வெளியாகி உள்ளது )
வரட்டும் .. கொளுத்திடறேன் ! .
" அம்மா பென்சில் வேணும்மா "
" போன வாரம் அப்பா கொண்டு வந்து கொடுத்த பென்சில் என்னாச்சு ? "
" தொலைஞ்சு போச்சு "
" மனசிலே பயம்னு ஒண்ணு இருந்தா தொலைச்சிட்டு வந்து நிற்கச் சொல்லுமா ? செய்றதையும் செஞ்சிட்டு முழிக்கிறதைப் பாரு.அப்படியே
ஒரு இடி இடிச்சேன்னா தெரியும். போன வாரம் நாலு கொயர் ரிஜிஸ்டர்
ஒரு இடி இடிச்சேன்னா தெரியும். போன வாரம் நாலு கொயர் ரிஜிஸ்டர்
ஒண்ணை தொலைச்சிட்டு வந்து நின்னே. ரெண்டு நாள் முன்னே அப்பா
குடுத்த ஸ்கேலை தொலைச்சே . பொருளோட அருமை தெரிஞ்சா அதைத்
தொலைக்கச் சொல்லுமா ? சரி ... சரி .. கண்ணிலே தண்ணி வரலே. வராத கண்ணீரை கஷ்டப்பட்டு வரவழைக்காதே.அப்பா வந்ததும்
குடுத்த ஸ்கேலை தொலைச்சே . பொருளோட அருமை தெரிஞ்சா அதைத்
தொலைக்கச் சொல்லுமா ? சரி ... சரி .. கண்ணிலே தண்ணி வரலே. வராத கண்ணீரை கஷ்டப்பட்டு வரவழைக்காதே.அப்பா வந்ததும்
ஞாபகப்படுத்து. நாளைக்கு ஆபீசிலிருந்து கொண்டு வரச் சொல்றேன்.
இன்னும் ஒரு நாளைக்கு எப்படியாவது அட்ஜஸ்ட் பண்ணிக்கோ "
என்றாள் மேகலா.
" அம்மா. என்கூடப் படிக்கிற பசங்க எல்லாரும் கால்குலேடர் வச்சிருக்காங்க . எனக்கும் ஒன்னு வேணும்.ஆபீசிலிருந்து அப்பாவை கொண்டு வந்து தரச் சொல்லும்மா. ப்ளீஸ்ம்மா .. நீ சொன்னாதான்
அப்பா கேட்பார் " என்றான் ரவி கொஞ்சலாக.
" கொண்டு வந்து குடுக்கிற எல்லாத்தையும் நீ எவ்வளவு பத்திரமா
பொறுப்பா வச்சிருக்கே" என்று கேட்டாள் மேகலா
பொறுப்பா வச்சிருக்கே" என்று கேட்டாள் மேகலா
" இல்லேம்மா, ப்ராமிஸா .. இனிமே எதையும் தொலைக்க மாட்டேன் "
" சரிடா, சும்மா தொணதொணக்காதே .நாளைக்கு குவாட்டர்லி எக்ஸாம்
இருக்கே. போய்ப் படி "
க்வார்டேர்லி , ஹாப் இயர்லி எல்லாம் முடிந்து ஆன்னுவல் எக்ஸாம் நடந்து கொண்டிருந்தது.
" போன் அலறுதே , காதில் விழலையா ? " என்று கிச்சனிலிருந்தபடியே கத்தினாள் மேகலா .
" மாட்டேன் போ. படிக்கிறப்ப டிஸ்டர்ப் பண்ணாதேம்மா. நல்லா படிச்சு நான் அஞ்சாம் கிளாஸ் போன பிறகுதான் கால்குலேட்டர் கொண்டு வந்து
தர்றதா அப்பா சொல்லி இருக்கிறார்."
" உங்க ஸ்கூலில் கால்குலேட்டர் யூஸ் பண்ண அலவ் பண்றாங்களா என்ன ?" என்று கேட்டபடியே கிச்சனை விட்டு வெளியில் வந்தாள் மேகலா
" ஊஹூம் கிளாஸ் டைம்ல் யூஸ் பண்ணக் கூடாது. லஞ்ச் டைம்ல் நாங்க
கால்குலட்டேரில் பசில்ஸ் போட்டு விளையாடுவோம்" .
ரேசீவரை எடுத்த வேகத்தில் முழங்கையை சுவரில் மோதிக் கொண்ட மேகலா
" சனியனே " என்றாள்
" சனியனே " என்றாள்
" என்னடி இது , விசயத்தை சொல்றதுக்கு முன்னாடியே சனியன்னு திட்டறே. திட்டறதை எல்லாம் இப்பவே திட்டித் தீர்த்திடு. நான் வீட்டுக்கு
வர்றப்போ அழுது ஆர்ப்பாட்டம் பண்ற வேலையெல்லாம் இருக்கக்
கூடாது. உன் மனசை திடப் படுத்திகிட்டு நான் சொல்றதை
பொறுமையாக் கேளு.தவிர்க்க முடியாத சூழ்நிலையில் நான் எங்க ஆபீஸ் டைப்பிஸ்ட்
பொறுமையாக் கேளு.தவிர்க்க முடியாத சூழ்நிலையில் நான் எங்க ஆபீஸ் டைப்பிஸ்ட்
சுலோச்சனாவை கல்யாணம் பண்ண வேண்டிய கட்டாயத்தில் இப்போ
இருக்கிறேன். நான் என்ன சொல்ல வர்றேன்னு உனக்கு புரிஞ்சிருக்கும்னு நினைக்கிறேன். அவ தனியா இருக்க விரும்பலே. நம்மோடு சேர்ந்துதான்
இருப்பேன்னு அடம் பிடிக்கிறா. இன்னிக்குஅவளை நம்ம வீட்டுக்கு நான்
கூட்டிட்டு வர்றேன். அக்கம் பக்கத்தைப் பற்றி நீ கவலைப் படாதே. ஏதோ
இருப்பேன்னு அடம் பிடிக்கிறா. இன்னிக்குஅவளை நம்ம வீட்டுக்கு நான்
கூட்டிட்டு வர்றேன். அக்கம் பக்கத்தைப் பற்றி நீ கவலைப் படாதே. ஏதோ
கொஞ்ச நாளைக்கு வம்பு பேசுவாங்க. அவங்களுக்கே போரடிச்சுப் போய்ட்டா
அத்தோடு விட்டுடுவாங்க. ஆனா ...நீதான் இந்த விசயத்தில் கொஞ்சம் அட்ஜஸ்ட்
பண்ணிப் போகணும். " என்ற ராகவன் போனைக் கீழே வைத்து விட்டான் .
அத்தோடு விட்டுடுவாங்க. ஆனா ...நீதான் இந்த விசயத்தில் கொஞ்சம் அட்ஜஸ்ட்
பண்ணிப் போகணும். " என்ற ராகவன் போனைக் கீழே வைத்து விட்டான் .
நின்று கொண்டிருக்கும் இடத்திலிருந்து வழுக்கி ஏதோ அதலபாதாளத்தில்
விழுவது போல உணர்ந்தாள் . ஒருசில வினாடிகள் மௌனமாக
இருந்தாள். பிறகு பெண்மைக்குரிய ஆக்ரோசத்துடன் " என்ன ஒரு
இருந்தாள். பிறகு பெண்மைக்குரிய ஆக்ரோசத்துடன் " என்ன ஒரு
தெனாவெட்டு இருந்தா என்கிட்டேயே 'ஆபிஸிலிருந்து டைப்பிஸ்ட்டை
கொண்டு வர்றேன்'னு சொல்வான் ? வரட்டும் ராஸ்கல் . ரெண்டு பேரையும்
ஒண்ணா சேர்த்து வச்சு கொளுத்திடறேன் கொளுத்தி "என்று இரைந்தாள்
புத்தகத்திலிருந்து கண்களை நிமிர்த்திப் பார்த்த ரவி " என்னம்மா ? " என்றான் .
" உம்.. புண்ணாக்கு. படிச்சுக் கிழிச்சது போதும்.போடா வெளியே " என்றபடி அவன் கையிலிருந்த புத்தகத்தைப் பிடுங்கி தூர எறிந்தாள் .
வாசல்படியில் வந்து உட்கார்ந்த ரவிக்குஅம்மாவின் கோபத்துக்குக் காரணம் "அப்பா ஆபீசிலிருந்து கொண்டு வரப் போகிற டைப்பிஸ்ட் என்பது மட்டும்
புரிந்தது.
"அப்பா ஆபீசிலிருந்து எதைக் கொண்டு வந்தாலும் சந்தோசப்படும் அம்மா,
அப்பா கொண்டு வரப்போகிற டைப்பிஸ்ட் பிடிக்காமல் ஏன் கோபப்படணும்
? டைப்பிஸ்ட்ன்னா என்ன ? அது எப்படி இருக்கும் ? அது நமக்கு யூஸ்
? டைப்பிஸ்ட்ன்னா என்ன ? அது எப்படி இருக்கும் ? அது நமக்கு யூஸ்
ஆகாதா ? " என்ற யோசனையில் ஆழ்ந்திருந்தான் ரவி.
No comments:
Post a Comment