பகலில் தூங்கும் பழக்கம் இல்லாததால் பொழுது போகாமல் வீட்டைச் சுற்றி வந்தபடி இருந்தான் பிரபு.
சாப்பாட்டு மேஜையை சுத்தம் செய்துவிட்டு, பாத்திரங்களை எடுத்துப்போக வந்த வள்ளி, "என்னங்கய்யா .. 'போபோ'னு பொழுதைப்பிடித்து தள்ள வேண்டி யதா இருக்குதா? டவுணுக்குப் போய் ஏதாது படம் பார்த்துட்டு வர்றதுதானே!" என்றாள்.
"சினிமா பார்ப்பதில் அவ்வளவு இன்ட்ரெஸ்ட் கிடையாது . எப்படிங்க நீங்க இந்த கிராமத்தில் இத்தனை வருஷமா இந்த இடத்தில் இருக்கீங்க ?" என்று வியப்புடன் கேட்டான்.
"பழகிப்போச்சு.. காலையில் எந்திரிச்சா தோட்டம் தொரவ சுத்தம் பண்ண, வயல்வேலையைக் கவனிக்கனு பொழுது ஓடிப்போயிடும். கொஞ்ச நேரம் எங்காவது உக்கார மாட்டோமானு இருக்கும். வயல்வேலை இல்லாத நாள்லே அங்கிட்டு வேலை பாக்கிற ஜனங்க இங்கிட்டு வருவாக. எதையாது பேசி பொழுதைக் கழிப்போம். நிலா இருக்கிற நாள்லே வாசலில் கயித்துக் கட்டிலை இழுத்துப் போட்டுட்டு ஓடுற நிலா, அதை விரட்டற மேகத்தை வேடிக்கை பார்த்தபடி விடியவிடிய முழிச்சிட்டு இருப்பேன். சிலசமயம் ஆயி அப்பன் நினைவு வந்துரும். அவகள நெனச்சு கண்ணீர் விட்டபடி ராப்பொழுதைக் கழிப்பேன்."
"........."
"எங்க அம்மாவும் மாமாவும் ரெட்டைப் புள்ளைங்க. நான் பொறக்கிறப்ப எங்க அம்மாவுக்கு நாப்பத்தஞ்சு வயசாம். புள்ளை இல்லைனு கோயில் குளம் மரம் செடி எல்லாத்தையும் சுத்தி வந்து என்னைப் பெத்தெடுத்து இப்படி பரிதவிக்க விட்டுட்டு ரெண்டுபேரும் ஒண்ணா போய் சேர்ந்திட்டாக. ஹூம்... அந்த புள்ளை இங்கிட்டு வந்தா பொழுது போறதே தெரியாது "
"எந்த புள்ளை ?" என்று இடைமறித்துக் கேட்டான் பிரபு.
சட்டென்று சுதாரித்துக் கொண்ட வள்ளி , "எங்கூட படிச்ச புள்ளை " என்றாள்.
"இப்ப வர்றதில்லையா? வரமாட்டாளா? ஏன் ?"
"ஏன்னு கேட்டா... அது அப்படித்தான்... எனக்கு வெளிவேலை இருக்கு. நான் கிளம்புதேன்" என்று பரபரப்புடன் சொல்லிய வள்ளி, அங்கிருந்து போனால் போதும் என்ற அவசரத்தில் வெளியேறினாள் .
இங்கே ஒரு பெண்ணைப் பற்றிய ஏதோ ஒரு விஷயம் இருக்குது. அதை பத்தி பேச இந்த வள்ளி பயப்படறாங்க. நான் அன்னிக்கு பஸ்ஸை விட்டு இறங்கி வர்றப்ப ஒரு பெண்ணைப் பார்த்தேனே.. ஒருவேளை அவளாக இருக்குமோ?
யாரிடம் கேட்டால் இதுபற்றின துப்பு கிடைக்கும் என்று யோசனையில் ஆழ்ந்தான் பிரபு .
வாசலில் பேச்சுக்குரல் கேட்டது.
தலையில் சுமையுடன் முருகய்யன் முன்னே வர, அவர் பின்னால் வயதான ஒருவர் வருவது தெரிந்தது.
ஒருவேளை வள்ளி சொன்ன " கிழட்டு நாய் " இதுவாக இருக்குமோ என்று கேள்வி கேட்டவன், "இருக்கும் .. இருக்கும்" என்று தனக்குள் பதிலும் சொல்லி கொண்டான்.
வள்ளி சொல்லியிருந்த உள் அறைக்குள் சென்று அவர்கள் பேசுவதைக் கவனிக்கலாம் என்ற நினைப்பில் அங்கு விரைந்தான்..
"என்ன முருகா? உன் காலடி சத்தம் கேட்டாலே ஓடி வர்ற வள்ளி, நீ தலை சுமையை இறக்கி வச்ச பிறகுகூட வரலே"
"எங்கிட்டாது போயிருப்பா.." என்றபடி வீட்டுக்குள் சென்ற முருகய்யன் சிறிது நேரத்தில் வெளியில் வந்து, "வாத்தியாரய்யா .. சமைச்சு வச்சிட்டுதான் போயிருக்கா.. நீங்களும் ஒரு வாய் சாப்பிடுதீகளா?" என்று கேட்டான்.
"வேண்டாம் முருகா... நீ சொன்னதே போதும். நான் இரை எடுக்காமே வெளிலே கிளம்பவேமாட்டேன். வெறும்வயித்தோட வெளியில்சுத்தப் போனா தலை கிறுகிறுக்கும். அதனாலே புடிக்குதோ புடிக்கலையோ .. ரெண்டு வாய் அள்ளி போட்டுட்டுதான் வருவேன். தின்னு முடிச்சதும் வீட்டில இருக்கிறதுக டீவீ முன்னாலே உக்காந்துட்டுக.. எனக்கு பொழுது போகலே. உன் கிட்டே பேசி பொழுதைக் கழிக்கலாம்னு வந்துட்டேன்"
"அதுக்கென்னய்யா.. நீங்க எப்ப வேணா வரலாம்.. போலாம். ஒரு இளநீ வெட்டி தரட்டுமா ?"
"நீ இம்புட்டு பிரியமா கேக்கிறப்ப நான் வேணாம்னு சொல்வேனா.. உன் விருப்பம் என் பாக்கியம்.."
அடுத்த பத்தாவது நிமிடத்தில் கையில் இளநீருடன் அங்கு ஆஜரானான் முருகய்யன்.
"என்னப்பா .. நீ... ஒரு இளநீக்காக தென்னந்தோப்பு வரை போயாரணுமா ? ஒரு டம்ளர் பச்சைத்தண்ணீ குடுத்தா வேணாம்னா சொல்லப்போறேன் " என்றபடி முருகய்யன் நீட்டிய இளநீரை வாங்கிக் குடிக்கலானார்.
பின்.."அப்பாடா ..." என்று ஒரு நீண்ட பெருமூச்சை விட்டார்.
அதற்குள் தட்டில் சாப்பாட்டைப்போட்டு எடுத்துக்கொண்டு வந்த முருகய்யன் அவர் அருகில் கட்டிலில் அமர்ந்து கொண்டான்.
"வாத்தியாருக்கு நூறாவது பொறந்த நாள் "
இதைக்கேட்டு முருகய்யன் விழிப்பதைக்கண்ட வாத்தியார் (கிழட்டு நாய்) "நான் புரட்சித்தலைவரோட பொறந்த நாளைப்பத்திதான் சொன்னேன். நான் படிச்சிட்டு இருந்த காலத்தில் எம்.ஜி.ஆர் படம் ரிலீஸ் ஆகுதுன்னா டிக்கெட் வாங்க தியேட்டர் வாசலில் தவம் கிடப்போம். முந்தின நா ராத்திரியே போய் க்யூவில் உட்காந்து இடம் பிடிப்போம். அதெல்லாம் ஒருகாலம். எனக்கு ஒண்ணு மட்டும் புரியலே "
"என்னங்கய்யா ?"
"தலைவர் செத்தப்பவும் நாடு "ஜேஜே"னு இருந்துச்சு. அதாவது "ஒரு ஜே - ஜானகி அம்மா. இன்னொரு ஜே - நம்ம அம்மா.. அதான் ஜெயலலிதா..ஆக ரெண்டு ஜே .. இப்ப அம்மா போனதும் ரெண்டு, மூணு, நாலுனு அணி பெருகி கிட்டே போகுதே.. தலைவராகட்டும்... அம்மா ஆகட்டும்.. அவங்களை நேரில் கண்ணால்கூட பாக்காதவங்க.. அவங்களை நெருங்கக்கூட முடியாதவங்க எல்லாம் அவங்க செத்தப்ப பதறித்துடிச்சு கண்ணீர் விட்டாங்க. உயிரை விட க்கூட துணிஞ்சாங்க. ஆனா அவங்ககூடவே இருந்து எல்லா சுகத்தையும் ஆண்டு அனுபவிச்சவங்கள்லாம் அவங்க தலை கீழே விழுந்ததுமே இவங்க தலையெடுக்க ஆரம்பிச்சிட்டாங்க. அவங்களோட பொன்னுக்கு பொருளுக்கு பதவிக்காக அடிச்சுகிட்டு இருக்காங்க. இதான் உலகம்."
"வாஸ்தவமான பேச்சு "
"சரி.. இதை விட்டுத்தள்ளு.. எனக்கென்னவோ நம்மளோட கொள்ளுப்பேர புள்ளைங்க, எள்ளுப்பேரப்புள்ளைங்க இன்னொரு இந்திய சுதந்திரத்துக்காக போராட வேண்டி இருக்குமோனு பயமா இருக்கு"
"என்ன சொல்லுதீக வாத்தியாரய்யா "
"நீதான் பள்ளிக்கூடம் பக்கமே போனதில்லையே. போயிருந்தா.. சரித்திரம் படிச்சிருந்தா உனக்கும் இந்த பயம் வந்திருக்கும்."
"புரியுதாப்லே சொல்லுங்கய்யா..நான் சாப்பிட்டதட்டை வீசிட்டு கை கழுவிட்டு வர்றேன்" என்றபடி ஓடியவன், அடுத்த சில நொடியில் ஓடிவந்து பள்ளிக்கூட மாணவன் மாதிரி அவர் அருகில் அடக்க ஒடுக்கமாக அமர்ந்தான்..
"சொல்லுங்கய்யா"
"இந்தியா வெள்ளைக்காரனுக்கு எப்படி அடிமைப்பட்டதுனு தெரியுமா ?"
"அய்யா சொன்னா தெரிஞ்சுக்குதேன்."
"ஒருகாலத்தில் இந்தியா முழுக்க ஒவ்வொரு மாகாணத்திலும் ஒவ்வொரு பிரச்சினை. ஒரு இடத்தில் வாரிசு சண்டை. ஒரு இடத்தில் "நீயா நானா"ங்கிற போட்டி.. சில இடத்தில் பங்காளி சண்டை.. அறுக்கத் தெரியாதவன் இடுப்பில் அம்பத்தெட்டு அரிவாள்ங்கிறமாதிரி ஒரு சில கையாலாகாத ராஜாக்களும் இருந்தாங்க. அவங்க பலவீனத்தை சமூக விரோதிகள் பயன்படுத்திகிட்டு ராஜாக்களை அவங்களோட "கைப்பாவை"யா ஆட்டி வச்சாங்க "
"கைப்பாவைன்னா என்னங்க அய்யா "
"சாவி குடுத்தா ஆடற பொம்மை மாதிரினு வச்சுக்கோயேன். வியாபாரம் பண்ண இந்தியாக்கு வந்த வெள்ளைக்காரன் இங்கே இருந்த குழப்பத்தை பயன்படுத்திகிட்டு இங்கே நங்கூரம் போட்டு நல்லா உக்காந்ததுமில்லாமே நம்ம ஆளுங்களை அவனுக்கு அடிமையா வேலை பார்க்க வச்சான். அதுக்க ப்புறம் ஜனங்களுக்கு முழிப்பு வந்து அவனை விரட்ட படாதபாடுபட்டாங்க. அதிலே போன உசிர் எத்தனை? பட்ட கஷ்டம் எத்தனை எத்தனை? இதை யெல்லாம் சொல்லி மாளாது. இப்ப.. இன்னிக்கு.. இந்தியா நிலைமையை நினச்சு பாரு. ஒவ்வொரு ஸ்டேட்டில் ஒவ்வொருவிதமா ஒவ்வொரு கலவரம். தமிழ்நாட்டு நிலவரம் ஊரறிந்த ரகசியம். பொழுதுக்கொரு சாலை மறியல்... அடிதடி சண்டை. அதைக் கவனிக்கத்தான் போலீஸ்காரங்களுக்கு நேரம் சரியா இருக்குது. சந்தடி சாக்கிலே வடக்கே இருந்து பறந்து வந்து சங்கிலி பறிப்பு வேலையை ஒரு டீம் பண்ணிட்டு இருக்குது. அந்தக்காலத்தில் வியாபாரம் பண்ண வெள்ளைக்காரன் அவனா வந்தான். இப்போ வெளிநாட்டு ஆளுங்களை இந்தியாவுக்கு வந்து பிசினெஸ் பண்ணுங்கன்னு நாமளே வெத்திலை பாக்கு வச்சு கூப்பிடுதோம். பழசையும் இன்னிக்கு நிலைமையையும் ஒப்பிட்டு பாரு.. நம்ம எள்ளுப்பேரப்பிள்ளை..கொள்ளுப்பேரப்பிள்ளைங்க இன்னொரு இந்திய சுதந்திரத்துக்காக தயாராகிற நிலைமை வந்தா ஆச்சரியப்பட ஒண்ணுமே இல்லை."
"எனக்கு ஒண்ணுமே புரியலே "
"நாடு உருப்பட்டுடும். ஆகஸ்ட் 15 சுதந்திரதினம். தெரியுந்தானே ?"
"தெரியும்யா. டவுண் ரயில்வே ஸ்டேஷனில் கொடியேத்தி மிட்டாய் தருவாங்க. "
"வெள்ளைக்காரனை எதிர்த்து நின்னு நெஞ்சைநிமிர்த்தி போராடி வாங்கின சுதந்திரத்தை, நாட்டுக்குள்ளேயே இருக்கிற தீயசக்திக்குப் பயந்து பயந்து கொண்டாட வேண்டிய நிலமைலே நாடு இருக்குது.. இந்த நாட்டை நம்பி இளைய தலைமுறை இருக்குது. எல்லாரையும் ஆண்டவன்தான் நல்லபடியா காப்பாத்தணும். அப்ப நான் கிளம்பறேன்.. வள்ளி வந்தா நான் வந்துபோனதா சொல்லு " என்றபடி அங்கிருந்து கிளம்பினார் வாத்தியார்.
வீட்டின் உள்ளே இருந்து வெளியில் நடந்த உரையாடலைக் கேட்டுக் கொண்டிருந்த பிரபு, "பரவாயில்லே. ஆளு விஷயந்தெரிஞ்சவராதான் இருக்கிறார் " என்று மனசுக்குள் நினைத்துக் கொண்டான்.
----------------- தொடரும் ----------------

No comments:
Post a Comment