எங்காவது பிரயாணம் செய்வது போன்ற பேச்சு வரும்போதெல்லாம், "அம்மா, முழுபவுர்ணமி நிலவு அன்னிக்கு எக்ஸ்பிரஸ் ட்ரெயினில் ரிசெர்வேஷன் கம்பார்ட்மெண்டில் ஜன்னலோர ஸீட்டில் சாய்ந்து உக்கார்ந்துக்கிட்டு, வெளியில் தெரியும் மரம் செடி கொடி, தூக்கத்தில் ஆழ்ந்திருக்கும் வீடுகள், 'தேமே'னு மங்கலாக எரிகிற தெருவிளக்குகள் இதையெல்லாம் ரசிச்சுகிட்டே பயணம் செய்கிற சுகம் இருக்கே, அதுக்கு ஈடு இணையே கிடையாதும்மா" என்பான் பிரபு.
"ஆமாம்.. ஒரேயொரு தடவை காலேஜ் ப்ரெண்ட்ஸ் கூட டில்லிக்கு போய் வந்தது தவிர நீ எங்கேயும் போனது கிடையாது. என்னவோ அடிக்கடி ட்ரெயினில் ட்ராவல் பண்றவன் மாதிரி பேசறே "
"இல்லே சாரதாம்மா... எனக்கு அந்த எக்ஸ்பீரியன்ஸ் இன்னும் அப்படியே மைண்டில் நின்னு பேசுது."
"ரொம்ப நேரம் நின்னா அதுக்கு கால் வலிக்கும். அதை உட்கார வை இல்லாட்டா தூங்க வை "
"சாரதாம்மா ... நாம லாங்க் டிஸ்டன்ஸ் டூர் ஒண்ணு போயிட்டு வரலாமா? எக்ஸ்பிரஸ் ட்ரெயினில் ரிசெர்வேஷன் கம்பார்ட்மெண்டில் ஜன்னலோர ஸீட்டில் சாய்ந்து உக்கார்ந்துக்கிட்டு வெளியுலகை ரசிச்சிகிட்டு ... போலாமா ?"
"..................."
"ஓகே சொல்லுங்க... இல்லாட்டா வேண்டாம்னு சொல்லுங்க" என்று அம்மா முகத்தோடு முகம் சேர்த்து கொஞ்சலாக பிரபு கேட்கும் போதெல்லாம், "பார்க்கலாம் கண்ணு" என்பது மட்டுமே அம்மாவின் பதிலாக இருக்கும்.
இன்றைக்கு நெல்லை எக்ஸ்பிரஸில் ரிசெர்வேஷன் கம்பார்ட்மெண்டில் ஜன்னலோர ஸீட்டில் சாய்ந்து உக்கார்ந்துக்கிட்டு முழு பவுர்ணமி நாளில் திருநெல்வேலிக்கு பயணித்துக் கொண்டிருந்தான் பிரபு.
ஆனால் மனம் பவுர்ணமி நிலவை ரசிக்கவில்லை. வெளியுலகே இருட்டிக் கிடப்பது போன்ற பிரமை.
அம்மாவுக்கு என்ன ஆச்சு? கொஞ்ச நாட்களாகவே அம்மா எதையோ பறி கொடுத்தது போல இருக்கிறாள்.
"உங்க பிரச்னை என்னனு வாய்விட்டு சொல்லுங்கம்மா.. சொன்னால்தானே எனக்குப் புரியும். நான் செய்றது ஏதாது உங்களுக்கு பிடிக்கலையா? பிடிக்க லைன்னா அதை வெளிப்படையா சொல்லுங்க. ஒண்ணு, என்னோட செய்கை க்கு காரணத்தை உங்ககிட்டே சொல்றேன். அது தப்புனு நீங்க புரிய வச்சா நான் திருத்திக்கிடறேன்" என்று நான் கேட்கும்போதெல்லாம், "அப்படி எதுவும் இல்லேடா. நீ என்னிக்குமே என் மனம் நோகும்படி நடக்கிற பிள்ளை இல்லை. ஆனா நான் எவ்வளவோ தடுத்து சொல்லியும் வேலைக்காக சென்னைக்கு தான் போவேன்னு சொல்லி பிடிவாதம் பிடிச்சு, நான் பார்த்திட்டு இருந்த வேலையையும் ரிஸைன் பண்ண வச்சு என்னை மதுரையிலிருந்து சென்னை க்கு கூட்டிட்டு வந்தே. நான் தடுத்தும் நீ கேட்காதது உங்க அண்ணனோட உள்ள சிநேகிதம். அவர் ரெகமெண்ட் பண்ணின வேலைக்காக சென்னை வந்தது ... இந்த ரெண்டுந்தான்.. மத்தபடி நீ தாய் மனசை நோக வைக்காத புள்ளைடா.. புருஷன் விஷயத்தில் எனக்கு வஞ்சனை செய்த கடவுள் பிள்ளை விஷயத்தில் அதை சரி கட்டிட்டார்."
"இல்லே சாரதாம்மா... நானும் உங்களை கவனிச்சிட்டுதானே இருக்கிறேன். சிலசமயம் உங்களை சுத்தி என்ன நடக்குதுங்கிறது கூட தெரியாத பிரமையில் உட்கார்ந்திருக்கீங்க "
"அதல்லாம் ஒண்ணுமில்லே.. நீ கற்பனைக்குதிரையை பறக்கவிடாதே " என்று கேலியாக சிரிக்கும் அம்மா, அன்றைக்கு அண்ணன் வீட்டிலிருந்து திரும்பின நான் அண்ணன் சொன்ன சினிமாக்கதை விஷயத்தை சொன்னதும் என்ன வொரு கோபப்பார்வை பார்த்தாள்.
அப்படி ஒரு அனலை நான் அம்மா முகத்தில் பார்த்ததே கிடையாதே.
"இன்னும் என்னவெல்லாம் சொன்னாரு உங்க அண்ணா ?"
"அம்மா ஜஸ்ட் ஒன் ஆர் டூ வீக்ஸ்..அதிக பட்சம் ஒரேயொரு மாதம். அவ்வளவு தான். கிராமத்தை ஓரளவு ஸ்டடி பண்ணிட்டு திரும்ப சென்னைக்கு வந்திட ப்போறோம்.?"
"வந்திடப்போறோமா ?"
"ஆமாம்.. வந்திடப்போறோம் !"
"போறோம்னு சொன்னா அதுக்கு என்ன அர்த்தம்.?"
"நீங்களும் நானும் வயல்வெளி கிராமத்துக்குப் போறோம். அங்கே சிலநாள் தங்கி கிராமத்து சூழ்நிலை அவங்க பழக்கவழக்கங்களை தெரிஞ்சுக்கிட்டு சென்னை வந்திடறோம்."
"நான் வரலே "
'இப்படி சொன்னா எப்படிம்மா ?"
"அது அப்படித்தான் .. நீ எங்கேயும் போகக்கூடாது "
"சாரதாம்மா.. நான் அண்ணன்கிட்டே ப்ராமிஸ் பண்ணிட்டேன்."
"ஓகோ.. ப்ராமிஸ் பண்றதுக்கு முன்னாடி அம்மாகிட்டே கேக்கணும்னு தோணலே .. அப்படித்தானே ?"
"அம்மா நீங்க செர்வீசில் இருந்தால் லீவு அதுஇதுனு ஏகப்பட்ட ப்ராப்ளம் இருக்கும். நீங்க வீட்டில் இருக்கிறீங்க.. அது சென்னையானா என்ன நெல்லையானா என்ன ?"
"ஓகோ..அப்புறம் ?"
"அம்மா .. ப்ளீஸ்ம்மா "
"நீ போறதிலே எனக்கு இஷ்டமில்லே.. உன்னோட ப்ராமிஸ் உனக்கு முக்கியம்னா நீ தாராளமா போயிட்டு வா. நான் இந்த வீட்டு நடையை தாண்டி எங்கேயும் வரமாட்டேன்."
"அம்மா .. எல்லாரும் எதையாவது எதிர்பார்த்து அண்ணா கிட்டே பழகிறாங்க. ஆனா அண்ணா எங்கிட்டே எதிர்பார்க்கிறது ஒரேயொரு கதை. அது எனக்கு எழுதவருமா? அண்ணா அதை ஓகே சொல்வாரா .. இதெல்லாம் வேறே விஷயம். என்னையும் ஒரு ஆளுனு மதிச்சு என்கிட்டே ஒரு பொறுப்பை கொடுத்திருக்கிறார். அதை நான் மனசார செய்யாட்டாலும் அவர் என் உயிரைக் காப்பாத்தின ஒரு நல்ல மனுஷன். அதுக்காக இதுவரை எதுவும் கேக்கலே. இப்போ ஒண்ணை எதிர்பார்க்கிறார். என்னோட நன்றிக்கடனா அதை நான் செய்யப் போறேன். உங்களை மறுத்து பேசறதுக்காக என்னை மன்னிச்சிடுங்கம்மா"
"உன் இஷ்டம் " என்ற வார்த்தைதான் அம்மாவின் வாயிலிருந்து வந்த கடைசி வார்த்தை.
நான் இன்னிக்கு வீட்டை விட்டுக் கிளம்பும்போது, "அம்மா.. உடம்பைப் பார்த்துக்கோ. நான் தினமும் போன் பண்ணுவேன். நீ சாப்பிட்டதா சொன்னாதான் நான் சாப்பிடவே ஆரம்பிப்பேன்.. அம்மா.. இப்போகூட கேக்கிறேன். என்னோட வாங்கம்மா.. எதாவது பஸ் பிடிச்சு போயிடலாம் " என்றபோது கூட அம்மா எதுவும் பேசவில்லை.
"ஸார் .. சூடான காபி... டீ " என்ற கூவல் பிரபுவின் சிந்தனையைக் கலைத்தது.
கண்ணாடியை மேலே தூக்கி விட்டுவிட்டு வெளியில் பார்வையை செலுத்தி னான் ரயில் நிற்பது எந்த ஸ்டேஷன் என்பதைத் தெரிந்து கொள்வதற்காக.
போர்ட் எதுவும் கண்ணில் படவில்லை.
டீ விற்கும் பையனை அழைத்து "இது எந்த ஊர் ?" என்று கேட்டான்.
"திருச்சி ஸார் .. டீயா காபியா ?"
"எதும் வேண்டாம்பா ?"
"ஊர் எதுன்னு தெரிஞ்சுக்கவா அங்கே இருந்த என்னை கைகாட்டி இங்கே வர சொன்னீங்க ?"
"சரி தம்பி.. கோபப்படாதே. உங்கிட்டே எது நல்லா இருக்கும்னு நினைக்கிறியோ அதைக் கொடு."
"டீ சூப்பரா இருக்கும் ஸார் " என்ற பையன் டீ கப்பை அவனிடம் கொடுத்து விட்டு பணத்தை வாங்கிக்கொண்டு அங்கிருந்து அடுத்த கம்பார்ட்மெண்டை நோக்கி ஓடினான்.
ஐ.டி கம்பெனியில் மட்டுந்தானா விடியவிடிய வேலை நடக்குது.! இதோ இங்கே கூடத்தான் என்று மனதுக்குள் சொல்லிக் கொண்டான்.
"ஸார்.. ஸ்டேஷன் வந்தாச்சு" என்று தூங்கிக்கொண்டிருந்த பிரபுவை தட்டி எழுப்பி பக்கத்துக்கு ஸீட் ஜென்டில்மேன் சொன்னதும் ஸீட்டில் கால்களை மடக்கிக் கொண்டு சாய்ந்திருந்த நான் எப்போது கண்ணை மூடினேன் என்று தன்னைத் தானே கேட்டுக் கொண்டான்.
திருநெல்வேலி ரயில் நிலையத்தை விட்டு வெளியில் வந்ததுதான் தாமதம், "தம்பி.. தம்பி.. குடுங்க உங்க பெட்டி படுக்கையை!" என்று கையிலிருந்து பிடுங்காத குறையாக பறித்த நபரை ஏறிட்டுப் பார்த்த பிரபு, 'இவர்தான் அண்ணன் சொன்ன முருகய்யனாக இருக்குமோ?" என்று தனக்குள் கேட்டுக் கொண்டான்.
இவனது எண்ணை ஓட்டத்தைப் புரிந்து கொண்டவன் போல, "நான் குமார் ஐயா வீட்டு வேலையாள் தம்பி. நீங்க வருவீகனு ஐயா தகவல் சொல்லி இருந்தாக.. வாங்க.. வாங்க.. பாத்து வாங்க. ரொம்ப ஓரமா போகாதீங்க. அவனவன் மோண்டு விட்டிருப்பான்.. இந்த ஓரமா வாங்க.. தம்பி.. வெத்திலை எச்சி கிடக்குது.. பார்த்து... பார்த்து.. என்ன தம்பி ..இவ்வளவு கவனக் குறைவா இருக்கீக? நான்தான் சொல்லுதேனே வெத்திலை எச்சி கிடக்குதுனு .. அது மேலே ஏறி மிதிச்சிட்டு வாறீகளே. வாங்க.. அங்கே ஒரு குழாய் இருக்குது. காலை கழுவிட்டு போகலாம்"
"செருப்புக்கால்தானே .. வீட்டில் போய் காலை அலம்பிக்கலாமே "
"செருப்புக்கால்தானே .. வீட்டில் போய் காலை அலம்பிக்கலாமே "
"வாங்க ... நான் குழாயைக் காட்டறேன்" என்று நடக்க ஆரம்பித்தான் முருகய்யன்.
"தம்பி .. அந்த தெருமுனையில் வண்டியை விட்டுருக்கேன். வாங்க பொடிநடையா நடந்து போயிறலாம்"
எதுவும் சொல்லாமல் மந்திரிச்சு விட்ட கோழி மாதிரி அவன் பின்னால் நடக்க ஆரம்பித்தான் பிரபு.
சிறிது தூரம் சென்றதும் ரெட்டை மாட்டு வண்டியைக் காட்டி "தம்பி.. ஏறுங்க " என்றான் முருகய்யன்.
"நீங்க வண்டினு சொன்னதும் அது டூ வீலர் இல்லாட்டா ஆட்டோவா இருக்கும்னு நினைச்சேன். இந்தக் காலத்தில் ரெட்டை மாட்டு வண்டியா?" என்று சற்று பெரிதான குரலில் ஆச்சரியத்துடன் கேட்டான் பிரபு.
"இதுக்கே அசந்து போய் நின்னா எப்படி..நீங்க பட்டணத்து ஆளு.. வயல்வெளி வந்ததும் என்னென்ன பார்த்து அசந்து போகப் போறீங்க தெரியுமா ? வண்டியிலே ஏறுங்க.. தம்பி... தம்பி... காலில் உள்ள மண்ணை படியில் தட்டிட்டு ஏறுங்க..மண்ணு காலோட ஏறி, அது மேலேயே உக்காந்து வருவீகளா? "
முருகய்யன் சொன்னபடியே செய்தான் பிரபு.
இந்த ஆள் என்ன ஒரு ஜென்மம்னு தெரியலையே. சாதாரண விஷயத்து க்கெல்லாம் இப்படி அருவெறுப்பு பார்க்கிறார் என்று மனதுக்குள் நினைத்துக் கொண்டான் பிரபு.
ஆனால் அந்த அதீதமான அருவெறுப்பின் அளவையோ அதனால் ஏற்பட்ட - இனிமேல் ஏற்படப்போகிற விபரீதங்களையோ நினைத்துக்கூடப் பார்த்திருக்க வில்லை பிரபு.
- தொடரும் .............
- தொடரும் .............
No comments:
Post a Comment