Labels

About myself Name : Kumari S. Arunachalam alias Aruna S. Shanmugam Occupation : Form

Saturday, April 14, 2012

அட, சத்தியமா நான் சொல்லுவதெல்லாம் ரொம்ப முக்கியம் !






உப்பு, ஆலோசனை, - இந்த இரண்டையும் மற்றவர்கள் கேட்டால் மட்டுமே கொடுக்க வேண்டும்.



பேசுவதற்கென்று ஒரு நேரமும், அமைதியாக  இருப்பதற்கென்று       ஒரு நேரமும் இருக்கிறது. பேச வேண்டிய நேரத்தில் அமைதியாக இருப்பதும், அமைதியாக இருக்க வேண்டிய நேரத்தில் பேசுவதும் பிரச்சினைகளை  உருவாக்கும்


நாம் எல்லோரும் வாழ்க்கையைப் புரிந்து கொள்வதற்குள் வாழ்வின் பெரும் பகுதி முடிவடைந்து விடுகிறது.



தன்னம்பிக்கையும் தைரியமும்தான் வெற்றிப் பாதைக்கான முதற் படிக்கட்டு.




கடனாளியாய் காலையில் எழுவதைவிட, பட்டினியாய் இரவில் படுக்கச் செல்வது  உத்தமம்




குழந்தைகளின்"ஏன்,எதற்கு, எப்படி" என்கிற கேள்விகள் பகுத்தறிவுத் தன்மையின் திறவு கோல்.





நீங்கள் விரும்பியது கிடைக்காத பட்சத்தில், கிடைத்ததை விரும்பக் கற்றுக் கொள்ளுங்கள்.


புத்திசாலிகள்,மற்றவர்களின் அனுபவங்களைப் பார்த்தே தங்களது வாழ்க்கை யை வழி நடத்திச்செல்வார்கள்

திறமைசாலிகளின் மிக சிறந்த அடையாளம், தன்னடக்கத்துடன் நடந்து கொள்வதே





அனுபவம்தான் மிகச் சிறந்த ஆசிரியன். அவை கற்றுத் தரும் பாடங்களோ விலை மதிக்க முடியாதவை.
-- 3

No comments:

Post a Comment