Labels

About myself Name : Kumari S. Arunachalam alias Aruna S. Shanmugam Occupation : Form

Friday, November 16, 2012

கணக்காய் பண்ணுங்க கணக்கை ! No.04

ஹாய் குட்டீஸ்,

இந்த வாரம் ஒரு புதிர்க் கணக்கு. ஒரு ஆள்  தினமும் ஒரு குளத்துக்குப் போய்
சில மலர்களைப் பறித்துக் கொண்டு மூன்று கோவில்களுக்குப் போய்
வருவான்.

அந்த கோவில்கள் அபூர்வ சக்தி படைத்தவை. அவன்  மலர்களை காணிக்கை ஆக்கியதும், அவன் கையிலிருக்கும் மீதமுள்ள மலர்களின் எண்ணிக்கையை  இரட்டிப்பாகிவிடும்.

குளத்தில் பறித்த  பூக்களை எடுத்துக் கொண்டு, முதலாவது உள்ள கோவிலுக்குப் போய்,  கடவுளை வணங்கி சில மலர்களை காணிக்கை யாக்கினான். உடனே அவன் கையிலிருந்த மலர்களின் எண்ணிக்கை இரண்டு மடங்கானது.

அதை எடுத்துக் கொண்டு அடுத்த கோவிலுக்குப் போய் கடவுளை வணங்கி சில மலர்களை காணிக்கையாக்கினான். முதல் கோவிலில் எத்தனை மலர்களை வைத்தானோ, அதே எண்ணிக்கையைத்தான் இரண்டாவது கோவிலிலும் வைத்தான். உடனே அவன் கையிலிருந்த மலர்களின் எண்ணிக்கை இரண்டு மடங்கானது.

மூன்றாவது கோவிலுக்குப் போய் கடவுளை வணங்கி சில மலர்களை காணிக்கையாக்கினான். முதல் இரண்டு கோவில்களிலும் எத்தனை மலர்களை வைத்தானோ அதே அளவு மலர்களைத்தான் மூன்றாவது கோவிலிலும் வைத்தான்.  இப்போது அவன் கையில் எந்த மலருமே இல்லை.
வெறுங்கையுடன் வீடு திரும்பினான்.

இப்போது கேள்வி என்னவென்றால் , அவன் குளத்துக்குப்போய் எத்தனை
மலர்களைப் பறித்தான், ஒவ்வொரு கோவிலிலும் எத்தனை மலர்களை
காணிக்கையாக்கினான்.

யோசியுங்க ..யோசியுங்க.. நல்லா  யோசியுங்க. அடுத்த வாரம், விடை வெளியாகும்வரை ! 

No comments:

Post a Comment