Labels

About myself Name : Kumari S. Arunachalam alias Aruna S. Shanmugam Occupation : Form

Friday, May 03, 2013

Scanning of inner-heart ( Scan Report No.68 )

                          ஜெயித்தது யாருங்க ?


"வழக்கமாஆத்துக்குவரச்சொல்வேள்இன்னிக்குஆபீசுக்குவரச்சொல்லிடேள்.ஏதாவதுமுக்கியவிஷயமா?விஷயம் இல்லாமல் வரச் சொல்ல மாட்டேள்.அதுவும்அடியேனுக்குத்தெரியும்" என்று நெளிந்து குழைந்து சொன்னார் நம்பியாண்டார், கல்யாணத்தரகர் 
" ஒரு வரன் பார்க்கணும் " என்று ஒற்றை வார்த்தையில் பதில் சொன்னார் தில்லை நாயகம்.
" நம்ம குமார் தம்பிக்குத் தானே ? பேஷா பார்த்துடலாம் . என்ன மாதிரி வரனை எதிர் பார்க்கிறேள்னு நீங்க கோடு காட்டிட்டா, அடியேன் ரோடு போட்டுடுவேன் "
" வரன் பார்க்கச்சொன்னது குமாருக்கு இல்லே, என்னோட முதல் பிள்ளை வரதனுக்கு "
" என்ன உங்களுக்கு இன்னொரு பிள்ளையாண்டான் இருக்கிறானா ? " என்று அதிர்ந்து போய்க் கேட்டார் தரகர் 
" நெஜமாலுமே  சொந்தப் பிள்ளையா ? "
" வாடகைக்கு பிள்ளை கிடைக்குமா என்ன ? "
" நம்பவே முடியலே. நாங்க எல்லாருமே மைசூர் தொழிலதிபர் திருவாளர் தில்லை நாயகம் அவர்களுக்கு  ஒரே ஒரு பிள்ளையாண்டன்தான்னு நெனைசுண்டு இருக்கிறோம் " என்று படபடத்தார் நம்பியாண்டார்
" சாந்தமா நான் சொல்றதைக் கேளும். எனக்கும் என்னோட மன பாரத்தைக் கொஞ்சமாவது யாரிடாமாவது பகிர்ந்துக்கணும் ... எனக்கு ஜோதிடத்தில் அசைக்க முடியாத நம்பிக்கை உண்டு. என்னைத் தெரிந்த எல்லாருக்குமே என்னோட இந்த நம்பிக்கையும் தெரியும். " இந்தக் காலத்திலும் இப்படியொரு மனுஷனா ? " என்று முகத்துக்கு நேரே கேட்டவங்களும் உண்டு. முதுக்குப் பின்னால் நின்று கைதட்டி சிரிச்ச்சவங்களும் உண்டு. அதைப் பற்றியெல்லாம் நான் கவலைப் பட்டதே இல்லை. எனக்கு கல்யாணமாகி ஏழு வருஷம் கழித்துதான் குழந்தைப் பாக்கியம் கிடைக்கும்னு ஜோசியர் சொன்னார். அது சரியாக இருந்தது. பிறந்த குழந்தை எங்களோடு இருந்தால் எங்க குடும்பம் பல மோசமான விளைவுகளை சந்திக்கும்னு அதே ஜோசியர் சொன்னார். அதனாலே குழந்தையை தனியிடத்தில் வளர்க்க ப்ளான் பண்ணினேன். இந்த யோசனைக்கு என் மனைவி சம்மதிக்க மாட்டாள்ன்னு  எனக்கு நல்லாவே தெரியும். அதனாலே குழந்தையை சென்னையிலிருக்கும் என்னோட நண்பனிடம் கொடுத்து வளர்க்க சொன்னேன் . குழந்தை இறந்தே பிறந்திட்டதா அவளை நம்ப வைத்தேன்."
" ஏதோ சினிமாக் கதை போல இருக்குண்ணா " என்றார் தரகர்
" ஆமாம் , நான் பார்த்த சினிமாக்கள் மூலமா கிடைச்சதுதான் இந்த ஐடியா அதுமட்டுமில்லே .. அந்த குழந்தைக்கு ஆகாயத்தில் கண்டம் இருக்கிறதா ஜோசியர் சொன்னார் . இருபத்தேழாவது வயதில் அந்த கண்டத்திலிருந்து தப்பியாச்சுன்னா அதன் பிறகு அவன் எங்களோடு சேர்ந்து இருப்பதில் எந்த பிரச்சினையும் வராதுன்னும் சொல்லி இருக்கிறார். அவன் படிச்சு முடிச்சு வெளிநாடு அங்கே இங்கேன்னு கிளம்பிடக் கூடாதேன்னு அவனை பள்ளிக் கூடத்துக்கு அனுப்பாமே சிறு வயசிலேயே அவனுக்கு விவசாயத்தில் ஆர்வம் வரும்படி பண்ணி, விவசாயத்தில் அவனைப் பெரிய ஆளாக்கிட்டேன்.
நான் தொழில் விஷயமா சென்னை போறது மாதிரி நண்பன் வீட்டுக்குப்போய் என்னோட குழந்தையை பார்த்துட்டு வருவேன்.  நாளைக்கு அவனுக்கு இருபத்தேழு வயசு முடிகிறது. ஜோசியர் சொன்னபடி அந்த  வயதைத் தாண்டிட்டா அதுக்குப் பிறகு எந்த பிரச்சனையும் இருக்காது . அதனாலே எங்க வீட்டு மனுஷங்களுக்கு விஷயத்தைப் புரிய வச்சிட்டு அந்த பையனையும் என்னோட வச்சுக்கிறதா முடிவு பண்ணிட்டேன். அவன் வந்து சேர்ந்ததும் அவனுக்கு கல்யாணம் பண்ணி வைக்கணும்  இப்பவே பார்க்க ஆரம்பிச்சாதான்  ஒரு வருஷத்துக்குளேயாவது முடியும் . சீர் செனத்தி எதுவும் வேண்டாம். நல்ல குடும்பத்துப் பொண்ணா  இருந்தா போதும் " என்று சொல்லி தரகரை அனுப்பி வைத்த தில்லை நாயகம். வீட்டுக்கு வந்தார் . பல வருடங்களுக்குப் பிறகு உணவின் சுவை அறிந்து ரசித்து சாப்பிட்டார். நிம்மதியாக படுக்கையில் சாய்ந்தார். படுத்ததுமே உறக்கம் அவரைப் பற்றிக் கொண்டது . மறுநாள் விடிந்து வெகுநேரமாகியும் படுக்கையை விட்டு எழ மனமில்லாமல் படுத்திருந்தார். மொபைல் அலறியதைக் கூட லட்சியம் பண்ணவில்லை.வேண்டா வெறுப்பாக படுக்கையைவிட்டு எழும்போது மணி பகல் 11.20 குளிக்கக் கூடப் போகாமல் டிவி  முன்னாள் உட்கார்ந்து சன் நியூஸ் ஸில் ஆழ்ந்தார்
" பயிற்ச்சி விமானம் ஒன்று நிலை தடுமாறி திருநீர்மலையை அடுத்த வயல் வெளியில் விழுந்தது . விமானத்தில் இருந்தவர்கள் லேசான காயத்துடன் தப்பினர். காலை நேரத்தில் வயல்வெளியை மேற்பார்வையிட வந்த வரதன் என்ற 27 வயது வாலிபர் விமானம் மோதியதில் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார் " என்ற ப்ளாஷ் நியூஸ்ஸுடன்  வரதனின் புகைப் படமும் சிரித்துக் கொண்டிருந்தது  தில்லைநாயகம் " ஓ " என்ற அலறலுடன் மூர்ச்சை யாகியிருந்தார் 

No comments:

Post a Comment