அட எல்லாமே அசடு ( அசட்டு ) ஜோக்ஸ்தாங்க !
* நம்மாத்து அசடுக்கு ஆங்கிலம் கற்றுக் கொள்ளும் ஆசை வந்தது . அசடை சமர்த்தாக நினைத்த அப்பா அசடை பிரைவேட் டியூசன் சென்டரில் சேர்த்து விட்டார். இங்கிலீஷ் கிராமர் சொல்லிக் கொடுத்துக் கொண்டிருந்தார் டீச்சர். நண்பர் வீட்டுக்கு சென்ற ஒருவர் வாசலில் நின்று கொண்டு " MAY I COME IN ? " என்று கேட்டார் . இந்த வார்த்தையை PAST TENSE ல் , அதாவது இறந்த காலத்தில் சொல்லுவதானால் எப்படி சொல்லவேண்டும் என்று கேட்க,அசடு கொஞ்சமும்தயங்காமல் " APRIL I COME IN ? " என்று பதில் சொன்னது.
* நம்மாத்து அசடுக்கு ஆங்கிலம் கற்றுக் கொள்ளும் ஆசை வந்தது . அசடை சமர்த்தாக நினைத்த அப்பா அசடை பிரைவேட் டியூசன் சென்டரில் சேர்த்து விட்டார். இங்கிலீஷ் கிராமர் சொல்லிக் கொடுத்துக் கொண்டிருந்தார் டீச்சர். நண்பர் வீட்டுக்கு சென்ற ஒருவர் வாசலில் நின்று கொண்டு " MAY I COME IN ? " என்று கேட்டார் . இந்த வார்த்தையை PAST TENSE ல் , அதாவது இறந்த காலத்தில் சொல்லுவதானால் எப்படி சொல்லவேண்டும் என்று கேட்க,அசடு கொஞ்சமும்தயங்காமல் " APRIL I COME IN ? " என்று பதில் சொன்னது.
* வெகுநாட்களாக வேலை தேடி அலைந்து கொண்டிருந்த அசடு, ஒருநாள் வெகுசந்தோசமாக எல்லோரிடமும் தனக்கு வேலை கிடைத்து விட்டதாக சொன்னது.
" எங்கேப்பா வேலை ? "
" இங்கேதான் "
" பணி நிரந்தரம் உண்டா ? "
" அது நான் நடந்து கொள்ளும் விதத்தைப் பொறுத்து ! "
" பென்சன் மற்ற பெனிபிட்ஸ் உண்டா ? "
" உண்டு "
" என்ன வேலைன்னு சொல்லவே இல்லையேப்பா ? "
" ஒரு நடிகையின் கணவனாக இருப்பதுதான் எனக்கான வேலை "
" பென்சன் உண்டுன்னு சொன்னியே ? "
" ஆமாம். டிவர்ஸ் ஆனா ஜீவனாம்சம் தருவாளே " என்று கூலாக பதில்
சொன்னது அசடு. (இதுவா அசடு ? இது ரொம்ப ரொம்ப சமர்த்துன்னு சொல்றேளா ? )
* வீட்டுக்குள் ஒரு கருவண்டு சுற்றி சுற்றி வந்தது. உடனே எல்லா கதவு ஜன்னல்களையும் இழுத்து மூடியது அசடு. இதைக் கண்ட அம்மா " என்ன இது மடத்தனம் ? எல்லா கதவு ஜன்னலையும் இழுத்து மூடினா வீட்டுக்குள் வந்த வண்டு எப்படி வெளியில் போகும் ? எல்லாவற்றையும் திற " என்று இரைந்தாள்
" ரோட்டில் கருங்காலிகள் கூட்டம் அதிகமாயிட்டுது . எல்லாக் கதவையும் இழுத்து மூடிட்டு வீட்டில் இருன்னு சொல்றே . கருவண்டு வீட்டுக்குள் வந்தால் கதவை அடைக்காதேன்னு சொல்றே. உன் பேச்சு எப்பவும் முன்னுக்குப் பின்முரணாவே இருக்குது " என்று அலுத்துக் கொண்டது அசடு.
* இரவு நெடுநேரம் தூங்காமல் விழித்துக் கொண்டிருந்தது அசடு. " என்னடா கண்ணு தூக்கம் வரலியா ? " என்று கேட்டாள் அம்மா
"வருது.ஆனால் அமெரிக்காவைப் பார்க்கிறதுக்காக தூங்காமே உட்கார்ந்திருக்கிறேன் " என்றது அசடு
" எப்படிடா ? " என்று அம்மா வியக்க , " நமக்கெல்லாம் இரவாக இருக்கும்போது அமெரிக்காவிற்கு அது பகலாமே. உலகம் சுற்றி வருதுன்னு டீச்சர் சொன்னாங்க. இப்போ இங்கே ராத்திரியா இருக்குதே . உலகம் சுற்றும்போது நாம அமெரிக்கா போயிடுவோம்தானே. " என்று விளக்கம் சொன்னது அசடு. தன் தலையில் அடித்துக் கொண்டாள் அம்மா.
* வெளியில் போயிருந்த அம்மா வீட்டுக்குள் நுழைந்ததுமே " அம்மா, நீ
எங்கே போயிருந்தே ? " என்று கோபமாகக் கேட்டது அசடு
" சீட்டுப் பணம் குடுக்கப் போனேன். ஏன் ? என்ன விஷயம் ? " என்று கேட்டாள் அம்மா
" நான் இடுப்பில் துண்டைக் கட்டிக் கொண்டு சோப்பு தேய்ச்சு குளிச்சுகிட்டு இருக்கும்போது வாசலில் என்னோட friends கூப்பிடும் சத்தம் கேட்டது. வாசலுக்கு ஓடி வந்து பார்த்தேன். என்னைப் பார்த்ததுமே என்னோட friends " என்னடா இது கோலம் ? "ன்னு கேலி பண்ணினாங்க . எனக்கு ரொம்பவும் வெட்கமாப் போச்சு " என்று சொல்லி அசடு முகத்தை மூடிக் கொள்ள, " அடடா அப்புறம் என்ன ஆச்சு ? " என்று அம்மா கேட்க " என் இடுப்பில் கட்டியிருந்த துண்டை அவிழ்த்து முகத்தை மூடி கொண்டேன் " என்று சமர்த்தாகப் பதில் சொன்னது அசடு
No comments:
Post a Comment