சஞ்சலம்
என் வீடு, என்னோட புக்ஸ் , என்னோட ஸ்டூடண்ட்ஸ், என்னோட நட்பு வட்டங்கள், நான் உண்டு என் வேலை உண்டு என்றிருந்த நான் எப்படி இப்படி ஒரு சபலத்திற்கு ஆளானேன் என்று தன்னைத் தானே கேட்டுக் கொண்டார் மீனாட்ஷி நாதன். இனி இப்படியொரு தப்பை வாழ்நாளில் செய்யவே கூடாது என்றும் மானசீகமாக சபதம் எடுத்துக் கொண்டார் . தனக்குப் பரிச்சயமான, தன்னைப் பற்றி நன்கு தெரிந்து வைத்திருக்கும் அத்தனை முகங்களும் தன்னை சுட்டிக் காட்டியே கிண்டலடிப்பது போன்ற பிரமை மீனாட்சி நாதனுக்கு. தனது கவலையை மனைவியிடம் பகிர்ந்து கொள்ளலாமா என்ற நினைவு வந்ததுமே, " அக்கம் பக்கத்தில், ஊர் உலகத்தில் உள்ளவங்களுக்கு வேறே பிரச்சினையே இல்லை. நீங்க செஞ்சதைப் பத்தி கவலைப்பட்டு ராத்தூக்கம் இல்லாமே உங்களைக் கேள்வி கேட்கப் போறாங்களாக்கும். நீங்களும் உங்க கற்பனையும். உங்களுக்குத் தூக்கம் வராட்டா எதைப் பத்தியாவது கவலைப் பட்டுட்டே இருங்க. பாதித் தூக்கத்தில் என்னை எழுப்பி ஏன் தொந்தரவு பண்றீங்க. காலேஜில் ஐம்பது அறுபது பேரை ஒரே நேரத்தில் தூங்க வைப்பீங்க. வீட்டில் நான் ஒருத்தி தூங்கினா அது உங்களுக்குப் பொறுக்காதே " என்று எரிந்து விழுவாள் என்பதும் மீனாட்சி நாதனுக்கு நன்கு தெரியும். அதனால் தன்னுடைய முடிவை மாற்றிக் கொண்டார்.

எப்போதும் சினிமாப் பாட்டாலேயே மற்றவர்களைக் கலாய்க்கும் ராகுல் தன்னைக் காணும்போதெல்லாம் " என்ன சார் மீனாக்ஷி, நீங்க சொன்னது என்னாச்சு? நேத்தோடு நீங்க சொன்ன வார்த்தை காற்றோடு போயாச்சா " என்று பாடுவார்.
"வெறும் பேச்சு வெள்ளை வேஷ்டிங்கிறது சரியாத்தான் இருக்கு" என்று தத்துவம் பேசுவார் நாகராஜன்
" என்ன ஸார் .. என்ன ஆச்சு உங்களுக்கு ? நீங்களா இப்படி ? நம்பவே முடியலே ! எப்படி ஸார் இப்படி ஒரே நாளில் ஒரேயடியா மாறிப் போனீங்க ? " என்று கண்களை அகல விரித்துக் கேட்பார் வைஸ் சேர்மன் பத்மினி தேவி
"நான் கூட நீங்க இப்படிப் பண்ணுவீங்கன்னு எதிர் பார்க்கலே ? நாங்க வாய் தவறுதலா இளைய சமுதாயத்தைப் பத்தி தப்பா ஒரு வார்த்தை சொன்னாக் கூட அவங்களுக்காக வரிந்து கட்டிக் கொண்டு சண்டைக்கு வர்ற நீங்களா இப்படி மாறிப் போனீங்க ? ஏன் ஸார், அன்னிக்குக் கூட சொன்னீங்களே, " பூமி "ன்னு ஒரு அமைப்பு, " நக்க்ஷத்ரா "ங்கிற பேரில். அதில் நம்ம இளைய சமுதாயம் என்னென்ன வொண்டர்ஸ் பண்றாங்க தெரியுமா ? வேலை பார்க்கிற, படித்துக் கொண்டிருக்கிற யங்க்ஸ்டர்ஸ், பாய்ஸ் அண்ட் கேர்ல்ஸ் ஒண்ணா சேர்ந்து வாலண்டீர் சர்விஸ் பண்றாங்க,ஹோமில் தங்கிப் படிக்கும் ஏழை மாணவர்களுக்கு படிப்பு, கம்ப்யூட்டர், விளையாட்டு சொல்லித் தரதிலிருந்து, அவங்களுக்குத் தேவையான கைடன்ஸில் கோவாப்பரேட் பண்றாங்க, வருடத்தில் ஒரு நாள் ஹோமில் உள்ள ஸ்டூடண்ட்ஸ் எல்லாரையும் ஒண்ணு கூட்டி, போட்டி பந்தயமெல்லாம் நடத்தி பரிசு கொடுத்து வயிறார சாப்பாடு போட்டு அனுப்புறாங்கன்னு அவ்வளவு பெருமையா பேசுனீங்க. அதை மறந்துட்டு உங்களாலே எப்படி சார் இப்படியெல்லாம் பேச முடிஞ்சுது ? " என்று ஆச்சரியப் பட்டுப் போவார் சேர்மன் ரங்கநாதன்.
இவர்களுக்கெல்லாம் நான் என்ன பதில் சொல்ல முடியும் என்ற கவலை மீனாட்சி நாதனை வாட்டியது
"எல்லாத்தையும் விட்டுத் தள்ளு. உன்னோட ஸ்டூடண்ட்ஸ் முகத்தை நேருக்கு நேர் பார்க்கிற தைரியம் உனக்கு இருக்கா ? " என்று மனதின் உள் மூலையிலிருந்து ஒரு குரல் அவ்வப்போது கேட்டுக் கொண்டே இருந்தது "அடே மண்டு, உனக்குப் பேரே " யூத் மீனாக்ஷி " தானே. உன் பேருக்கு முன்னால் உள்ள யூத் எப்படி உன்னிடம் வந்து ஒட்டிக் கொண்டதுங்கிறது கூட உனக்கு மறந்து போச்சா ? " என்று தன்னைத் தானே கேட்டுக் கொண்டார்.
எனக்கு ஏன் இப்படி ஒரு ஆசை வந்தது ? கல்யாண வீடுகளில் போட்டோ வீடியோக்கு நிற்கச் சொன்னால் கூட மற்றவங்க பின்னால் ஒளிந்து கொண்டு போஸ் குடுக்கிறவன்தானே நான். பிறகு எனக்கு ஏன் இப்படி ஒரு சலனம் வந்தது ? அதுவும் வரக்கூடாத வயதில் !
பனி முகட்டிலும் , எரிமலை உச்சியிலும் கூட வேலை செய்ய தயாராக இருக்கிறது இளைஞர் கூட்டம். உழைக்க அஞ்சியதில்லை நமது இளைஞர் கூட்டம். உழைப்புக்கான வாய்ப்புதான் நிறைய பேருக்கு சரிவர கிடைக்கவில்லை. இயற்கை இடர்பாடுகள் எத்தனை வந்தாலும் அந்த சோகத்தை அதோடு மறந்துவிட்டு பாதிக்கப் பட்டவர்களுக்கு கைகொடுக்கும் விஷயத்தில் மனித இனம், குறிப்பாக இளைஞர் கூட்டம் ஒருநாளும் பின் வாங்கியதில்லை, தயங்கியதில்லையே.இதெல்லாம் தெரிந்த நான், இதைப் பற்றியே நட்பு வட்டங்களிடமும் சொந்த பந்தங்களிடமும் அடிக்கடி விவாதிக்கும் நான், என்னை நானே எப்படி மறந்தேன்? எப்படி எப்படி எப்படி என்ற கேள்வியே மீனாட்சி நாதனை தூங்க விடாமல் செய்து கொண்டிருந்தது. ஆனால் உலகம் விழித்துக் கொண்ட நேரத்தில் மீனாட்ஷி நாதன் ஆழ்ந்த தூக்கத்தில் இருந்தார்
" என்னங்க, எழுந்திருங்க. மணி 9. ப்ரோக்ராம் ஆரம்பிக்கப் போகிறது " என்று அவரைத் தட்டி எழுப்பிய மனைவியை எரித்து விடுவது போலப் பார்த்தார்
"நான் என்ன சொல்லிட்டேன்னு இப்படி இல்லாத நெத்திக் கண்ணாலே என்னை சுட்டுப் பொசுக்குறீங்க ? " என்று படபடத்தாள் நீலாவதி.
"இதோ பாரு, மொபைல், லாண்ட் லைன் போன் எல்லாத்தையும் சுவிட்ச் ஆப் பண்ணி வை. யாராவது என்னைத் தேடி இங்கு வந்தால் நான் வீட்டில் இல்லைன்னு சொல்லு . போன் அவுட் ஆப் ஆர்டர்னு சொல்லி வை. நான் சொல்றபடி செய். வேறு எதையும் உளறி வைக்காதே" என்று அவள் மீது எரிந்து விழுந்தார்.
" போச்சுடா சாமி. இன்னிக்கு லீவு நாள் இப்படியா கழியணும் ? " என்று சொல்லி தலையிலடித்துக் கொண்டே அங்கிருந்து நகர்ந்தாள் நீலாவதி.
மறுநாள் ... திங்கள் கிழமை ... தன்னைத் தாக்க வரும் கேள்விக் கணை களை சமாளிக்க தன்னைத் தானே தயார் செய்து கொண்டு கல்லூரிக்குக் கிளம்ப ஆயத்தமானார்
" இதோ பாருங்க, யாரும் செய்யாத தப்பை நீங்க செஞ்சிடலே. எதுக்குப் போட்டு இப்படிக் குழம்பி கிடக்கறீங்க ? அவனவன் கொலை பண்ணிட்டு , கோடி கோடியாய் கொள்ளையடிச்சிட்டு பிடிபட்ட பிறகும் எந்தவொரு சொரணையும் இல்லாமே, என்னவொரு தெனாவெட்டா போட்டோ வீடியோக்கு போஸ் குடுக்கிறான். நீங்க என்னடான்னா ஒண்ணுமே இல்லாத விஷயத்துக்கு குழம்பித் தவிச்சு கிட்டு இருக்கீங்க. போருக்கா போறீங்க ? முப்பது வருஷமா போயிட்டு வர்ற காலேஜுக்குத் தானே போறீங்க ? " என்றாள் நீலாவதி.
மனைவியைப் பெருமையுடன் பார்த்தார். இதுதான் மனைவியின் குணம் என்கிறது. என்னதான் சண்டை போட்டாலும்,சமயம் கிடைக்கும் போது எல்லாம் மட்டம் தட்டியே பேசினாலும், தடுமாறி நிற்கும்போது தைரியம் சொல்ல மனைவி ஒருத்தியால் மட்டும்தான் முடியும் என்று நினைத்துக் கொண்டார்
கல்லூரிக்குள் காலடி எடுத்து வைத்ததுமே மாணவர் கூட்டம் அவரை சூழ்ந்து கொண்டது. அவர்கள் வாய் திறக்கும் முன்பாகவே " எல்லாரும் கொஞ்சம் பொறுங்க. பிரின்ஸ்பால் ரூமுக்குப் போய் அவரைப் பார்த்து பேசிட்டு வந்திடறேன் " என்றபடி அங்கிருந்து நகர்ந்தார்
பிரின்ஸ்பால் அறைக்குள் பேச்சு சத்தம் கேட்டது. உள்ளே போகலாமா வேண்டாமா என்று தயங்கி வெளியில் நின்று கொண்டிருந்தபோது, அறையிலிருந்து வெளியில் வந்த பியூன் " ஸார், மீனாட்ஷி ஸார் வந்துட்டார் " என்று உள்பக்கம் திரும்பி குரல் கொடுத்தான்
தயக்கத்துடன் அறைக்குள் நுழைந்தார் மீனாட்ஷி நாதன்
" வாங்க ஸார். நேற்று டீவியிலே பார்த்தோம். புகுந்து விளையாட்டீங்க " என்று சொல்லியபடி எழும்பி நின்று கை குலுக்கினார் பிரின்சிபால்
" ஸார், நேற்று நீங்க டீவீயிலே பேசினதா, இங்கே வந்த பிறகு தான் நான் தெரிஞ்சுகிட்டேன் . முன்னாடியே எல்லாருக்கும் சொல்லி யிருக்கலாமே " என்று உரிமையுடன் கடிந்து கொண்டார் வத்சலா மேம்
"நானே எதிர்பார்க்கலே. வழக்கமா பேச வரும் ஒருத்தர் அன்னிக்கு வர முடியாத சூழ்நிலை. இன்னும் பத்து நிமிஷத்தில் பேச்சாளார் ஒருவர் வந்தே ஆகணும்கிற நிலைமை.அதைப் பத்தி அவங்க டிஸ்கஸ் பண்ணினது தெரிஞ்ச என்னோட நண்பர் என்னைப் பத்தி சொல்லி யிருக்கிறார். அவர்தான் நிகழ்ச்சி நடந்த மண்டப உரிமையாளர். எங்க வீடு மண்டபத்துக்குப் பக்கத்திலேயே இருக்கிறதும், நான் காலேஜில் தமிழ் லெக்சரர் என்பதும் தெரிந்ததும் வீடு தேடி வந்து பேசக் கூப்பிட்டாங்க. அதான் போனிலேயே பிரின்சிபால் ஸார் கிட்டே பெர்மிசன் வாங்கிகிட்டு, நான் கலந்துகிட்டேன். வெள்ளி சனி நமக்கு லீவாப் போச்சு. அந்த ப்ரோக்ராம் ஞாயிறு, ஒளிபரப்பாகிற விசயத்தை எனக்கு சனிக்கிழமை மாலையில்தான் சொன்னாங்க. அதான் யாருக்கும் சொல்ல முடியாமே போச்சு " என்றார் வருத்தத்துடன்
" ஆனா, டாப்பிக் தான் உங்களோட நேட்சருக்கு கொஞ்சமும் சம்பந்தம் இல்லாத ஒன்று " என்று சொல்லிச் சிரித்த பிரின்ஸ்பால், " போங்க, உங்க வரவை எதிர்பார்த்து நம்ம ஸ்டூடண்ட்ஸ் காலையிலிருந்தே காத்துக் கிடக்கிறாங்க " என்றார்
" அப்பாடா " என்று நிம்மதிப் பெருமூச்சுடன் வெளியில் வந்தவர் அடுத்து மாணவர்களை சந்திக்க ஆயத்தமானார்
"ஸார், புகுந்து விளையாட்டிட்டீங்க. இந்த காலேஜில் எங்களை, பொதுவா இளைஞர் கூட்டத்தை ஆதரிக்கிற, என்கரேஜ் பண்ணுற ஒரே ஒரு ஆள் நீங்கதான் சார். ஆனா, நீங்க இருந்த அணியைப் பார்த்ததும் எங்களுக்கு பகீர்ன்னு ஆயிட்டுது. ஆனா நீங்க சொன்ன பாய்ன்ட்ஸ் நாங்க ஏத்துக்கிற மாதிரி இருந்தது. அதனாலே பட்டிமன்றத்தில் நீங்க சொன்ன குறைகள் எதுவும் எங்க லைப்பில் வராமே பார்த்துக்குவோம் . எங்களுக்குத் தெரிஞ்சு எங்காவது நடந்தாலும் தடுத்து நிறுத்துவோம் " என்று சொன்னது இளைய, இளைஞர் சமுதாயம்.
" கேட்க ரொம்ப சந்தோசமா இருக்கு. நான் பேசினதை நீங்க எப்படி எடுத்துக்குவீங்களோ தெரியலையேன்னு கவலைப் பட்டு கிட்டு ஒரு தடுமாற்றத்தில் இருந்தேன். நீங்க பேசினதைக் கேட்டதும் அந்த கவலை போயிட்டது. எதையும் ஸ்போர்டிவா எடுத்துக்க இளைய சமுதாயத்தால் முடியும்னு ப்ரூப் பண்ணிட்டீங்க " என்றார்
எல்லோரும் அங்கிருந்து நகர்ந்ததும் மொபைலில் எண்களை அழுத்தி, "ஹலோ ஸார், நான் மீனாட்ஷி நாதன் பேசறேன். அதான் ஸார், மூன்று நாளைக்கு முன்னாலே ரெகார்ட் பண்ணுனீங்களே ஒரு பட்டிமன்றம் -"தறிகெட்டுத் திரிகிறது இன்றைய இளைஞர் கூட்டம் / தலை நிமிர்ந்து நிற்கிறது இன்றைய இளைஞர் கூட்டம் " என்ற டாபிக்கில். அதில் "தறிகெட்டுத் திரிகிறது இன்றைய இளைஞர் கூட்டம் " என்ற டாப்பிக்கில் நான் பேசியிருந்தேனே. ஓ ... ஞாபகம் வந்துட்டுதா ? ... அவசியம் வரும்போது என்னையும் நீங்க பேசக் கூப்பிடணும். அதை சொல்லத்தான் போன். நீங்க ரொம்ப பிசியான ஆளு.இந்த நேரத்தில் நான் உங்களை தொந்தரவு பண்ணினதுக்கு ரொம்பவும் மன்னிக்கவும். போனை வச்சிடறேன் " என்று சொல்லி விட்டு, பாடம் நடத்த தயாரானார். இப்போது அவரிடம் எந்த சஞ்சலமும் இல்லை. கனத்த மழைக்குப் பிறகு வெளுத்துக் காணப் படும் வானம் போல, அவர் மனதிலுள்ள கருமை, குற்ற உணர்ச்சி மறைந்து அமைதி யடைந்திருந்தது

No comments:
Post a Comment