Labels

About myself Name : Kumari S. Arunachalam alias Aruna S. Shanmugam Occupation : Form

Thursday, November 01, 2012

கணக்கை சரி பார்க்கலாமா ? No.3


சென்ற வார கேள்விக்கான விடை இதோ  :

ஒன்றிலிருந்து நூறுவரை  ( ONE , TWO , THREE ன்னு  " மடமட " ன்னு HUNDRED வரை ) சொல்லி கேள்வி கேட்டவர்களை சும்மா அசத்துங்க. கொஞ்சம் கவனிச்சுப் பாருங்க, ONE  லிருந்து  HUNDRED  வரையில் உள்ள எண்களில்
A B C  என்ற மூன்று எழுத்துக்களுமே இடம் பெறவில்லை.

ஹாய் குட்டீஸ்,
                          எண்களில் ( NUMBERS ) ஒன்பதாம் நம்பருக்கு தனி சிறப்பு உண்டு. கிரகங்கள் ஒன்பது, தானியங்கள் ஒன்பது, உலோக வகைகள் ஒன்பது அனைத்து எண்களுமே ஒன்பதுக்குள் தான் அடங்கும் என்றெல்லாம் வரிசைப் படுத்தியது ஒருபுறம் இருக்கட்டும். ஒன்பதாம் வாய்ப்பாடு  ( 9 th  TABLE ) நமது கைகளில் இருக்கிறது.

எப்படி என்று பார்ப்போமா ?  ஓரொன்பது  ஒன்பது என்பதும் , பத்து ஒன்பது தொண்ணூறு  என்பதும் எல்லாருக்கும் தெரிந்த ஒன்றுதான். அதனால் மற்ற எண்களைப்  பார்க்கலாம்.
யாராவது உங்களிடம் மூன்று ஒன்பது  ( THREE NINES ARE ) என்று கேட்டால் குழந்தைகளான நீங்கள்  திணற வேண்டாம். இரண்டு கை விரல்களையும் உங்கள் முன்பாக விரியுங்கள். ( முஸ்லிம் அன்பர்கள் தொழுகையின் போது
கைகளை தங்கள் நெஞ்சுக்கு நேராக நீட்டிக் கொள்வார்கள் அல்லவா , அது போல .)

இப்போது  இடது கையிலுள்ள மூன்றாவது விரலை, அதாவது மோதிர விரலை
மடக்கி கொள்ளுங்கள். மடக்கிய விரலுக்கு முன்பாக இரண்டு விரல்களும் , மோதிர விரலுக்கு அடுத்து ஏழு விரல்களுன் நீண்டுள்ளது அல்லவா ?
( வலது கை விரல்களையும் சேர்த்து ). இப்போது இரண்டையும் சேர்த்து இருபத்தேழு  என்று நீங்கள் எளிதாக சொல்லி விடலாம்.

இதேபோல ஆறு ஒன்பது எத்தனை என்று கேட்டால்,  வலது கையிலுள்ள சுண்டு விரலை ஆறாவது  எண்ணாக கணக்கில் எடுத்துக் கொண்டு , அந்த விரலை மடக்கிக் கொள்ளுங்கள். இப்போ சொல்லுங்க.  மடக்கிய விரலுக்கு முன்பாக ஐந்து விரலும், மடக்கிய விரலுக்கு அடுத்ததாக நான்கு விரல்களும் நீண்டுள்ளன. இரண்டையும் சேர்த்து ஐம்பத்து நான்கு என்று எளிதாக சொல்லி விடலாம்.

என்ன ? குழம்பற  மாதிரி தெரியுதா ?  நான் சொல்லி இருக்கிறபடியே, விரல்களை நீட்டியும், மடக்கியும் கணக்குப் பார்த்தால், கணக்கு சரியாக வரும்.  இன்னும் குழப்பம் தீரலைன்னா, பேப்பர் பென்சிலை எடுங்க. உங்ககிட்டே கேட்கப் பட்ட கேள்விக்கு தக்கபடி விரல்களை  மடக்கி நீட்டுங்க. மடக்கிய விரலுக்கு முன்னாள் உள்ள எண்ணை முதலில் குறித்துக் கொள்ளுங்கள். அடுத்து மடக்கிய விரலுக்கு அடுத்து நீண்டுள்ள விரல்களின் எண்ணிக்கையை எழுதுங்க,. இப்போ ரெண்டையும்  சேர்த்துப் படிங்க. விடை ரெடி. எத்தனை பேர் சரியாக கண்டு பிடித்தீர்கள் என்பதை எனக்கு கணக்கு சொல்லணும் !

No comments:

Post a Comment