படத்தில் உள்ளது போல ஒரு ஸ்டார்
வரைந்து கொள்ளவும். பெரியதோ, சிறியதோ , அது உங்கள் விருப்பம்.
தரையில் சாக்பீசால் வரைந்து கொள்ளலாம். அல்லது ஒரு வெள்ளை பேப்பரில் வரைந்து கொள்ளலாம். ஸ்டார் சிறியதாக வரைந்திருந்தால்
9 ஹூக் அல்லது ஷர்ட் பட்டன் அல்லது COINS கடலைப் பருப்போ அல்லது வேர்க் கடலையோ எடுத்துக் கொள்ளலாம். ஸ்டார் பெரியதாக இருந்தால் 9 கற்களை எடுத்துக் கொள்ளலாம்.
நீங்கள் செய்ய வேண்டியது என்னவென்றால், கையிலுள்ள 9 பட்டனை
ஸ்டாரிலுள்ள 9 வட்டத்துக்குள் வைக்கவேண்டும்.
உடனே, ப்பூ, இவ்வளவுதானா ? என்று வைக்க ஆரம்பித்து விடாதீர்கள்.
ஒரு சில விதிமுறைகள் இருக்கிறது. அதன்படி வைக்க வேண்டும்.
1 ஆட்டத்தை ஸ்டாரின் எந்த முனையில் இருந்து வேண்டுமானாலும்
தொடங்கலாம்.
2 ஒவ்வொரு முறை பட்டன் வைக்கும் போதும், தொடங்கும் இடத்தை
" ஒன்று " என்று கணக்கில் எடுத்துக் கொண்டு, அடுத்து இரண்டு, மூன்று
என்று எண்ணி மூன்றாவது வட்டத்தில் பட்டனை வைக்கவேண்டும்.
3. பட்டன், ஏற்கனவே பட்டன் இருக்கிற ஒரு வட்டத்தை மட்டுமே தாண்டலாம். இரண்டு வட்டங்களை தாண்ட முடியாது.
இப்படி 1, 2, 3 என்று எண்ணி 9 COINS ம் 9 வட்டத்துக்குள் வந்து விட வேண்டும். முதல் காயினை ஏதாவது ஒரு வட்டத்துக்குள் விதிமுறைப்படி வைத்துவிட்டு இரண்டாவதாக வைக்கும் காயினை நீங்கள் சரியான இடத்திலிருந்து தொடங்கினால் மட்டுமே அனைத்து காயினையும் வட்டத்துக்குள் கொண்டு வர முடியும். மற்றபடி நீங்க என்னதான் முயற்சி செய்தாலும், ஒன்பதையும் வட்டத்துக்குள் கொண்டு வர முடியாது
இப்போது ஆட்டத்தை தொடங்கலாம். ( காதைக் கிட்டே கொண்டு வாங்க. ஒரு ரகசியம் சொல்றேன். இந்த விளையாட்டில் ஒரு சூட்சுமம் இருக்கிறது. அதைக்
கண்டு பிடித்து ஆடினால், விதிமுறைப்படி ஆடினால், 9 பட்டனும்,
9 வட்டத்துக்குள் போய் ஜம்மென்று உட்கார்ந்து விடும். அது தெரியாமல்
விளையாட ஆரம்பித்தால், ஒன்பதையும் வட்டத்துக்குள் விதி முறைப்படி
கொண்டு போவது கஷ்டம்.)
விடை அடுத்த வாரமும் சொல்ல மாட்டேன். நீங்களே கண்டு பிடிங்க. யாராவது கேட்டால் மட்டும் மெயில் அனுப்புவேன்.ஏனென்றால் விடையை publish பண்ணி விட்டால் வருங்காலத்தில் எப்போதோ ஒரு நாள் பார்ப்பவர்களுக்கு அதிலுள்ள சுவாரஸ்யம் போய் விடும்.கண்டு பிடிக்க முடிஞ்சவங்க கண்டு பிடிங்க . முடியாதவங்க என்னை arunasshanmugam @gmail.com ல் contact பண்ணுங்க .
என்னடா இது ஒரு joint மட்டும் circle இல்லாமல் இருக்குதேன்னு குழம்ப வேண்டாம். விளையாட்டு விதிமுறைப் படி ஒன்பது காயின்ஸ்ம் மிக சரியாக ஒன்பது வட்டங்களில் வைத்தவர்கள் circle இல்லாத joint ல் நின்று ஒரு " O " போட்டுக் கொள்ளலாம்
No comments:
Post a Comment