நினைச்சது ஒண்ணு ; நடந்தது ஒண்ணு !
ஸ்ரீதர் எதற்காகத் தன்னை வேண்டுமென்றே அவாய்ட் பண்ணுகிறான் என்பது குணசேகருக்கு புரியாத புதிராக இருந்தது. என்னதான் தலைபோகிற அவசர வேலையிருந்தாலும் வழக்கமாக ஆபீசுக்குள் நுழைந்ததும் தன்னைத் தேடி வந்து ஏதாவது கமாண்ட் அடித்துவிட்டுப் போகும் ஸ்ரீதர் கடந்த இரண்டு நாட்களாக தன்னைத் தேடி வரவில்லை என்பதே இன்றுதான் குணாவின் கவனத்திற்கு வந்தது . ச்சே ,, வேலை டென்சனில் இதைக் கூட கவனிக்காமல் இருந்திருக்கிறேனே என்று தன்னையே நொந்து கொண்டான். மனோ சொல்வதும் சரிதான்; பைலில் மூழ்கிவிட்டால் , பக்கத்தில் இடி விழுந்தால் கூட உங்களுக்குத் தெரியாதே என்று குத்திக் காட்டுவாள். அது சரியாகத் தானிருக்கிறது.
ஸ்ரீதர் எதற்காகத் தன்னை வேண்டுமென்றே அவாய்ட் பண்ணுகிறான் என்பது குணசேகருக்கு புரியாத புதிராக இருந்தது. என்னதான் தலைபோகிற அவசர வேலையிருந்தாலும் வழக்கமாக ஆபீசுக்குள் நுழைந்ததும் தன்னைத் தேடி வந்து ஏதாவது கமாண்ட் அடித்துவிட்டுப் போகும் ஸ்ரீதர் கடந்த இரண்டு நாட்களாக தன்னைத் தேடி வரவில்லை என்பதே இன்றுதான் குணாவின் கவனத்திற்கு வந்தது . ச்சே ,, வேலை டென்சனில் இதைக் கூட கவனிக்காமல் இருந்திருக்கிறேனே என்று தன்னையே நொந்து கொண்டான். மனோ சொல்வதும் சரிதான்; பைலில் மூழ்கிவிட்டால் , பக்கத்தில் இடி விழுந்தால் கூட உங்களுக்குத் தெரியாதே என்று குத்திக் காட்டுவாள். அது சரியாகத் தானிருக்கிறது.
பைலை மூடிவைத்து விட்டு ஸ்ரீதர் இருக்கும் இடம் தேடி வந்த குணாவைக் கண்டதுமே, தான் ஏதோ அவசர வேலையில் இருப்பதுபோல பரபரப்பாகக் காட்டிக் கொண்டான் ஸ்ரீதர்.
" என்ன ஸ்ரீ, என்ன பிரச்சினை ? உன்னைப் பார்த்தே ரெண்டு நாள் ஆகுதே.
ஆபீஸ் பிரச்சினையா , இல்லே வீட்டுப் பிரச்சினையா ? " என்று குணா கேட்க பதிலேதும் சொல்லாமல் அமைதியாக நின்று கொண்டிருந்தான் ஸ்ரீதர்.
" டேய், நான் உன்கிட்டே தான் பேசிட்டு இருக்கிறேன். நீ என்னவோ பைலில் மூழ்கி முத்தெடுத்துட்டு இருக்கிறே ? "
ஸ்ரீதரின் மௌனம் குணாவை எரிச்சல் படுத்தியது. ஸ்ரீதரின் கையிலிருந்த பைலைப் பறித்து மேஜை மீது எறிந்து விட்டு " வா, கீழே காண்டீன் போலாம் " என்று வலுக் கட்டாயமாக கீழ் ப்ளோருக்கு அழைத்து வந்தான்.
இரண்டு காபிக்கு ஆர்டர் கொடுத்துவிட்டு " எதுவானாலும் வாயைத் திறந்து சொல்லித் தொலை " என்றான்
" என் மனைவி உன் வீட்டுக்கு வர்றது உன்னோட வொய்ப்க்கு பிடிக்கலைன்னா அதை உன் மூலமா என்கிட்டே சொல்லி இருக்கலாம். அதை நான் பாலிஷா என் மனைவிக்கு சொல்லி உன் வீட்டுக்குப் போக வேண்டாம்னு சொல்லியிருப்பேன். அதை விட்டுட்டு சத்தியா குழந்தையை எடுத்துட்டு உன் வீட்டுக்கு வர்றப்ப எல்லாம், உன்னோட வொய்ப் கதவை அடைத்துவிட்டு திறக்காமலே இருக்கிறதும், சத்தியாவைக் கண்டதுமே உன் குழந்தைகளை பக்கத்து வீட்டில் விட்டுட்டு வர்றதும் இல்லாட்டா வலுக் கட்டாயமா ரூமுக்குள் அடைச்சு வைக்கிறதும் .. ச்சே .. இதை சொல்லி சத்தியா எவ்வளவு வருத்தப் பட்டான்னு தெரியுமா ? அவ என்ன தினமும் உங்க வீட்டு விருந்துக்கா வர்றா ? என் குழந்தை பிறவியிலேயே மூளைக் கோளாறு உள்ள குழந்தைன்னும், அதை சரிப் படுத்த நான் எவ்வளவு சிரமப் படறேன்னும் உனக்கு நல்லாவே தெரியும். நாலு குழந்தைகளைப் பார்த்தால் , அவங்களோடு சேர்ந்து விளையாடினா மாற்றம் ஏற்படலாம்னு டாக்டர்ஸ் சொன்னதை நம்பித்தான் தினமும் என் குழந்தையை அடையாரிலிருந்து தாம்பரத்திலிருக்கிற மாற்றுத் திறனாளிகளுக்கான ஸ்கூலுக்கு உன் வொய்ப் அழைச்சிட்டுப் போறதும் உனக்கு நல்லாவே தெரியும். இப்போ சம்மர் ஹாலிடேஸ். வீட்டுப் பக்கத்தில் விளையாட என் குழந்தை வயசிலிருக்கிற குழந்தைகள் யாருமில்லைன்னு நான் பீல் பண்ணி சொன்னப்ப, " தினமும் என் வீட்டுக்கு வர சொல்லு . என் வீட்டு ட்வின்ஸ் கூட சேர்ந்து உன் குழந்தையும் விளையாடட்டும்னு நீ சொன்னதால்தானே நான் சத்தியாவையும் குழந்தையையும் உன் வீட்டுக்கு அனுப்பினேன். உன் வீட்டுக்கு வந்துட்டுத் திரும்பிய ஒரு நாளிலேயே " நம்ம சுதிர் அந்த குழந்தைங்க கூட நல்லா ஒட்டிக் கிட்டான் என் பக்கம் திரும்பியே பார்க்கலே. நல்லா சாப்பிட்டான் . சாப்பிட்டதும் நல்லா தூங்கினான்னு எவ்வளவு சந்தோசமா சொன்னா தெரியுமா ? முதல் மூணு நாள் சகஜமா பேசிப் பழகின உன் வொய்ப், அதன் பிறகு சத்தியாவை ஒரு வேண்டாத விருந்தாளியா பார்த்ததும் இல்லாமே , உன்னோட ட்வின்ஸ் குழந்தைகளை ரூமுக்குள் போட்டுப் பூட்டியும் வைக்கிறாங்கன்னு சொல்லி சத்தியா அழுதப்போ எனக்கு என்ன சொல்லி அவளை தேத்தறதுன்னே தெரியலை. பிடிக்காட்டா உன் மூலமா சொல்லியிருக்கலாமே " என்று குரலில் வேதனை தொனிக்கக் கேட்டான் ஸ்ரீதர்
" சாரிடா இதெல்லாம் நீ சொல்ற வரை எனக்குத் தெரியாது. இன்னிக்குப் பாரு .. "
" வேண்டாம் குணா , எங்களாலே உங்களுக்குள் சண்டை வர வேண்டாம் .
உன்கிட்டே சொல்லவே கூடாதுன்னுதான் இருந்தேன் . நீ வற்புறுத்திக் கேட்டதாலே சொல்லும்படி ஆகிடுச்சு " என்றான் ஸ்ரீதர்.
வழக்கத்தை விட முன்னதாகவே வீடு திரும்பிய குணா. வீசியெறிந்த வேகத்தில் சாப்பாட்டுப் பாத்திரங்கள் மூலைக்கொன்றாக சிதறி ஓடியது.
அவன் கோபத்திலிருக்கிறான் என்பதைப் புரிந்து கொண்ட மனோ ஹால் பான் ஸ்விட்ச் ஆன் செய்து விட்டு , " காப்பி எடுத்துட்டு வர்றேன் " என்று சொல்லியபடி கிச்சனில் நுழையப் போனாள்
" நில்லுடி "
" ..........."
" சத்தியாவும் குழந்தையும் இங்கே வந்துட்டுப் போறதில் உனக்கென்ன கஷ்டம் ? மற்ற குழந்தைகளோடு சேர்ந்து விளையாடணும், பழகணும்னு தானே மெனக்கெட்டு இங்கே குழந்தையை தூக்கிட்டு வந்தாங்க . நான்தான் சொல்லியிருந்தேன், " என் குழந்தைங்க ரெண்டுக்கும் உன்னோட குழந்தை வயசுதான். ரெண்டும் ரொம்பவும் சூட்டிகை. சரியான வாலுங்க. அதுங்களோடு சேர்ந்து உன் குழந்தை விளையாடட்டும்"னு. என் பேச்சுக்கு மரியாதை குடுத்துத்தானே இங்கே வந்தாங்க . அவங்களை இன்சல்ட் பண்ண உனக்கென்ன ரைட்ஸ் இருக்கு ? " என்று இரைந்தான் குணா
"ரைட்ஸ் பத்தியெல்லாம் இங்கே யாரும் கொடி பிடிக்கலே . எனக்கு என் குழந்தைங்க மேலே அக்கறை இருக்கு. நம்ம குழந்தைங்க கூட அவங்க குழந்தை விளையாடறது அவங்களுக்கு சந்தோசமா இருக்கலாம் . ஆனா மனநிலைமை சரியில்லாத குழந்தை, சில சமயம் வித்தியாசமான சைகை செய்யுது, வித்தியாசமா சத்தம் கொடுக்குது . அதைப் பார்க்கிற நம்ம குழந்தைங்க ரெண்டும், சத்தியா இங்கிருந்து கிளம்பிப் போனதும் சுதிர் மாதிரியே சைகை பண்றதும் சத்தம் கொடுக்கிறதுமா இருக்கிறாங்க. நம்ம குழந்தைங்க கிட்டேயிருந்து அந்த குழந்தை ஏதோ கத்துக்குமோ மாட்டாதோ அது எனக்குத் தெரியாது . ஆனா நம்ம குழந்தைங்க எதையும் பார்த்ததுமே சட்டுன்னு பிடிச்சுக்கிற டைப். இன்னும் ரெண்டு நாள் நம்ம குழந்தை, சுதீரைப் பார்த்தால் போதும் .அவனைப் போலவே முழுசா மாறீடுவாங்க. இப்பவே நம்ம குழந்தைங்க செய்கிற சைகைகளைப் பார்க்கும்போது என் மனசு எவ்வளவு பதறிப் போகுதுன்னு தெரியுமா உங்களுக்கு ? ஒரு குழந்தை பிறவியிலேயே மனநிலைமை சரியில்லாமே இருந்தால் அது நாம வாங்கி வந்த வரம்னு நினைச்சு மனசைத் தேத்திக்கலாம். நல்ல மனநிலையில் ஆரோக்கியமா இருக்கிற குழந்தைங்க பைத்தியக்காரத் தனமான சைகைகளை செய்தா அதை பார்க்கிற, சகிச்சுக்கிற தைரியம் எந்த தாய்க்கும் இருக்காதுங்க " என்று சொல்லி மனோ அழ , திகைத்துப்போய் நின்றான் குணா.
No comments:
Post a Comment