HAPPY NEW YEAR TO ALL!
கடந்த ஒரு வாரத்துக்கும் மேலாக என்னுடைய தளத்தின் பார்வையாளர்கள் எண்ணிக்கை "ஜீரோ" லெவலில்தான் இருந்தது. வழக்கமாக தினமும் நூற்றுக்கு குறையாமல் இருக்கும் பார்வையாளர் எண்ணிக்கை, ஒன்றுகூட இல்லாமல் போனது எப்படி என்பது எனக்குப் புரியவில்லை. வெளி நாட்டினர் பார்க்க வழியில்லாமல் யாராவது blockade பண்ணி இருப்பார்களா என்கிற அளவுக்கு யோசிக்க ஆரம்பித்து, technical personals சிலரிடம் சந்தேகம் கேட்டுக் கொண்டிருந்தேன். ஒருவர்கூட பார்க்காமல் இருக்க சான்ஸ் இல்லை. அவர்கள் பார்க்க முயற்சி செய்யும்போது என்ன மெசேஜ் வந்தது என்பதை தெரியவும் ஆவலாக இருந்தேன். எனது சொந்த பந்தங்கள் சிலர் அமெரிக்காவில் இருக்கிறார்கள். அவர்களுக்கு மெயில் அனுப்பி (எனது பிளாக்கை ஓபன் பண்ணினால் என்ன மெசேஜ் வருகிறது என்பதை பார்த்து சொல்லுங்கள்) விவரம் தெரிந்து கொள்ளலாமா என்று நினைத்தேன். எதற்கும் நியூ இயர் வரை பார்த்துவிட்டு பிறகு முயற்சி செய்யலாம் என்று இருந்தேன். இன்று viewers statement பார்த்ததுமே, பார்வையாளர் எண்ணிக்கை 15 என்று இருந்தது. குழப்பம் தீர்ந்து சந்தோஷம் வந்ததுமே.
பார்வையாளர்களுக்கு எனது இதயம் கனிந்த நன்றியும் வாழ்த்துக்களும்.

No comments:
Post a Comment