Labels

About myself Name : Kumari S. Arunachalam alias Aruna S. Shanmugam Occupation : Form

Sunday, December 16, 2012

கலக்குவோமா கணக்கில் ! No.06



சென்ற வார புதிருக்கான விடை  :

பூந் தொட்டியில் இருந்த பூக்கள் மூன்று . பறந்து வந்த வண்டுகள் நான்கு .
                                                                            @@@@@@@@@

 இனி இந்த வாரப்  புதிர் என்னவென்று பார்க்கலாம் 

கடி ஜோக், கடிக் கவிதை என்றெல்லாம் கேள்விப் பட்டிருப்பீர்கள். அந்த வரிசையில் இது ஒரு கடிக் கணக்கு.

ஒரு கிளிக்கு மூன்று குஞ்சுகள். அன்றைக்கென்று மூன்றும் மிகவும் அடம் பிடித்தன. இரை தேடி தாய்க் கிளி வெளியே போக முடியாதபடி அதன் கால்களை கட்டிக்கொண்டு விட மறுத்தன. குஞ்சுகளின் மனப் போக்கை மாற்ற நினைத்த தாய்க் கிளி, குஞ்சுகளுக்கு விளையாட்டு காட்ட ஆரம்பித்தது.
" அடுத்து என்ன விளையாட்டு ? " என்று எதிர்பார்க்கும் அளவுக்கு குஞ்சுகள் விளையாட்டில் லயித்து விட்டன.

" இப்போ நாம ரயில் விளையாட்டு விளையாடலாம். வாங்க. நீங்க மூன்று பேரும் ஒருவர் பின்னாலே ஒருவரா என் வாலைப் பிடிச்சுக்கணும். நான்தான் ரயில் என்ஜின். நீங்க மூன்று பேரும் ரயில் பெட்டிகள் . ரயில் இந்த மரத்தைச் சுற்றி ஓடி வருமாம். என்ன நான் சொல்றது சரியா ? " என்று தாய்க்கிளி கேட்க குஞ்சுகள் ஆர்வமாக சிறகை அடித்துக் கொண்டன.

ரயில் விளையாட்டு ஆரம்பமானது.
 தாய்க் கிளி சொன்னது : " நாந்தான் ரயில் எஞ்சின். எனக்குப் பின்னாலே மூன்று பெட்டிகள் வருது " என்று சொல்லி விட்டு   முதலாவது நின்ற குஞ்சிடம் கேட்டது " நீ சொல்லு, உனக்குப் பின்னாலே எத்தனை பெட்டி வருது?ன்னு .
உடனே முதலில் நின்ற குஞ்சு, " எனக்குப் பின்னாலே மூன்று பெட்டிகள் வருது " என்றது.
" ஊஹும்," என்ற தாய்க் கிளி இரண்டாவதாக நின்ற குஞ்சிடம் " எங்கே, நீ சொல்லு, உனக்குப் பின்னாலே எத்தனை பெட்டி வருகிறது ? " என்று கேட்டது .
 " எனக்குப் பின்னாலே மூன்று பெட்டிகள் வருது " என்றது இரண்டாவதாக நின்ற குஞ்சு.
" ஊஹும்," என்ற தாய்க் கிளி மூன்றாவதாக நின்ற குஞ்சிடம் " எங்கே, நீ சொல்லு, உனக்குப் பின்னாலே எத்தனை பெட்டி வருகிறது ? " என்று கேட்டது.
 " எனக்குப் பின்னாலே மூன்று பெட்டிகள் வருது " என்றது மூன்றாவதாக நின்ற குஞ்சு.
" என்ன இது ! தப்பு தப்பாக சொல்றீங்க ? " என்று கோபப்பட்டது தாய்க்கிளி
இந்த விளையாட்டை சுற்றி நின்று வேடிக்கை பார்த்துக் கொண்டிருந்த மற்ற பறவைகள்  " குஞ்சுகள் சரியாகத்தான் சொல்கின்றன " என்று கோரஸாக
சொன்னதும், தாய்க்கிளிக்கோ தலை சுற்றியது , எந்த வகையில் இது சரியென்று !
மற்ற பறவைகள் சொன்னது போல குஞ்சுகள் சரியாகத்தான் சொல்கின்றன என்று நானும் சொல்கிறேன்.
" எப்படி சரி ? " என்று தாய்க் கிளி கேட்கிறது.
பதிலை நான் இப்போ சொல்ல மாட்டேன். உங்களுக்கு தெரிந்தால் இப்பவே பதிலை நீங்க சொல்லலாம்.
விடை கண்டுபிடிக்க முடியாதவங்க அடுத்த வாரம் வரை பொறுத்திருக்க வேண்டும்.


No comments:

Post a Comment