நாளெல்லாம் பட்டினியைக் கிடந்திடுவாள்
ஒரு நாழிகை நம் பசி பொறுக்க மாட்டாள்
மேலெல்லாம் இளைத்திட பாடுபட்டே
மேன்மையாய் நாம் வாழ செய்திடுவாள்
( துன்பமும் தொல்லையும் ஏற்றுக் கொண்டே - நம்மை
சுகம் பெற வைத்திடும் கருணை வெள்ளம் )
மண்ணில் என்ன தோன்றக்கூடும் மழையில்லாத போது
மனிதனோ மிருகமோ தாயில்லாமல் ஏது ?
விலை மீது விலை வைத்துக் கேட்டாலும் கொடுத்தாலும்
கடைதன்னில் தாயன்பு கிடைக்காதம்மா
தாயின் மடியில் தலை வைத்திருந்தால் துயரம் தெரிவதில்லை
கண் இமை போல் தினமும் என்னைக் காத்த அன்னையே
உனதன்பு பார்த்தபின் வானம் பூமி யாவும் சிறிது
அன்னையிடம் நீ அன்பை வாங்கலாம்
தந்தையிடம் நீ அறிவை வாங்கலாம்
இரண்டும் இருந்தால் பேரை வாங்கலாம்
பேரை வாங்கினால் ஊரை வாங்கலாம்
இருக்கும் பிடி சோறும் தனக்கென்று எண்ணாமல்
கொடுக்கின்ற கோயிலது
தினம் துடிக்கும் உயிர் தந்து தோளில் இடம் தந்து
அணைக்கின்ற தெய்வமது
அன்பின் விளக்கம் பண்பின் முழக்கம்
அம்மா என்றொரு சொல்லில் உண்டு
அன்பிருக்கும் நெஞ்சினிலே ஆசை இருக்கும்
ஆசையுள்ள இடத்தினிலே பாசம் இருக்கும்
பாசம் உள்ள குடும்பத்திலே தெய்வம் இருக்கும்
ஒரு பகை வராமல் அனைவரையும் காத்து இருக்கும்
பாலூட்டும் அன்னை அவள் நடமாடும் தெய்வம்
அறிவூட்டும் தந்தை நல வழிகாட்டும் தலைவன்
துணையாகக் கொண்டு நீ நடைபோடு இன்று
உருவாகும் நல்ல எதிர்காலம் ஒன்று !

No comments:
Post a Comment