Labels

About myself Name : Kumari S. Arunachalam alias Aruna S. Shanmugam Occupation : Form

Monday, March 09, 2015

கேள்வி இங்கே இருக்கிறது ! பதில் யாரிடம் இருக்கிறது ?

கேள்வி எண் : 02
சில நாட்களுக்கு முன்பு படித்த செய்தி :  
" லஞ்சம் கொடுப்பவர்களுக்கும் தண்டனை ! " - பிரதமர் அறிவிப்பு 
ரொம்ப சந்தோசமான விஷயம் ... ஆனால் ஒரே ஒரு சந்தேகம் ... அய்யா .. வெறும் கேலி கிண்டலுக்காக இந்த சந்தேகத்தைக் கிளப்பவில்லை . ஒரு விஷயத்தைப் பற்றி சரியாகத் தெரிந்து கொள்ள வேண்டும் என்ற ஆவலில் கேட்கிறேன்.
தனக்கு கொஞ்சமும் தகுதி இல்லாத ஒன்று, சொந்தமில்லாத ஒன்றை அடைய நினைப்பவர்கள், குறுக்கு வழியைக் கையாண்டு ( அதாவது யார் யாருக்கு எங்கெங்கு " வெட்டணுமோ " அங்கங்கு வெட்டி தங்களுடைய காரியத்தை சாதித்துக் கொள்ள முயற்சி செய்யும்போது அவர்களைக் கையும் களவுமாகப் பிடித்து தண்டித்தால் அதைப் பார்த்து சந்தோசப் படலாம் . நீதி நிலைநாட்டப் படுவது குறித்து பெருமைப் படலாம்.
ஆனால்  :::::
ஒருவருக்கு தேவையான பிறப்பு சான்றிதழ் அல்லது இறப்பு சான்றிதழ் வாங்கப் போனால், அதற்கும் பணம் கொடுக்க வேண்டியிருக்கிறது. அதற்கு எந்த ரசீதும் கிடையாது. அவனோட அவசரத் தேவைக்கு அவன் பணம் கொடுத்து, வேலையை முடித்து விட்டுப் போக நினைத்தால் அவன் தண்டிக்கப் படுவானா ? ( அல்லது தண்டனைக்குப் பயந்து எனக்கு எதுவுமே வேண்டாம் என்று விட்டு விடுவானா ? )
சில மாதங்களுக்கு முன்பு கோயம்புத்தூரில் ஒரு இடத்தில் சாலை மறியல் நடந்தது  ( அது இல்லாத இடம் எது ? என்னவோ பெரிசா கண்டு பிடிச்சிட்ட மாதிரி சொல்ல வந்துட்டியேன்னு கேட்காதீங்க .. இந்த இடத்தில் அதற்க்கு சம்பந்தம் இருப்பதால் அதைக் குறிப்பிடுகிறேன் ). சாலை மறியலுக்குக் காரணம் : ஹௌசிங்க் போர்டில் வீடு வாங்கிய வர்களுக்கு வீடு வாங்கியதற்கான " பதிவுப் பத்திரம் " இருபது ஆண்டு களுக்கு மேலாகியும் வழங்கப்படவில்லை .. போய்க் கேட்டால் எந்த பதிலும் சொல்லுவதில்லை என்பதுதான்.
ஒரு பொருளுக்கு  முழுப் பணத்தையும் கட்டியவர்களுக்கு பொருளுடன் சேர்த்து  ரசீது  கொடுப்பதுதானே முறை.. ஒருவேளை கொடுக்காமல் இருப்பதற்கு தகுந்த காரணம் இருந்தால் அதை சம்பந்தப்பட்டவர்களிடம் வெளிப் படையாக சொல்லலாம் . அந்த வழக்கமும் கடைப் பிடிக்கப் படுவ தில்லை. ஒருவேளை மனையின் விலையில் திருத்தங்கள் இருந்தால்  அதை சம்பந்தப் பட்டவர்களுக்கு அறிவித்து, பணத்தைக் கொடுத்துவிட்டு வாங்கி செல்லுங்கள் என்று சொல்லலாம் . நானும் செய்ய மாட்டேன். நீ கை வீசிட்டு வந்து கேட்டால் எதுவும் சொல்ல மாட்டேன் . என் கையில் வைக்க வேண்டியதை வச்சால்தான் உன்னை நிமிர்ந்து பார்த்தே பேசுவேன்  என்று எழுதப்படாத விதியை அரசு அலுவலர்கள் கடைப் பிடிக்கும்போது, தன்னுடைய அவசரத் தேவைக்காக தனது வீட்டை விற்க அல்லது அடமானம் வைக்க நினைப்பவன்  லஞ்சத்தை விட்டு எரிந்து விட்டு தன்னோட வேலையை முடிச்சிட்டுப் போகத்தானே நினைப்பான் . அவனுக்குத் தண்டனை உண்டா ?
பொது மக்களுக்குத் தேவையான , நியாமான ஒன்று வழங்கப் படாமல் தாமதம் ஏற்படும் போதெல்லாம் அங்கு லஞ்சத்துக்கு ரோடு போடப் படுகிறது என்பதை அரசாங்கம் அறியாமலா இருக்கிறது ?
(இதுதான் ரூட் ... இதில் நீ போ என்று சொல்லிவிட்டு, இந்த ரோட்டில் நீ போனால் நான் தண்டிப்பேன் என்று தடி எடுத்துக் கொண்டு வந்தால் அப்பாவி பொதுஜனம் என்ன செய்வான் ? என்ன செய்ய முடியும் ?)
( லஞ்சம் கொடுத்துதான் எங்கள் வேலையை முடிப்போம் என்பது யாருக்காவது நேர்த்திக் கடனா என்ன  ?)

தெரிந்த நண்பர் ஒருவர் கேட்ட சந்தேகம் : . "நான் ஹௌசிங்க் போர்டில் வீடு வாங்கி இருக்கிறேன். ஆபீசில் லோன் வாங்கி மொத்தப் பணமும் கட்டியாச்சு. வீடு அலாட் மெண்ட் ஆர்டர் கொடுக்கும்போது வீட்டின் மதிப்புக்கான வட்டிப் பணம் இவ்வளவு கட்ட வேண்டும் என்று சொன்னார்கள் அதை பல வருடங்கள் முன்பே கட்டி விட்டேன். மொத்தப் பணத்தையும் முதலிலேயே கட்டுகிறவர்கள் கட்டுகிற வட்டிப் பணம், SALE DEED கொடுக்கிறபோது தள்ளுபடி செய்யப் படும்னு என்னோட நண்பர் சொன்னார் . அது பற்றி ஹௌசிங்க் போர்டில் கேட்டால் "அதெல்லாம் உங்களுக்குக் கிடையாது. ஹௌசிங்க் போர்டுக்கு மாதா மாதம் பணம் கட்டுகிறவர்கள் வட்டியோடு சேர்த்து கட்டுவாங்க. அதைத் தான் தள்ளுபடி செய்வோம்"னு சொல்றாங்க . வட்டிப் பணத்தை முதலில் கட்டிவிட்டு ஆறுமாதத்துக்குள்  முழுப் பணத்தையும் கட்டி விட்டேன். 20 வருடமாகியும் SALE DEED தரலே .. என்ன காரணம்னு தெரியலே. ஒரு வீட்டுக்குக் கட்ட வேண்டிய பணத்தை பதினைந்து வருடங்களுக்கும் மேலாக தவணை முறையில் ஹௌசிங்க் போர்டுக்கு  கட்டுகிறவர் களுக்கு வட்டிப் பணம் தள்ளுபடி செய்யப் படுமாம். நான் ஆபீசில் லோன் வாங்கி மொத்தப் பணத்தையும் ஹௌசிங்க் போர்ட்க்கு கட்டிவிட்டு நான் வாங்கின பணத்துக்கு வட்டியை ஆபீசுக்குக் கட்டுகிறேன். நானும் கவெர்ன்மெண்ட் செர்வன்ட் தான் .. ஆனால் இன்னொரு ஆபீசோட நடைமுறை விதிமுறை என்னனு தெரியலே .. உங்களுக்கு ஏதாவது தெரியுமா? "ன்னு கேட்டார்.
"உங்கள் கதைதான் என் கதையும் . நானும் 2001ல் மொத்தப் பணத்தையும் கட்டிவிட்டு  sale deed க்கு அலைந்து பார்த்துட்டு, இனிமேலும் அலைய முடியாதுன்னு நொந்து போய் உட்கார்ந்திருக்கிறேன். ஒண்ணு, வீட்டுக் கான பத்திரத்தைக் கொடு. இல்லாட்டா இந்த காரணத்துக்காக இதை நிறுத்தி வச்சிருக்கிறோம்னு அந்த காரணத்தை யாவது சொல்லு என்றும்  கேட்டுப் பார்த்து விட்டேன். உங்கள் பைலை பார்த்துட்டு சொல்றோம்னு சொன்னாங்க. இன்னும் பதில் வரவில்லை. நான் ஆஸ்த்மா பேஷன்ட்.  இதற்காக அலைந்து இருக்கிற ஹெல்த்தை ஸ்பாயில் பண்ணிக்க வேண்டாம்னு நினைச்சு, வீட்டுப் பத்திரம்  வரும்போது வரட்டும்னு விட்டுட்டேன். கோயம்புத்தூர்க்காரங்க செஞ்ச மாதிரி சென்னையில்  பாதிக்கப்பட்டவங்க யாராவது இருந்து அவங்க சாலை மறியல் பண்ணினா அவங்களோடு சேர்ந்து நானும் தெருவில் உட்கார லாம்னு நினைச்சுகிட்டு இருக்கிறேன்" என்றேன். இதைக் கேட்டு நண்பர் பதிலேதும் சொல்லாமல் சிரித்தார்.  
நியாயமான கோரிக்கைகள் நிராகரிக்கப்படும்போது தானே மக்கள் சட்டம் ஒழுங்கை மீற நினைக்கிறார்கள்.அப்படியொரு கட்டாய சூழ்நிலை யில் மக்களை தள்ளி விட்டு விட்டு, அமைதியை நிலைநாட்ட அடிதடி நடத்துவதால்  வன்முறை மேலும் மேலும் வளருமே தவிர பிரச்சினை முடிவடையாதே .
கனவு காணுங்கள் என்று திரு . அப்துல் கலாம்  சொல்லியிருக்கிறார். வீடு வாங்க கனவு கண்டால், அதற்க்கான முயற்சி இருந்தால் அது பலிக்கும் .  sale deed வாங்குவது கூட  கனவாகவே முடிந்து விடுமோ என்ற பயம் இருக்கிறது . என் கனவு பலிக்குமா ? விடை தெரிந்தவர்கள் சொல்லுங்களேன் !   

No comments:

Post a Comment