Dear Friends,
உங்களிடம் ஒரு உதவி கேட்டு இதை பதிவு செய்கிறேன்.
இந்த தளத்தில் "கட்டங்களுக்குள் வார்த்தைகளை பொருத்து" என்ற தலைப்பின் கீழ் 725 புதிர்களை பதிவு செய்துள்ளேன். இன்னும் 375 புதிர்கள் பதிவுக்கு தயாராக உள்ளன . குறைந்தது 1200 புதிர்களை பதிவு செய்ய வேண்டும் என்பது எனது ஆசை.
இதில் ஒரு பிரச்னை என்னவென்றால், இதனை on line ல் solve பண்ண முடியாது. பிரிண்ட் எடுத்தோ அல்லது வார்த்தைகளை பேப்பரில் குறித்துக் கொண்டோ விடைகளை எழுத முடியும்.
இதனை on line ல் கொண்டு வரத் தெரிந்தவர்கள் யாராவது இருந்தால் எனக்கு ஒரே ஒரு puzzle format அனுப்புங்களேன். எல்லா புதிரையுமே on line ல் solve பண்ணும்படி திருத்தி அமைப்பேன்.
எனது தளத்தில் சில on line puzzles உள்ளன. அதை அமைத்து தந்தவர் அமெரிக்காவில் வாழ்கின்ற தமிழர் திரு ஹரி பாலகிருஷ்ணன் என்பவர்.
( அவரைப்பற்றிய வேறெந்த தகவலும் எனக்குத் தெரியாது.)
அவர் பதிவு செய்தியிருந்த சில புதிர்களை இணைய தளத்தில் பார்த்த நான், ஒரு particular format ல் புதிர் கட்டம் வேண்டும் என்று மெயில் அனுப்பினேன். செய்து தந்தார். அதை வெளியிட்ட நான். வேறு சில மாற்றங்களுடன் சில புதிர்களை பதிவு செய்தேன்.
"கட்டங்களுக்குள் வார்த்தைகளை பொருத்து" புதிரை on line ல் கொண்டு வர உதவி செய்ய முடியுமா என்று கேட்டேன். வேலைப்பளு காரணமாக தனது இயலாமையை தெரிவித்தார். அதன் பிறகு நான் அவரை தொந்தரவு செய்யவில்லை.
இப்போது உங்களிடம் கேட்கிறேன். உங்களில் யாருக்காவது தெரியுமென்றால் அதை ஏனக்கு தெரிவியுங்கள். உங்கள் உதவி எனது blog பார்வையாளர்களுக்கும் பயனுள்ளதாக இருக்கும்.
இன்னொரு விஷயம். - ஒரு குறிப்பிட்ட தலைப்பில் ஆயிரத்துக்கும் மேற்பட்ட புதிர்களை பதிவு செய்தவர்கள் யாராவது இருந்தால் அதை எனக்கு தெரிவியுங்கள்.
அவர்களை என் மானசீக குருவாக ஏற்று வீட்டிலிருந்தே ஒரு royal salute செய்வேன்.
நன்றி.
Mail id: arunasshanmugam@gmail.com
No comments:
Post a Comment