( நான் எழுதிய இச்சிறுகதை பிப்ரவரி 1993 " ராஜம் " இதழில் வெளியாகியுள்ளது )
அர்த்தங்கள் ஆயிரம்
நினைக்கும்போதே எரிச்சல் பற்றிக்கொண்டு வந்தது மங்களத்திற்கு.
யாரிடமாவது ஒரு மூச்சு சொல்லி ஒய்ந்தால் தேவலாம் போலிருந்தது.
ஈஸி சேரில் சாய்ந்து பேப்பர் படித்துக் கொண்டிருந்த சாமா ஐயர்தான்
மாட்டினார். " என்னங்க,லோகத்திலே இப்படிக்கூட மனுஷா இருப்பாளா?"
என்று அலுத்துக் கொண்டாள் மங்களம் ,
" போச்சுடா, உன் புலம்பலை ஆரம்பிச்சிட்டியா ? பிறத்தியா ஆத்துச்
சமாசாரம் நமக்கேன்டீ ? இன்னிக்கு அடிச்சுப்பா; நாளைக்கு கூடிப்பா...
அப்படிக் கூடிக்கிறப்ப , சமரசம் பண்ணப் போன மத்தவாளுக்கு பைத்தியக்
காரப் பட்டம் கட்டி அனுப்பிடுவா. அவா அவா ஆத்துக்குள்ளே ஆயிரம் இருக்கும்
அதுலே எல்லாம் மூக்கை நுழைக்க, பஞ்சாயத்து பண்ண நீயும் நானும்
யார் ? அவாளுக்கு ஒட்டா, உறவா ? " என்றார் சாமா பேப்பரில் இருந்து
கண்களை அகற்றாமலே ..
" அதில்லேன்னா.. வடக்கே யாத்திரை போன இடத்திலே அதிகமா ரெண்டு
மாசம் தங்கிட்டோம் . திரும்பி வர்றதுக்குள் இப்பிடி ஒரு மாறுதலா ? என்ன
ஜென்மம்னா இது ? அந்தப் பிள்ளையாண்டான் உசிரோடு இருக்கிறச்சே
மாமியாரை ' அம்மா , அம்மா'ன்னு வாய்க்கு வாய் கூப்பிட்டு உறவு
கொண்டாடினாளே .. ஏதோ அவனுக்கு அல்பாயுசு. ' பொட்டு 'ன்னு
போயிட்டான், இவ பொட்டை அழிச்சிட்டு. ! செத்தும் கொடுத்தான்
சீதக் காதிங்கிற மாதிரி, அவன் செத்ததுக்குப் பிறகு அவன் ஆபீசிலிருந்து
வந்த பணமே பல ' லகரம் ' தேறுமாம். இவா வேறே கை நிறைய
சீதக் காதிங்கிற மாதிரி, அவன் செத்ததுக்குப் பிறகு அவன் ஆபீசிலிருந்து
வந்த பணமே பல ' லகரம் ' தேறுமாம். இவா வேறே கை நிறைய
சம்பாதிக்கிறா . ..போனவனை நினைச்சு வருத்தப் பட்டுண்டே ,
உட்கார்ந்த இடத்திலே இருந்து பாலும் நெய்யுமா சாப்பிடலாமேன்னா...
இந்தக் கடன்காரி என்னன்னா ஒரு நா கோதுமை, ஒரு நா கேழ்வரகுன்னு
இந்தக் கடன்காரி என்னன்னா ஒரு நா கோதுமை, ஒரு நா கேழ்வரகுன்னு
மாத்தி மாத்திப் போட்டு, அந்த வயசான மாமியை வதைக்கிறாளே . நேத்து
நாம ஊரிலிருந்து திரும்பினதுமே, நம்ம பக்கத்து ஆத்து பரிமளம் இதெ
எல்லாம் சொல்லிச் சொல்லி மாய்ஞ்சு போனா . இவா உருப்படுவாளா
ன்னா ? " என்று கேட்டு சாமாவை ஏறிட்டுப் பார்த்தாள் மங்களம் .
" இதோ பார் மங்களம் , பகல்லே அக்கம் பக்கம் பார்த்துப் பேசு;
ராத்திரி அதுவும் பேசாதேம்பா பெரியவா , வெளக்கு வைக்கிற நேரமாச்சு .
ராத்திரி அதுவும் பேசாதேம்பா பெரியவா , வெளக்கு வைக்கிற நேரமாச்சு .
பார்வதி மாமி , ஆத்து சாவியை இங்கே குடுத்துட்டு கடைக்குப்
போயிருக்கிறா.. அவ மாட்டுப் பொண்ணு , இப்போ ' சாவி 'ன்னு கேட்டு
வந்துடப்போறா . அவ காதுலே விழுந்ததுன்னா வீண் வம்பு " என்றார் சாமா.
" நன்னா விழட்டுமே. நேரிலே நிக்க வச்சு நாக்கைப் பிடுங்கிகிறாப்லே
நறுக்குன்னு நாலு கேள்வி கேட்டாதான் மனசு ஆறும். காதல்
கல்யாணங்கிற பேரிலே கட்டின புடவையோடு அந்த ஆத்துக்கு மாட்டுப்
கல்யாணங்கிற பேரிலே கட்டின புடவையோடு அந்த ஆத்துக்கு மாட்டுப்
பொண்ணா வந்தா .பார்வதி மாமி ஏதாவது ஒரு வார்த்தை கேட்டாளா ?
பெத்த பொண்ணாட்டம் வச்சு தாங்கினா. அப்பேர்ப்பட்ட நல்லவாளைக்
பெத்த பொண்ணாட்டம் வச்சு தாங்கினா. அப்பேர்ப்பட்ட நல்லவாளைக்
கூட வதைக்க எப்படின்னா மனசு வருது ? பார்வதி மாமியோட பையன்
'ஹார்ட் அட்டாக்'கில் போன ரெண்டாம் மாசமே , வேலைக்காரியை
வேலையை விட்டு நிறுத்திட்டு , வீட்டு வேலையை எல்லாம் மாமியே
செய்யும்படி பண்ணிட்டாளாம். சரி, அதுதான் போகட்டும்ன்னா .. மாசம்
ரெண்டாயிரம் சம்பளம் வாங்கும் ஒருத்தி மளிகைச் சாமானை மொத்தமா
வாங்கிப் போட மாட்டாளா ? 50 கிராம் கடுகு வாங்க ஒரு நாளு , சோப்பு
வாங்க ஒரு நாளுன்னு தெனம் ஒரு சாமானா வாங்கியாறச் சொல்றாளாம். அதுவும் அக்கம் பக்கத்திலே இருக்கிறகடையில் வாங்கினா ஆகாதாம்.
நாலு தெரு தள்ளி இருக்கிற நாடார் கடையில்
நாலு தெரு தள்ளி இருக்கிற நாடார் கடையில்
போய் வாங்கியாறணுமாம். வயசான காலத்திலே, எதுவும் சொல்ல
வழி இல்லாமே அந்த மாமி வாயை மூடிண்டு இருக்கிறா .. இவ குணம்
தெரிஞ்சுதான் ஆண்டவன் இவ வயித்திலே ஒரு புழுப்பூச்சியைக் கூட
வைக்கலே. இவ புருஷன் செத்ததுக்கு கூட இவ பொறந்தாத்து மனுஷா
யாருமே வரலியாம் . பரிமளம் தான் சொன்னா. பக்கத்தாத்து மனுஷா
எல்லோரும் காரித் துப்பறா . இதையும் பரிமளம் சொன்னா."
வாசலில் நிழலாடியது. பார்வதியின் மருமகள் வந்தனா தான்... " வீட்டு
சாவியை அம்மா குடுத்துட்டுப் போனாங்களா ? " என்று கேட்கும்போதே
வேண்டா வெறுப்பாக சாவியை எடுத்து நீட்டினாள் மங்களம் .
" மாமி .. ஒரு நிமிஷம் நான் சொல்றத கொஞ்சம் பொறுமையா கேட்க
முடியுமா ? " என்றாள் வந்தனா.
" புதுசா என்னத்தையடியம்மா சொல்லிடப் போறே ? " என்றாள் மங்களம்
எரிச்சலுடன் .
" உங்க கோபம் நியாயமானது தான் மாமி .. அம்மா உடம்பிலே
ஆயிரத்தெட்டு வியாதி.. சுகர் ..பிரஷர்... மூட்டு வலி, நரம்புத் தளர்ச்சின்னு .
ஆயிரத்தெட்டு வியாதி.. சுகர் ..பிரஷர்... மூட்டு வலி, நரம்புத் தளர்ச்சின்னு .
அவங்க பிள்ளை உயிரோடு இருந்தவரை இந்த வியாதியின் மூர்க்கம்
எதுவுமே அவங்களுக்கே தெரியலே. அவர் போன ஒரு வாரத்திலேயே
அம்மாவும் படுக்கையில் விழுந்துட்டாங்க. நான் தினமும் ஆபீஸ் போய்
வருவதால் , அங்குள்ள வேலையில், என்னுடைய துக்கத்தில்
கொஞ்சமாவது மறந்திருக்க முடியுது . வீட்டிலேயே இருக்கிற அம்மாவை
கவலையே பாதி தின்ன ஆரம்பிச்சிட்டுது . வியாதியும் முத்திப் போச்சுது .
நல்ல உடற்பயிற்சி செய்யணும். வாக்கிங் போகணும்; டயட் கண்ட்ரோல்
வேணும்னு டாக்டர் சொல்லிட்டார்; இந்த வயசில் எக்செர்சைஸ்
பண்ணுங்கோ; வாக்கிங் போங்கோன்னு சொன்னா அம்மா கேட்பாங்களா?
வீட்டு வேலை செய்றதுகூட ஒரு நல்ல எக்செர்சைஸ்தானே ! அப்படி
நினைச்சுதான் வேலைக்காரியை வேலையை விட்டு நிறுத்தினேன்.
வாக்கிங் போக வைக்கணும்கிற ஒரே ஒரு காரணத்துக்காக தான்
தினமும் ஒரு சாமானா வாங்கி வரச் சொல்லி அம்மாவை வெளியே
அனுப்பறேன் . டயட் கண்ட்ரோலுக்காகத்தான் சிக்கனம் என்ற பெயரில்
கோதுமை கேழ்வரகு கூழ் சாப்பாடு. அவங்க டயட்டில் இருக்கும்போது,
நான் மட்டும் நல்ல சாப்பாடு சாப்பிட மனம் வரலே. அம்மா சாப்பிடுறது தான்
எனக்கும். என் வீட்டுக்காரர் பொறந்ததுமே அவர் அப்பா இறந்து போயிட்டாராம்
ஆனால் அம்மாவோட ஆறுதலுக்கு இவராவது இருந்தார். எனக்கு அந்த
பாக்கியம் கூட இல்லையே மாமி. பெத்தவங்களை எதிர்த்து காதல் கல்யாணம்
செய்து, ஒரு வருசத்துக்குள்ளேயே அவரையும் பறி கொடுத்துட்டு எந்த
ஒரு ஆதரவும் இல்லாமே நிக்கிறேன். என்னை நடைபிணமா , நாதி
இல்லாதவளா மத்தவங்க நினைக்காமே இருக்கணும்ன்னா அதற்கு ஒரு
ஆதரவு வேணும். அதை அவருடைய அம்மாவைத் தவிர வேறு யாராலே
தர முடியும் ? என் சுய நலத்துக்காகவாவது அம்மா இன்னும் அதிக நாள்
உயிரோடு இருந்தாகணும். அதுக்காகத் தான் இந்தக் கட்டுப்பாடுகள் எல்லாம் .
தவறா நினைச்சுக்காதீங்க மாமி " என்று சொல்லி விட்டு
தவறா நினைச்சுக்காதீங்க மாமி " என்று சொல்லி விட்டு
நடந்தாள் வந்தனா .
" ஓஹோ .. அன்புக்கு இப்படியும் ஓரு அர்த்தம் இருக்க முடியமா ? " என்பது போல் சாமாவைப் பார்த்தாள் மங்களம்
' இப்பவாவது உண்மையான அன்பு என்னன்னு புரிஞ்சிண்டியா ?' என்று
கேட்பதுபோல் சாமாவின் பார்வையிருந்தது
No comments:
Post a Comment