
"இவங்கதான்னு எந்த வரைமுறையும் கிடையாது.அதோ அந்த அலமாரியைப் பாருங்க. அங்கே விவேகானந்தரின் சிந்தனையும் இருக்கும்.. இப்போதைய ஜெயமோகன்...ராமகிருஷ்ணன்... இவங்க படைப்புகளும் இருக்கும். படிப்பேன்.. அதை அனலைஸ் பண்ணுவேன்"என்றவள், "உங்களை உக்காரவச்சு பேசிட்டே இருக்கிறேன். யாராவது பேசக்கிடைச்சிட்டா தூக்கம் சாப்பாட்டை மறந்து பேச ஆரம்பிச்சிடுவேன். இது என்னோட வீக்னெஸ். இருங்க.. குடிக்க மோர் கொண்டு வரேன்" என்று சொல்லியபடி எழுந்து போனாள்.
மேஜை மீது அடுக்கி வைக்கப்பட்டிருந்த புத்தகங்களின் மீது அவன் கவனம் சென்றது.
ஒவ்வொரு புத்தகமாக எடுத்து புரட்டிப் பார்த்துவிட்டு அதனதன் இடத்திலேயே வைத்தான்.
ஒரு குவளை நிறைய மோரைக் கொண்டு வந்து அவன் முன்பாக நீட்டிய பவித்ரா, "புளிப்பு அதிகம்னு தோணினா சொல்லுங்க. இன்னும் கொஞ்சம் உப்பு சேர்க்கறேன் " என்றாள்.
"உங்களைப்பத்தி சொல்லுங்க"
"கண்டிப்பா.. நீங்க முருகய்யன்ட்டே ரொம்பவும் எச்சரிக்கையா இருக்கணும். "
"இந்த கிராமத்தில் அவர்தான் தாதாவா?"
"முட்டாள் மனுஷன் அவர். சுயமா சிந்திக்கத் தெரியாத முட்டாள். உணர்ச்சி வேகத்தில் எதையும் செய்ற பைத்தியக்காரன் "
"எதனால் அப்படி சொல்றீங்க ?"
"ஒரு விஷயத்தை நல்லா யோசிச்சு பாருங்க. இவரோட அக்காவும் அவங்க ஹஸ்பேண்ட்ம் ஒரு ஃ பயர் ஆக்சிடெண்டில் மாட்டிக்கிட்டாங்க. அக்காவோட கணவர் ஸ்பாட்லேயே அவுட். அக்கா நிலைமை அப்பவோ இப்பவோ.. தன்னோட பொண்ணை ஒருத்தன் கையிலே ஒப்படைக்காமே அநாதையா விட்டுட்டு போறோமேனு நினைச்சு கதறுறாங்க. ஆஸ் எ பிரதர்.. அதாவது அந்த அம்மாவோட தம்பியா இந்த முருகய்யன் என்ன செஞ்சிருக்கணும்? 'உன் ஸ்தானத்தில் இருந்து உன்னோட மகளை நான் பார்த்துக்கறேன். அவ படிப்பு முடிஞ்சதும் ஒரு நல்ல பையனா பார்த்து அவளைக் கட்டிக்கொடுக்கிறேன்'னு அந்த அம்மாவுக்கு அஸ்ஸுயரென்ஸ் குடுத்திருக்கணும். அதை விட்டுட்டு ஆஸ்பத்திரிக்கு வெளியில் இருந்த ஒரு அம்மன் கோயிலுக்குப் போய் அந்த அம்மன் கழுத்தில் இருந்த தாலியைக் கழட்டி எடுத்துட்டு வந்து வள்ளி கழுத்தில் கட்டி இருக்கிறார். அந்த திருப்தியில் அந்த அம்மா நிம்மதியா போய் சேர்ந்துட்டாங்க.  அதோட தன்னோட கடமை முடிஞ்சு போயிட்டதா இந்த முருகய்யன் அவன் வேலையைப் பார்க்க ஆரம்பிச்சிட்டான்.. இவன் பண்ணின முட்டாள்தனத்தாலே  ஒரு பொண்ணு வாழ்க்கை வீணா போனதுதான் மிச்சம்."
"சரியா சொன்னீங்க "
" அதுமட்டுமில்லே.. அந்த ஆளுக்கு எப்ப பார்த்தாலும் நோயைப் பத்தின பயம். சிந்தனைதான். இதைத்தொட்டா அந்த நோய் வந்துடுமோ; அதை மிதிச்சிட்டா அந்த நோய் வந்துடுமோனு பயந்து சாகிற முட்டாள். அந்த ஆள் முன்னாடி நின்னு ஒரேயொரு தும்மல் போடுங்க.. 'இந்த தும்மல் நம்மகிட்டே ஒட்டிக்கும். சளி பிடிக்கும். அது காசநோயா மாறி நம்மள கொன்னுடும். உயிரோட இருக்கிறவரை இருமி இருமி சாகணுங்கிற ரேஞ்சுக்கு கற்பனை பண்ணி கிட்டு  அந்த ஆள் தலை தெறிக்க ஓடுவார்"
"வள்ளியும் இதைத்தான் சொன்னாங்க "
"என்னனு ?"
"எங்க மாமன் நேரங்காலம் தெரியாமே பேசிப்பேசி உங்க உசிரை எடுத்தால் ஒரேயொரு தும்மல் போடுங்க. உடனே  அங்கேருந்து ஓட்டம் எடுத்துடுவாகனு சொல்லி இருக்காங்க."
"வள்ளியை நினைக்கிறப்ப மனசுக்குள்ளே ஒரு பெரும் பாரத்தை தூக்கி வச்ச மாதிரி இருக்குது. அந்த முட்டாள் தாலி கட்டினான். இந்த அடிமுட்டாள் அதை கழட்டி எறியாமே இன்னும் கழுத்தில் தொங்க விட்டுட்டு இருக்கிறா. "
"எனக்கு இப்போதான் ஒரு விஷயம் புரியுது. நான் ஊரிலிருந்து வரும்போது எதோ டஸ்ட்டை மிதிச்சிட்டேன். அதைப்பார்த்துட்டு அவர் ரொம்ப டென்சன் ஆயிட்டாரு. அப்போ அதை நான் ஒரு மேட்டரா எடுத்துக்கலே. இப்போ நீங்க சொல்றப்பதான் புரியுது. அது மட்டுமில்லீங்க. அன்னிக்கு ஈவினிங் ஒரு பெரிய முருங்கை மரத்தையே வெட்டி சாய்ச்சிட்டார். அந்த மரத்தில் எவ்ளோவ் பெரிய முருங்கைக்காய் இருந்துச்சு தெரியுமா? 'ஏன் வெட்டறீங்க'னு நான் கேட்டதும் 'அதில்  பூச்சி வந்துட்டுது. அது கடிச்சா உடம்பெல்லாம் தடிப்பு வரும்.. அரிப்பு வரும்.. அது கட்டியா மாறி, குஷ்டமா மாறிடும்'னு சொன்னார். 'என்னங்க ஸார் .. அது சாதாரண கம்பளி பூச்சி. புகைமூட்டம் போட்டா பூச்சி போயிடப்போகுது. அதை விட்டுட்டு ஒரு மரத்தை அடியோடு வெட்டறீங்களே. திரும்ப அந்த மரத்தை நட்டு வைக்க முடியுமா'னு கேட்டேன். அதைக் கேட்டதும் அவருக்கு வந்த கோபத்தைப் பார்க்கணுமே. ஆனா சடனா சிரிச்சு கிட்டே 'கிராமத்து சமாச்சாரம் உங்களுக்கு தெரியாது தம்பி. நீங்க உங்க வேலையை மட்டும் பாருங்க'னு சொன்னார்."
"உங்களை வெட்டாமே விட்டு விட்டார்னு நினைச்சு சந்தோஷப்படுங்க" என்று சொல்லும்போதே பவித்ராவுக்கு சிரிப்பு வந்தது.
"உங்களுக்கும் அவருக்கும் என்ன பகை ?"
"பகை இல்லை.. என்னைப்பார்த்து அவர் பயப்படறார் "
"பயமா ? என்ன பயம் ?"
"அவரோட வீக்னஸ் அவரை பயப்பட வைக்குது "
"புரியும்படி சொல்லுங்க."
"எனக்கு ஒரு முக்கியமான வேலை இருக்குது. டவுனுக்குப் போகணும். போன் பண்ணனும்.. சில புக்ஸ் பர்ச்சேஸ் பண்ணனும் "
"செலவுக்கெல்லாம் பணம்.. எங்காவது வேலை பார்க்கறீங்களா ?"
"அதையெல்லாம் அப்புறமா சொல்றேன். என் வேலையை நான் முடிச்சிட்டு வந்துடறேன்."
"என்னங்க .. உங்ககிட்டே ஒரு முக்கியமான விஷயம் கேட்கணும். அன்னிக்கு பஸ்ஸை விட்டு நீங்கி இறங்கி வர்றப்ப, நான் உங்களுக்கு ஹெல்ப் பண்ண வந்தேன். வேறே ஒரு லேடி குழந்தை, கையில் சுமையோட இருக்காங்க. அவளுக்கு ஹெல்ப் பண்ணுங்கன்னு சொன்னீங்க. நான் அந்த மரத்து பக்கம் போய்ப்பார்க்கிறப்ப அங்கே எந்த லேடியும் இல்லே. திரும்பிப் பார்த்தா, அங்கே நீங்களும் இல்லே. அவ்வளவு சீக்கிரமா அந்த இடத்தைவிட்டு எந்த பாதையில் போனீங்க?  தெரிஞ்சு வச்சுக்கிட்டா எனக்கும் அது ஹெல்ப்பா  இருக்குமே."
அதைக் கேட்டு சிரித்த பவித்ரா, "நான் உங்க பின்னாலேயே வந்து அந்த மரத்துக்குப் பின்னாடி ஒளிஞ்சிட்டு இருந்தேன். தட்ஸ் ஆல்.. கிளம்பலாம்.. நாளைக்கு மீட் பண்ணலாம்" என்றபடி வீட்டை விட்டு அவள் வெளியில் வர பாதித்தூரம் வரை அவளைத் தொடர்ந்த பிரபு, பிறகு வீட்டை நோக்கி நடக்க ஆரம்பித்தான்.
தனது அறைக்குப் போக நினைத்தவன், திரும்பி வள்ளியின் வீட்டு வாசலுக்கு வந்து , "என்னங்க " என்று குரல் கொடுத்தான்.
ஈரம் படிந்த கைகளைப் புடவைத்தலைப்பில் துடைத்தபடி ஓடிவந்த வள்ளி, "என்னங்கய்யா ?" என்றாள்.
"இன்னிக்கு உங்க பிரெண்டை பார்த்தேன் !"
"என் பிரெண்டா ? அது யாருய்யா ?"
"அதாங்க.. பவித்ரா... அவங்களை பார்த்தேன்." என்று சொல்லிவிட்டு பிரபு அங்கிருந்து கிளம்பினான்.
இதைக்கேட்ட வள்ளி வாயடைத்துப் போனாள்.. இந்த தம்பி இதை ரொம்ப ரொம்ப சாதாரணமா சொல்லுது. மாமன் காதுக்கு இந்த விஷயம் போனால் இங்கே ஒரு கொலை விழுந்தால் கூட ஆச்சரியப்பட ஒண்ணுமே இல்லையே.. கடவுளே.. என்ன இது கொடுமை?
மயக்கம் வருவதுபோல் இருந்தது.  சுவரோரம் சாய்ந்து தலையைக் கைகளால் பிடித்தபடி அங்கேயே உட்கார்ந்து   விட்டாள் வள்ளி.

                                                                                               ---------------- தொடரும் ---------------

No comments:

Post a Comment