தண்ணீர் ... தண்ணீர் !
தொடர்ந்து ஒலித்துக் கொண்டிருந்த கார் ஹாரனின் சத்தத்தில் வெறுப்படைந்த டிரைவர் சாமிவேலு, " டேய் .. கீழே இறங்கி கார் ஹார்ன் அடிக்கிற பைத்தியக்காரன் யார்னு பாரு. ஹார்ன் அடிச்சதும் வழி கெடச்சிடாது. முன்னே நிக்கிற வண்டி மூவ் ஆனாதான் நாங்க நகர முடியும்னு அந்தப் பைத்தியக்காரன்கிட்டே சொல்லிட்டு வா" என்றதுமே வில்லிலிருந்து சீறிப் பாயும் அம்பு போல லாரியிலிருந்து குதித்து இறங்கிய கிளீனர், லாரிக்குப் பின்பாக நின்று கொண்டிருந்த "ஆல்டோ " அருகில் வேகமாக சென்றான். பின்னர் அதே வேகத்தில் திரும்பி வந்து "அண்ணே , சின்ன பையன் ஒண்ணு ஹார்ன் குடுத்து விளையாட்டிட்டு இருக்கு. முதுகில் ஒண்ணு ஓங்கி வச்சிட்டு வரட்டுமா ?" என்று கிசுகிசு குரலில் கேட்டான் .

"வேண்டாம்டா .. நாமதான் நொந்துபோய் நிக்கிறோம் . பாவம் குழந்தை . அதுமட்டுமாவாவது சந்தோசமா விளையாட்டிட்டு இருக்கட்டும். நீ ஏறி மேலே வா " என்று சாமிவேலு சொன்னதுமே ஒரே தாவலில் லாரிக்குள் தன்னை நுழைத்துக் கொண்டிருக்கும்போது "தம்பி .... தம்பி " என்று அழைக்கும் குரல் கேட்டு மீண்டும் கீழே குதித்த கிளீனர் ஆல்டோ அருகில் வந்தான்.
" என்னா ஸார் "
"வாட்ஸ் த ப்ராப்ளெம் .. ஏன் வண்டி எதுவுமே மூவ் ஆகலே ?" என்று கேட்டான் காருக்குள் இருந்த ஷங்கர்.
"சாலை மறியல் சார் ..ரோடு முழுக்க காலிக் குடத்தைக் கையில் வச்சுகிட்டு ஜனங்க நிக்கிறாங்க .. பெரிய பெரிய அதிகாரிங்க, வட்டம் பட்டம் மாவட்டம் எல்லாம் வந்து பேச்சு வார்த்தை நடத்தினாதான் நமக்கு வழி கிடைக்கும். காரை விட்டு இறங்கி வந்து பாரு சார்... நம்ம வண்டிக்கு முன்னாடி எத்தனை வண்டி வரிசையா நிக்குதுன்னு "
"நான்சென்ஸ் " என்று கோபமாக ஷங்கர் சொல்ல "சரிதான் சார் " என்று சொல்லிவிட்டு லாரிக்குள் ஏறினான் கிளீனர் .
"வீட்டை விட்டுக் கிளம்பும்போதே சொன்னேன் வேண்டாம்னு. குல தெய்வமாவது குட்டி சாத்தானாவது. பேசாமே ஒரு நூறு இருநூறை மணியார்டர் அனுப்பி வச்சிட்டுப் போறதை விட்டுட்டு... 'குல தெய்வம் கோயிலுக்குப் போ. போகாட்டா தெய்வ குத்தமா யிடும்'னு கனவிலே வந்து அப்பா சொல்றார், போயே ஆகணும்னு சொல்லி கூட்டிட்டு வந்து நடுத் தெருவில் நிக்க வச்சுட்டீங்க.. இப்பவே டைம் நைன் ஆறது . எப்போ திருநெல்வேலி போய் அங்கே இருந்து .. அது என்ன ஊர் ... என்னவோ பேர் சொன்னீங்களே .... மாய மந்திரம்னு .. அந்த ஊர் போய்ச் சேரருது ?" என்று வெறுப்பும் கவலையும் கலந்த குரலில் கேட்டாள் சாவித்திரி.
"அந்த ஊர் பேர் மாயமந்திரம் இல்லே .. மாயமான் குறிச்சி ..." என்று ஷங்கர் சொல்ல " ரொம்பவும் அவசியம் " என்று முகத்தை சுளித்தாள் சாவித்திரி. அவளது கோபத்திலும் ஒரு நியாயம் இருந்ததால் எதுவும் பேசாமல் அமைதி காத்தான் ஷங்கர்.
ஹார்ன் அடித்து விளையாடுவதை நிறுத்திய அஷோக், " டாடி .. வாட்ஸ் த நேம் ஆப் த ப்ளேஸ் ?" என்று கேட்டான்.
" திண்டுக்கல்லைத் தாண்டிட்டோம்."
"வென் வில் வீ ரீச் மாய்மான் ?"
" மாய்மான் இல்லே .. மாயமான் குறிச்சி. எங்களோடு பேசறச்சே தமிழில் பேசுடா. வீட்டையும் ஸ்கூல் மாதிரி ஆக்கினா, அப்புறம் உனக்கு தமிழே தெரியாமே போயிடும் "
"பிள்ளைங்க இங்க்லீஷில் பேசினா அவனவன் பெருமையா நினைப்பான் . இங்கே எல்லாமே தலை கீழ் " என்று முணுமுணுத்தாள் சாவித்திரி
"சொல்லுங்க டாடி .. நாம எப்போ ரீச் ஆவோம்."
"இப்ப ரோடு க்ளியர் ஆனாக் கூட ஈவனிங் போய் சேர்ந்திடலாம்."
"ஏன் ட்ராபிக் ஜாம் ?"
"டிரிங்கிங் வாட்டருக்கா இந்த வில்லேஜ் பீபள் ரோட்டை ப்ளாக் பண்ணி நிக்கிறாங்க. அதனாலே எந்த வண்டியும் மூவ் ஆகலே "
"ரோட்டை ப்ளாக் பண்ணி நின்னா தண்ணீர் கிடைச்சிடுமா டாடி ?"
"அவங்க பிரச்சினையை சம்பந்தப்பட்ட அதிகாரிகளோட நாலெஜுக்கு கொண்டு போக இது ஒரு வழி "
"எக்ஸ்ப்ளைன் இட் டாடி"
"ட்ராபிக் ஜாம் ஆனா முக்கியமான வொர்க்ஸ் நின்னுடும். போக வேண்டிய ஐடெம் சரியான நேரத்துக்கு போய் சேரலைன்னா அதுக்கு என்ன காரணம்னு பப்ளிக் இன்வெஸ்டிகேட் பண்ண ஆரம்பிப்பாங்க. இது தான் காரணம்னு தெரிஞ்சதும், விஷயம் சம்பந்தப்பட்ட ஆபீசர்ஸ் காதுக்குப் போகும். அவங்க இங்கே வந்து இவங்க கோரிக்கையை ஐ மீன் டிமாண்டை சால்வ் பண்றதா அஸ்சுரேன்ஸ் கொடுத்ததும் இவங்க இங்கிருந்து போயிடுவாங்க. இது எங்கேயும் நடக்கிறதுதான். வீட்டுக்குப் பக்கத்திலேயே உனக்கு ஸ்கூல்ங்கிறதாலே நீ இந்த மாதிரி ப்ராப்லம் எதையும் பேஸ் பண்ண சான்ஸ் இல்லாமே போயிட்டுது ".
"டாடி . பார் தி டைம் பீயிங் சும்மா ஒரு அஸ்சுரேன்ஸ் குடுத்துட்டு அதை புல்பில் பண்ணாமே போயிட்டா இவங்க என்ன செய்வாங்க ?"
"அகைன் தே வில் கிரியேட் தி சேம் ப்ராப்லம் இன் தி ரோட் வேஸ் "
"ஹாய் ஜாலி ..ஆல் தி வெஹிகிள் இன்க்ளுடிங் ஸ்கூல் வேன்ஸ் ஷூட் கோ. பட் அட் தி சேம் டைம் இப் தி வே ப்ளாகெடெட் தே நீட் நாட் கோ டு ஸ்கூல் இன் டைம் " என்று கை கொட்டி சிரித்தான் அஷோக். அந்த சிரிப்பில் ஷங்கரும் கலந்து கொள்ள " நல்ல அப்பா நல்ல பிள்ளை " என்று தலையில் அடித்துக் கொண்டாள் சாவித்திரி
"டாடி . தட் லாரி இஸ் மூவிங் " என்று உற்சாகக் குரல் கொடுத்தான் அஷோக்.
"ஓ .. தேங்க் காட் " என்றபடி வண்டியைக் கிளப்பினான் ஷங்கர்.
மாலை மணி ஆறு முப்பதுக்கு திருநெல்வேலி எல்லையைத் தொட்டு கோட்டூர் ரோட்டில் சென்று சற்று நிதானித்தது. காரைப் பார்த்ததுமே டீக்கடையிலிருந்து "தம்பி .. தம்பி..அப்படியே வடக்காலே திரும்பிப் போனா பசுஞ்சோலை கிராமம்னு பேர்ப்பலகை தொங்கும். அங்கிட்டு ஒரு கோயில் இருக்கும். அங்கிருந்து நாலாவது வீட்டு வாசலில் வண்டி யை நிப்பாட்டுங்க" என்று குரல் கொடுத்தபடி ஓடி வந்தான் இசக்கி .
காரை நிறுத்தி அந்த நபரை ஆச்சரியமாகப் பார்த்தான் ஷங்கர்.
"மேல் வளவுக்கார அண்ணாச்சிக்கு நீங்க கடுதாசி போட்டிருந்தீங்களாம். அவக என்னை இங்கிட்டு வந்து நிக்க சொன்னாக.நீங்க அங்கிட்டு இங்கி ட்டுன்னு சுத்தி சங்கடப்படாமே வந்து சேரணுமேன்னு என்னை இங்கிட்டு நிக்க சொன்னாக. நானும் மத்தியானத்துலேருந்தே இங்கிட்டு நின்னுட்டு ருக்கேன். ஏன் தம்பி இம்புட்டு தாமசம் ?" என்று இசக்கி கேட்க, "எங்களை எப்படி அவ்வளவு கரெக்டா கண்டுபிடிச்சீங்க?"என்று வியப்போடு கேட் டான் ஷங்கர்.
"மேல வளவுக்காரக சொன்னாக தம்பி, ஒரு புருஷன் பொஞ்சாதி ஒரு புள்ளையைக் கூட்டிட்டு வருவாகன்னு. அத வச்சுதான் கண்டுபிடிச்சேன் . தம்பி,கையிலே கட்டியிருக்கிற கடியாரத்தை பார்த்து மணி சொல்றவக நீங்க. நாங்க பூமியிலே விழுத நிழலை வச்சே நேரத்தைக் கண்டுபிடிச்சு சொல்லிடுவோம்."
"நல்லது ஸார் . வண்டியிலே ஏறுங்க "
"அட வண்டியெல்லாம் நமக்கு சரிப்பட்டு வராது தம்பி . எங்கிட்டு போறது னாலும் நமக்கு நடராஜா செர்விஸ் தான் . நீங்க போங்க தம்பி. நான் பொடிநடையா உங்க வண்டி போய் சேரதுக்கு மின்னாடியே வந்து சேர்ந்துருவேன்" என்று சொல்லிவிட்டு நடக்க ஆரம்பித்தான் இசக்கி
மேல வளவு வீட்டை அடையாளம் கண்டுபிடித்து காரை நிறுத்தும் முன்னமே காருக்கு முன்னால் வந்து நின்றான் இசக்கி
"வாவ் . ஹௌ இஸ் திஸ் பாசிபிள் ?" என்று வியந்தான் அசோக்.
"வயக்காட்டுப் பாதையிலே இறங்கி குறுக்கு வழியிலே வந்துட்டேன் " என்று விளக்கம் சொன்னான் இசக்கி.
காரைக் கண்டதுமே, கட்டியிருந்த இடுப்பு வேஷ்டியை தொப்புளுக்கு மேலாகத் தூக்கிக் கட்டியபடி ரெட்டை நாடி சரீரம் குலுங்க எழுந்து வந்த சுந்தரம் பிள்ளை , "வாங்க தம்பி .. பிரயாணம் சௌரியமா இருந்துச்சா? நீங்க புறப்படறதா சொன்ன நேரத்தைக் கணக்குப் பண்ணிப் பார்த்தா சாயங்காலம் காப்பித் தண்ணி குடிக்கவே இங்கிட்டு வந்து சேர்ந்திருக்க ணும். வெளக்கு வைக்கிற நேரமாச்சு.இன்னும் காண்கலையேனு நினைச் சு சங்கடப்பட்டுட்டுருந்தேன். நல்லபடியா வந்து சேர்ந்தீக. வர்ற வழியி லே ஏதாச்சும் பிரச்சினையா ? ஏலேய் மருது, மளமளன்னு காருக்குள்ளே இருக்கிற சாமான் செட்டு எல்லாத்தையும் வீட்டுக்குள்ளே கொண்டு போய் இறக்கு. ஏ புள்ளே, செம்பகம் யாரு வந்திருக்காகனு பாரு " என்று உத்தரவு பிறப்பித்தார்
அதன்பிறகு வழக்கமான விசாரிப்புகள் .. உபசரணைகள்
"ஸார், கோவிலுக்கு எப்போ கிளம்பலாம் ?"
"நாளை மறுநாள் பௌர்ணமி. அன்னிக்குத்தான் சாமிக்கு அபிஷேகம் பொங்கல் படையல் எல்லாமுமே "
"நாளைக்குதான் பௌர்ணமினு காலெண்டரில் பார்த்ததா ஞாபகம் "
"காலண்டரில் அப்படித்தான் முன்னப் பின்ன போடுவாக. அது எம்புட்டு நேரம் இருக்குங்கிறதை வச்சுதான் பூஜையை ஆரம்பிப்போம். வந்தது வந்தீக. கூட ஒருநா இருந்து ஊரை சுத்திப் பார்த்துட்டு ஆற அமரப் போங்க " என்று சுந்தரம் பிள்ளை சொன்னதுமே, " ஆமா .. பெரிய டிஸ்னி லேண்ட். இதை சுத்தி வேறு பார்க்கணுமா?" என்று ஷங்கருக்கு மட்டும் கேட்கும்படி யாக ரகசியக் குரலில் முணுமுணுத்தாள் சாவித்திரி.
"டாடி .. வெரி போரிங் " என்றான் அஷோக், ஷங்கரின் கழுத்தைக் கட்டிக் கொண்டு .
"சின்ன தம்பி என்ன சொல்லுதாக ? போர் அடிக்குதாமா ? அதைத் திருப்பி அடிச்சிடுங்க தம்பி" என்று வெற்றிலைக் காவி படிந்த பற்கள் வெளியே தெரியும்படி சிரித்த சுந்தரம் பிள்ளை, " ஏலே .. இசக்கி . உன் பேரனை வர சொல்லு. சின்ன தம்பியை அங்கிட்டு இங்கிட்டு கூட்டிட்டுப் போய் வேடிக்கை காட்ட சொல்லு" என்றார். அடுத்த நொடியே அங்கிருந்து வெளியேறினான் இசக்கி
"தம்பி .. எதுக்க இருக்கிற வீடும் நம்ம வீடுதான் .. சுத்தம் பண்ணி வச்சிருக்கோம். நீங்க சங்கோசப்படாமே இருக்கக் கொள்ள தனி வீடு சௌரியமா இருக்கும்னு நினைச்சு இந்த ஏற்பாட்டைப் பண்ணினேன். வண்டியில் வந்த அலுப்பு தீர அம்மாவும் கொஞ்ச நேரம் படுத்து தூங்கி களைப்பாறட்டும். என்ன நான் சொல்றது சரிதானே ?" என்று சுந்தரம் பிள்ளை சொல்லும்போதே,விட்டால் போதும் என்ற நினைப்பிலிருந்த சாவித்திரி அவர் காட்டிய எதிர் வீட்டை நோக்கி நடக்க ஆரம்பித்தாள். இரவு சாப்பாடு அவர்கள் இருக்கும் இடத்துக்கே வந்து சேர்ந்தது. சாப்பிட்டு முடித்து படுக்கையில் சாய்ந்த சில நிமிடங்களிலேயே சாவித்திரி அயர்ந்து தூங்கி விட்டாள்.
"டாடி ... தூக்கம் வரலே . வெளியே வாக் போலாமா ?"
வாசற்கதவு திறக்கும் சத்தம் கேட்டதுமே திண்ணையிலிருந்து வாரி சுருட்டிக் கொண்டு எழுந்த இசக்கி, " என்ன தம்பி... என்ன வேணும் ?" என்று பணிவாகக் கேட்டான்.
"ஒண்ணுமில்லே ... தூக்கம் வரலே .. அதான் இப்படி.. சும்மா ஒரு வாக் ... ஆமா நீங்க உங்க வீட்டுக்குப் போகலியா ?வெளியில் படுத்துட்டீங்க ".
"உங்களுக்கு இது புது இடம் .. கொஞ்சமும் பழக்கப் படாத ஊர் . ஏதாது ஆத்திரம் அவசரத்துக்கு உங்களுக்கு உதவசொல்லி பிள்ளைவாள் இன்னி க்கு என்னை இங்கிட்டு தங்க சொல்லிட்டாக. வாங்க தம்பி. கயித்துக் கட்டிலை போடுதேன். மேலே நிலவு பால் போலக் காயுது. கட்டிலில் படுத்துகிட்டு நிலாவைப் பார்த்துட்டே இருந்தா பொழுது போறதே தெரியாது .. குடிக்க தண்ணி ஏதாது வேணுமா தம்பி ?"என்று இசக்கி கேட்கும் போதே கயித்துக் கட்டிலில் ஏறிப் படுத்துக்கொண்டு வானத்து நட்ஷத்திரங்களை எண்ண ஆரம்பித்தான் அசோக்.
"அதெல்லாம் ஒண்ணும் வேண்டாம் .. நீங்க உட்காருங்க சார் "
"சார்னு மருவாதி எல்லாம் வேண்டாம். எல்லாத்தையும் போல இசக்கினு என்னைக் கூப்பிடுங்க தம்பி "
"நோ .. நோ .. எவ்வளவு பெரியவர் நீங்க .. உங்களைப் பேர் சொல்லிக் கூப்பிடறதா ?.. ஆமா ஸார் , இந்த ஊரைப் பத்தி சொல்லும் போது வயலும் வரப்பும் தோப்பும் துரவுமா இருக்கும்னு எங்க அப்பா சொல்லியிருக்கார். நானும் வழி நெடுக தேடிட்டு வர்றேன் . தோப்பையும் காணும் துரவையும் காணும். அங்கங்கே வீடுகளுக்கு நடுவுலே ஒன்னு ரெண்டு துண்டு நிலம் தெரியுது.. அதுவும் காய்ந்து கிடக்குது "
"தம்பி இங்கிட்டு வந்ததே இல்லே. கொஞ்ச வருஷம் முன்னாடி நல்லாத் தான் இருந்துச்சு. வானம் பொய்ச்சுப் போச்சு. மழை இல்லே. கீழே விழுத ரெண்டு சொட்டு தண்ணிய வச்சு என்ன செய்ய முடியும். வேளாண்மை இல்லே. தலைமுறை தலைமுறையா இங்கிட்டு இருந்தவக எல்லாரும் வந்த விலைக்கு வயல் நிலத்தை வித்துப்புட்டு பட்டணத்தைப் பார்த்துப் போயிட்டாக பொழைப்பை தேடி. உங்க அப்பா உசிரோடு இருந்த வரை ஒவ்வொரு உத்திரத்துக்கும் சாமி கும்பிட இங்கிட்டு வருவாக. கூடவே உங்க அம்மாவும் வருவாக. அப்பா போய்ச்சேர்ந்து ஒரு நாலு வருஷம் இருக்குந்தானே? அவக போன பொறகு உங்க அம்மாவும் இந்தப் பக்கம் வாறதே இல்லே. இருந்தாலும் செத்துப் போனவுக கனவுலே வந்து சொன்னதை வேத வாக்கா நினைச்சு வந்துருக்கீக. நல்ல மனசு தம்பி உங்களுக்கு . நல்லா இருப்பீக" என்று சொல்லிவிட்டு அமைதியாக நின்று கொண்டிருந்தான் இசக்கி.
அங்கு நிலவிய மௌனத்தைக் கலைக்க ஏதாவது பேசினால் நல்லது என்று தோன்றியது ஷங்கருக்கு.அதற்கு சந்தர்ப்பம் தராமல்,"தம்பி . நீங்க இதுக்கு மின்னே இங்கிட்டு வந்துட்டுப் போனதே இல்லே. நான் சொல்றது சரிதானே ?" என்று இசக்கி கேட்க ,"ஆமாம் சார் " என்றான் ஷங்கர் .
"இப்படிக்காஞ்சு கிடக்கிற ஒரு பூமிக்கு பசுஞ்சோலைன்னு யாரு பேரு வச்சாகனு யோசிக்கீகளா தம்பி "என்று இசக்கி கேட்க, "ஆமாம்!" என்று சொல்ல நினைத்தாலும் ஒரு சம்பிரதாயத்துக்காக "அப்படி எதுவும் இல்லை சார் " என்றான் ஷங்கர்
"பத்து வருஷத்துக்கு மின்னே கூட பேருக்கு ஏத்தாப்லே பச்சைக்கலர் போர்வை போத்துனாப்போலே பாக்குத திக்கு திசை எல்லாம் வயலும் வரப்புமா இருந்த பூமி...ஹூம்...வானம் ஏமாத்திட்டுது..உழவு வேலைக்குத் தண்ணி இல்லே. ஏன் குடிக்கிற தண்ணிக்குக் கூட துட்டு குடுக்கிற நிலைமை. இந்த ஊர் ஜனங்களும் பொறுத்துப் பொறுத்துப் பார்த்தாக. வானம் கண்ணைத் திறக்கலே. நாம பொறுமையா இருக்க முடியும் . ஆனா வயித்து சாமி நம்மள பொறுமையா இருக்க விடுமா . எது எக்கேடு கெட்டால் எனக்கென்ன. எனக்கு வேளாவேளைக்கு குடுத்துடுனு சண்டை போடுது. அது கூட யாரு மல்லுக்கு நிக்க முடியும் ? அதான் வந்த விலைக்கு நிலத்தை வித்துப்புட்டு போயிட்டாக"
"இந்த ஊரில் ஆறு இருந்துமா தண்ணீர் பஞ்சம் ?"
"எந்த ஆறு இருந்து பிரயோசனம் ? எத்தனை ஆறு இருந்து என்ன பிரயோசனம்? வானம் கண்ணீர் விடறதை நிப்பாட்டிட்டா அந்த கண்ணீரை மனுஷன் விடவேண்டியிருக்குது. வானத்துத் தண்ணி இல்லாட்டா ஆத்துலே தண்ணி எங்கிட்டுருந்து வரும் ? வர்ற வழியில் தாமிரபரணி ஆத்தைப் பார்த்துருப்பீகளே .. குண்டி கழுவக் கூட தண்ணி இல்லாமே காஞ்சு கிடக்குதே "
"பார்த்தேன் சார் "
"பூமியிலே மனுஷ இனம் தர்மம் நீதி நியாயத்துக்குக் கட்டுப்பட்டு இருந்தவரை காத்தும் மழையும் நீரும் நெருப்பும் அதது வேலையை சரியா செஞ்சிட்டு இருந்துச்சு. மனுஷ இனத்தில் அக்குரும்பும் அகம் பாவமும் பெருகிப் போச்சு. சாதி சண்டை பெருகிப் போச்சு ... துட்டு துட்டு துட்டு ... மனுஷனுக்கு துட்டு ஒண்ணுதான் குறின்னு ஆகிப் போச்சு. அதுக்காக என்ன வேணும்னாலும் செய்யலாம்கிற மனசு வந்துட்டுது .. வளர்ந்துட்டுது. இங்கிட்டு அகம்பாவம் பெருகப் பெருக அங்கிட்டு இருக்கிற சாமி ஒட்டு மொத்தமா எல்லாத்தையும் தண்ணி இல்லாமே சாகடிக்கிறான் .. இல்லாட்டி தண்ணியிலே சாகடிக்கிறான். இருந்தாலும் மனுஷப் பிறவிக்கு புத்தி வரலே. மாசம் மூணு மாரி பெஞ்ச காலம் போய் மூணு வருஷத்துக்கு ஒருக்கவாவது மழை வருமான்னு வானத்தைப் பார்த்து ஏங்கிற நிலைமை வந்தாச்சு."
"சார் .. ரொம்ப விவரமா பேசறீங்க "
"எல்லாம் அனுபவப் படிப்பு. அஞ்சும் ரெண்டும் எத்தனைன்னு கேட்டால் கணக்கு சொல்லுத மிசினைத் தேடுது இந்தக் காலப் படிப்பு. கை கால் விரலை வச்சே கணக்கு சொல்லிடும் அந்தக் காலப் படிப்பு .. ஆமாம் தம்பி எனக்கு என்ன வயசு இருக்கும்னு நினைக்கீக ?"
"ஒரு அம்பத்தஞ்சு ... இல்லே அறுபது இருக்குமா ?"
வெற்றிலைக் காவிப் பற்கள் வெளியில் தெரியும்படி சிரித்த இசக்கி, "தம்பி எனக்கு எம்பத்து எட்டு நடக்குது. உடம்புலே இன்னும் வலு இருக்குது . எட்டு பேர் ஒண்ணா சேர்ந்து வந்து எதுத்து நின்னாலும் ஓங்கி அடிக்கிற வலு இருக்குது. இதெல்லாம் எப்படின்னு நினைக்கீக ? அந்தக் காலத்தில் குடிச்ச சுத்தமான தண்ணியாலே..கலப்படமில்லாத சாப்பாட் டாலே .. சுவாசிச்ச சுத்தமான காத்தாலே கிடைச்ச தெம்பு இது. எருவை உரமாப் போட்டு பயிரை வளர்த்தாங்க.. உடம்புக்கு நோய் நொடி வரலே. என் உடம்பிலே இருக்கிற தெம்பு என் புள்ளைகிட்டே இல்லே. என் புள்ளைக்கு இருக்கிற தெம்பு என் பேரப்பிள்ளைக்கு இல்லே. கழுதை தேய்ஞ்சு கட்டெறும்பு ஆன கதைதான். விஞ்ஞானம் வளர வளர நோய் நொடியும் பெருகிப் போச்சு. கண்ட கண்ட உரத்தைப் போட்டு காய்கறியை வளர்க்காக. வளருத காய் சைசிலே பெரிசா இருக்கு. வாயிலே வச்சா ஏதாது ருசி இருக்கா ? மனுஷ உடம்பும் வீணாப் போச்சு. மண்ணோட வீரியமும் பாழாப் போச்சு. தம்பி .. உங்க ஊர்லே தண்ணி தட்டுப்பாடு இருக்கா ?"
"அதை ஒரு பெரிய விஷயமா நான் இதுவரை பீல் பண்ணலே. போன் பண்ணி சொன்னா தண்ணி வீட்டுக்கு வந்துடுது. பணம் குடுக்கிறோம்."
"அப்படிப் போடு அருவாளை ...தம்பி ... இருக்கிறவக துட்டு குடுத்து தண்ணி வாங்குவீக .. இல்லாத ஏழை பாழைங்க என்ன பண்ணுவாக ?"
"மெட்ரோ வாட்டர் லாரி வரும். என்ன ... கொஞ்சம் காத்துக் கிடந்தது தண்ணி பிடிக்கணும் "
"தம்பி .. சுளுவா சொல்லிட்டீக. குடிக்க குளிக்க உங்களுக்கு தண்ணி எப்பிடியோ கெடச்சிருது.உங்க ஊர்லே நிலம் நீச்சு இருந்துச்சுன்னு வச்சுக் கோங்க. அதுக்கு எந்தத் தண்ணிய கொண்டாந்து கொட்டுவீக ?"
"அந்த ப்ராப்லம் எங்களுக்குக் கிடையாது. தனி வீடுகள்ல தோட்டம் இருக்கும். இப்ப அங்கேயும் நிறைய பேர் சேப்டிக்காக தனிவீட்டை இடிச்சி தள்ளிட்டு ப்ளாட்ஸ் கட்ட ஆரம்பிச்சிட்டாங்க"
"தம்பி ... இப்படி செஞ்சா என்ன ?"
"எப்படி சார் ?"
"வேத்துக் கிரகத்துலே தண்ணி இருக்குதா... மனுஷன் வாழ முடியுமா ன்னு என்னென்னவோ செஞ்சு பாக்காகளே .. அதை நிப்பாட்டிட்டு கடல் தண்ணியில் விவசாயம் பண்ண முடியுமான்னு சோதிச்சு பாக்கலாம் தானே .?"
"வாட்?" என்றான் அஷோக் ஆச்சரியமாக. இந்த கேள்வியைக் கொண்டே அவன் வானத்து நட்ஷத்திரங்களை எண்ணிக் கொண்டிருந்தாலும் இவர்கள் பேசுவதைக் கவனித்துக் கொண்டிருக்கிறான் என்பதைப் புரிந்து கொண்டான் ஷங்கர்.
"டாடி .. இந்த வில்லேஜ் மேன் ரொம்பவும் திங் பண்றார். அப்படித்தானே டாடி ?"
"சின்னத்தம்பி என்ன சொல்லுதாக? இந்தக் கிழவனுக்கு இதெல்லாம் எப்படி தெரியும்னு கேட்காகளா ? சின்னத்தம்பி. நான் அந்தக் காலத்திலே சட்டாம்பிள்ளை பள்ளிக்கூடத்தில் அஞ்சாம் கிளாஸ் வரை படிச்சேன்?" என்று இசக்கி சொல்ல , "அஞ்சாம் கிளாஸ் .. டாடி . இஸ் தட் ஈக்வல் டு டுடேஸ் ஐ.ஏ.எஸ் ?" என்று கேட்ட அஷோக்கை, "சட் அப் .. கீப் கொயெட்" என்று அடக்கினான் ஷங்கர்.
"பச்சைப் புள்ளை . எதையோ சொல்லிட்டுப் போட்டும். அதை ஏன் அடக்கி வக்கீக . இப்போ நான் கேட்டதுக்கு பதில் சொல்லுங்க. உலகத்திலே நாலு பங்கிலே மூணு பங்கு கடல் தண்ணின்னு சொல்லுதாக. அது அத்தனை யையும் நமக்கு தோதுப் படுத மாதிரி மாத்தம் செய்யலாந்தானே ?"
"நல்ல யோசனைதான். கடல்நீரை குடிநீரா மாத்துற முயற்சி நடக்குது. ஆனா நீங்க சொல்றமாதிரி விவசாயம் பண்ண முடியுமான்னு எனக்குத் தெரியாது . இதையெல்லாம் யார் செய்றது ?"
"என்ன இப்படிக் கேட்டுட்டீக .. பட்டணத்தில் இருக்கிறவக படிச்சவங்க செய்யணும் ?"
"அதையெல்லாம் செய்து பார்க்கிற அளவுக்கு நமக்கு பொருளாதார வளர்ச்சி வேண்டுமே."
"நம்ம கிட்டே இல்லே .. சரி.. எதுக்கெடுத்தாலும் சண்டைக் கோழி மாதிரி தலையை சிலுப்பிகிட்டு நான் நான்னு நாட்டாமை பண்ணுவாகளே ..நம்ம அமெரிக்க அண்ணாச்சிக .. அவகள செஞ்சு பார்க்க சொல்லலாமே "
"என்ன சொல்லுதீங்க ?"
"சண்டைலே கரியாகிற காசை, ராக்கெட் விட்டு நாசமாப் போகிற துட்டை இதில் போடலாமே. அவகளுக்கும் புண்ணியமாப் போகும். மத்தவகளும் நல்லா இருப்பாகளே "
"நீங்க தப்பா புரிஞ்சு கிட்டீங்க .. நீங்களே நாட்டாமைன்னு சொல்றீங்க. உங்களுக்கு நல்ல நீதி கிடைக்கும்னு நினைச்சுதானே உங்களுக்கு ஒரு பிரச்சினை வரும்போது உங்க ஊர் நாட்டாமை கிட்டே போய் சொல்றீங்க. இளைச்சவனை வலுத்தவன் நசுக்கும்போது யாராவது ஒருத்தர் தட்டிக் கேட்டுதானே ஆகணும். அப்படித் தட்டிக் கேட்கிறவ னெல்லாம் சண்டைக் கோழியா? விண்வெளி ஆராய்ச்சி செவ்வாய்க்கிரக ஆராய்ச்சி இது எல்லாம் வேஸ்ட்னு சொல்றீங்களா ?"
"தம்பி அந்த ஆராய்ச்சி எல்லாம் எதுக்காக ? நாளைக்கு மனுஷன் அங்கே போய் வாழ முடியுமான்னு தெரிஞ்சுக்கத்தானே ! அதை மெதுவா பண்ணு. இப்போ இங்கிட்டு இருக்கிற பிரச்சினைக்கு இங்கேயே தீர்வு தேடுன்னு தான் சொல்லுதேன். இன்னிக்கு தண்ணிக்கு திண்டாடறவன் நாளைக்கு சோத்துக்கு திண்டாடுவான். ஐயா ... உங்க கையில் பணம் இருந்தாலும் கடையில் அரிசி இல்லாட்டா என்னத்த செய்வீக . உலகத்தில் நடக்கிற தப்புக்கெல்லாம் மூல காரணமே வயிறுதானே. அது வாடாமே இருக்க என்ன செய்யணும். சோறு தண்ணி வேணும். அதுக்கு வழி பண்ணுனு சொல்லுதேன் "
"நல்ல யோசனைதான் .. வேறே என்ன செய்யணும் ?"
"ஏரியிலே வீடு கட்டினா, விளையுத பூமியை யாராது துண்டு போட்டு வித்தால் அதை உடனே கவருமெண்ட் தடை செய்யணும். அந்த இடங் களில் தண்ணிய தேக்க என்னென்ன செய்யணுமோ அதை செய்யணும். அந்த இடங்களில் வெளைச்சலை பெருக்க என்னென்ன செய்யணுமோ அம்புட்டையும் செய்யணும்.கூலியைக் குடுத்தா வேலை செய்ய படிச்ச புள்ளைகளே நீ நான்னு போட்டி போட்டுக்கிட்டு வருவாக. காசுக்காக நாச வேலை செய்ற கூட்டம் பெருகிப் போச்சு. அந்த கூட்டத்தை நல்ல வேலையிலே பழக்கி விடலாந்தானே ?"
இதைக் கேட்டு ஷங்கர் அமைதியாக இருந்தான்.
"என்ன தம்பி யோசிக்கீக ? இதெல்லாம் சரிப்பட்டு வருமான்னு யோசனை பண்ணுதீகளா? எது எதையோ சோதனை பண்ணிப் பார்க்குதோம். இது சரிப் பட்டு வருமான்னு சோதிச்சு பார்ப்போமே."
"சரிதான் " என்ற ஷங்கர், அஷோக் தூங்கி விட்டதைக் கண்டு " கம் ஆன் . உள்ளே போய்ப் படுக்கலாம்" என்று சொல்லி விட்டு " சார் .. நீங்களும் படுக்கப் போங்க. நாளைக் காலையில் மீட் பண்ணுவோம். காலையில் ஊரை சுத்திப் பார்க்கப் போகலாமா ?" என்று கேட்டான்
"அதற்கென்ன தம்பி. போய்ட்டா போச்சு .. இப்போ போய்ப் படுங்க" என்றான் இசக்கி.
மறுநாள் காலையில் மூவரும் குளித்து முடித்து ரெடியாகும் முன்பே சுட சுட ஆவி பறக்கும் இட்லி தோசை சட்னி சாம்பார் பிளாஸ்கில் காபி, என்று கொண்டு வந்தான் இசக்கி
"என்ன சார் ..ஒரு மினி ஹோட்டலே வந்து விட்டது !"
அவர்கள் சாப்பிட்டு முடித்த வேளையில் "தம்பி .. ரா முழுக்க நல்லா தூங்குனீங்களா ? புது இடம்னு தூக்கம் இல்லாமே புரண்டு புரண்டு படுத்துட்டு இருந்தீகளா ?" என்று கேட்டபடியே சுந்தரம் பிள்ளையும் செண்பகமும் அங்கு வந்தார்கள்.
"இங்கே வந்து படுத்ததுமே நான் தூங்கிட்டேன். இவரும் குழந்தையும் எப்போ தூங்கினாங்கனு எனக்குத் தெரியாது " என்று சிரித்துக் கொண்டே சொன்ன சாவித்திரியின் காதுகளில் " இதுதான் நல்ல மனைவியின் லட்சணம் " என்று ஷங்கர் சொல்ல, சாவித்திரி கையை ஓங்க , அதை மனதுக்குள் ரசித்தாள் செண்பகம்
"இட்லி, மிளகாய்ப் பொடி எல்லாமே நல்லா இருந்துச்சு. வழக்கத்தை விட ரெண்டு இட்லி அதிகம் சாப்பிட்டோம். மத்தியான சாப்பாட்டை நாங்க வெளியில் பார்த்துக்குவோம். நீங்க சிரமப் படவேண்டாம்" என்று சாவித்திரி சொல்ல, " நல்லா சொன்னே தாயீ. வீட்டுக்கு விருந்தாளியா வந்தவகளுக்கு வாய்க்கு ருசியா செஞ்சு போடறதில் என்ன சிரமம் இருக்கு? ஊரை சுத்திப் பார்த்துட்டு வாங்க. எங்கிட்டு சுத்தினாலும் சாப்பாடு இந்த வீட்டில்தான். அதை மட்டும் மனசுலே வச்சுக்கோங்க" என்று உரிமையோடு சொன்னாள் செண்பகம்.
"சரிம்மா. இவ்வளவு ருசியான சாப்பாட்டை உண்மையான உபசரிப்பை நாங்க பைவ் ஸ்டார் ஹோட்டலில் கூட பார்த்தது கிடையாது" என்ற ஷங்கர் "இசக்கியையும் எங்களோடு கூட்டிட்டு போறோம் " என்றான்
"நல்லா சொன்னீக தம்பி. இசக்கி இல்லாமலா ? பத்திரமா பார்த்துப் போயிட்டு வாங்க " என்றார் பிள்ளைவாள்.
வாசலில் இசக்கி காத்திருந்தான்
"என்னங்க காரில் போலாமா ?"
"தாயீ .. காரில் போனா அரைமணி நேரத்தில் அம்புட்டு இடத்தையும் சுத்திப் பார்த்துட்டு வந்து வீட்டுக்குள் வந்து மோட்டுவளையை வெறிச்சுப் பார்த்துட்டு இருக்கணும். காலாற நடந்து போனா நாலு மனுஷாளைப் பார்த்தாப்லே இருக்கும். உங்களுக்கும் பொழுது போகும் "
"குட் .. சாவித்திரி .. இசக்கி சார் சொல்றதுதான் சரி "
"உங்களுக்கு ஓகேன்னா எனக்கு டபிள் ஓகே "
"ஏலேய் .. சீக்கிரம்.." என்று இசக்கி குரல் கொடுத்ததும், "வந்துட்டேன் தாத்தா " என்று குரல் கொடுத்தபடி ஓடி வந்தான் ராசுப் பயல்
"என் பேரப்பிள்ளை ... சின்னத் தம்பிக்கு தொணையா இருக்கட்டும்னு இவனை வர சொன்னேன் " என்று இசக்கி அறிமுகப் படுத்த, தன்னுடைய வயது ஒத்த சிறுவனைக் கண்டதும் உற்சாகம் மேலிட அவனோடு கை கோர்த்துக் கொண்டான் அஷோக்.
தெரு விளக்குக் கம்பத்தில் மாட்டைக் கட்டிப் போட்டு ஒருவர் பால் கறப்பதை ஆச்சரியமாகப் பார்த்தான் அஷோக்.
"என்ன ,, கோனாரையா .. உங்களுக்கு இப்பத்தான் பொழுது விடிஞ்சுதா ?நாங்க வெள்ளனே சாப்பாட்டை முடிச்சாச்சு. நீங்க இப்பத்தான் காப்பிக்கு பால் கறக்குதீகளாக்கும்.. இல்லாட்டா சாயங்காலப் பாலை இம்புட்டு சீக்கிரமா கறக்கீகளா ?"
"என்ன இசக்கி. இந்தக் குறும்புப் பேச்சுதானே வேண்டாங்கிறது. ராத்திரி டவுனுக்குப் போயிட்டு தாமசமா வந்தேன். காலைலே கொஞ்சம் கண்ண யந்துட்டேன். ஆமா. கூட வாறவக யாரு ? புது மனுசங்களா தெரியுது ?"
"ஒரு காலத்தில் இவக தாத்தா இங்கே இருந்தாக. இவக அப்பா சின்னப் பிள்ளையா இருக்கிறப்ப பட்டணம் போனவக அங்கிட்டே தங்கிட்டாக. இவக அப்பா ஒவ்வொரு பங்குனி உத்தரத்துக்கும் அவக குலதெய்வம் கோவிலுக்கு வருவாக. அவகளும் தவறிப் போயிட்டாக.அவக இந்தத் தம்பி கனவுலே வந்து குலதெய்வத்துக்கு பூஜை போடணும்னு சொன்னா களாம். அதான் தம்பி இந்த ஊருக்கு வந்திருக்கு " என்ற இசக்கி,"கோனார் இந்த ஊருக்கு வந்து ரெண்டு வருஷந்தான் ஆகுது. உங்க அப்பாவை தெரிஞ்சிருக்க நியாயமில்லே" என்றான்
"எந்த ஊர் சாமி ?"
"மாயமான் குறிச்சி. இன்னிக்குப் பௌர்ணமினு நினைச்சு வந்துட்டாக. நாளைக்குதான் பௌர்ணமிபூஜை இங்கே. ஒரு நாள் தங்கித்தான் போகணும்னு சொன்னதும் வாடிப் போயிட்டாக. அவக வாட்டத்தைப் போக்க அப்படியே ஊரை சுத்திக் காட்ட கூட்டிட்டுப் போறேன் "
"ஆமா.. இங்கிட்டு இருந்தே வடக்கே இருக்கிற இமயமலையைக் காட்டு. பக்கத்திலே இருக்கிற பாகிஸ்தானைக் காட்டு. தெக்க இருக்கிற கன்னியாகுமரியைக் காட்டு. சுடறதுக்கு ரெடியா இருக்கிற சிலோனைக் காட்டு "
"ஏலேய்.. உன் படிச்ச குசும்பை எங்கிட்டே காட்டாதே. இங்கே பேசிகிட்டே ரத்தம் வர்ற அளவுக்கு பாலைக் கறந்துராதே. கன்னுக் குட்டிக்கு கொஞ்சம் விட்டு வை "
பேசிக்கொண்டே பால் கறப்பதை அதிசயமாகப் பார்த்த அசோக் "டாடி . இந்த அங்கிள் என்ன பண்றார் ? வொய்ட்டா என்ன வருது ?" என்றான். "மில்க் "
"நமக்கு பாக்கெட்டில் தானே மில்க் வரும் .. இங்கே மாடுகிட்டே இருந்து மில்க் வருது ?"
"பட்டணத்துப் பிள்ளைக பெரிய பெரிய விஷயமெல்லாம் தெரிஞ்சு வச்சி ருப்பாக. இந்த மாதிரி சாதாரண சங்கதிகளைப் பத்தி தெரியாதவகளா இருப்பாக. சின்ன தம்பி .. இந்த மாடு தர்ற பாலைத்தான் உங்களுக்கு கவரில் போட்டு குடுக்காக " என்று இசக்கி சொல்ல "நிஜமா?" என்பது போல ஷங்கரைப் பார்த்தான் அஷோக்
"நிஜந்தான் " என்றான் ஷங்கர்
"அதோ பாருங்க அங்கொரு கார்டன். இந்த சம்மர் டைமில் கூட அந்த ஒரு இடம் மட்டும் அவ்வளவு பசுமையா இருக்குது. அப்பா.. வாழையும் தென்னையும் ... என்ன ஒரு அழகு ! அது யாரோட இடம் ?" என்ற சாவித்திரியிடம் "நம்மளுது தான் தாயீ " என்றான் இசக்கி
புரியாமல் சாவித்திரி விழிக்க "அவருடையது என்று சொல்கிறார் " என்றான் ஷங்கர் .
"வாங்க .. உள்ளே போய்ப் பார்க்கலாம் " என்ற சாவித்திரியின் நடையில் ஒரு துள்ளல் இருந்தது . அங்கே வாழைத்தோப்பின் ஓரமாகக் கிடந்த கயிற்றுக் கட்டிலில் உட்கார்ந்து கொண்டாள். சிறிது நேரத்தில் கையில் இளநீருடன் வந்தான் இசக்கி.
"எனக்கு இந்த இடம் ரொம்ப பிடிச்சிருக்கு . எல்லா இடமும் காய்ஞ்சு போய்க் கிடக்குது . இங்கே மட்டும் எப்படி இப்படியொரு செழிப்பு ?" என்று வெளிப்படையாகக் கேட்டாள் சாவித்திரி
அதைக் கேட்டுப் பூரித்துப் போன இசக்கி, "நாலு வருஷம் முன்னே மழை இல்லாம போனப்போ இந்த நிலத்தை வித்துடலாம்னு என் மவன் எம்புட்டோ சொன்னான். நான் கேட்கலே. என் தலை இந்த மண்ணுலே சாய்ஞ்ச பொறகு நீ என்ன வேணும்னாலும் செய்னு சொல்லிட்டேன். "
"உங்க தோப்புக்கு மட்டும் தண்ணி எங்கிருந்து கிடைக்குது ?"
"அது ஒண்ணும் பெரிய ரகசியமில்லே .. அதோ அங்கே லைன் வீடுங்க இருக்குது பாருங்க .. அங்கே நிறைய குடித்தனம் இருக்குது. அத்தனை வீட்டுக்கும் கிணத்து தண்ணிதான் தினப்படி உபயோகத்துக்கு. அந்த கிணத்தடியிலிருந்து ஒரு மடையை .. அதாது ... தண்ணி வர்ற கால்வாயை என் செலவில் வெட்டி தோட்டத்தில் கொண்டாந்து சேர்த்து ட்டேன். அவங்க கிணத்துலே குளிக்கிற துவைக்கிற தண்ணி என் தோட்டத்துக்கு வந்து சேருது "
"அட ... ஆச்சரியமா இருக்கே. இந்த யோசனை மத்தவங்களுக்கு ஏன் தோணலே ?"
"மழை இல்லே .. வெள்ளாமை இல்லேன்னு அங்கிட்டு இருந்தவங்க அந்த இடத்தை வந்த விலைக்கு வித்துட்டுப் போயிட்டாக. அதை ஒருத்தன் வாங்கி லைன் வீடு கட்டினான். அப்பத்தான் அங்கிட்டு வீணாகிற தண்ணிய என் தோட்டத்துக்குக் கொண்டு வரலாம்னு எனக்கு யோசனை தோணிச்சு. அதை அந்த பார்ட்டி கிட்டே சொன்னேன். கொஞ்சம் பணம் செலவு பண்ணினேன். அதனால் எனக்கு நஷ்டமில்லே. வீணாப் போற தண்ணிய வெளியில் விடறதில் அவகளுக்கும் நஷ்டமில்லே"
"நல்ல ஐடியா தான். நாங்க கூட சென்னையில் செய்து பார்க்கலாம் போலிருக்கு"
"காசா பணமா ? செய்யுங்க தம்பி . வீணாக்கிற தண்ணிய அது தேவையா இருக்கிறவங்களுக்குக் குடுக்கிறாக .. அம்புட்டுதான் "
அவர்கள் பேசுவதைப் பொறுமையாகக் கேட்டுக் கொண்டிருந்த சாவித்திரி " அஷோக் ... என்னங்க ... எங்கே அவன் ?"என்றாள்
"கவலைப் படாதே தாயீ . என் பேரன் ராசுப் பயலோட போனாக."
"புது இடம். வழி தெரியாமே எங்காவது போயிடப் போறான் "
"அப்படிப் போக என் பேரன் விட்டுற மாட்டான். ஒத்த வயசுப் புள்ளைக. ஓடியாடி விளையாடிட்டு வரும்"என்று இசக்கி சொல்லிக் கொண்டிருக் கும் போதே,"மம்மி " என்று கத்தியபடி கையில் ஒரு செடியுடன் ஓடி வந்தான் அஷோக்
"என்னடா இது ? எங்கிருந்து எடுத்திட்டு வர்றே. கையெல்லாம் ஒரே சேறு . போ .. போய்க் கையை அலம்பு "
"மம்மி இதை என் ப்ரெண்ட் ராஜ் குடுத்தான் . இதை நான் சென்னைக்கு எடுத்துட்டு வருவேன்."
"நாம இருக்கிறது பிளாட்டில் .. செடி வைக்க ஏதுடா இடம் ?"
"இந்த செடிக்கு ஸ்மால் பக்கெட் போதும் மம்மி. ராஜ் சொன்னான்.. ராஜ் .. இந்த பிளான்ட் பேர் என்னனு சொன்னே ? "
"அந்தி மந்தாரை "
"எஸ் .. அந்திமந்தாரை ... டாடி .. இந்த ப்ளாண்டில் ஈவனிங் டைமில் பூ பூக்குமாம். இதில் மெனி கலர்ஸ் உண்டாம் . பட் என்னோடதில் எல்லோ கலர் பிளவர் வருமாம், ராஜ் சொன்னான் "
"ப்ளீஸ் ,, அஷோக் .. லீவ் இட் ஹியர் "
"நோ மம்மி"
"பச்சைப் புள்ளே .. பிரியப்பட்டு கேட்குது.தொட்டியிலே வச்சு தர்றேன். காரில் தானே போறீங்க. இதுவும் ஒரு ஓரமா இருந்துட்டுப் போகட்டும். தினமும் ரெண்டு தம்ளார் தண்ணி ஊத்தப் போறீங்க .. வீணா போற காய்கறி தோலைப் போடப் போறீங்க .. சாயங்காலம் அந்தப் பூ பூக்கிறதப் பார்த்தா மனசுக்கு எம்புட்டு நிறைவா இருக்கும் தெரியுமா ?"
செடி வளர்ப்பு பற்றி ராசுப் பயலிடமிருந்து நிறைய குறிப்புகளைக் கேட்டுத் தெரிந்து கொண்டான் அஷோக்.
"சார். நீங்க வயசிலே பெரியவர். உங்களை விட சின்னவங்க கூட உங்களை இசக்கினு கூப்பிடறாங்க ..." என்று சாவித்திரி கேட்க, "அப்படிக் கூப்பிடறதுதான் எனக்கு பிடிக்கும். நான்தான் அப்படி கூப்பிட சொல்வேன் " என்றான் இசக்கி .
"தம்பி ..மணி ஒன்ணாகப் போகுது .. சாப்பாட்டுக்குக் கிளம்பலாமா ? ஐயா காத்திருப்பாக "
"எனக்கு இந்த இடத்தை விட்டு கிளம்ப மனசே வரலே" என்று சாவித்திரி சொல்ல அதைக் கேட்டுவிட்டு வெளியேறிய இசக்கி அடுத்த அரைமணி நேரத்தில் சாப்பாட்டு கேரியருடன் அங்கே வந்து சேர்ந்தான்.
"சார் என்ன இது ?" என்று அதிர்ந்து போய்க் கேட்டான் ஷங்கர்
"தாயீ .. இங்கிட்டு இருக்கப் பிரியப்படறத ஐயா கிட்டே சொன்னேன். உடனே சாப்பாட்டைக் கட்டிக் குடுத்து அனுப்பிட்டாக "
"இதை போய் ஏன் சொன்னீங்க ?"
"நேரத்துக்கு சாப்பிட கூட்டிட்டு வரலைன்னு என்னை வைவாக .. அதான் " என்றான் இசக்கி
தோப்பின் அழகை சாவித்திரி ரசித்துக் கொண்டிருக்க, செடியை வளர்ப்ப து பற்றிய ஆராய்ச்சியில் இருந்தான் அஷோக்.
மறுநாள் கோவிலுக்குக் கிளம்பும் முன் செடிக்கு முத்தமிட்ட அஷோக் செடியிடம் "பை . இப்ப நான் வந்துடுவேன் " என்றான்
பூஜையை முடித்து விட்டு சென்னைக்குக் கிளம்பும்போது, பூந்தொட்டியை தனது பிஞ்சுக் கரங்களில் தூக்கி வந்தான் அஷோக் மற்றவர்கள் எவ்வளவு தடுத்தும் கேளாமல்.
வழக்கமாக காரின் முன் சீட்டில் உட்காரும் அஷோக்,"மம்மி ப்ரண்ட் சீட் உங்களுக்கு. நானும் செடியும் பேக் ஸீட்டில். மம்மி அந்த வாட்டர் பாட்டில் என் பக்கத்திலேயே இருக்கட்டும். நாம சென்னை போறதுக்குள் நைட் ஆகிடும். இதுக்கு ஈவ்னிங் தண்ணீர் ஊத்தணும் .. ராஜ் சொன்னான்" என்றான்
அதைக் கேட்டு ஆச்சரியப்பட்ட இசக்கி, "தம்பி தண்ணியோட தேவை அதை பாதுகாக்கிற அவசியம் பத்தி பெரியவகளுக்கு சொல்றத விட இந்த மாதிரி சின்னப் பிள்ளைகளுக்கு சொல்லிக் குடுத்துட்டா அதுங்க சிரத்தை எடுத்து பாதுகாப்பாங்க. நேத்து வெளியில் கிளம்பறப்போ அவக குடிக்கிற துக்கான தண்ணிப் பாட்டிலைக் கூட தூக்க மாட்டேன்னு அடம் பிடிச்ச தம்பி, செடிக்கு தண்ணி வேணும்னு அதை பக்கத்திலே பாதுகாப்பா வைக்க நினைக்குது. ஒவ்வொரு ஜீவனுக்கும் உயிர்நாடி தண்ணிதான்னு எல்லாக் குழந்தைகளுக்கும் புரிய வைக்கணும். இந்த ஆர்வம் எல்லாரு க்கும் வந்தால் எல்லாருமே நல்லா இருக்கலாம் " என்றான்
இதைக் கேட்டு பதிலேதும் சொல்லாமல் சிரித்தான் ஷங்கர்
"ராஜ் . இதில் பூ வந்ததும் உனக்கு நான் இன்பார்ம் பண்ணுவேன் " என்று அஷோக் சொல்ல, "இம்புட்டு பிரியமா இந்த ஊரில் யாரும் என்கிட்டே பேசிப் பழகினதே இல்லை " என்று கண்ணீர் மல்க கையசைத்தான் ராசுப் பயல். அது அவனுக்குக் கிடைத்த "ஒருநாள் நண்பன்", "பாசமிகு நண்பன்" பிரிவால் ஏற்பட்டது.
தாழையூத்து தாண்டி கார் வந்தபோது , ட்ராபிக் ஜாம் என்பதால் காரை நிறுத்தினான் ஷங்கர். என்னவென்று விசாரித்தபோது தண்ணீர் கேட்டு சாலை மறியல் என்ற பதில் கிடைத்தது
"டாடி . ஷேல் வீ ஜாயின் வித் தெம் ?" என்று கேட்டான் அஷோக்
"வொய் ?"
"டாடி ..பிளான்ட்க்கு தண்ணீர் வேணும். நமக்கு தேவையான வாட்டர் காசு குடுத்தால் பாட்டிலில் கிடைக்கும். இந்த வில்லேஜ் பீபள் அவங்க கார்டனுக்கு தண்ணீர் வேணும்னா என்ன செய்வாங்க ?"
"டேய் .. அவங்க குடிக்க தண்ணீர் கேட்டு நிக்கிறாங்க "
"இருக்கட்டும் .. அதுலே கொஞ்சம் செடிக்கு போகும்தானே ?"
"நாம போய் கையைத் தூக்கிக் கத்திட்டு வர்றதாலே அவங்க பிரச்சினை தீரப் போறதில்லே "
"ஓகே .. நம்ம சப்போர்ட் அவங்களுக்கு உண்டுன்னு சொல்வோம். ஊருக்குப் போனதும் இசக்கி அங்கிள் சொன்னமாதிரி கடல் தண்ணீரை ஏதாவது செய்ய முடியுமான்னு பார்ப்போம்.எதுவும் முடியாட்டா இப்போ இருந்தே கடல் தண்ணீரைக் குடிக்கப் பழகிக்குவோம் " என்ற அசோக்கை ஆச்சரியமாகப் பார்த்தார்கள் இருவரும்.
பின்குறிப்பு : கிட்டத்தட்ட பத்து வருடங்களுக்கு முன்னால் " தண்ணீரைத் தேடி " என்ற தலைப்பில் கதை எழுதும் போட்டி ஒன்றை விகடன் நிறுவனம் அறிவித்தது. அதற்காக நான் எழுதிய கதை இது ( பரிசு கிடைக்கவில்லை என்பது வேறு விஷயம். வீட்டை சுத்தம் செய்யும் போது கதை எழுதின பேப்பர்ஸ் கையில் மாட்டியது. ப்ளாக்கில் பதிவு செய்தேன் ஒன்றிரண்டு மாற்றங்களுடன் )
நான் தெரிந்து கொண்ட உண்மை : பத்து வருஷம் இல்லே , பத்து யுகம் மாறினாலும் கூட இந்த தண்ணீர் பிரச்சினை மாறாது போலும். எவ்வளவு மழை பெய்து வீட்டுக்குள் வெள்ளம் வந்தாலும் கூட , எல்லா நீரையும் கடலில் கொண்டு போய் சேர்த்துவிட்டு மழை நிவாரண நிதி கேட்போம். கோடையில் தண்ணீர் கேட்டு தகராறு செய்வோம். நம்ம வீட்டு மாடியில் மழை கொட்டும்போது அதை பிடித்து வைத்துப் பாதுகாக்க வழியறியாம ல் இருந்துவிட்டு வெயிலடிக்கும் போது பக்கத்து வீட்டுக்காரன் எதிர் வீட்டுக்காரன் கிட்டே தண்ணீர் கேட்டு சண்டை போடுவோம்.

No comments:
Post a Comment