ஹாய் குட்டீஸ்,
இது உங்களுக்கான புதிய பகுதி. இதில் வரும் விஷயங்கள் ஏற்கனவே எனது " MADAM BLOG " ல் வந்து கொண்டிருந்த ஒன்றுதான். ஆனால் அதை ஓபன் பண்ணி பார்ப்பதில் சிரமம் இருப்பதாக சிலர் தெரிவித்ததால் அவை இனிமேல் இதே " அஞ்சுமி " பிளாக்கில் வெளியாகும்.
இந்த ப்ளாக்கில் பிரசுரிப்பதாக இருந்த குழந்தைகளுக்கான WORD PUZZLES
அனைத்தும் ஒரு பத்திரிக்கையின் ( MAGAZINE FOR CHILDREN ) பரிசீலனையில் உள்ளது. அதனால் இந்த ப்ளாக்கில் குழந்தைகளுக்கான (உங்களுக்கான ) TIPS மட்டும் அவ்வப்போது வெளியாகும்.
இந்த ப்ளாக் அக்டோபர் 2011 ல் ஆரம்பம் ஆனது. இந்த அக்டோபர் 2012 ல் ஒரு
வருடத்தைக் கடந்து விட்டதில் எனக்கு மிக்க மகிழ்ச்சி.
இன்றைய தினம் வரை எனது தளத்தில் கண் பதித்தவர்களின் எண்ணிக்கை
4,120
இதில் இந்தியா 690 மட்டுந்தான்.
ஆனால் USA 2470
RUSSIA 442
FRANCE 162
இவை தவிர மலேசியா, ஸ்ரீலங்கா , பிரேசில் , UK ஆகிய நாடுகளிலும் எனது BLOG READERS இருக்கிறார்கள் என்பது எனக்கு மகிழ்ச்சியான ஒரு விஷயம்.
ஆபீசில் வேலையை முடித்துவிட்டு , TRAFFIC நெரிசலில் நொந்து நூலாகி வீட்டுக்கு வந்த பின்னும் , ஓய்வு எடுக்காமல் COMPUTER முன்பாக உட்காரும் போதெல்லாம், எதற்கு இந்த வெட்டி வேலை என்று அறிவு சொல்லும். ஆனால் எங்கோ ஒரு கண் காணாத தேசத்தில் இருந்து கொண்டு, அவர்களுக்கான வேலைப் பளுவிற்கு நடுவிலும், உனது கிறுக்கல்களையும் சிலர் ஆர்வமாகப் படிக்கிறார்களே, அவர்களுக்காகவாவது ஏதாவது எழுது என்று மனசு சொல்லும். இதுவரையில் அறிவுக்கும் மனசுக்கும் நடந்த போராட்டத்தில் மனசுதான் ஜெயித்துக் கொண்டே வந்தது. இனி எப்படியோ ?
இவ்வளவுக்கும் எனது BLOG பற்றி எந்த ADD ம் கிடையாது. ஆனால் ஏதோ ஒரு வகையில் இவர்களை எனது BLOG தனது பக்கத்திற்கு இழுத்து வந்ததற்காக
கடவுளுக்கு நன்றி சொல்ல கடமைப் பட்டிருக்கிறேன்.
PUZZLES சிலவற்றை ( 200 க்கும் மேல் உள்ளது ) FREE ON LINE GAME ஆக வெளியிடும் ஆசை உண்டு. ஆனால் அதை எப்படி செய்வது என்பது எனக்கு தெரியவில்லை.
இதே PUZZLES - ஐ USA ல் உள்ள SBPRA என்ற நிறுவனம் புத்தகமாக வெளியிட சம்மதம் தெரிவித்திருந்தது. ஆனால் PROCESSING FEE ஆக அவர்கள் கேட்ட 995 டாலர்களை என்னால் கொடுக்க முடிய வில்லை. எனது இயலாமையை தெரிவித்தபோது எனக்கு உதவ நினைத்து
150 டாலருக்கு வேறொரு OFFER தந்தார்கள் . அதில் புத்தகங்களை விற்கும் பொறுப்பு என்னுடையது என்பதால் வேண்டாமென்று சொல்லி விட்டேன். எனக்கு வெளியுலக தொடர்பு அதிகம் கிடையாது. வெளியுலகுடன் எனக்குள்ள CIRCLES மிகவும் சிறியது. என் ஆபீஸ் , என் வீடு , என்னுடைய HOBBIES தவிர வேறு எதுவும் தெரியாது . அதனால் அந்த முயற்சி நின்று போனது.
அதில் எனக்கு மிகுந்த வருத்தம் உண்டு. அந்த புத்தகம் மட்டும் வெளியானால், அது உலகிலுள்ள எல்லா நாட்டு குழந்தைகளையும் சென்றடைந்திருக்குமே என்று நினைப்பேன். ( NET CONNECTION வைத்துக் கொண்டு BOOKS, PUZZLES பார்க்க எத்தனை பேரால் முடியும் ? அதுவே புத்தக வடிவில் இருந்தால் எல்லோருக்கும் எளிதில் சென்று சேரும் என்பது எனது எண்ணம்.) அதுவுமில்லாமல் தமிழில் வெளியாகும் செய்திகளை தமிழ் தெரிந்த சிலர்தான் படிக்க முடியும். ஆனால் ஆங்கிலம் உலகுக்கே ஒரு இணைப்பு மொழி என்பதால், உலகிலுள்ள அனைத்து நாட்டுக் குழந்தைகளுக்கும் அது பயன் படும் என்பதால் ENGLISH ல் PUZZLES உருவாக்கினேன் . அந்த முயற்சி முடியாமல் போய்விட்டது.
( நினைப்பதெல்லாம் நடந்துவிட்டால் தெய்வம் ஏதுமில்லை ) சரி, FEELING ஐ நிறுத்திவிட்டு மேட்டருக்குள் போகலாம்.
டியர் குட்டீஸ், இந்த வாரம் :
காக்கா
தாத்தா
கருதித் திருக
குலவி விலகு
தேரு வருதே
மே மாதமாமே
மேயுமே
தேடுதே
தேயாதே
தேயுதே
வா சிவா
தா ராதா
தா கீதா
மேலே உள்ளவை என்னவென்று கண்டுபிடிக்க முடிகிறதா ?
15 நாட்கள் கழித்து இதே இடத்தில் சிந்திப்போம். அது வரை நல்லா யோசியுங்க. யோசியுங்க ..யோசிச்சுகிட்டே இருங்க !
BYE

மாமா
பாபா
பாப்பா
குடகு
மா பலா லாபமா
தத்தை தைத்த கருதித் திருக
குலவி விலகு
தேரு வருதே
மே மாதமாமே
மேயுமே
தேடுதே
தேயாதே
தேயுதே
வா சிவா
தா ராதா
தா கீதா
மேலே உள்ளவை என்னவென்று கண்டுபிடிக்க முடிகிறதா ?
15 நாட்கள் கழித்து இதே இடத்தில் சிந்திப்போம். அது வரை நல்லா யோசியுங்க. யோசியுங்க ..யோசிச்சுகிட்டே இருங்க !
BYE
No comments:
Post a Comment