இது ஒரு மாதிரிக் கதை. கவனம். Be careful
"தாத்தா, என்ன இது ! தொளதொளன்னு ஒரு ஷர்ட் . எங்கே தைச்சீங்க . உங்களுக்கு வழக்கமா தைக்கிற டைலர் தத்தைகிட்டே குடுக்கலியா ? " என்று ராதா கேட்க, "தத்தை தைத்த சட்டைதான் இது !" என்று சோகமாக சொன்னார் பெரியவர். "பாப்பா அழறா. மெயின் ரோட்டில் தேரு வருதே. அதை வேடிக்கை காட்டிட்டு வாங்க " என்று சொல்லும்போதே, "தா ராதா. குழந்தையை நான் வெளியில் எடுத்துட்டுப் போறேன் " என்று மாமா சொல்ல, " அப்ப சரி. டீ ரெடீ. குடிச்சிட்டுப் போங்க " என்றாள் ராதா.
"ஏய் பாரூ, ரூபா நோட்டை எண்ணினது போதும். வா ரவா தோசை ரெடீ" என்று குரல் கொடுத்தாள் அம்மா
"என்னோட விசா எங்கே?" என்று பாரூ கேட்க, " விசா சாவி ஸ்டாண்டில் இருக்குது போய்ப் பார் " என்று அம்மா சொல்லிக் கொண்டிருக்கும்போது போன் மணி ஒலித்தது. எடுத்துப் பேசிய ராதா "இவன் ஒருத்தன் நேரங் காலம் தெரியாமே " என்று சலித்துக் கொள்ள "என்ன ?" என்று கேட்ட அம்மாவிடம் "நம்ம தோட்டத்துக் குத்தகைக்காரன் போன வாரம் தோட்டத்தில் விளைஞ்ச மாம்பழம் பலாப் பழங்களை அனுப்பினான் தானே. மா பலா லாபமான்னு விசாரிக்கிறான்" என்று பதில் சொன்ன ராதா, "அம்மா, நாம மொத்தம் பத்து பேர். எல்லாருக்கும் இந்த பாட்டில் மோரு போருமோ" என்று சந்தேகத்துடன் கேட்டாள்.
"போதும் .. உங்க அப்பா எங்கே ? மொட்டை மாடியில் காக்கா விரட்டறாரா?" என்ற அம்மாவின் கேள்விக்கு, " பாரூ பாரின் போறதாலே நாம குடகு மலைக் கோவிலுக்குப் போய் பொங்கல் வச்சிட்டு வீடு வந்து சேர ரெண்டு நாள் ஆகும். வீட்டில் யாரும் இல்லாட்டா தோட்டத்தில் மாடு மேயுமே. அதான் தோட்டத்தில் எதையோ சரி பண்ணிட்டு இருக்கிறார்.
"எந்தப் பொறுப்பும் இல்லாத நிம்மதியான மனுஷன். வீட்டைப் பத்திக் கவலைப் படமாட்டார். வீட்டுக்கு வெளியில் மாடு மேயுதேனு வருத்தப் படுவார். இல்லாட்டா வானத்தில் நிலா தேயுதேன்னு வருத்தப் படுவார்" என்று சொல்லி தலையில் அடித்துக் கொண்டாள் அம்மா.
"அம்மா எனக்கு RADAR கம்பெனியில் அப்பாயின்மெண்ட் ஆர்டர் ரெடியாகுதாம். இப்பத்தான் என் ப்ரெண்ட் போன் பண்ணினான் " என்று சேது சொல்ல, "அப்போ உனக்கும் சேர்த்தே பொங்கல் வச்சிடலாம் " என்றாள் பாரூ. ஒருவழியாக எல்லா அமர்க்களத்தையும் முடித்துவிட்டு அந்தக் குடும்பம் கோவிலை நோக்கிப் பயணித்தது .
Dear viewers, அவ்வளவுதான் ... கதை முடிந்தது
இதெல்லாம் கதையா ? கதையில் எதுவுமே இல்லையே என்கிறீர்களா ?
கதையில் இல்லை. கதைக்குள் இருக்கிறது. அது என்னவென்று கண்டு பிடிங்க. இந்தக் கதையை "மாதிரி" கதையா வச்சு ( I mean, specimen) வேறொரு கதை சொல்லுங்க பார்க்கலாம். எங்களுக்கு கதையா இது தோணலைன்னு நீங்க சொன்னா, " ஒரு வீட்டில் நடக்கும் சம்பாஷணை " என்று இதனை சொல்லிக் கொள்ளலாம். உங்கள் கற்பனையை "comment" ல் பதிவு பண்ணலாம் . என்னுடைய ப்ளாக்கில் காலடி எடுத்து வைத்தவர்கள் விவரம் கீழே உள்ளது. உங்கள் கற்பனையை "comment" ல் பதிவு செய்தால் அதை இவர்களும் தெரிந்து கொள்வார்கள் தானே ?
No comments:
Post a Comment