Labels

About myself Name : Kumari S. Arunachalam alias Aruna S. Shanmugam Occupation : Form

Saturday, January 14, 2012

நம்மவங்க சொன்னதுதாங்க ! இப்ப நான் சொல்றேன் உங்களுக்கு !


சீலை இல்லைஎன்று சின்னாயி வீட்டுக்குப் போனால், அவள் ஈச்சம் பாயை கட்டிக் கொண்டு எதிரே வந்து நின்னாளாம்!



கப்பல் ஏறிவிட்ட கடனை கொட்டை நூற்றா அடைக்க முடியும் ?





அன்னப்பாலுக்கு சிங்கி அடித்தவன் ஆவின் பாலுக்கு சர்க்கரை கேட்கலாமா ?






அள்ளிக் கொடுத்தால் சும்மா; அளந்து கொடுத்தால் கடன்.





அழிந்த கொல்லையிலே கழுதை  மேய்ந்தால் என்ன ? குதிரை மேய்ந்தால் என்ன?







அற்பன் கை ஆயிரம் பொன்னிலும், சத்புத்திரன் கைத் தவிடு மேல் !





அவசரத்தில், அண்டாவுக்குள் கூட கை நுழையாது. 




அரசன், கல்லின் மேலே கத்திரிக்காய் காய்க்கும் என்று சொன்னால், கெத்து ஆயிரம் குலை ஆயிரம் என்பார்கள் 




அம்மண தேசத்தில், கோவணம் கட்டியவன் பைத்தியக்காரன்.






ஆவுடையாரையும், ஆத்தாளையும்  ஆற்று வெள்ளம் அடிச்சிட்டு போகும்போது  சுத்தியுள்ள லிங்கமெல்லாம் சோத்துக்கு அழலாமா?

No comments:

Post a Comment