Labels

About myself Name : Kumari S. Arunachalam alias Aruna S. Shanmugam Occupation : Form

Friday, February 10, 2012

Scanning of Inner- Heart ( மனதின் மறு பக்கம் ) - Scan Report No: 11

                                                   


 
                                                    அப்பா ? அப்பப்பா !!  

நீயாவது உன் பிரண்டுக்கு கொஞ்சம் புத்தி சொல்லும்மா. இன்னும் எவ்வளவு நாளைக்குதான் இவ கல்யாணத்தைத் தள்ளிப் போட்டுகிட்டே இருக்கப்போறானு கேளும்மா . அக்கம் பக்கத்தில் இருக்கிறவங்களுக்குப் பதில் சொல்லி மாளலே. இவ சீக்கிரமா வெளியேறினாதானே அடுத்தாப்பலே இருக்கிற மற்ற பிள்ளைகளுக்கு ஒரு வழி பண்ண முடியும்" என்று ராமநாதன் சொல்லிக்கொண்டிருக்கும்போதே " வாடீ, ஏற்கனவே ரொம்ப லேட் ஆயிடுச்சு. அப்பா .. நான் போயிட்டு வர்றேன்ப்பா " என்றபடி லலிதாவின் கைகளைப் பிடித்து இழுக்காத குறையாக  வெளியில் இழுத்து வந்தாள் சந்திரிகா. 
இருவரும் பஸ் ஸ்டாப்பை நோக்கி நடக்க ஆரம்பித்தார்கள். 
" டீ லூசு. அப்பா இவ்வளவு வருத்தப் படறாரே, ஒன்னு அப்பா பார்க்கிற வரனை ஒத்துக்கோ. இல்லே மனசிலே யாரையாவது நினைச்சிட்டுருந்தா இழுத்துட்டுப் போய் கல்யாணம் பண்ணிக்கோ. நீ கல்யாணம் பண்ணிக்காமே இருக்கிறதைப் பத்தி ஆபீசில் உன் காது படவே எத்தனை பேர் என்னென்னவோ கமெண்ட்ஸ் அடிக்கிறாங்களே. அவங்க கிண்டல் பண்றது உனக்கு தாலாட்டு பாடறமாதிரி இருக்குதா என்ன ? " என்று லலிதா கேட்டதுமே, ஏளனச்சிரிப்பு சிரித்தாள் சந்திரிகா.
" ஏண்டீ சிரிக்கிறே? என்னைப் பார்த்தா பைத்தியம் மாதிரி தோணறதா?" என்ற காட்டமான கேள்வி வெளிப்பட்டது லலிதாவிடமிருந்து. 
" அட லூசு, அப்பாவோட கவலைதான் உனக்குத் தெரியும். அப்பாவை எனக்கு மட்டுந்தான் தெரியும். இன்னும் எனக்கு கல்யாணம் பண்ணி வைக்காமே இருக்கிறாரேனு நீ நினைச்சுக்காம இருக்கத்தான் இப்படி ஒரு டயலாக் அடிக்கிறார். நீயும் அதை நிஜம்னு நம்பிட்டே. கல்யாணம் பண்ணி நான் வீட்டை விட்டு போய்ட்டா, படிச்சிட்டுருக்கிற ரெண்டு தம்பிங்க, வேலை தேடிட்டு இருக்கிற தங்கச்சிங்க, நோயாளி அம்மா, இத்தனை பேர் நிலைமை என்னாகிறது? அப்பாவோட பென்ஷன் பணம் வீட்டு வாடகைக்கே சரியாயிடும். மற்ற செலவுக்கு? என்னோட சம்பள பணம் எல்லா செலவையும் பாலன்ஸ் பண்ணுது. அது இல்லாமே எங்க குடும்ப வண்டி ஓடாதுனு எனக்கும் தெரியும். அப்பாவுக்கும் தெரியும். இருந்தாலும், நானோ, மற்றவர்களோ எனக்கு கல்யாணம் ஆகாததை பற்றி அப்பாவை குறை சொல்லக் கூடாதே என்பதற்காக அப்பப்போ ஒரு ஸீன் கிரியேட் பண்ணுவார். இந்த ட்ராமா உனக்கு வேணும்னா புதுசா இருக்கலாம். எனக்கு பார்த்துப் பார்த்து போரடிச்சுப் போன ஒரு விஷயம்." என்றாள் லலிதா.  
" சரிடீ. அடுத்தவாட்டி அவர் சொல்றப்போ நீ சம்மதம்னு சொல்லிப் பாரேன். அப்போ அவர் என்ன பண்ணுவார்?" 
" அடிப் போடி பைத்தியக்காரி, பொண்ணு பார்க்க வர்ற டிராமாவை நடத்துவார்.  அது எவ்வளவு நல்ல  வரனாயிருந்தாலும் ஜாதகம் சரி இல்லை என்பார். பையனோட அம்மா ஒரு ராக்சஷினு கதை சொல்வார்.  என்னைப் பார்க்கிறப்ப அவருக்கு ஒரு குற்ற உணர்ச்சி உண்டாகும். அப்பா நல்லவர்தான். பொருளாதார பற்றாக்குறை அவரைப் படுத்துது. பெத்த தகப்பனுக்கு அப்படி ஒரு குற்ற உணர்ச்சியை உண்டாக்க வேண்டாம்னுதான், " எனக்கு கல்யாணம் இப்போ வேண்டாம்னு நான் ஒரு டிராமா பண்ணிட்டு இருக்கிறேன் " என்றாள் லலிதா சர்வ சாதாரணமாக.
"அப்படின்னா எப்பதாண்டி உன்னோட கல்யாணம்?"
"என் தங்கை வேலைக்கு போய் சம்பாதிக்க ஆரம்பிச்சிட்டா  அப்பா எனக்கு வரன் தேட ஆரம்பிச்சிடுவார். அது எவ்வளவுதான் மட்டமான வரனா இருந்தாலும், " இது போல ஒரு வரன் அமைய நாம குடுத்து வச்சிருக்கணும், நாம செய்ஞ்ச புண்யம் நம்ம வீடு தேடி இந்த வரன் வந்தது  என்பார்.  என்னை வீட்டை விட்டு வெளியேற்றுவதில் குறியா இருப்பார்.  அதனால் நீ கவலையே படாதே. எனக்கும் ஒரு நாள் கண்டிப்பா கல்யாணம் நடக்கும்" என்றாள் சிரித்தபடியே!!


  

      


No comments:

Post a Comment