என்ன பேர் வைக்கலாம் ! எப்படி அழைக்கலாம் ?
"என்னங்க இது, தெருவாசலில் நின்னுகிட்டு தனியா சிரிச்சுகிட்டு இருக்கீங்க. யாராவது பார்த்தால் என்ன நினைப்பாங்க ?" என்று உரிமை யோடு கடிந்து கொண்டாள் தேவகி.

"என்ன நினைப்பாங்க ? பைத்தியக்கார மனுஷன்னு நினைப்பாங்க ! உண்மை அதுதானே ?" என்று கேஷுவலான பதில் வந்தது கணேசனிடம் இருந்து .
"போதும் .. உள்ளே வாங்க "
பதிலேதும் சொல்லாமல் உள்ளே வந்து சோபாவில் சாய்ந்தார் கணேசன்.
"என்னங்க ஆச்சு ..?"
"எங்கப்பா அடிக்கடி என்னைப் பார்த்து சொல்வார்... எந்த விவரமுமே தெரியாமே வளர்ந்துட்டேடா நீன்னு. அது நிஜந்தானோனு நினைக்கத் தோணுது "
"ஒரு ஆபீசில் வேலை பார்த்தாச்சு . கல்யாணம் பண்ணி பிள்ளைக் குட்டி பெத்தெடுத்து இப்போ பேரப் பிள்ளையையும் கண்ணாலே பார்த்தாச்சு. இதுக்கு மேலே என்ன வேணும் ?"
"நீ எந்த விஷயத்துக்கும் சடனா முடிவெடுத்துடறே , என்னாலே அப்படி எதுவும் செய்ய முடியலே. என் விஷயத்தில் எல்லாமே தலை கீழா இருக்கே. வழக்கமா பிள்ளை வீட்டுக்காரங்கதான் பொண்ணு வீட்டுக் காரங்க கிட்டே ட்டுயூனை மாத்தி மாத்தி போட்டு ஸ்டெப் போட வைப்பாங்க. நாம அந்த மாதிரி இருக்கக் கூடாது. மத்தவங்களுக்கு ஒரு ரோல் மாடலா இருக்கணும்னு நினைச்சு வீட்டுக்கு வந்த மருமகளை மகள் மாதிரி தாங்கிப் பிடிச்சோம். இன்னும் அப்படித்தான் நடத்தறோம். நம்ம ப்ரின்சிப்லை ஏமாளிதனம்னு நினைச்சுட்டு சம்பந்தி அவருக்குப் பிடிச்ச ட்டுயூனை போட்டு நம்மளை ஸ்டெப் போட வைக்கிறார். ஏதோ அந்த மனுஷனுக்குப் புத்தி அவ்வளவுதான்னு நினைச்சு பெருந்தன்மையா நடக்க நான் முயற்சி பண்ணினாலும் அடிப்படையில் நானும் ஒரு சாதாரண மனுஷந்தானே. எனக்கும் வயதாகுது. பொறுமை போயிடுச்சு . எல்லாத்தையும் மனசில் போட்டு புழுங்க முடியலே . என்னோட கோப தாபங்களுக்கும் ஒரு வடிகால் வேணும் "
"கோவிலுக்குப் போயிருக்கிற சம்பந்தி வந்துடப் போறார் .. உங்க பேத்தல் அவர் காதிலே விழுந்திடப் போகுது. அவரை ஏன் ஒரு விஷயமா நினைக்கிறீங்க ?"
"முன்னெல்லாம் ஏதாவது நாள் கிழமைன்னா நம்ம வீட்டுக்கு வந்து நாட்டாமை பண்ணிட்டுப் போவார். அதுவே நம்மளை அடுத்த நாள் கிழமை வரை பாடாய்ப் படுத்தும். இப்போ மகளைக் கல்யாணம் பண்ணிக் குடுத்து மூணு வருஷம் கழிச்சு பேரப்பிள்ளை வந்திருக்கிறான். அவனைக் கொஞ்சணும்னு நம்ம வீட்டுக்குப் பக்கத்திலேயே வீடு பார்த்துக் குடிவரப் போறதா சொல்லிட்டு இருக்கிறார். அதை நினைச்சா பயமா இருக்கு".
"போதும் உங்க பினாத்தல். அடுத்த வாரம் பேரக் குழந்தைக்கு புண்ணியா ஸ்நானம். என்ன பேர் வைக்கணும்னு யோசனை பண்ணினீங்களா ?"
"அட ... நாம வைக்கிற பேரா முக்கியம் .. வளர்ந்து ஆளாகி அததுங்க எடுக்கிற பேர்தானே நிலைச்சு நிற்கப் போகுது. அதுவுமில்லாமே நம்ம பிள்ளையும் மருமகளும் குழந்தைக்கு என்ன பேர் வைக்கலாம்னுதானே கடந்த ஒன்பது மாசமா டிஸ்கஸ் பண்ணிட்டு இருக்கிறாங்க. நாம வேறே உள்ளே புகுந்து குட்டையை குழப்பணுமா?"
"அவங்க என்ன பேர் சொல்லி வேணும்னாலும் அவங்க குழந்தையைக் கூப்பிடட்டும். ஸ்கூலில் சேர்க்கட்டும். யாரும் வேண்டாம்னு சொல்லப் போறதில்லே. புண்ணியாஸ்நானம் பண்றப்போ வீட்டிலுள்ள பெரியவங்க யாரோட பேரையாவது குழந்தைக்கு வைக்கிற வழக்கம் இருக்கு . உங்க பேரனுக்கு உங்க பேரையே வச்சிடலாமா ? இல்லே மாமா பேரை வைக்க லாமா?" என்று தேவகி கேட்க, " பார்த்தியா .. இப்போ கூட நீ சட்னு ஒரு டெசிசன் எடுக்கிறே .. என்னாலே முடியலே .. நான் யோசிக்கணும் .. இப்போ வாக்கிங் போயிட்டு வர்றேன். வந்ததும் நாம பேசி முடிவு பண்ணு வோம் " என்று சொல்லிவிட்டு அங்கிருந்து நகர்ந்தார் கணேசன்.
வாக்கிங் சென்றவர் கண்களில் கார்ப்போரேஷன் பார்க் பெஞ்சில் உட்கார்ந்திருந்த சுரேஷ் தென் பட்டான்.
"என்னப்பா சுரேஷ் .. இந்நேரத்தில் இங்கே உட்கார்ந்திருக்கே. கையில் சாப்பாட்டுப் பாத்திரம் எல்லாம் இருக்கு. ஆபீஸ் முடிஞ்சு நேரா இங்கே வந்துட்டியா ? அப்பா எப்படி இருக்கிறார். உள்ளூரில் இருக்கிறோம்னு பேர். ஒருத்தரை ஒருத்தர் பார்க்கிறதே பெரிய விஷயமா இருக்கு " என்று தோழமையுடன் கேட்டார் .
"அப்பா நல்லா இருக்கிறார். தங்கச்சி வீட்டில் இப்போ இருக்கிறார். அங்கே போய் இருபது நாளுக்கு மேல் ஆகிறது " என்றான் சுரேஷ்
"நீ ரொம்ப டல்லா தெரியறே ... உடம்புக்கு ஏதாவதா ? இல்லே வேறே ஏதாவது பிரச்சினையா ?" என்று உண்மையான கரிசனத்துடன் கேட்டார்.
"உடம்புக்கு எதுவும் இல்லே .. என் பையனை நினைச்சா தான் ரொம்ப கவலையா இருக்கு "
"என்னப்பா அவனுக்கு ?"
"ஒழுங்கா படிக்க சாப்பிட மாட்டேங்கிறான்.. சொன்ன பேச்சு கேட்கிறதே கிடையாது. ஏழு வயசிலேயே இப்படி இருக்கிறானே. போகப் போக என்ன ஆகும்னு நினைச்சாலே பயமா இருக்கு அங்கிள் "
"அட .. இதெல்லாம் ஒரு விஷயமா ? குழந்தைங்க அப்படி இப்படித்தான் இருப்பாங்க .. நல்ல விதமா எடுத்து சொன்னா கேட்டுக்குவாங்க "
"எதையும் காதிலேயே வாங்க மாட்டேங்கிறான் .. திட்டினாலோ அடிக்கக் கையை ஓங்கினாலோ "எனக்கு உங்க அப்பா பேரை வச்சிருக்கீங்க . என்னை அடிச்சா திட்டினா, அது உங்க அப்பாவையே நீங்க திட்டற மாதிரி . அடிக்கிற மாதிரின்னு சொல்லி என்னை எதுவும் செய்ய விடாமே பண்றான். ஆனா ஒரு வகையில் அவன் சொல்றது நியாயந்தான் . அப்பாவோட நினைவாக அவர் மேலே உள்ள மரியாதையில் அந்தப் பேர் வச்சேன். அதை சொல்லியே என்னை மடக்கிறான். என்னை வேணும்னே வெறுப்பேத்த, "அப்பா ... என்னை ' ஏண்டா ராகவா ... தறுதலை"ன்னு நீங்க கூப்பிடுங்க பார்க்கலாம்னு சொல்றான். அந்த சமயம் அப்பாவும் வீட்டில் இருக்கிறார். அவன் சொன்ன மாதிரி நான் சொன்னால், அப்பாகிட்டே போய் " தாத்தா, எங்க அப்பா "ராகவா, தறுதலை"ன்னு சொல்றார்னு சொல்றான். என்னை டென்ஷன் பண்ணிட்டு அவன் ஹாயா இருக்கிறான் அதனாலே வீட்டுக்குப் போகவே பிடிக்கலே" என்றான் சுரேஷ் பரிதாப மாக.
"எல்லாம் போக போக சரியாயிடும் .. நீ வருத்தப் படாதே .. அப்பாவை நான் விசாரிச்சேன்னு சொல்லு .. நான் கிளம்பறேன் " என்று சொல்லி விட்டு வாக்கிங்கை தொடர்ந்தார்
மனதில் பலவகைப் பட்ட சிந்தனைகள் .. வீட்டை நோக்கி நடந்தார். நடையில் ஒரு உற்சாகம். அவரைக் கண்டதும் "அதுக்குள்ளே வாக்கிங் போய்வந்தாச்சா ?" என்று கேட்டாள் தேவகி
"ஒரு முடிவோடு வந்திருக்கிறேன் ... குழந்தைக்கு நம்ம சம்பந்தி பேரைத் தான் வைக்கப் போறேன்" என்றார்
"உங்களுக்கு திருப்தின்னா, நான் மட்டும் என்ன சொல்லப் போகிறேன் ?" என்று சொல்லிவிட்டு டீவீ முன் உட்கார்ந்தாள் தேவகி
சம்பந்தி எதிரில், பேரக் குழந்தையை எப்படி எப்படி திட்டலாம் கண்டிக்க லாம் என்று கற்பனை செய்து பார்த்தார். ரொம்ப சந்தோசமாக இருந்தது.
"டேய் .. கணேசா ... நீயா இப்படி ? என்ன ஒரு மெச்சூர் மைண்ட் உனக்கு . உன் நினைப்பு உனக்கே அருவெறுப்பா கேவலமா தெரியலையா ?" என்று மன சாட்சி கேள்வி கேட்டது .
"நீ கேள்வியெல்லாம் நல்லாத்தான் கேட்பே .. ஆனா அடிப்படையில் நானும் ஒரு சாதாரண மனுஷன்தான் . என்னோட கோபதாபங்களுக்கு ம் ஒரு வடிகால் தேவைங்கிறதை நீ அடிக்கடி மறந்துடறே. தொந்தரவு பண்ணாமே உள்ளேயே முடங்கிக்கிட. இல்லாட்டி கழுத்தை நெரிச்சு கொன்னுடுவேன் உன்னை !" என்று தனக்குள் சொல்லிக் கொண்டார் கணேசன்.

No comments:
Post a Comment