Labels

About myself Name : Kumari S. Arunachalam alias Aruna S. Shanmugam Occupation : Form

Saturday, May 05, 2012

நாமும் கொஞ்சம் யோசித்துப் பார்ப்போமா ?


செல்வத்தை சேர்ப்பதற்காக நாம் செய்யவேண்டிய
சிறுமைத் தனங்களை நினைத்துப் பார்த்தால்,  பல 
வேளைகளில், செல்வமே இல்லாமல் இருப்பது மேல்
 என்று தோன்றுகிறது.


மலையானது புயலுக்கு அசைவதில்லை;
அறிவாளிகள் புகழ்ச்சிக்கு   மயங்க மாட்டார்கள் 



நாளை,  நாளை  என்று சோம்பேறிகள் மட்டுமே
சொல்வார்கள் ; இன்றைய நாளின்அருமையை 
உணர்ந்தவர்கள் இதோ உழைத்துக் கொண்டே 
இருக்கிறார்கள் 


கேடு கெட்ட செயல்களை செய்பவர்கள் தங்களது 
செய்கைக்கு காரணம்  தேடிக் கொண்டிருப்பார்கள் ; 
 நல்லவர்கள், தங்களை அறியாமலே நடந்து
விட்ட தவறுக்காகக்கூட வருந்திக் 
கொண்டிருப்பார்கள்



ஆயிரம் நண்பர்கள் இருப்பதில்  எந்த பெருமையும் 
இல்லை.  ஒரு எதிரி கூட முளைத்து விடாமல் பார்த்துக் கொள்வதில்தான் உண்மையான பெருமை
 இருக்கிறது 



நம்முடைய வயது என்பது ஒரு சாதாரண எண்தான்;
திறமையாக  செயல்பட மனம்  இளமையோடு தூய உணர்வோடு இருக்க வேண்டும் .


நமக்கு தொல்லை கொடுப்பவர்களை மன்னிப்பது
 மிக மிக நல்ல குணம்;  அதை ( தொல்லைகளை )  மறந்து விடுவது மிக உயர்வான குணம் !
 



முன்னேற்றதிற்கு முடிவு என்பதே கிடையாது; 
ஒவ்வொரு நாளும் நாம் செய்வதை  மேலும் மேலும் சிறப்பாக செய்ய கற்றுக்கொள்ள வேண்டும் 


வாழ்க்கையை வளமாக்க விரும்பினால் ஒரு 
வினாடி நேரத்தைக்கூட வீணடிக்கக்  கூடாது.  காலத்தால் நெய்யப்பட்டதுதான் வாழ்க்கை 


இக்கட்டான நேரங்களில் உங்களுக்கு தேவையான
ஆலோசனைகளை அறிவாளிகளிடம் கேட்காதீர்கள்; அனுபவசாலிகளைக் கேளுங்கள்..

-- 3

No comments:

Post a Comment