Labels

About myself Name : Kumari S. Arunachalam alias Aruna S. Shanmugam Occupation : Form

Friday, July 13, 2012

Scanning of Inner- Heart ( மனதின் மறு பக்கம் ) - Scan Report No: 31

( நான் எழுதிய இச்சிறுகதை 27.07.2001 குங்குமம் வார இதழில்  வெளியாகி
  யுள்ளது)

                                                     பெரியதொரு மாற்றமே  !

"க்கும்" என்று தொண்டையை சரி செய்துகொண்டு, தான் தொடங்கியுள்ள 
பன்னிரண்டாவது கம்பெனியின் முதலாமாண்டு விழாவில் பேசத் தொடங்கினார் 
தொழிலதிபர் சுந்தரேசன்.

" டியர் ப்ரெண்ட்ஸ் , கடந்த சில மாதங்களாக உங்களைப் பற்றி என் நண்பர்கள் 
அறிந்து வந்து சொன்ன செய்தி என்ன என்பது தெரியுமா ? "
" என்ன ? " என்பதுபோல் ஆர்வம் தோய்ந்த முகத்துடன் சுந்தரேசன் வாயைப் 
பார்த்துக் கொண்டிருந்தனர் ஊழியர்கள்.
" நீங்கள் எல்லோரும் பொது மக்களின் முன்னிலையில் , ஐ மீன் .. வாடிக்கை
 யாளர்களின் முன்னிலையில் உங்களது சொந்தக் கதைகள் பற்றியே பேசிக் 
கொண்டிருக்கிறீர்களாம் . இது உங்களுக்கு நான் விடுக்கும் முதலும் கடைசி
யுமான   எச்சரிக்கை " என்று கூறிவிட்டு, பல பொதுவான விஷயங்கள் பற்றி 
கேட்டுத் தெரிந்து கொண்டு உட்கார்ந்தார்.

சில நாட்களுக்குப் பிறகு .. " ஹலோ ஸ்ரீராம் , நான் சுந்தரேசன் பேசறேன்.
போன வாரம் நடந்த கம்பெனி ஆண்டு விழாவில் என்னுடைய ஒர்க்கர்சுக்கு 
சில அட்வைஸ் பண்ணினேன். அது மிகப் பெரிய மாற்றத்தை உண்டாக்கி 
இருக்கும்னு நினைக்கிறேன். நீ போய் வழக்கம் போல விசிட் பண்ணிட்டு 
எனக்கு ரிப்போர்ட்  குடுக்கிறியா ? "

கொஞ்ச நேரம் கழித்து, " ஹலோ சுந்தரேசன் , நான் ஸ்ரீராம் பேசறேன். நிஜமாகவே உன்னுடைய அட்வைஸ் மிகப் பெரிய மாற்றத்தை உண்டு பண்ணி 
இருக்கு.  .. யெஸ் .. உன்னோட வொர்கேர்ஸ் , இப்போ பப்ளிக் யாரையும் 
உள்ளே  விடறதில்லே . என்ன விஷயம்னு எழுதி,அதை வாசலில் உள்ள  செக்யூரிட்டி கிட்டேக் குடுத்துட்டுப் போனா, இவங்க பதிலை வீட்டுக்கு
அனுப்புவார்களாம் !" 
அதிர்ந்து போனார் சுந்தரேசன்.

No comments:

Post a Comment