Labels

About myself Name : Kumari S. Arunachalam alias Aruna S. Shanmugam Occupation : Form

Saturday, December 07, 2019

என்னய்யா ! இப்படி பண்ணிட்டீங்களே அய்யா !!



தெலுங்கானா காவல்துறை அதிகாரியின் செயலை மிக மிக வன்மையாகக் கண்டிக்கிறேன்.  
என்ன ஸார்  நீங்க ? அவங்களை அப்படி ஒரு நொடிப் பொழுதில் சாக விட்டு விடுவதா?
இதுங்க எல்லாம் அணுஅணுவாக துடித்து துடித்துச் சாகணும். 
பழைய தமிழ்ப் பாடல் ஒன்றில் "பெண்ணைத் தொட்டுப் பார்த்தால் சுட்டுப் புடுவான் இந்தக்காலம்" என்று என்.எஸ். கிருஷ்ணன் பாடுவார். அது நீடிக்க வேண்டும்.
இவ்வளவு சீக்கிரம் அந்த நாய்ங்களை சாக விட்டுருக்கக் கூடாது.
பொது இடத்தில் நிர்வாணமாக தூணில் கட்டி வைக்க வேண்டும். பக்கத்திலேயே ஒரு துருப்பிடிச்ச பிளேடும் கொள்ளிக்கட்டை ஒன்றும் வைக்கவேண்டும். இந்த வழியில் செல்பவர்கள் அவரவர்கள் விருப்பத்துக்கு ஏற்ப  இவர்களை பிளேடால் துண்டு போடலாம். கொள்ளிக்கட்டையால்   புள்ளி வைக்கலாம் என்று போர்ட் வைக்க வேண்டும். செத்த பிறகு புதைக்க கூடாது. நாயோ நரியோ இந்த நாய்களை திண்றுவிட்டுப் போகட்டும் என்று விட்டு விட வேண்டும்.
கிரிமினல்கள் பொது மக்களில் மட்டும் அல்ல. பொறுப்பு வாய்ந்த பதவியில் ஒட்டிக் கொண்டு இருப்பவர்களிடமும் இருக்கிறார்கள்.   பொதுஜனம் வலை  யில் மாட்டிக்     கொள்கிறது. பெரியமனுஷன் போரவையில் சின்னத் தனம் செய்யும் கேடுகெட்ட  ஜென்மங்கள்  வயிற்றுக்கில்லாத கூட்டங்களை வைத்துக்கொண்டு வாலிப விளையாட்டு விளையாடிக் கொண்டிருக்கிறது கோபுர உச்சியில் இருந்தாலும் குப்பை குப்பைதானே. சாக்கடை சாக்கடைதானே ! பணியை ஆந்திராவோடு நிறுத்திக் கொள்ளாமல் பொது சேவையாக இதை அகிலம் முழுக்க செய்யுங்கள். 
எலெக்ட்ரிக் ட்ரைனில் பயணம் செய்யும் போது நான் கேட்ட ஒரு உரையாடல். ஐ ஐ டி கேஸில் தேடப்படும் குற்றவாளி பற்றி இரண்டு பெண்கள் பேசிக்கொண்ட விஷயம் என் காதிலும் விழுந்தது. "ஆமாம். அந்த  சாக்கடைக்கு தண்டனையே தேவை இல்லை. மீடியாக்களில் பேர் நாறி விட்டது. அவன் குடும்பத்தினர் வாயை மூடிக் கொண்டிருக்கும் வரைதான் மரியாதை. பொதுவாக பெரிய பதவியில் இருப்பவர்களின் குடும்பத்தினர்  "எங்க அப்பன் இப்படி; என் புருஷன் இப்படி"னு வாய் கிழிய பேசுவாங்க. இனிமே அந்தக் குடும்பம் எங்காவது ஏதாவது வாயைத் திறந்தால் "உன் வீட்டு ஆம்பிளை யோக்கியதை ஊருக்கே தெரியுமே. பொத்திக்கிட்டு வாம்மா"னு சொல்லிச்சொல்லியே சாகடிக்கணும்"  
இதுகூட நல்லா இருக்குதானே?
எந்தப் பதவியில் இருந்தால் என்ன? அடிக்கிற சூறைக்காற்றில் குப்பை கோபுர உச்சியில் ஒட்டிக் கொள்ளும். குப்பை குப்பைதான். கோபுரம் கோபுரம்தான்.
சும்மாவா சொன்னாங்க பெரியவங்க அவனவன்  பிறந்து வளர்ந்த குடும்ப சூழ்நிலைக்கு ஏற்றமாதிரிதான் அவனவன் பழக்கவழக்கமும் இருக்கு மென்று !
ஒரு பெண்ணுக்கு ஒரு அவமரியாதை என்றால் தன உயிரைக் கொடுத்து காப்பவனே உண்மையான ஆண்மகன் என்று பெரியோர் சொல்லி இருக்கிறார்கள்.
இன்று  எலெக்ட்ரிக் ட்ரைனில் பயணம் செய்யும் போது கேட்ட ஒரு உரையாடல்.
"குழந்தைங்க இல்லாதவங்க ரொம்ப ரொம்ப புண்ணியம் பண்ணினவங்க. பொண்ணைப் பெத்து வச்சா அது வெளியே போயிட்டு வீடு வர்ற வரை வயிற்றில் நெருப்பைகட்டிக்கொண்டு இருக்க வேண்டிடும். ஆம்பிளப் பிள்ளையை பெத்து வச்சா எங்காவது வம்பு பண்ணி விளக்குமாத்து அடி வாங்காமே வீடு வந்து சேரணுமேனு பதறிக் கொண்டு இருக்கணும். ரெண்டுமே இல்லாதவங்க பாடு நிம்மதி". 
 "அட ! இதுவும்  நல்லாத்தான் இருக்கிறது.!"



No comments:

Post a Comment