மிதமான வேகத்தில் வண்டியை இழுத்துச்சென்று கொண்டிருந்த மாடுகளின் கழுத்தில் கட்டியிருந்த வெங்கலமணி, மாட்டின் ஓட்டத்துக்கேற்ப இனிய ஒலி எழுப்பிக் கொண்டிருந்ததை வெகுவாக ரசித்தான் பிரபு.
"ஸார் .. இது எந்த இடம் ?"
"அம்பாசமுத்திரம் போற ரோடு இது "
"நாம இப்போ அம்பாசமுத்திரம் போறோமா? வயல்வெளினு அண்ணன் சொன்னாரே "
"அவசரப்படுதீகளே தம்பி. இந்த ரோடு அங்கிட்டு போற ரோடு. நம்ம கிராமம் இன்னும் அஞ்சு கல் தொலைவுல இருக்குது. தம்பிக்கு சொந்த ஊரே சென்னை தானா ?"
"இல்லீங்க. பிறந்து வளர்ந்து படிச்சது எல்லாம் மதுரையிலே. பிழைப்புக்காக சென்னையில் செட்டில் ஆயிட்டேன்."
"மதுரைக்கார தம்பிக்கு அம்பாசமுத்திரம்.. வயல்வெளியெல்லாம் தெரியாமே இருக்கிறது ஆச்சரியந்தான்.."
"உண்மையை சொல்லட்டுமா.. ஒரேயொரு முறை என்னோட பிரெண்ட்ஸ் கூட சேர்ந்து டில்லிக்கு டூர் போயிட்டு வந்தேன். படிக்கிற காலத்தில் காலேஜ் ஸ்டூடெண்ட்ஸ் எல்லாருமா சேர்ந்து மதுரைக்கு அக்கம்பக்கமா இருக்கிற கிராமத்துக்கு போய் சோஷியல் சர்வீஸ் பண்ண பிளான் போட்டோம். போற வழியில் எனக்கு ஆக்சிடென்ட் ஆயிடுச்சு. அதோட அந்த பிளானும் அவுட். நான் மதுரையை தாண்டி எங்கேயும் போனதில்லே. நான் சொல்றத கேட்டா உங்களுக்கு சிரிப்பா இருக்கும். எனக்கு இன்னும் குற்றாலம் .. ராமேஸ்வரம் எல்லாம் எந்த திசையில் இருக்குன்னே தெரியாது "
அதைக்கேட்டு பெருங்குரலில் வாய்விட்டு சிரித்த முருகய்யன், "அந்த அளவு வீட்டுக்குள்ளேயே பொத்திப்பொத்தி உன்னை பொட்டப்புள்ளையாட்டம் உங்க அம்மா வளர்த்துட்டாக போலிருக்கு" என்றான்.
"நிஜந்தான்..குடும்பப்பகை இருந்துச்சு. யாராவது என்னை ஏதாது செஞ்சிடு வாங்களோங்கிற பயம் எங்க அம்மாவுக்கு நிறைய இருந்துச்சு. இப்ப கூட அது இருக்குது."
"யாருக்குமே இருக்கிற ஒண்ணுதான்."
மாடுகள் நடை போட்டுக்கொண்டிருந்தன.
"ஸார் ... ஸார் .. வண்டியை நிறுத்துங்க !"
"என்ன தம்பி.. எதையாச்சும் கீழே தவற விட்டுட்டீகளா?" என்று கேட்ட முருகய்யன் "ஹோய்...ஹோய்" என்று மாடுகளுக்கு சிக்னல் கொடுக்க, வண்டி இழுப்பதை நிறுத்திவிட்டு தலையை தாழ்த்தியபடி நின்றன மாடுகள். வண்டியிலிருந்து குதித்து இறங்கினான் பிரபு.
"அப்பப்பா.. என்னவொரு அழகான இடம். பச்சை போர்வை போர்த்தின மாதிரி புல்"
"இது புல் இல்லே தம்பி. நாத்து..இங்கே இருந்துதான் வயல்வெளி கிராமம் ஆரம்பம் ஆகுது. நீங்க நிக்கிறது பார்க்குறது... அதோ அங்கிட்டு தூராதொலை லே தெரியுதே மலைச்சரிவு..அதுவரை நம்ம இடந்தான். அதுதான் வயல்வெளி கிராம எல்லை முடியுத இடம். எல்லாமே குமார் அய்யா குடும்ப சொத்து."
"அப்படியா?" என்று வியப்புடன் கேட்டான் பிரபு.
"இங்கிட்டு வாரவக எல்லாருமே சொல்லுத வழக்கமான வார்த்தைதான் இது " என்று சர்வ சாதாரணமாக சொன்னான் முருகய்யன்.
"இங்கே கொஞ்ச நேரம் இருந்துட்டு போலாமா ?"
"தம்பி.. இந்த இடம் எங்கிட்டும் போயிடாது. ரயில்ல வந்த அலுப்பு தீர நீங்க மொதல்ல குளிச்சுமுழுகி தூங்கியெழும்பி சாப்பிட்டுட்டு ரெஸ்ட் எடுங்க. பொறவாட்டி இங்கிட்டு வந்து பார்க்கலாம். நீங்க வந்ததை நான் அய்யாவுக்கு உடனே சொல்லணும். இல்லாட்டா என்னை தொலைச்சு போடுவாக .. வாங்க வண்டில ஏறுங்க.. சாயங்காலமா நானே உங்களை இங்கிட்டு கூட்டிட்டு வந்து காட்டுதேன்."
திருப்தியற்ற மனநிலையில் வண்டியில் ஏறி பிரபு உட்கார்ந்தான்.
நன்கு செழித்து வளர்ந்திருந்த நாற்றுகள் அங்கு வீசிய இதமான காற்றில் தலை அசைத்து ஆடியதை மிகவும் ரசித்தான்.
வயலோரத்தை விட்டு சற்று தொலைவில் ஒருபுறம் வாழைத்தோட்டமும் மறுபுறம் தென்னந்தோப்பும் இருந்தது.
கீச் கீச் என்று பறவைகள் எழுப்பிய ஒலி புது உற்சாகத்தை தந்தது.
அந்த இடத்தின் அழகையும் அமைதியையும் வெகுவாக ரசித்தபடி வண்டியில் அமர்ந்திருந்த பிரபு, "ஸார் .. வீடு வந்தாச்சு ... இறங்குங்க " என்ற குரல் கேட்டு தன்னை நிதானித்துக் கொண்டு கீழே குதித்து இறங்கினான்.
எதிரே தெரிந்த கட்டிடத்தை நோட்டமிட்டான்.
இவர் வீடுன்னு சொல்றார். பார்க்கிறதுக்கு ஏதோ அரண்மனை மாதிரி இருக்குது என்று தனக்குள் கணக்கு போட்டு சொல்லிக்கொண்டான்.
"ஏ.. புள்ளே.." என்று முருகய்யன் குரல் கொடுத்ததுமே, "மாமோய்" என்று பதில் குரல் கொடுத்தபடி இளம்பெண்ணொருத்தி ஓடிவருவாள் என்று கற்பனை செய்து கூட பார்த்திருக்கவில்லை பிரபு.
வண்டி அருகில் வந்த அவள், "வாங்கய்யா .. வாங்க.. பிரயாணம் எல்லாம் சவுரியமா இருந்துச்சா ?" என்றாள்.
"உம்" என்று தலையசைத்த பிரபு, என்னோட கதைக்கு நாயகி இவளாக இருப்பாளோ? என்று யோசிக்க ஆரம்பித்தான்.
கறுப்பிலும் சேராத மாநிறத்திலும் சேராத-இரண்டுக்கும் இடைப்பட்ட நிறத்தில் அவள் இருந்தாள்.
இந்தப் பெண் இந்த ஆளுக்கு என்ன உறவாக இருக்க முடியும் ?
முருகய்யனைப் பார்த்தால் அவருக்கு அறுபது வயசுக்கு மேலேயே இருக்கும் ன்னு யாராலும் சொல்லமுடியும். இந்த பெண்ணை பார்க்கிறவங்க இவளோட வயதை இருபதிலிருந்து இருபத்தஞ்சுக்குள்தான் எஸ்டிமேட் போட முடியும். இவள் அவரோட மகளா அல்லது பேத்தியா?
"என்ன அய்யா .. வாங்க.. நீங்க முன்னாடி நடங்க. நான் உங்க பெட்டிபடுக்கை எல்லாத்தையும் பத்திரமா கொண்டாந்து சேர்த்திடுவேன்."
"உம்" என்று சொல்லிவிட்டு முருகய்யன் பின்னால் நடக்க ஆரம்பித்தான் பிரபு.
"தம்பி... நீங்க இங்கிட்டு இருக்கிறவரை இது உங்க வீடுமாதிரி .. நீங்க எங்கிட்டு வேணும்னாலும் நிக்கலாம்..நடக்கலாம்.. படுக்கலாம்..வேளாவேளைக்கு உங்க சாப்பாடு அந்த மேஜைக்கு வந்துரும்.. நீங்க சைவமா அசைவமா ?"
"சுத்த சைவம்.. முட்டைகூட சாப்பிட மாட்டேன் "
"ஏ புள்ளே. தம்பி சொன்னத கேட்டியா ? தம்பி சுத்த சைவமாம். முட்டைகூட உள்ளே வரக்கூடாது. ஞாபகத்திலே வச்சுக்கோ" என்று முருகய்யன் சொல்ல , :சரி மாமோய் .. அவக எதைக் கேக்காகளோ அதை நான் செஞ்சு குடுத்துடுதேன் போதுமா ?"
"அப்புறம் தம்பி.. பக்கத்திலேதான் என் வீடு. அதோ அந்த தோட்டத்திலே.. ஒரு குரல் கொடுத்தா போதும். ஓடி வந்துருவேன். நான் இல்லாட்டாலும் இந்த புள்ளே ஓடி வந்து என்ன ஏதுன்னு கேக்கும். எது வேணும்னாலும் கூச்சப்படாமே கேளுங்க தம்பி."
"சரி.. என் மொபைலுக்கு சார்ஜ் பண்ணனும். ப்ளக் பாய்ண்ட் எங்கே இருக்கு ?"
"தம்பி .. அய்யா உங்ககிட்டே விஷயத்தை சொல்லவே இல்லையா. இந்த வீட்டில் மின்சாரமே கிடையாது தம்பி"
இதைக்கேட்டு அதிர்ந்து போனான் பிரபு.
"என்னது? அரண்மனை மாதிரி ஒரு வீடு .. அதுக்கு சொந்தக்காரர் நாடறிந்த ஒரு பெரும்புள்ளி. அவர் வீட்டில் கரெண்ட் கிடையாதா ?"
"இதுக்கே இப்படி ஆச்சரியப்பட்டா எப்புடி ? இந்த வீட்லேயும் சரி. வயல்வெளி சுத்துவட்டாரத்துலேயும் சரி எங்கிட்டுமே கரெண்ட் கிடையாது "
"ஓ.. காட் !" என்று அலறி விட்டான் பிரபு.
"நிஜமாவா ?"
"தம்பி. இந்த மின்சார வசதில்லாம் வேணும்னு நெனச்சிருந்தா அய்யா அதை சொடக்கு போடற நேரத்தில கொண்டாந்திருப்பார். வேணாம்னு நினைக்கிறார். அதனால் எந்த வசதியும் பண்ணிக்கலே??"
"ஏன்?"
"தம்பி .. எல்லாத்தையும் இப்பவே இங்கேயே பேசி தீர்க்கணுமா என்ன ? நீங்க இங்கிட்டுதானே இருக்கப் போறீக. தெனம் ஒரு விஷயமா கேட்டு தெரிஞ்சு க்கங்க தம்பி. நாளைக்கு போரடிக்கிறப்ப பேசுறதுக்கு விஷயம் வேண்டாமா? கொஞ்சம் மிச்சம் வையுங்க" என்ற முருகய்யன், "ஏ .. புள்ளே ... தம்பிக்கு சுடுதண்ணி ரெடியா ?" என்று கேட்டான்.
"அப்பவே சூடு பண்ணி பாத்ரூம் வாளியில் நிரப்பி வச்சிட்டேன் மாமோய் "
"சரி... மசமசன்னு நிக்காமே மளமளன்னு வேலையைப் பாரு. டிபன் காஃபி ரெடியா?"
"அய்யா குளிச்சு முடிச்சு தலை துவற்றதுக்கு மின்னாலே அது மேஜைல வந்து உக்காந்திரும். போதுமா ?'
"சும்மா வாயாடாதே.. போய் வேலையைக் கவனி. நான் டவுனுக்குப் போயிட்டு வந்திடுதேன். கவனிப்புலே ஒரு குத்தங்குறை வரக்கூடாது. சொல்லிப்புட்டேன் " என்றபடி அங்கிருந்து கிளம்பினான் முருகய்யன்.
"ஏதாச்சும் தேவைன்னா ஒரு குரல் குடுங்க.. ஓடியாந்துடுவேன்."
"சரி "
அங்கிருந்து நகர்ந்தவளை, "மேடம்" என்று கூப்பிட்டான் பிரபு.
"மேடமா ? நானா ?" என்று கேட்டு கலகலவென்று சிரித்தாள் அவள்.
"எந்தவொரு பெண்ணையும் மரியாதை நிமித்தம் அப்படி கூப்பிடறது ஒரு பண்பாடு. அவ்வளவுதான். இந்த முருகய்யனுக்கு நீங்க என்ன உறவு? பொண்ணா பேத்தியா ?"
இதைக்கேட்டு மீண்டும் சிரித்த அவள் "நான் அவகளோட பொண்ணும் இல்லே ..பேத்தியும் இல்லே. அந்த மனுஷனோட பொண்டாட்டி" என்று சொல்லிவிட்டு அங்கிருந்து ஓடினாள்.
"பெண்டாட்டியா?" என்று கேட்டபடி திறந்த வாய் மூடாமல் அதிர்ந்துபோய் நின்றான் பிரபு.
- தொடரும் .................

No comments:
Post a Comment