உலகம் ஆயிரம் சொல்லட்டுமே. உனக்கு நீதான் நீதிபதி !
"வாயைத் திறந்து ஏதாவது சொன்னாளா ? " என்று ஆர்வமுடன் கேட்டார் பழனி சாமி

"இல்லை" என்ற வெறும் தலையசைப்பு மட்டுமே பதிலாக வந்தது சரசு விடமிருந்து.
" ஏண்டி, ஒரு அப்பன்காரன் ஒரு பொம்பளைப் பிள்ளையிடம் எது எது பேச முடியுமோ அதைத்தான் பேசமுடியும்.பெத்தவ நீதானே பொம்பளைப் பிள்ளைங்க மனசு என்னென்னு பேசித் தெரிஞ்சுக்கணும் " என்று எரிந்து விழுந்தார் பழனிசாமி
" அவ மனசிலே பட்ட காயம் அப்படிங்க. அது லேசிலே ஆறக்கூடிய ரணம் இல்லே. அது புண்ணாகிப் புரையோடிப் போய்க்கிடக்கு. வெளியிலே தெரியுத புண்ணுக்கு மருந்திருக்கு. ஆனா உள்ளே சீழ்ப்பட்டு கிடக்கிற இந்த புண்ணுக்கு மருந்தை இன்னும் யாரும் கண்டு பிடிக்கலையே. காலம் ஒன்றுதான் அவ மனசை மாத்த முடியும்னு நினைச்சு நாமளும் பொறுமை காத்தோம். அது வீண் போகலே. அந்தப் பொறுமைக்குப் பலனாத்தான், பத்து வருசத்துக்கு முன்னாலே ஓடிப் போனவன் இப்போ திரும்பி வர்றேன்னு தெரிஞ்சவன் மூலமா தூது அனுப்பி இருக்கிறான். இத்தனை நாள் வரைக்கும் கூட நாமளும் கையாலாகாதவங்களாதானே இருந்திருக்கிறோம். தாலி கட்டின கையோடு ஓடிப் போனவன் திரும்பி வருவான்னு நினைச்சு, டைவேர்ஸ் அது இதுன்னு எதுக்குமே நாம போகலே. பொண்டாட்டியைப் பார்க்க வர்றேன்னு சொல்றவனைப் பார்க்க வரக்கூடாதுன்னு சொல்ற உரிமை நமக்குக் கிடையாதேங்க " என்று பொறுமையுடன் பேசினாள் சரசு.
"ஏண்டீ, ஒரு விஷயம் கவனிச்சியா ?அவன் வரப்போற விஷயத்தை அவன் சிநேகிதன் என்றைக்கு நம்ம கிட்டே சொல்லிட்டுப் போனானோ அன்னியிலேயிருந்து இவ வீட்டைப் பார்த்துப் பார்த்து சுத்தம் பண்ணுறா. நாம சொல்றப்பல்லாம் சோபா மேஜை இதெல்லாம் இடத்தை அடைக்கும். வேண்டாம்னு சொல்லிட்டு இருந்தவ சோபா அதுஇதுன்னு வாங்கி வீட்டை நிரப்புறா. பேங்க் லாக்கரிலிருந்து நகையை எடுத்துட்டு வந்திருக்கிறான்னு நீதான் என்கிட்டே சொன்னே. இதெல்லாம் வரப் போற புருஷன் மேலே உள்ள ஆசையிலே செய்றதுதானே ? "
" எனக்கு அப்படித் தோணலே "
"எதனாலே அப்படிச் சொல்றே ? "
" முகத்திலே சந்தோசம் இல்லே. ஒரு வெறித்தனம்தான் இருக்குது "
"சரசு, நான் ஒண்ணு சொல்றேன், நல்லா நினைவில் வச்சுக்கோ. நாளைக்கு அவ எடுக்கப் போற முடிவு எதுவாக இருந்தாலும் சரி. நானோ நீயோ தலையிட வேண்டாம். படிச்சிட்டு இருந்த பொண்ணுக்கு, நல்ல இடத்துச் சம்பந்தம்னு இந்த நாறப் பயலைக் கொண்டு வந்து சேர்த்தோம். இவ வாழ்க்கையை அவன் நாறடிச்சிட்டுப் போயிட்டான். இன்னிக்கு வரை ' அப்பா, என் வாழ்க்கை இப்படியாகிப் போச்சே'ன்னு நம்மளை ஒரே ஒரு வார்த்தைகூடக் கேட்டதில்லே. எதுவுமே நடக்காத மாதிரி படிப்பை முடிச்சா.ஊர்க்காரங்க கிண்டலையும் கேலியையும் பொறுத்துகிட்டு. இப்போ இதே ஊரிலே டீச்சரா வேலை பார்க்கிறா. அந்த வேலை மேலே உள்ள மரியாதையாலே இவளைக் கிண்டல் பண்றதை இவங்க நிறுத்திக் கிட்டாங்க. மனசளவிலே யாரும் மாறலே. எதுவும் மாறலே. அதனாலே பார்த்துப் பக்குவமா நடந்துக்கோ " என்றார்.
" நான் நடந்துக்கிறேன். நீங்க டென்சன் ஆகி டான்ஸ் ஆடாமல் இருந்தால் சரிதான் " என்றாள் சரசு
மறுநாள் காலை ... வாசலில் மிகப் பெரிதாக கலர்க் கோலம் போட்டாள் மீரா. இதுநாள் வரை இல்லாத ஒரு சந்தோசக் களை அவள் முகத்தில் தாண்டவமாடியது. அதைப் பார்த்து பழனிசாமியும் சரசுவும் பூரித்து போனார்கள். சரியாகப் 10.30க்கு, நிறைந்ததொரு ராகுகால நேரத்தில் தனது நண்பனுடன் டூ வீலரில் வந்து இறங்கினான் ரமணன். நேரம் காலம் பார்த்து வரவேண்டாமா என்று இருவரையும் மனதுக்குள் கடிந்து கொண்டாலும் ' வாங்க , வாங்க ' என்று வரவேற்றார் பழனிசாமி
புதுப் புடவையில், உடம்பு நிறைய நகைகளுடன் அங்கு வந்தாள் மீரா.
"என்னை மன்னித்து ஏற்றுக் கொள்வீங்கனு கொஞ்சமும் எதிர்பார்க்கலே இந்த நிமிஷம் வரை நான் பயந்து கொண்டேதான் நடையேறினேன் " என்றான் ரமணன் வெகுளித்தனமாக.
"ஹலோ, உங்களுக்கு கற்பனா சக்தி ரொம்ப ரொம்ப அதிகம்னு நான் நினைக்கிறேன் . உங்களை மன்னிசிட்டோம். ஏத்துக்கிட்டோம்னு உங்க கிட்டே சொன்ன அந்த புண்ணியவாளன் யாருங்க ? " என்று இரைந்தாள் மீரா
" மீரா, மெல்லப் பேசுடி.அக்கம் பக்கம் கேட்கப் போகுது " என்று பதறினாள் சரசு
" அவங்க கேட்கணும். அதுதான் என் ஆசை "
" ஏங்க, உங்க மனசிலே இப்படியொரு கோபம் இருக்கும்னா. நான் வந்து கேட்கும்போது வரவேண்டாம்னு சொல்லியிருக்கலாமே?நீங்க இப்படிக் கூச்சல் போட்டுப் பேசுவது எங்களுக்கு அவமானமா இருக்குது " என்று கோபமாக சொன்னான் ரமணனின் நண்பன் ராஜவேல்.
"இதையே அவமானம்னு நீங்க நினைச்சா, இவன் பண்ணின காரியத்துக்கு என்ன பேர் சொல்றது? தாய் தகப்பன், குடும்ப நடைமுறை தெரிஞ்சு அந்த வீட்டுக் குழந்தைங்க பொறுப்பா ஒழுங்கா நடந்துக்கணும்.இல்லாட்டா பிள்ளையைப் பெத்தவங்களாவது பிள்ளைங்க மனசு தெரிஞ்சு விட்டுக் கொடுத்துப் போகத் தெரிஞ்சுக்கணும் ணும். தாய் தகப்பன் பேச்சை மீற முடியாமே, அவங்களைப் பழி வாங்கிறதா நினைச்சிகிட்டு, என் கழுத்தில் தாலி கட்டிய மறுநிமிஷமே, " நீங்க சொல்ற பொண்ணு கழுத்தில்தான் தாலி கட்டணும், இல்லாட்டா குடும்பத்தோட தற்கொலை பண்ணிக் குவோம்ன்னு சொல்லி என்னை மிரட்டிக் கல்யாணம் பண்ணி வச்சீங்க. உங்க விருப்பப்படி இப்போ நான் தாலியைக் கட்டிட்டேன். நீங்களாச்சு. இனிமே அவளாச்சு. எனக்கு இனிமே இங்கே வேலை இல்லைன்னு சொல்லிட்டு உங்க நண்பர் ஓடிப் போனதை எல்லாரும் வேடிக்கைதான் பார்த்தாங்க. யாரும் வந்து தடுக்கலே. ஒரு குடும்பத்தில் பையனுக்கும் பெத்தவங்களுக்கும் நடந்த போட்டாபோட்டியில் பலியானது என்னோட வாழ்க்கை . அந்த நேரத்தில் எங்க குடும்பமும் நானும் எந்த அளவுக்கு அவமானப்பட்டு நின்றிருப்போம்னு இவரோ, இல்லாட்டா இவருக்கு ஓடிப் போக உதவி பண்ணின நண்பர்களோ என்றைக்காவது நினைச்சுப் பார்த்ததுண்டா ? எங்க குடும்பம் நினைச்சிருந்தா எண்ணி இருபத்து நாலு மணி நேரத்தில் இவரைக் கல்யாண வீட்டில் கொண்டு வந்து சேர்த்திருப்பாங்க.முதுகெலும்பு இல்லாத, ஓடிப் போன ஒருவன் எனக்கு வேண்டவே வேண்டாம்னு சொல்லி எங்க வீட்டு மனிதர்களை நிறுத்தி வச்சதே நான்தான். இவர் லவ் பண்ணின பெண் மேலுள்ள மயக்கத்தில் இவர் ஊரை விட்டு ஓடினார். வேலைன்னு ஒன்னு இருப்பதையும், அதுக்கு தான் போயாகனும் என்கிறதையும் இவர் மறந்துட்டார். வேலை போச்சு. கையிலிருந்த காசும் தீர்ந்துச்சு. காதலிச்ச பாவத்துக்காக இவரை உட்கார வச்சு சோறு போட்டா அந்த மகராசி. போன வருஷம் அவ கேன்சர் நோயில் போராடி செத்துப் போயிட்டா. சட்டப்படி ரெண்டுபேரும் கல்யாணம் பண்ணிக்காததாலே அவள் மூலமா வரவேண்டிய பணம் எதுவும் இவருக்கு கிடைக்கலே. இவருக்கு கௌரவமான வேலை குடுக்கிறவங்க யாரும் இல்லே. மூட்டைத் தூக்கி பிழைக்க உடம்பிலே வலு இல்லே. உடம்பு நோகாமே உட்கார்ந்து சாப்பிட ஒரு இடம் ஒரு சத்திரம் இவருக்குத் தேவை . அதுக்காகத் தானே இவர் இங்கே திரும்பி வந்திருக்கிறார். ... என்ன ... இந்தக் கதை எல்லாம் எனக்கு எப்படித் தெரியும்னு நினைக்கிறீங்களா? உங்க நண்பர் இங்கே வரப் போறார்னு நீங்க மொட்டையா சொல்லிட்டுப் போனதுமே ஏன் எதுக்குனு நாங்க ரொம்ப யோசிச்சோம். அப்பத்தான் இவரோட அம்மா இங்கே வந்தாங்க, 'ஓடிப் போன என் பிள்ளை திரும்பி வர்றதா சொல்லியனுப்பி இருக்கிறான். நாங்க அவனை சேர்த்துக்கிறதா இல்லே . எங்களைப் பொறுத்தவரை அவன் செத்துப் போயிட்டான். அவனை நீங்க ஏத்துக்கிறதும் விரட்டியடிக்கிறதும் உங்க விருப்பம்னு சொல்லிட்டு இந்த விவரங்களையும் சொல்லிட்டுப் போனாங்க. நண்பர் மூலமா வர்றேன்னு சொல்லியனுப்பின உங்களை நான் மறுத்தா , நீங்க சட்டத்தின் உதவியை நாடிப் போவீங்க . அப்படியொரு நினைப்பு இருந்தா அதை இந்த நிமிஷமே நீங்க மறந்துடணும்னு முகத்துக்கு நேரே எச்சரிக்கை பண்ணத்தான் உங்களை வீட்டுக்குள் அனுமதித்தேன். அதையும் மீறி இந்த வீட்டுக்குள் வர முயற்சி பண்ணினா, சாப்பாட்டில் விஷம் வச்சுக் கொன்னுடுவேன் இல்லாட்டா அசந்து தூங்கறப்ப கழுத்தை நெரிச்சுக் கொன்னே போடுவேன். இப்போ சொல்றேன். ஒழுங்கு மரியாதையா இந்த இடத்தை விட்டு ஓடிப் போயிடு " என்றாள் மீரா கண்களில் அனல் பறக்க .
"ச்சே .. நீயெல்லாம் ஒரு பொண்ணாடி ? " என்றபடி வெளியேறினான் ரமணன் தன் நண்பனுடன்
" அந்த வார்த்தையை ஓடிப் போன ஆம்பிளை நீ சொல்லக்கூடாது " என்று கத்தினாள் மீரா அனைவரும் கேட்கும்படி
அந்த இடத்தில் கொஞ்சநேரம் மயான அமைதி நிலவியது. தைரியத்தை தனக்குள் வரவழைத்துக் கொண்ட சரசு. "புதுப் புடவை ,நகை, வீட்டு அலங்காரம் எல்லாத்தையும் நீ பார்த்துப் பார்த்து செய்றதைப் பார்த்துட்டு அவனை நீ மன்னிச்சு ஏத்துக்குவே "ன்னு நினைச்சோம் " என்றாள்
"இவ்வளவு அலங்காரமும் என் மனசில் உள்ள சந்தோசத்துக்குனு நீங்க தப்பா நினைச்சிட்டீங்க. ' நாம விட்டுட்டு ஓடி வந்துட்டதாலே பொண்ணு வீட்டிலே எல்லாரும் ரொம்ப நொறுக்கிப் போயிருப்பாங்க. நம்மளை வெத்திலை பாக்கு வச்சு அழைப்பாங்க'னு அந்த ராஸ்கல் தப்புக் கணக்குப் போட்டிருப்பான். அப்படியெல்லாம் எதுவும் இல்லே. இங்கே நாங்க நல்லா சந்தோசமாத்தான் இருக்கோம்னு காட்டத்தான் இது "
"என்னடி இது ? தெருவே கூடி நின்னு வேடிக்கை பார்க்கிற மாதிரி இந்தக் கத்து கத்தியிருக்கிறே ? இதைப் பார்க்கிற உலகம் உன்னைத் தப்பா பேசுமே ? " என்றாள் சரசு
"அது கிடக்குதுப்பா உருண்டை. அது இதுநாள் வரை என்னைப் பத்தி என்னிக்கு சரியாப் பேசியிருக்கு. சுத்திகிட்டு வர்றதோட அது சும்மா இருந்தால் பரவாயில்லை. எல்லாரையும் புரட்டிப் போட்டுட்டுப் போகுதே. அப்பா ... நீங்களாவது சொல்லுங்க, என்னோட கல்யாண விசயத்தில் நீங்க சொன்ன வரனுக்கு நான் கழுத்தை நீட்டினேன். அதைத் தவிர நான் எந்தத் தப்பும் செய்யலே. ஒரு பொண்ணுக்கு தாலி கட்டிட்டு கல்யாணத்தன்னிக்கே ஓடிப் போனவன் சந்தோசமா இருக்கிறான். அவனை மிரட்டித் தாலி கட்ட வச்சவங்க சந்தோசமா இருக்கிறாங்க. உன் தலைஎழுத்து இப்படியாகிப் போச்சுன்னு புலம்பறதோடே உங்க கடமை முடிஞ்சுது. எந்தவொரு தப்பும் செய்யாத நான் ஒருத்தி மட்டும்தானே தண்டனையை அனுபவிச்சுக்கிட்டு இருக்கிறேன். தாலி கட்டின புருஷன் இவளை விட்டுட்டு ஓடிட்டான்னு கைதட்டி மனசுக்குள் ஒரு வக்கிர சிரிப்பு சிரிக்குது இந்த உலகம் . பத்து வருசமா என்னைப் பார்த்து நக்கலடிக்கிற இந்த உருண்டை, இனிமேல், ஒண்ணு, என்னைப் பார்த்து " பொண்ணுன்னா இதுதான் பொண்ணு. எது எதுக்குதான் மன்னிப்புங்கிற வரைமுறை இருக்கு. செய்யக் கூடாத தப்பை செஞ்சுட்டு, மன்னிப்புங்கிற ஒரே ஒரு வார்த்தையில் குளிர் காய நினைக்கிறவங்களுக்கு இவ குடுத்த டோஸ் சரிதான்"னு சொல்லணும். இல்லாட்டா " அம்மாடி பொம்பளையா இவ ? தொட்டுத் தாலிகட்டின புருஷனை, வீடு தேடி வந்தவனை விரட்டி விட்டுட்டாளே. பயங்கரமான ஆளா இருப்பா போலிருக்கு" ன்னு சொல்லி என்னை விட்டு ஒதுங்கிப் போகணும். இந்த ரெண்டில் எந்த ஒன்றைப் பற்றி அந்த உருண்டை காலம் பூரா பேசினாலும் அது எனக்கு சந்தோசந்தான். இன்னிக்கு வெள்ளிக் கிழமை. பூஜை இருக்குன்னு சொல்லி ஸ்கூல்க்கு லேட்டா வர பெர்மிசன் தான் கேட்டிருந்தேன். மணி இப்போ பதினொண்ணு தான் ஆகுது. நான் கிளம்பிப் போறேன்ப்பா " என்று சொல்லிவிட்டு வீட்டை விட்டு வெளியில் வந்தாள் மீரா. தெருவில் அவள் நடந்து செல்வதை அந்தத் தெருவில் இருந்தவர்கள் பார்த்துவிட்டு தங்களுக்குள் ஏதேதோ "கிசுகிசு"த்தார்கள். அதைப் பார்த்தபோது மீராவின் மனம் நிறைந்து போயிருந்தது.

No comments:
Post a Comment