"என்னய்யா !.. அப்படி என்னதான் யோசனை ?"
"இல்லே .. இந்த ஊரில் இருக்கிறது ஒரேயொரு பிள்ளையார் கோயில். முப்பது வீடுங்க. எல்லாருமே விவசாய வேலை பார்க்கிறவங்க. இவங்ககூட பேசவும் ஸ்டடி பண்ணவும் எந்த விஷயமும் இருக்கிறமாதிரி எனக்கு தோணலே. பிறகு ஏன் அண்ணன் என்னை இங்கே அனுப்பினார்னு யோசனை பண்ணிட்டு இருக்கிறேன். மனசில் பதியறமாதிரி எந்தவொரு கேரக்டரும் இல்லையே."
"அட ! இதுக்கா இம்புட்டு கவலை? பக்கத்துக்கு ஊரிலேருந்து ஒரு கிழட்டு நாய் அடிக்கடி இங்கிட்டு வரும். அது பேசறதை உங்க கதையில் எழுதுங்க."
"என்னது? பேசற நாயா? அதை எப்படி இவ்வளவு நாளும் மீடியா ஆளுங்க விட்டு வச்சிருந்தாங்க?"
"இது ரெண்டு கால் நாய்ங்க. நாசமா போறவனுக்கு எழுபது வயசுக்கு மேலே ஆகுது. புத்திதான் சின்னப்புத்தி. இவன் கெட்ட கேடுக்கு வாத்திச்சி வேலை வேறே பார்த்து முடிச்சிட்டான். இவன்கிட்டே படிச்சு உருப்பட்டது எத்தனை என்கிறதுதான் எனக்கு இன்னும் தெரியலே "
"புதிர் போடாமே புரியும்படி சொல்லுங்க "
"அய்யா..ஒரு மனுஷஜென்மத்தோட பேச்சுவார்த்தை பழக்கவழக்கம் எல்லாம் அவனவன் வயசுக்கு தகுந்தாப்லே இருக்கணும். இல்லாட்டா அவனவன் பாக்குற வேலைக்கு தகுந்தமாதிரி இருக்கணும். ரெண்டும் இல்லாத சாக்கடை அந்த ஆளு. எழுபது வயசு கிழட்டு நாய்.. கட்டைலே கொண்டுபோய் வைக்கிற வயசாச்சு .. சல்லிப்பய மாதிரி பேசிட்டு திரிவான்.. என் மாமனுக்கு அவன் சொல்றது எல்லாமே வேதவாக்கு. நான் தட்டிக்கேட்டா, "பாடம் சொல்லி தர்ற வாத்தியார், நாம கும்பிடுத தெய்வத்துக்கு சமம்"னு எனக்கு சொல்லுவாக. வாத்தியார்ங்கிறவக தெய்வத்துக்கு சமம். இல்லேனு சொல்லலே. இவன் எதிலேயும் சேர்க்க முடியாத சாக்கடை !"
"நீங்க இவ்வளவு ஆவேசமா பேசறத பார்த்தா அவரோட திருவிளையாடல் அதிகம் இருந்திருக்கும் போலே"
"அவர் என்ன அவர் ! விளக்குமாத்துக்கு பாட்டுக்குஞ்சலமா ?"
"என்னங்க ஒரு சந்தேகம்.. விளக்குமாத்துக்கு பாட்டுக்குஞ்சலம் கட்டினா அது நல்லா இருக்காதா? லேடீஸ் ஜடையில் மட்டுந்தான் கட்டணுமா?.. அக்கா.. மொறைக்காதீங்க.. இதே டயலாக்கை நிறையபேர் சொல்லி நான் கேட்டிரு க்கிறேன். அதான் என் டவுட்டை க்ளியர் பண்ண கேட்டேன்.. ஸாரி .. ஸாரி சிஸ்டர் .. நீங்க கன்டினியூ பண்ணுங்க "
"அந்த நாய் இங்கே வாறதே ஓசியில கிடைக்கிறத பொறுக்கிட்டுப் போகத்தான். வந்தோம் .. பொறுக்கினோம்.. போனோம்னு இல்லாமே ஏதாது ஊர்வம்பை இங்கே விதைச்சிட்டு போகும். அதை என் மாமன் தண்ணி ஊத்தி வளக்கும். போன வாரம் அந்த நாய் உதித்த தத்துவத்தை அது மாதிரியே பேசிக்காட்டவா ? "
"ஓ .. உங்ககிட்டே பேசினா நிறைய விஷயம் கிடைக்குது. நீங்க தாராளமா மிமிக்ரி பண்ணுங்க "
"நான் எங்க மாமன் மாதிரியும் அந்த நாய் மாதிரியும் நான் மாத்தி மாத்தி பேசுவேன்."
"சரி"
வள்ளி நடிப்பை தொடர, பிரபு அவளை பார்த்தபடி அமைதியாக இருந்தான்.
"என்ன முருகைய்யா ... என்ன பண்ணுதே ?"
"வாங்க வாத்யாரையா.. தோட்டத்திலே கிடக்கிற குப்பையை எடுத்துட்டு இருந்தேன்."
"தோட்டத்திலே நல்ல விளைச்சல் போலிருக்கு "
"ஆமாம் "
"வீட்டுக்கு விருந்தாளுக வாறாக... நாலு தேங்காய் பறிச்சு குடு "
"நாலு என்ன நாலு.. நாப்பது கொண்டு போனா கூட ஏன் கொண்டுபோறேனு கேட்க இங்கிட்டு யாரும் கிடையாது. வாத்யாரையா.. வெள்ளரி கூட பதமான பிஞ்சா இருக்கு. பறிச்சு கொண்டாரேன் "
"உன் விருப்பம்.. நீ சொன்னா நான் மறுத்தா பேசப்போறேன்."
"கத்திரிக்கா கூட இளம் பிஞ்சா இருக்கு.. கொண்டு போங்கய்யா "
"நீ இம்புட்டு பிரியமா சொல்றப்ப நான் வேண்டாம்ப்பேனா ?"
"இன்னிக்கு பேராண்டி வரலே போலிருக்கு ?"
"காலைல எந்திரிச்சதுமே கிரிக்கெட்ம ட்டையை தூக்கிட்டு வெளிலே கிளம்பி போயிட்டான். வீட்டுலே இருக்கிற பொம்பளைக எல்லாரும் துக்க வீட்டில் உக்காந்திருக்காப்லே டீவீ முன்னாடி உக்காந்திருவாக. எனக்கு அதை பார்க்க பிடிக்காது. வெளியே கிளம்பி வந்துருவேன்."
"சும்மா மோட்டுவளையை பார்த்துட்டு உக்காந்திருக்கதுக்குப் பதிலா கண்ணு முன்னாடி அசையறத பார்த்திட்டு இருக்கலாந்தானே ?"
"அத பாக்க யாருக்கு பொறுமை இருக்குது? எந்த சேனலை திறந்தாலும் ஒரே ஆட்டமும் பாட்டமும். இல்லாட்டா சீரியல். "
"அத பாக்க யாருக்கு பொறுமை இருக்குது? எந்த சேனலை திறந்தாலும் ஒரே ஆட்டமும் பாட்டமும். இல்லாட்டா சீரியல். "
"புள்ளைகளுக்கு அதுதானே புடிக்குது "
"முருகையா .. எனக்கொரு சந்தேகம். ஆடுற கேஸுங்க டிரஸ்ங்கிற பேரிலே எதையோ போட்டுட்டு ஆடுதுங்க. அதுக்கு மார்க் போடறவங்க ஏன் அரைகுறை ட்ரெஸ்ஸில் உக்காந்திருக்காங்கனு எனக்குப் புரியல. சினிமாலே மார்க்கெட் போன உப்பிப் போன மூஞ்சி எல்லாம் முகம் முழுக்க பவுடரைப் பூசிக்கிட்டு வந்து பயங்காட்டுதுக. அதுலயும் ஒரு அம்மா போடற மேக்கப் இருக்கே. அதை பார்க்கிற பெரிசுகளேகூட பயந்து போயிடுவாங்க.. அந்த அம்மாவை பூச்சாண்டி னு சொல்லி பயங்காட்டிதான் என் வீட்டு பேரப்பிள்ளைக்கு சாப்பாடு ஊட்ட வேண்டி இருக்குது. சினிமா நடிகையை மேக்கப் இல்லாமே பார்த்தா ரசிகர்கள் பயந்து போயிடுவாங்கனு அப்போ பத்திரிக்கையில் ஜோக் எழுதுவாங்க. இப்போ இவங்க மேக்கப்பை பார்த்து பயப்பட வேண்டி இருக்குது. சரி .. பழைய பாட்டாவது கேக்கலாம் பாக்கலாம்னு சேனலை திரும்பினா அங்கேயும் நண்டு மாதிரி இளந்தாரி புள்ளைக அரைகுறையா வந்து பாட்டைப்பத்தி ஏதேதோ கதை சொல்லுதுக. அந்த சினிமா பாட்டு வெளியான சமயத்திலே இதுகளை பெத்தவங்க கூட பிறந்திருக்க மாட்டாங்க. ஆனா இதுக தமிழ்பாட்டுக்கு தமிழ் மொழியில் விளக்கம் சொல்லுதுக .. அதை பார்க்கிற பொறுமை எனக்கு கிடையாது. அதான் அவங்க டீவீ முன்னாடி உக்காந்தா நான் வெளியில் கிளம்பி வந்துடுவேன்... முருகையா.. கருவேப்பிலை இருக்குதானே ? அதிலே ரெண்டு கைப்பிடி போடு "
- அய்யா .. ஆக்ட் முடிஞ்சுது. அந்த நாய் கேட்டது ரெண்டு கைப்பிடி கருவேப்பிலை.. என் மாமன் ரெண்டு கொப்பை ஒடிச்சு காய்கறி கூடையிலே போட்டு குடுத்தனுப்புவாக. அதைக்கூட பொறுத்துக்கலாம் தம்பி. அந்த நாய் இங்கிட்டு இருந்து நகர்ந்ததுமே, வீட்டுக்குள்ளே இருந்த என்னைக் கூப்பிட்டு, "இனிமே அரைகுறையா துணி உடுத்தக்கூடாது'னு சொன்னாக . எனக்கு வந்த கோபத்தைப் பார்க்கணுமே. "நான் என்னிக்கு அந்தமாதிரி டிரஸ் போட்டுட்டு ரோட்டிலே திரிஞ்சேன்.. அதை நீ எத்தனை தடவை உன் கண்ணாலே பார்த்திருக்கே?'னு கேட்டேன். மொகரக்கட்டையை தொங்க விட்டுகிட்டு இந்த மனுஷன் போனான் . அந்த நாய் வந்தாலே ரகளைதான் தம்பி "
"ஒவ்வொரு ஜென்மங்களுக்கு ஒவ்வொரு மாதிரி புத்தி வேலை செய்யும். சாக்கடைனு நினைச்சு ஒதுங்கிப் போறது புத்திசாலித்தனம்."
"தம்பி.. தீவிரவாதிங்க ஒண்ணுந் தெரியாத அப்பாவி ஜனங்களை போட்டுத் தள்ளுராங்களே. இந்த மாதிரி வெட்டிவேதாந்தம் பேசிகிட்டு திரியற நாய்ங்களை பிடிச்சிட்டுப் போய் நொறுக்கணும். அதை பாத்து மத்தவங்க திருத்தணும்"
"ப்ளீஸ் .. இந்தமாதிரி எல்லாம் பேசாதீங்க. யார் காதிலாவது விழுந்தால் தீவிரவாதிகளின் ஆதரவாளர்கள்னு சொல்லி குண்டர் சட்டத்தில் கைது பண்ணி உங்களை வளர்மதி பக்கத்தில் உக்கார வச்சிடுவாங்க. என்னை யார் பக்கத்தில் உக்கார வைப்பாங்களோ தெரியாது "
"அட விடுங்க அய்யா .. இங்கிட்டு ஒரே இடத்தில் உக்காந்திருக்கதுக்குப் பதிலா அங்கிட்டு எப்படி இருக்குனு பார்த்திட்டு வருவோம்.. என்ன நான் சொல்றது ?"
"அக்கா.. உங்களுக்கு இங்கே இருந்தாலும் சரி.. அங்கே இருந்தாலும் சரி. ரெண்டும் ஒண்ணுதான். என் நிலைமை அப்படி இல்லே. எங்க அம்மா தவிச்சு போயிடுவாங்க.. என் பிரெண்ட்க்கு போன் பண்ணி அம்மாவை பத்தி விசாரிக்க நினைச்சேன். உங்க பேச்சில் அதை மறந்துட்டேன். நான் டவுண் வரை போய்ட்டு வந்துடறேன்."
"உங்க கையிலதான் போன் இருக்கே. கொடுங்க.. தெரிஞ்சவங்க கிட்டே கொடுத்து சார்ஜ் பண்ணித்தர சொல்றேன். இங்கிட்டு இருந்தே அம்மாகிட்டே பேசலாமே."
"வேண்டாம்.. நீங்க எல்லாரும் எழுதப்படாத ஒரு சட்டத்துக்கு கட்டுப்பட்டு இவ்வளவு நாளும் இங்கே இருக்கீங்க. அதை ஏன் நான் மாத்தணும். உங்க கூட இருக்கிறவரை உங்களோட ரூல்ஸ்தான் எனக்கும். ஒண்ணு கேட்கலாமா ?"
"கேளுங்கய்யா "
"நீங்க படிச்சிருக்கீங்களா ? சில விஷயங்களை ரொம்பவும் விவரமா பேசறீங்க. சில சமயம் குழந்தைத்தனமா இருக்கீங்க."
"ஒன்பதாங்கிளாஸ் படிக்கிறப்ப இந்த மனுஷன் எனக்கு தாலி கட்டினாக. அதுக்குப் பொறகு நான் ஸ்கூல் பக்கமே போகலே."
"இவர் தடுத்திட்டாரா ?"
"இல்லே .. போக சொன்னாக .. ஆனா கூடப்படிக்கிற புள்ளைக, கெழவனைக் கட்டிக்கிட்டேன்னு சொல்லி கேலி பண்ணுவாகளே. அதுக்குப் பயந்து நான் பள்ளிக்கூடம் பக்கமே போகலே. அதுக்கு முன்னாடிவரை பஸ் ஏறி பாளையங் கோட்டை பள்ளிக்கூடத்துக்குப் போயிட்டு வந்தவ நான் "
இதை சொல்லும்போது அவளையுமறியாமல் அவள் கண்ணிலிருந்து தண்ணீர் வடிந்தது. அதை பார்க்க சகிக்காதவனாக அங்கிருந்து கிளம்பினான் பிரபு.
---------------------- தொடரும் ----------------
---------------------- தொடரும் ----------------
No comments:
Post a Comment