இன்று காலையில் எலெக்ட்ரிக் ட்ரெயினில் ஒரு லேடி போனில் பேசிக் கொண்டு வந்தாள். "நாம சொல்றது ஒண்ணு . அவ புரிஞ்சுக்கிறது வேறொண்ணு. அப்படியே உல்டாவா அவ காதில் விழும் போலிருக்குது".
இந்த செய்தி என் காதில் விழுந்ததும், "அடடா.. இப்படி ரொம்ப பேர் இருப்பாங்க போலிருக்குது " என்று நினைத்துக் கொண்டேன்.
எனது உறவுக்காரப் பெண் ஒருத்தியிடம் எது சொன்னாலும் அது அவள் மைன்ட்டில் நேர் எதிராக நெகட்டிவ் ஆகத்தான் ரெக்கார்ட் ஆகும் .
ஒரு சிலர் விஷயத்தில் இது எந்த பாதிப்பையும் மற்றவர்களுக்கு ஏற்படுத்தாது. ஏனென்றால் இது இப்படித்தான் என்று உஷாராக இருப்பார்கள்.
ஆனால் ஒரு சிலர், அவர்கள் நம்பும் சிலர் சொல்வதை மலைபோல் நம்பி செயல் பட்டால் என்ன ஆகும்?
ஒரு உதாரணம்: ஒரு நபர் எப்போ பார்த்தாலும் அவர் கஷ்டத்தை கூலிக்காரங்க, ஆட்டோகாரங்க கிட்டே சொல்ல அவங்க அதை ரோட்டில் நின்று ஒலிபரப்பு செய்து கொண்டிருப்பாங்க.. அவருக்கு மிகவும் வேண்டிய மாமாவிடம் ஒருவர், "இப்படி கூலிக்காரங்க கிட்டே சொல்லி அழறதைவிட இவரை ஏமாத்தினவங்களை பத்தி, அந்த கஷ்டத்தை கமிஷனர் ஆபீஸில் போய் கம்பளைண்ட் கொடுக்கலாமே"என்று சொன்னார்.
ஆனால் மாமா மைன்ட்டில் எதுவும் வேறு விதமாக ரெக்கார்ட் ஆகும் என்பது பிறகுதான் புரிந்தது.
எப்படி என்றால், மாமா போய் கஸ்டமர் கிட்டே, "கமிஷனர் ஆபீஸுக்கு போய் சொல்லப் போறாங்களாம்" என்று சொல்லி இருப்பார் போலும்.
அதை அப்படியே நம்பின கஸ்டமர், "அந்த ஸ்டேஷனில் போய் சொல்லு.. இங்கே போய் சொல்லு " என்று கைடன்ஸ் கொடுத்துக் கொண்டிருந்தார். (அங்கே தான் இவருக்கு வேண்டிய கறுப்பு ஆடுகள் இருக்கிறதோ என்னவோ) இப்போ எல்லாரும் புரிஞ்சுக்க வேண்டியது என்னவென்றால், எதையும் உல்டாவாக புரிந்து கொள்ளும் நபர்கள் அதிகம் இருக்கிறார்கள். அவர்களிடம் எச்சரிக்கையாக இருப்பது அவசியம்.

No comments:
Post a Comment