இனி எல்லாம் சுபமே !!
" பாட்டி, நீ ராஜா கதை சொல்லி ரொம்ப நாளாச்சே, ஏதாவது ஒரு ராஜாக்
கதையை எடுத்து விடறதுதானே ? " என்றான் பிரபு
" அப்படிக் கேளு என் சிங்கக் குட்டி, தங்கக் கட்டி அண்ணா " என்றாள் மனோ.
" ஒரு கிறாமப் புரத்து வீடு . வீட்டுக்கு வெளியே பௌர்ணமி நிலவு பால் போல்
ஒளி வீசி கிட்டு இருக்குது. ஜிலுஜிலுன்னு வேப்ப மரக்காற்று வீசிக்கிட்டு
இருக்குது. குடிசை வீடானாலும் நன்கு சுத்தம் செய்யப்பட்டு சாணி தெளிச்ச
வாசலும் , வீட்டு வாசலில் வேலியோரத்தில் பூத்துக் குலுங்கும் மலர்களின் அருமையான வாசனையும் , மனசுக்கு ரொம்ப நிம்மதியைத் தர்றதா இருந்தது. அதை அனுபவிக்கும் எண்ணத்தோட அங்கு வந்து , அங்குள்ள மரத்தடியில் ஒரு ஆள் நின்றார். " என்று பாட்டி சொல்ல, " அந்த நேரத்தில் அந்த ஆளுக்கு
அங்கு என்ன வேலை பாட்டி ?" என்று கேட்டான் பிரபு.
" அவர் அந்த நாட்டு ராஜா. பொதுவா ராஜாக்கள் எல்லாருமே ராத்திரி நேரத்தில்
மாறுவேஷத்தில் நகர் வலம் வருவாங்க" என்று பாட்டி சொல்ல, " ஏன் பாட்டி, அவங்க திருடங்க மாதிரி ராத்திரி நேரத்தில், அதுவும் மாறுவேஷத்தில்
வரணும்.?" என்று கேட்டாள் மனோ.
"அந்தக் கால ராஜாக்கள் எல்லாம் அப்படித்தான் வருவாங்க. எந்த வீட்டிலாவது
பேச்சு சத்தம் கேட்டால், அவங்க என்ன பேசறாங்கன்னு ஒட்டுக் கேட்பாங்க.
அது நாடு, ராஜாங்கம் சம்பந்தப் பட்ட விஷயமா இருந்தால், விஷயத்துக்கு
ஏற்ற மாதிரி நடவடிக்கை எடுப்பாங்க. ஏன்னா, பொதுமக்கள் ராஜா எதிரே
ஏற்ற மாதிரி நடவடிக்கை எடுப்பாங்க. ஏன்னா, பொதுமக்கள் ராஜா எதிரே
நின்று பேச பயப்படுவாங்க, நாட்டில் ஏதாவது குறைபாடு இருந்தாலும்
வெளியில் நேருக்கு நேர் சொல்லப் பயப்படுவாங்க. அதான், ராத்திரியில்,மாறு
வேசத்தில், ராஜாக்கள் நகர் வலம் வருவாங்க. அப்படி நகர்வலம் வந்த
ஒரு ராஜாதான், ஒரு வீட்டு வாசலில் கயிற்றுக் கட்டிலில் ஒரு
தாத்தாவும் பேரனும் படுத்துகிட்டு, கதை பேசிகிட்டும் கேலி பண்ணி சிரிச்சி
கிட்டும் இருக்கிறதைப் பார்த்துட்டு அவங்க என்ன பேசிக்கிறாங்கன்னு கேட்க
மரத்தடியில் ஒளிந்து நின்னுட்டு இருந்தார். அப்போ, பேரன் தன்னுடைய
தாத்தாகிட்டே " ஏன் தாத்தா நம்ம நாட்டு ராஜா நல்லவராத்தானே இருக்கிறார். பிறகு ஏன் நம்ம ஜனங்களில் நிறைய பேர் 'இந்த செல்வபுரி நாட்டில்
சுதந்திர மனிதனா இருக்கிறதுக்குப் பதிலா, மணிப்புரி நாட்டில் சிறைக் கைதியா
இருக்கலாம்னு சொல்றாங்களே. அது ஏன் தாத்தா ?" ன்னு கேட்டான்.
சுதந்திர மனிதனா இருக்கிறதுக்குப் பதிலா, மணிப்புரி நாட்டில் சிறைக் கைதியா
இருக்கலாம்னு சொல்றாங்களே. அது ஏன் தாத்தா ?" ன்னு கேட்டான்.
அதுக்கு தாத்தா, ' நீ சின்னப் பையன், படிக்கிற பையன். உனக்கு அரசாங்க
விசயமெல்லாம் வேண்டாம். அதெல்லாம் தெரிய வேண்டிய வயதில் நீயே
தெரிஞ்சுக்கலாம். எனக்கு தூக்கம் வருது. என்னை தொந்தரவு பண்ணாமே
நீயும் தூங்கு' என்றார். அதுக்குப் பிறகு அந்த ரெண்டு பெரும் எதுவும் பேசலே,
மரத்தடியில் நின்று கொண்டு, தாத்தா பேரன் பேசறதைக் கேட்ட, செல்வபுரி
மன்னன் செல்வேந்திரன், ' மணிப்புரி நாட்டு சிறையில் இருப்பதைக்கூட
இந்த நாட்டு மக்கள் பெருமையாக நினைக்கிறார்களா? அந்த சிறையில் அப்படி
என்னதான் இருக்கிறது? கீர்த்திவாசன் அவ்வளவு நல்லவனா ? நமக்கு கப்பம் கட்ட மறுக்கும் குறுநில மன்னன்தானே அவன். நாம் கூட அவன்
மீது விரைவில் போர் தொடுக்க நினைத்திருக்கிறோமே ' என்றெல்லாம்
நினைத்தபடியே அரண்மனை வந்து சேர்ந்த செல்வேந்திரன், மறுநாள் தனது
முதன் மந்திரி, தனது மனைவி இருவரிடமும், ' நான் ஞானம் தேடி வெளியில்
செல்கிறேன். நான் எங்கே செல்கிறேன், எப்போது வருவேன்ங்கிறது ரொம்ப
ரகசியமா இருக்கட்டும்'னு சொல்லிட்டு வெளியேறினார். இது நடந்து ஒரு
வாரம் கழித்து ஒருநாள் ... அன்று மணிப்புரி மன்னன் கீர்த்திவாசனின் பிறந்த
நாள். அதனால் நகரமே விழாக் கோலத்தில் இருந்தது. மக்களுடைய ஆரவார
வரவேற்பைக் கண்டு மன்னன் மகிழ்ந்தான். ஆடல் பாடல்களை ரசித்தான்.
கலைஞர்களுக்கும், ஏழை எளியவர்களுக்கும் பரிசுப் பொருளும், கை நிறைய
பணமும் கொடுத்தான். மத்தியான வேளை வந்ததும் சிறைச்சாலைக்கு
சென்றான். அங்கு அவனுடைய மேற்பார்வையில் சிறைக்கைதிகளுக்கு
உணவு பரிமாறப் பட்டது.
அப்போது, ஒரு சேவகன், ஒரு கைதியின் இலையில் வைப்பதற்காக எடுத்த
லட்டு, இலையில் வைக்கும்போது கீழே விழுந்து விட்டது. கீழே விழுந்த
லட்டை எடுத்து கைதியின் இலையில் வைத்தான் சேவகன்.
அதைக் கண்ட மன்னன், கோபமாக கையை ஓங்கிக்கொண்டு " முட்டாளே,
என்ன இது ?" ன்னு இரைந்தான்.
"கை நழுவி விட்டது மன்னா"ன்னு அந்த சேவகன் பதில் சொன்னான். உடனே
கீர்த்திவாசன், " கை தவறியதும்,லட்டு கிழே விழுந்ததும் ஒரு தவறே அல்ல.
ஆனால், கீழே விழுந்த பொருளை திரும்பவும் எடுத்து இலையில் வைத்தது
தான் தப்பு; இங்கே நிற்காதே. போ. இவனுக்குப் பதிலாக இந்த வேலையை
தான் தப்பு; இங்கே நிற்காதே. போ. இவனுக்குப் பதிலாக இந்த வேலையை
வேறு யாராவது செய்யுங்கள் "ன்னு சொல்லிட்டு, ' மணிப்புரி வீரர்களே, நன்கு
கவனியுங்கள். இங்கு கைதியாக அடைபட்டு, இங்கு உட்கார்ந்திருக்கும்
இவர்கள் திருடர்களோ, கொலைக்குற்றவாளிகளோ அல்ல. அனைவரும்
ஒரு நாட்டின் வீர்கள். அந்த நாட்டு மன்னனின் ஆணைக்குட்பட்டு, இங்கு வேவு
பார்க்க வந்து சிறைப் பட்டவர்கள். இவர்கள் வீரர்கள். நம் விரோதிகள் அல்ல.
நாம் வீரகளாக இருந்தால் மட்டும் போதாது. மற்ற நாட்டு வீரர்களையும்
மதிக்க கற்றுக் கொள்ளவேண்டும். நமது வீரத்தைப் போர்முனையில்தான்
காட்ட வேண்டுமே தவிர, அரசியல் கைதிகளிடம் காட்டக் கூடாது. நமது
வீரர்களுக்கு கொடுக்கும் அதே மரியாதையை , நீங்கள் இவர்களிடமும்
காட்ட வேண்டும்." ன்னு சொல்ல
" மன்னா , உன் வீரத்திற்கு நான் அடிமை" என்ற குரல் கேட்டு திரும்பிய
கீர்த்திவாசன், " யாரது?" ன்னு கேட்க, " நான்தான்" ன்னு சொல்லி
மாறு வேடத்தைக் கலைத்தான் மன்னன் செல்வேந்திரன்.
" மன்னா , உன் வீரத்திற்கு நான் அடிமை" என்ற குரல் கேட்டு திரும்பிய
கீர்த்திவாசன், " யாரது?" ன்னு கேட்க, " நான்தான்" ன்னு சொல்லி
மாறு வேடத்தைக் கலைத்தான் மன்னன் செல்வேந்திரன்.
" மகாப் பிரபு, விருந்தாளியாக வரவேண்டிய நீங்கள், கைதியாகவா ?"ன்னு
பதறிப் போய்க்கேட்டான்.
" கீர்த்தி வாசா, நானே விரும்பித்தான் சிறைப் பட்டேன். என்னுடைய நாட்டு
மக்கள் உன் புகழைப் பாடுவதை என் காதாலேயே பல முறை கேட்டிருக்கிறேன்.
உண்மை என்ன என்பதைக் கண்டறிய இங்கு கைதியாக வந்தேன். மாற்று
நாட்டவர்களின் வீரத்தை மதிக்கும் நீ உண்மையான வீரன். உன்னிடமுள்ள
ஒரு நல்ல குணம் என்னிடம் இல்லாமல் போய்விட்டதற்காக இப்போது
வருந்துகிறேன். என் நாட்டு மக்கள் என்னைவிட உன்னை நன்றாகப் புரிந்து
வைத்திருக்கிறார்கள். நான் உன்னை விட வயதில் மிகவும் பெரியவன்.
எனக்காக ஒன்று செய்வாயா?"ன்னு கேட்க, " ஆணையிடுங்கள் மன்னா "ன்னு
கும்பிட்டு நின்றான் கீர்த்திவாசன்.
"என் மகளை நீ மணந்து கொண்டு செல்வபுரியையும் நீ ஆள வேண்டும். இது
என் ஆசை. என் நாட்டு மக்களும் இதை மனப்பூர்வமாக வரவேற்பார்கள் "ன்னு
சொல்ல, கீர்த்தி வாசனுக்கும், செல்வபுரி இளவரசிக்கும் கல்யாணம் ரொம்ப
சிறப்பா நடந்துச்சு.
"பெருந்தன்மையான குணத்தில் கீர்த்திவாசன்தான் சிறந்தவன்னு நாம
நினைச்சோம். அவரோட நல்ல குணத்தை தெரிஞ்சுகிட்டு, தனக்கு கீழ்ப்பட்ட,
கப்பம் கட்டற குறுநில ராஜாதானேன்னு நினைக்காமே தன்னோட மகளை
கப்பம் கட்டற குறுநில ராஜாதானேன்னு நினைக்காமே தன்னோட மகளை
கல்யாணம் செய்து கொடுத்து, மாப்பிள்ளையாக்கிக் கொண்ட பெருந்தன்மை
நம்ம ராஜாவைத் தவிர வேறு யாருக்கு இருக்க முடியும்? இனிமே சண்டை
சச்சரவு எதுவும் வராது. நடக்கிறது எல்லாம் சுபமாத்தான் இருக்கும்' னு
சச்சரவு எதுவும் வராது. நடக்கிறது எல்லாம் சுபமாத்தான் இருக்கும்' னு
மக்கள் பேசிக் கொள்வதைக் கேட்டு மகிழ்ந்தான் செல்வேந்திரன்"
என்று பாட்டி கதையை முடிக்க, " ரெண்டு பேருமே சூப்பர் கிங்க்ஸ் தான் "
என்றனர் பிரபுவும், மனோவும்
என்று பாட்டி கதையை முடிக்க, " ரெண்டு பேருமே சூப்பர் கிங்க்ஸ் தான் "
என்றனர் பிரபுவும், மனோவும்
.
No comments:
Post a Comment