கலாட்டா பயணம் !
நான் எழுதிய இந்த படக் கதை 16.09.2000 ல் தினமணி - சிறுவர் மணியில் வெளியாகி இருந்தது. எழுதும்போதே நான் மிகவும் ரசித்து எழுதிய இச் சிறுகதை சிறுவர் மணியில் வெளியானபோது எனது பெயரைக் குறிப்பிட மறந்து விட்டார்கள். எங்கள் ப்ளாக்கில் உள்ள குழந்தைகள் இந்தப் படக் கதையைக் காட்டி " ஆன்ட்டி, இந்த கதை நல்லா இருக்குது, படிச்சீங்களா " என்று கேட்டார்கள். "இதை எழுதியது நான்தான் " என்று சொல்லிவிட்டு. பெயர் விடுபட்டுப் போன வருத்தத்தை தினமணியுடன் பகிர்ந்து கொண்டேன். அது வெளியான அடுத்த வார இதழில் , "கலாட்டா பயணம் " என்ற சிறுகதையை எழுதியது அருணா S சண்முகம் என்று குறிப்பிட் டிருந்தார்கள். ஆனால் அது எனக்கு முழு திருப்தியைத் தரவில்லை.

/scan.jpg)
/scan.jpg)
page 2
page 3
page 4
மிருகங்களை படத்தில் பார்க்கும்போது நன்றாகத்தான் இருக்கிறது. ஆனால் நேருக்கு நேர் பார்க்கும்போது ..?. மாணவனை புலி தாக்கிய டில்லி சம்பவத்தைப் பார்த்த பிறகு, zoo என்ற வார்த்தையைக் கேட்டாலே நடுக்கம் வருகிறது.
புலியை மிக அருகில் உங்களில் யாராவது பார்த்திருக்கிறீர்களா ? நான் பார்த்திருக்கிறேன். எங்களுக்கும் புலிக்கும் நடுவில் ஒரு சிறு இரும்பு வலைதான் இடைவெளி என்ற நிலையில் பார்த்திருக்கிறேன். பக்கத்தில் பார்த்தபோது பயத்தில் உறைந்து போய் உட்கார்ந்திருந்தேன் . ஆனால் இன்று வரைகூட "அடடா .. அதோட விரல் நம்ம பக்கத்திலேயே இருந்தது.என்னவொரு கூர்மையான நகம். அதைத் தொட்டுப் பார்க்காமல் விட்டு விட்டோமே என்று ஏங்கிக் கொண்டு இருக்கிறேன்.
டில்லி மிருகக் காட்சி சம்பவத்தைப் பத்தி பேசுகிறவங்க, "அந்தப் புலிக்கு நேராக ஒரு மாமிசத் துண்டைத் தூக்கி வீசியிருந்தால் அதை கவ்விக் கொண்டு புலி ஓடி இருக்குமே", "துப்பாக்கியில் மயக்க ஊசி வைத்து அதை சூட் பண்ணியிருக்கலாமே " என்று அவரவர்களுக்குத் தெரிந்த வழியை சொல்கிறார்கள். ஆனால் கைவசம் ரெடியாக துப்பாக்கியும் மாமிசமும் எப்போதும் இருக்குமென்று சொல்வதற்கு வழியில்லை . என்னுடைய மனதில் ஓடுகிற எண்ணம் : அந்த இடத்தில் நின்றிருந்த பார்வையாளர்களில் பெண்களும் இருந்திருப்பார்கள். யாராவது நாலைந்து பெண்கள் அவங்களோட புடவையை கயிறு மாதிரி திரித்து ஒன்றோடு ஒன்றாக இணைத்துக் கட்டி அந்தப் பையன் அருகில் வீசியிருக்கலாம். அதைப் பிடித்துக் கொண்டு அவன் மேலே வர உதவி இருக்கலாமே என்பதுதான். பொது இடத்தில் பெண்களில் யாராவது புடவையை கழற்றித் தருவார்களா மானம் போய்விடாதா என்று கேட்கும் பழைய பெருச்சாளியா நீங்கள் ? அய்யா, ஒருத்தன் , உயிருக்காக மரண பயத்தில் போராடும்போது , நமக்கு மானமாவது மண்ணாங் கட்டியாவது ?! புடவையை அவிழ்த்துக் கொடுக்கும் பெண்களுக்கு ஆண்கள் தங்களது மேல் ஷர்ட்டை அவிழ்த்துக் கொடுத்திருக்கலாம் / கொடுக்கலாம் . அதில் எந்தத் தப்பும் இல்லையே. ஒருவேளை அது டில்லி என்பதால் அந்த இடத்தில் புடவை கட்டியவர்கள் இல்லாமல் போய் விட்டார்களா ?
கிட்டத்தட்ட் 18 வருடங்களுக்கு முன்பு நடந்த ஒரு விஷயத்தை உங்களுடன் பகிர்ந்து கொள்கிறேன். வண்டலூர் மிருகக்காட்சி சாலைக்கு தங்கையின் பையனை அழைத்துக் கொண்டு தங்கையுடன் சென்றிருந்தேன். tiger safaari என்று கேட்டு சிலர் டிக்கெட் வாங்கிக் கொண்டிருந்தார்கள். அது என்ன என்பதெல்லாம் எங்களுக்குத் தெரியாது . ஆனால் நாங்களும் டிக்கெட் வாங்கிக் கொண்டு வேனில் ஏறி உட்கார்ந்து விட்டோம். பிறகுதான் தெரிந்தது அந்த வேன் புலிகள் இருக்கும் இடத்துக்கே போகிற விஷயம். கொஞ்ச தூரம் ட்ராவல் பண்ணின பிறகு வேன் ஒரு இடத்தில் நின்றது. ஒரு பெரிய தட்டிலிருந்த இறைச்சியை ஒருவர் கையில் எடுத்து வேனிலிருந்த ஒரு துவாரம் வழியாக வீசி விட்டு "இதை எடுக்க அதுங்க வரும் " என்றார். நான் வேனின் முன்பக்கம் தேடிக் கொண்டிருக்கிறேன், புலி எங்கிருக்கிறதென்று. அப்போது எனது தங்கையின் பையன் என் மீது சாய்கிறான். என்னவென்று என்னோட லெப்ட் சைடில் திரும்பிப் பார்க்கிறேன் . ஒரு புலி, இரண்டு கால்களைத் தரையில் ஊன்றிக் கொண்டு , மற்ற இரண்டு கால்களால் வேனின் இரும்பு வலையைப் பிடித்துக் கொண்டு வேனுக்குள் எட்டிப் பார்க்கிறது. எனக்கு பயத்தில் பேச்சே வரவில்லை. எல்லோருடைய பார்வையும் வேனின் முன்பக்கமே இருந்ததால், பக்கவாட்டில் யாருமே திரும்பிப் பார்த்திருக்கவில்லை. பக்கத்திலிருந்த தங்கையின் கைகளைத் தட்டி நான் சைகை காட்டினேன். பூனைக்கே பயப்படும் ரகம் அவள் . புலியைப் பார்த்தால் சும்மா இருப்பாளா? மிரண்டு விட்டாள். எட்டிப் பார்த்து விட்டு அந்தப் புலி போய்விட்டது. அதனோட பார்வையும் அந்த கூரிய நகமும் இன்றும் கூட என் கண்ணெதிரில் தெரிகிறது.அந்தப் பார்வையை நான் நேருக்கு நேர் சந்தித்தேன்.
வீட்டுக்கு வந்ததும் நாங்கள் ரொம்ப பெருமையாக விஷயத்தை சொல்ல ரெண்டு பேருக்கும் செம டோஸ். " மண்டையில் மூளைன்னு ஒண்ணு இருந்திருந்தால் அந்த இடத்துக்கு பச்சப் பிள்ளையைக் கூட்டிட்டு ரெண்டு பேரும் போயிருப்பீங்களா ? திடீர்னு வேன் ரிபைர் ஆகி வழியில் நின்று விட்டால் என்ன ஆகும்னு யோசிக்க மாட்டீங்களா ? எருமைக் கடா வயசு ஆகுது. கொஞ்சமாவது யோசிக்கிற புத்தி வேண்டாமா ? உங்களை சொல்லிக் குத்தமில்லே. புத்தின்னு ஒன்னு இருந்தால்தானே யோசனை பண்ணி இருப்பீங்க ".. அதுஇதுன்னு ஒரே வசைப் பாட்டுதான். தங்கை அதைப் பற்றிக் கவலைப் படாமல் , " ஏய் , நாம பார்த்தது சிங்கமா புலியா ?" என்று கேட்டதிலிருந்தே அவள் இன்னும் பயத்தை விட்டு வெளியில் வரவில்லை என்பது புரிந்தது. இது என்னுடைய வாழ்நாளில் மறக்கவே முடியாத அனுபவம் .
ஸ்கூலில் படிக்கிற காலத்தில் எங்களை அழைத்துக் கொண்டு குற்றாலம் போனார்கள்.ஒரு மலைமீது ஏற ஆசைப்பட்டோம். டீச்சர் ஒத்துக் கொள்ள வில்லை. இருந்தாலும் ஒரு பத்து பேர் பிடிவாதம் பிடித்து பெர்மிஷன் வாங்கி மலைமீது ஏறினோம். வழியில் ஒரு பள்ளத்தில் எங்களோடு வந்த பெண் ஒருத்தி விழுந்து விட்டாள். உதவிக்கு யாரையும் கூப்பிட முடியாத நிலை. அங்கு எங்களைத் தவிர வேறு ஆட்களே இல்லை. எங்களுக்கு ஒரு யோசனை தோன்றியது. எல்லோருடைய தாவணியையும் அவிழ்த்து முடிபோட்டு ஒரு பெண் அதை பள்ளத்துக்குள் வீச, மற்றவர்கள் ஒருவர் பின்னால் ஒருவராக நின்று கொண்டோம். வரிசையின் கடைசியில் நின்ற பெண் அவளுக்கு முன்னால் நின்றிருந்த பெண்ணின் இடுப்பை இறுக்கமாக பிடித்துக்கொள்ள, அதே மாதிரி ஒருவரை ஒருவர் பிடித்துக் கொண்டு முதலில் நிற்கும் பெண் பள்ளத்துக்குள் விழுந்து விடாதபடி பார்த்துக் கொண்டு, விழுந்த அந்தப் பெண்ணை வெளியில் கொண்டு வந்து விட்டோம். அப்புறம் மேற்கொண்டு ஏறவில்லை. கீழே இறங்கி விட்டோம். எங்களைப் பார்த்ததுமே " உங்க முழியே சரியில்லை. அங்கே போய் என்ன திருட்டுத் தனம் பண்ணிட்டு வந்தீங்க ?" என்று டீச்சர் கேட்க நாங்கள் நடந்ததை சொல்ல அன்று "சகஸ்ரநாம அர்ச்சனைதான் ".
"நீங்க சுத்திப் பார்த்தது போதும். எல்லாரும் கிளம்புங்க . போய் பஸ்ஸில் ஏறுங்க " என்று டீச்சர் சொல்ல , " நாம இன்னும் குரங்குக் கூட்டத்தைப் பார்க்கலையே " என்று நாங்கள் கேட்க "உங்களைப் பார்த்து பயந்து அதுக எல்லாம் தலை மறைவா எங்கேயோ போயிட்டுது. ஸ்கூலுக்குப் போய் சேருகிற வரை யாராவது வாயைத் திறந்தால் கொன்னே போடுவேன் " என்று டீச்சர் சொல்ல, நாங்கள் ரகசியமாக நமட்டு சிரிப்பு சிரித்தோம் . மறக்க முடியாத அனுபவம்
ஒரு யோசனை : வெளியூர் அல்லது டூர் போறப்போ ஒரு கயிறு வடத்தைக் கையோடு கொண்டு போனால் ஆபத்துக்கு உதவும் . எத்தனையோ குப்பையை அள்ளிட்டுப் போறோம் ; இதையும் ஒரு ஓரமாப் போட்டு வைக்கலாமே . அதற்காக யாரும் extra ticket கேட்கப் போறதில்லே. வடமும் நம்ம கிட்டே சாப்பாடு தண்ணீர் கேட்கப் போறதில்லே. அதனால் கையோடு கொண்டு போக ட்ரை பண்ணலாமே . பைத்தியக்கார யோசனையாகத் தோன்றினாலும் , சமயத்தில் கை கொடுக்கும். அதை மறந்துடாதீங்க.

/scan0001.jpg)
/scan0001.jpg)

No comments:
Post a Comment