இன்று போய் இனியொரு நாள் ....?!
" பாட்டி, மனோவைக் காணலியே, எங்கே போனா?" என்று கேட்டான் பிரபு. "இந்நேரம் வரை நீ எங்கே போயிருந்தே ? அதை சொல்லு முதலில்." என்றாள் பாட்டி.
"சத்யா வீட்டிலேதான் இருந்தேன் பாட்டி. மனோ எங்கே ?" என்று பதட்டமாக கேட்டான் பிரபு.
" அவ இருக்கும்போது சண்டை போடறே. ஆனா வீட்டிலே கொஞ்ச நேரம் அவளை காணலைன்னா எங்கே எங்கேனு தவிச்சு போயிடறே. நல்ல அண்ணன் நல்ல தங்கச்சிடா சாமி" என்றாள் பாட்டி சிரித்துக்கொண்டே..
" மனோ எங்கே பாட்டி?"
" கடைத்தெருவுக்கு போயிருக்கிறாடா"
"ஏன் பாட்டி அவளை தனியா அங்கெல்லாம் அனுப்பறே? புது இடத்திலே, பாதை தெரியாமே எங்காவது போயிட்டா என்ன பண்றது?" என்று கேட்டான் பிரபு கோபமாக.
" அடடா, அண்ணாத்தே. உங்களுக்கு இருக்கிற அதே அக்கறை எங்களுக்கும் இருக்கு அண்ணாத்தே. அவளை தனியா அனுப்பற அளவுக்கு நான் என்ன முட்டாளா? அவளும் ரேகாவும் சேர்ந்துதான் கிளம்பிப் போனாங்க. இப்போ வந்துடுவாங்க " என்று பாட்டி சொல்லிக்கொண்டிருக்கும் போதே கையில் பையுடன் வீட்டுக்குள் நுழைந்தாள் மனோ.
"எங்கேண்ணா போயிருந்தே? உன்னைக் காணோம்னு எங்கெல்லாந்தான் தேடறது ?"
"ரொம்ப நல்லா இருக்குடி இந்த விளையாட்டு. நீ அவனை தேடி போறதும், அவன் உன்னை வீட்டுக்குள் காணோம்னு கலாட்டா பண்றதும் !" என்று பாட்டி சொல்லிக் கொண்டிருக்கும் போதே வாசலில் சைக்கிள் மணி சத்தம் கேட்டது.
"மணி சத்தம் கேட்குது. யாருன்னு போய் பாரு' என்றாள் பாட்டி.
"இந்நேரத்துக்கு சைக்கிள் பெல் சத்தம் கேட்டா, அது கண்டிப்பா போஸ்ட்
மேன்னாத்தான் இருக்கும் " என்று சொல்லியபடி பிரபு வாசலுக்கு செல்ல,,
" நேரத்தை வச்சே ஜாதகத்தை சொல்றார் பிரபு ஐயா. அவர் பெரிய மதி மந்திரிதான்" என்று மனோவிடம் பாட்டி சொல்லிக் கொண்டிருக்கும் போதே,
கையில் தபாலுடன் வந்த பிரபு " என்னவோ மதி மந்திரின்னு மனோகிட்டே சொல்லிட்டுருந்தியே. அதுக்கும் ஒரு கதை வச்சிருப்பியே. அதை கொஞ்சம் சொல்லிடறதுதானே?" என்றான்.
"யாரிடமிருந்து தபால் வந்திருக்கு. முதல்லே. அதை பிரிச்சு படிடா" என்றாள் பாட்டி படபடப்பாக.
" நீ டென்ஷன் ஆகாதே பாட்டிம்மா. டாடிதான் லெட்டர் போட்டிருக்கிறார்."
"என்னன்னு போட்டிருக்கிறார். பிரிச்சு படிடா"
"போன் பண்ணினேன். லைன் கிடைக்கலே. ரெசீவரை சரியா வைக்கலையானு கேட்டிருக்கிறார்"
"பாட்டி உன் வீட்டில் போன் இல்லேங்கிறதை கிண்டலா சொல்றான் பாட்டி " என்றாள் மனோ.
"தபாலை பிரிடா "
"முதல்லே கதை" என்றான் பிரபு
"பாட்டி, ஜெயந்தி சொல்றா, நீ சொல்ற கதை எல்லாம் அவளுக்கும் புவிக்கும் முன்னமே தெரியுமாம். அவ பாட்டி அவளுக்கு சொல்லி இருக்காங்களாம் " என்றாள் மனோ.
"பாட்டி, ஜெயந்தி சொல்றா, நீ சொல்ற கதை எல்லாம் அவளுக்கும் புவிக்கும் முன்னமே தெரியுமாம். அவ பாட்டி அவளுக்கு சொல்லி இருக்காங்களாம் " என்றாள் மனோ.
" இருக்கட்டுமே. ஏற்கனவே தெரியும்னா, அவங்க கதை கேட்கிறதை விட்டுட்டு வேறே வேலையை பார்க்கட்டுமே. தெரியாதவங்க கதை கேட்டுக்கட்டும். நல்ல விஷயத்தை நாலு தரம் திருப்பி திருப்பி சொன்னாலும் சரி, கேட்டாலும் சரி, அதில் எந்த தப்பும் கிடையாதே. சில கதைகளுக்கு கர்ண பரம்பரைக் கதைகள்ன்னு பேர் உண்டு. அந்த கதைகளை எழுதினவங்க யார்னு யாருக்குமே தெரியாது. ஏன்னா, அதுக்கு எழுத்து வடிவமே கிடையாது. எந்தக் காலத்திலோ யாரோ சொல்ல, அதைக் கேட்ட சிலர், அதை மற்றவர்களுக்கு சொல்ல, இப்படியே சில கதைகள் காலங் காலமாக சொல்லப்பட்டு வருகிறது" என்று பாட்டி சொல்லிக் கொண்டிருக்கும் போதே இடை மறித்த மனோ " ஐயோ பாட்டி, கதை சொல்லு பாட்டி" என்றாள்.
" இதோ பாரு , ஒண்ணுமில்லாத விசயத்துக்கெல்லாம் 'ஐயோ"ன்னு சொல்லக் கூடாதுன்னு எத்தனை தரம் சொல்லியிருக்கிறேன்," என்று மனோவை கடிந்து கொண்ட பாட்டி, கதை சொல்ல ஆரம்பித்தாள்.
"ஒரு ஊரில் ஒரு ராஜா. ஒருநாள் அவர் தனியாளா காட்டுக்கு வேட்டைக்கு கிளம்பினார்"
" தனியாளான்னா?" என்ன அர்த்தம் பாட்டி ?"என்று கேட்டாள் மனோ.
"துணைக்கு யாரும் இல்லாமல் இவர் மட்டும் தனியாக போனார்னு அர்த்தம். காட்டுக்குள் போன ராஜா அங்கே ஒரு முனிவர் தவம் பண்ணிட்டு இருக்கிறதைப் பார்த்தார். முனிவருக்கு ரொம்ப பக்கத்திலேயே பெரிய, கொடிய நாகப் பாம்பு ஒன்றும் நின்று கொண்டிருந்ததை ராஜா பார்த்தார். முனிவரோ கண்ணை மூடி நிஷ்டையில் இருக்கிறார். அவரை நாகம் தீண்டி விடக்கூடாதே என்று நினைத்த ராஜா, கொஞ்சமும் தாமதிக்காமல் தனது உடை வாளை உருவி நாகத்தை ரெண்டு துண்டாக வெட்டிக் கொன்றார்.
வெட்டுப் பட்ட நாகத்தோட ரத்தம் முனிவர் மேலே பட்டு,முனிவர் கண்களை திறந்து பார்த்தார். வெட்டுப்பட்டு கிடந்த நாகத்தையும், கையில் வாளுடன் நிற்கும் மனிதரையும் பார்த்ததும் என்ன நடந்திருக்கும் என்பதை புரிந்து கொண்ட முனிவர், "உன்னை என்ன செய்ததென்று, அந்த நாகத்தை வெட்டிக் கொன்றாய்?" என்று கோபமாக கேட்டார்.
"ஐயா. என்னைக் காப்பாற்றி கொள்ள நான் அதை கொல்லவில்லை. அந்த நாகம் தங்களை தீண்டி விடக்கூடாதே என்று நினைத்துதான் அதை கொன்றேன்" என்று மன்னர் விளக்கம் சொன்னார்.
" நீ கொன்றது சாதாரண பாம்பு இல்லை. போன பிறவியில் அது பூதம். அதற்கு முந்தின பிறவியில் அது ஒரு ரிஷி. ஒரு சாபத்தால் அவர் பூதமானார். பிறகு ஒரு சாப விமோசனம் கிடைச்சு பாம்பாக மாறினார். திரும்பவும், மனிதனாக, ரிஷியாக மாறி வாழனுங்கிறதுக்காக என்னுடன் சேர்ந்து நிஷ்டையில் இருந்தார். அவரை நீ கொன்று விட்டாய். திரும்பவும் அவர் பூதமாக மாறி உன்னை கொன்று விட்டுதான் மறு வேலை பார்ப்பார். ஆனால் என்னுடைய நலனில் அக்கறை கொண்டுதான் அந்த நாகத்தை நீ கொன்றாய் என்பதால் உனக்கு ஒரு சாப விமோசனம் உண்டு. நீ இந்த பூதத்திற்கு ஏதாவது வேலை கொடுத்துக் கொண்டே இருக்க வேண்டும். வேலை செய்யும் வரை பூதம் உன்னை ஒன்றும் செய்யாது. அது முடிந்த மறு கணமே உன்னை கொன்று விடும். உன்னோட உயிர் உன் கையில்தான் இருக்கு. அதை காப்பாற்றிக் கொள்வது உன்னோட சாமர்த்தியம். இன்னொரு விஷயம். இந்த காட்டுக்குள் நீ இருக்கும்வரை அது தன்னுடைய வேலையை காட்டாது. நீ இந்த காட்டின் எல்லையை தாண்டினதுமே பூதம் தன்னுடைய வேலையை காட்ட துவங்கிவிடும்." என்று முனிவர் சொன்னதும், அவரிடம் ஆசிர்வாதம் வாங்கிகிட்டு ராஜா கிளம்பினார்.
இந்த பூதத்துகிட்டே இருந்து எப்படி தப்பிக்கிறது என்ற கேள்விதான் அவர் மனசில் ஓடிக்கொண்டிருந்தது.
இதற்குள் ராஜாவைத் தேடி மந்திரி காட்டுக்குள் வந்து விட்டார். நடந்த விசயத்தை ராஜா அவரிடம் சொன்னார். சிறிது நேரம் யோசித்த மந்திரி, " நீ கொன்றது சாதாரண பாம்பு இல்லை. போன பிறவியில் அது பூதம். அதற்கு முந்தின பிறவியில் அது ஒரு ரிஷி. ஒரு சாபத்தால் அவர் பூதமானார். பிறகு ஒரு சாப விமோசனம் கிடைச்சு பாம்பாக மாறினார். திரும்பவும், மனிதனாக, ரிஷியாக மாறி வாழனுங்கிறதுக்காக என்னுடன் சேர்ந்து நிஷ்டையில் இருந்தார். அவரை நீ கொன்று விட்டாய். திரும்பவும் அவர் பூதமாக மாறி உன்னை கொன்று விட்டுதான் மறு வேலை பார்ப்பார். ஆனால் என்னுடைய நலனில் அக்கறை கொண்டுதான் அந்த நாகத்தை நீ கொன்றாய் என்பதால் உனக்கு ஒரு சாப விமோசனம் உண்டு. நீ இந்த பூதத்திற்கு ஏதாவது வேலை கொடுத்துக் கொண்டே இருக்க வேண்டும். வேலை செய்யும் வரை பூதம் உன்னை ஒன்றும் செய்யாது. அது முடிந்த மறு கணமே உன்னை கொன்று விடும். உன்னோட உயிர் உன் கையில்தான் இருக்கு. அதை காப்பாற்றிக் கொள்வது உன்னோட சாமர்த்தியம். இன்னொரு விஷயம். இந்த காட்டுக்குள் நீ இருக்கும்வரை அது தன்னுடைய வேலையை காட்டாது. நீ இந்த காட்டின் எல்லையை தாண்டினதுமே பூதம் தன்னுடைய வேலையை காட்ட துவங்கிவிடும்." என்று முனிவர் சொன்னதும், அவரிடம் ஆசிர்வாதம் வாங்கிகிட்டு ராஜா கிளம்பினார்.
இந்த பூதத்துகிட்டே இருந்து எப்படி தப்பிக்கிறது என்ற கேள்விதான் அவர் மனசில் ஓடிக்கொண்டிருந்தது.
" கவலையை விடுங்கள் மன்னா. முதலில் இந்த பூதத்திடம், நம்மை அரண்மனையில் கொண்டு போய் விட சொல்லுங்கள்" என்றார்.
மந்திரி சொல்லிக் கொடுத்தபடி ராஜா சொல்ல, அடுத்த நொடியே அவர்களை அரண்மனையில் கொண்டு வந்து சேர்த்த பூதம்,'அடுத்து என்ன செய்ய வேண்டும்?" என்றது.
ராஜா என்ன சொல்ல வேண்டும் என்பதை மந்திரி அவ்வப்போது சொல்லிக்கொடுக்க, அவர் சொல்வதை கேட்டு ராஜா, பூதத்தை வேலை வாங்கிக் கொண்டிருந்தார்.
நாட்டில்லுள்ள நீர் நிலைகளை சுத்தம் பண்ண சொன்னார். சாலைகளை சீரமைக்க சொன்னார். வயல் வேலைகளை கவனிக்க சொன்னார். எந்த வேலை கொடுத்தாலும் நொடி பொழுதில் செய்து முடித்துவிட்டு, "அடுத்து என்ன?" என்று கேட்க ஆரம்பித்தது பூதம்.
இனி செய்வதற்கும் எந்தவொரு வேலையும் இல்லை. மரண பயம் ராஜாவை பிடித்துக்கொண்டது.
அப்போதும் மந்திரி ஒரு யோசனை சொன்னார்.
உடனே ராஜா பூதத்தை கூப்பிட்டு, " ஒரு பெரிய இரும்பு தூணை இங்கே கொண்டு வந்து நடு"ன்னு சொல்ல, அடுத்த நிமிடமே இரும்பு தூண் நடப்பட்டது.
"நான் கூப்பிடும்போது மட்டும் நீ வந்து நான் சொல்லும் வேலையை செய்து தர வேண்டும். மற்ற நேரங்களில் நீ இந்த தூணின் மீது ஏறி இறங்கிக்கொண்டிருக்க வேண்டும். கொஞ்ச நேரத்துக்கு ஒருமுறை வந்து நீ எத்தனை முறை ஏறி இறங்கினாய் என்பதை என்னிடம் சொல்ல வேணும். இதுதான் இனி உன்னோட வேலை " என்றார் ராஜா.
பூதமும் அப்படியே செய்தது. நாட்டுக்கு தேவையான அத்தனை நல்ல காரியங்களையும் பூதத்தை வைத்தே செய்து முடித்துக்கொண்ட ராஜா, " நீ விரும்பினால் திரும்பவும் காட்டுக்கு சென்று தவம் செய்யலாம்" என்றார். ஆனால் நாட்டு மக்களுக்கு தேவையான நல்ல காரியங்களை பூதம் செய்ததாலும், அதனால் மனம் மகிழ்ந்த மக்கள் பூதத்தை வாழ்த்தியதாலும், அதுக்கிருந்த சாபம் போய் அதற்கு திரும்பவும் மனித பிறவி கிடைத்து மனிதனாகியது. எல்லோரிடமும் விடை பெற்று, காட்டுக்கு சென்று தவம் பண்ண துவங்கியது. மந்திரியோட புத்திசாலி தனத்தால் ராஜா தன்னையும் காப்பாற்றிக்கொண்டு, நாட்டு மக்களையும் சுபிக்ஷமாக வாழ வைத்தார் " என்று கதையை முடித்த பாட்டி, "லெட்டரை படிச்சு விஷயத்தை சொல்லுடா " என்றாள்.
லெட்டரைப் படித்த பிரபுவின் கண்களிலிருந்து கண்ணீர் வடிந்தது.
"என்னடா?" என்று பதறிப்போய் கேட்டாள் பாட்டி.
"பாட்டி, இப்போ மணி பன்னிரண்டு. இன்னும் ஒரு மணி நேரத்தில் நாங்கள் ஊருக்கு கிளம்பியாகணும்" என்றான் பிரபு.
"என்னடா இது திடுதிப்புன்னு? ஸ்கூல் திறக்க இன்னும் ஒரு வாரம் இருக்கிறதே?" என்று கேட்டாள் பாட்டி
." பாட்டி, டாடி போன வாரமே லெட்டர் போட்டிருக்கிறார். ஏன்னு தெரியலே. இவ்வளவு லேட்டா வந்து சேர்ந்திருக்கு. டாடி ஆபிஸ் வேலையா டில்லி போறாராம். திரும்பிவர ஒரு மாதமாகுமாம். போறதுக்கு முன்னாடி எங்களை பார்க்க ஆசைபடறாராம்.இங்கே வந்து போறதுக்கு டைம் இல்லையாம். டாடியோட பிரண்ட் கணேஷ் அங்கிள் இங்கே வருவாராம். அவரோடு சேர்ந்து கிளம்பி வரச்சொல்லி லெட்டர் போட்டிருக்கிறார். லெட்டர் நமக்கு தாமதமா வந்து சேர்ந்திருக்கு. இப்போ அங்கிள் வந்துடுவார் " என்று பிரபு சொல்லிக்கொண்டிருக்கும்போதே, பாட்டியின் வீட்டு விலாசத்தை விசாரித்துக்கொண்டு கணேஷ் அங்கிள் வந்து சேர்ந்தார்.
"என்ன குழந்தைகளா? எப்படி இருக்கீங்க? ரெடியா? நாம இன்னும் அரை மணி நேரத்துக்குள் ஸ்டேசன் போய் சேரனும். அப்பத்தான் வண்டியை பிடிக்க முடியும்" என்றார்.
"இதோ அங்கிள், " என்றபடி துணிகளை எடுத்து பைக்குள் திணித்த பிரபு "டீ, மனோ நீ உன்னோட திங்க்சை எடுடி" என்று சொல்ல, கண்களில் கண்ணீர் வழிய தன்னுடைய உடைமைகளை தேடி எடுத்தாள் மனோ.
" ஏண்டி செல்லம் அழறே?" என்று கேட்டாள் பாட்டி அவளுடைய கண்களை துடைத்து விட்டபடி.
" உன்னை, இந்த கிராமத்தை, இங்குள்ள பிரண்ட்சை விட்டு பிரிந்து போறதை நினைத்தால் அழுகை வருது பாட்டி" என்றாள் மனோ தேம்பியபடி.
பாட்டிக்கும் அழுகை வந்தது.
ஆனால் வெளிப்படையாக காட்டிக்கொள்ளாமல் " அடி அசடே, இதற்கெல்லாம் யாராவது அழுவார்களா? இப்போ போயிட்டு அடுத்த லீவுக்கு திரும்பவும் இங்கே வாருங்கள் "என்றாள்.
"பாட்டி, நீயும் எங்களோடு வந்துவிடேன், ப்ளீஸ்" என்றான் பிரபு.
"உங்க தாத்தா இறந்த பிறகு, இந்த கிராமத்தை விட்டு எங்குமே போனதில்லை. நான் வராட்டா என்ன. நீங்க ரெண்டு பேரும் எப்போ நேரம் கிடைக்குமோ ,அப்போ வந்து போங்களேன்" என்றாள் பாட்டி.
இதற்குள் விஷயம் கிராமம் முழுக்க பரவி எல்லோரும் பாட்டி வீட்டு முன் கூடி விட்டார்கள்.
"நாங்க ஊருக்கு போறது சாதாரண விஷயம். ஆனால் அதை கேள்விப்பட்டு இத்தனை பேர் அவங்க வேலையை எல்லாம் விட்டுட்டு எங்களை ஊருக்கு அனுப்ப வந்திருக்கிறார்களே!" என்று பிரபு ஆச்சரியமாக கேட்க,
"அதுதான் கிராமத்துக்கும், நகரத்திற்குமுள்ள வித்தியாசம். நகரத்தில் இருக்கிற அநேகருக்கு பக்கத்துக்கு வீட்டில் யார் இருக்கிறாங்க என்பது கூட தெரியாது. ஆனால் கிராமத்தில் உள்ளவங்க மற்றவங்க வீட்டு நல்லது கெட்டதுக்கு யாரும் கூப்பிடாமலே வந்து உதவி செய்வாங்க"என்றாள் பாட்டி.
அனைவரிடமும் பிரியா விடை பெற்று, கண்களில் நீர் வடிய, கணேஷ் அங்கிள் கையை பிடித்துக்கொண்டு இருவரும் நடந்தனர்.
அவர்கள் போவதைக்கண்ட பாட்டியின் கண்களிலிருந்து கண்ணீர் கொட்டியது.
...........................
இத்துடன் பாட்டி சொன்ன கதைகள் முடிவடைகிறது. இதை அடுத்து
" அச்சு பிச்சு அப்புமணி " என்ற மினி நகைச்சுவை தொடரை ஆரம்பிக்கும் எண்ணம் உள்ளது.
ஆனால் சில தனிப்பட்ட காரணங்களால், அதனை ஆரம்பிக்கும்
மனோநிலை, சூழ்நிலையில் நான் இல்லை. ( எழுதுவது என்பதை மூட் இருக்கும்போதுதான் செய்யமுடியும், மற்ற வேலைகள் மாதிரி நினைத்தவுடன் ஆரம்பித்து விட முடியாது,) ஒரு சிறு இடைவெளிக்குப் பின் உங்களை சந்திக்க அப்புமணி வருவான், அது வரை GOOD -BYE குட்டீஸ்
No comments:
Post a Comment