Labels

About myself Name : Kumari S. Arunachalam alias Aruna S. Shanmugam Occupation : Form

Saturday, May 19, 2012

" இல்லை " என்று மறுக்க முடியுமா உங்களால் ?

   .



கோழையான  எந்த வொரு   மனிதனும் போர்க்களத்தில்   எல்லோருடனும் 
சேர்ந்து எளிதாக வெற்றி  பெற்று விடுவான்.  அவனை தனியாக போரிடச்
சொன்னால் கண்டிப்பாக தோற்று விடுவான்.   எங்கும்  எப்போதும்  unity தேவை !


வாழ்வின் வெற்றி என்பது ஒரு மனிதனின்  மனதில் உள்ள நேர்மையைப் 
பொறுத்தே அமைகிறது.



எண்ணங்கள் மீது கவனம் வையுங்கள்.  மனதில் தோன்றும்  கெட்ட எண்ணங்கள்  ஆபத்தான திருடர்கள்.





புத்தகங்கள் மனிதப்  பிறவிகள்  அல்ல;  ஆனால்  அவை என்றும் உயிருடன் 
நிலைத்து நிற்கிறது.



ஆற்றலைக்  காட்டிலும் ,   ஆர்வமும்  விடாமுயற்சியும்  வெற்றிக்கு 
வித்திடுகிறது. 


சில சமயங்களில்,  மிகவும் சலிப்பூட்டுகின்ற, எரிந்து விழுகின்ற நண்பன்தான்  உங்களது நண்பர் களில் மிகச் சிறந்த வனாக   இருக்கலாம். 

முதல் முயற்சி  தோல்வியா ? மீண்டும் முயற்சி  செய்யுங்கள். அதிலும் 
தோல்வியா ? விடா முயற்சியில் முழுக் கவனத்தை  செலுத்துங்கள். என்ன பலன் என்கிறீர்களா ?தோல்வியிலிருந்து வெகுதூரம் வந்து விட்டீர்களே !அதுவே   ஒரு பெரிய சாதனைதானே !



படிப்பில் ஈடுபாடு  இல்லாத  அரசனாக இருப்பதைவிட , பரணில் , நிறைய
புத்தகங்களுடன்  ஏழையாக  இருப்பதே மேல் .




நாள் முழுவதும்  பிரார்த்தனையில் ஈடுபடுவதைவிட நம்மை விட எளியோருக்கு சிறு சிறு உதவி செய்வது, நம்மை ஆண்டவன் அருகில்  கொண்டு சேர்க்கும் 



" வாழ்க்கை " என்றாலே, அது துணிச்சல்  மிகுந்த  சாகசப்  பயணம என்றுதான் அர்த்தம்.
-- 3






















No comments:

Post a Comment