" என்றும் இருக்கும் தினம் ; எவருமே பார்க்காத தினம் ! " என்றொரு விடுகதை உண்டு . அதற்கு விடை என்னவென்று தெரியுமா ?
விடை : " நாளைய தினம் "
திரையிசைக் கவிஞர்கள் பார்வையில் " நாளைய தினம் " என்னவென்று பார்க்கலாமா ?
நாளை நாமொரு ராஜாங்கம் அமைப்போம் ;
வாழ்ந்து பாருங்கள் தோழர்களே !
நாளை நாளை என்றிருந்தேன் ; நல்ல நேரம் பார்த்து வந்தேன்
தத்தித் தத்தி ஓடி வந்து முத்து முத்துப் புன்னகையில் தேடினேன்
அதை இங்கே கண்டேன் !
நாளை நமதே ! இந்த நாளும் நமதே !!
நாளை இந்த வேளை பார்த்து ஓடி வா நிலா
இன்று எந்தன் தலைவன் இல்லை சென்று வா நிலா
நாளை உலகை ஆள வேண்டும் உழைக்கும் கரங்களே
இந்த நாடு முழுதும் மலர வேண்டும் புரட்சி மலர்களே !
நாளை என்ன நாளை ? இன்றுகூட நமதுதான் !
நெஞ்சிருக்கும் எங்களுக்கும் நாளை என்ற நாளிருக்கும்
வாழ்ந்தே தீருவோம்
மெல்ல வளர்ந்திடும் சின்னக் குழந்தைகள்
நாளை உலகத்தை ஆளும் தலைவர்கள் !
தமிழா தமிழா நாளை நம் நாளே !
தமிழா தமிழா நாடும் நம் நாடே !!
தம்பி - நான் படித்தேன் காஞ்சியிலே நேற்று ;
அதை நான் உனக்கு சொல்லட்டுமா இன்று ;
என்றும் நல்லவர்க்கு வாழ்வு வரும் நாளை ;
இது அறிஞர் அண்ணா எழுதி வைத்த ஓலை !
இனி வருவது எனது கற்பனையில் உருவான கவிதை :
நேற்றைய நெகிழ்வுகளில்
" இன்று " தொலைந்து போக
நாளையபொழுது எல்லாம் ,
தொலைந்த அந்த இன்றைத்
தேடி அலைபாயும் ;
தேடல் தேடல் தேடல்
தேடல் என்பது
தெய்வ சாபமல்ல ;
மனித சுபாவம் !!

No comments:
Post a Comment