Labels

About myself Name : Kumari S. Arunachalam alias Aruna S. Shanmugam Occupation : Form

Wednesday, September 05, 2018

இது எப்படி இருக்கு?


இன்றைக்கு காலையில் நான் பார்த்த ஒரு காட்சியையும், அதுபோன்ற வேறு சில விஷயங்களையும் உங்களுக்கு சொல்கிறேன். படிக்கலாம்; சிரிக்கலாம். 
யாராவது  ஒருவர், ஒரு வி.ஐ.பி.யைக் கேள்வி கேட்டாலே, அதற்குப் பின்னால் பெரிய தீவிரவாதக் கூட்டமே இருக்கிறது என்று ஒரு சிலர் சொல்கிறார்கள். அது அவங்க பிரச்னை. நமக்கு தேவையே இல்லை. இருந்தும் அதை ஏன் சொல்கிறேனென்றால், கேள்வி கேட்டாலே அப்படி  பயப்படுகிறார்கள். ஒரு சிலரிடம் அரிவாளைக் காட்டினால் கூட அதை கண்டு கொள்ளாமல் போய்க் கொண்டிருக்கிறார்கள்.
(என்னுடன் வேலை பார்த்த ஒருவர் எப்போதும் கிண்டலும் கேலியாக பேசுவார்.ஆனால் அதில் அறிவுபூர்வமான செய்தியும்  இருக்கும். ஒருநாள் அவரிடம், "நாம் தினமும் இதே பாதையில் என்னென்ன சர்க்கஸ் வேலை உண்டோ அத்தனையும் செய்து வண்டி ஓட்டிக் கொண்டு வர்றோம். இங்கே உள்ள குண்டுகுழிகளை சமாளித்து நாம் வண்டி ஓட்டுகிறோம் . ஆனால் ஒரு வி.ஐ.பி இந்த வழியாகப் போகிறார் என்றால் உடனே ரோட்டை விழுந்து விழுந்து சுத்தம் பண்ணுகிறார்களே " என்றேன். அதற்கு அவர், "அருணா, நம்ம பக்கத்தில் ஒரு குண்டு வெடிச்சா கூட, "அங்கே என்ன சத்தம்"னு எட்டிப் பார்ப்போம். வி.ஐ.பி போகிற வழியில் ஒரு கல் எகிறி விழுந்தால்கூட குண்டு வெடிச்சிட்டதா நினைச்சு பயந்து போயிடுவாங்க. அதனால்தான் " என்று விளக்கம் சொன்னார்). 
எங்கள் ஏரியாவில் இன்று காலை 9 மணி அளவில் கையில் ஒரு பெரிய அரிவாளுடன் (துருப்பிடிச்சது; தீட்டக்கூட காசு இல்லையா; இல்லை யென்றால் அதற்கான காசை சம்பந்தப்பட்ட ஆள் கொடுத்தும் இவன் ஸ்வாகா பண்ணிட்டானா என்பது தெரியவில்லை) ஒரு பெண்ணிடம் பேசிக் கொண்டிருக்கிறான். (அவன் சொல்றதைக் கேட்காவிட்டால் அரிவாள் கழுத்தைப் பதம் பார்த்து விடுமாம். போலீஸ் ஆபீஸர் பேச்சை கேட்காட்டா நீ எவன் பேச்சை கேட்பே?)  அதைப் பார்க்கிற பெண்கள் மிரண்டு போவாங்கனு நினைச்சானோ என்னவோ. ஆனா பாருங்க யாருமே    கண்டுக்கலே. அவங்கவங்க வேலையைப் பார்க்கிற அவசரம் அவங்களுக்கு. அதற்குள் எனக்கு ஆட்டோ வந்து விட்டது. ஆனால் அரிவாள் சீன் சிரிப்பை வரவழைத்தது.
இதேபோன்ற சம்பவத்தை நான் ஏற்கனவே கேள்விப்பட்டிருக்கிறேன். இதையும் அதையும் கம்பேர் பண்ணிப் பார்த்தேன். என்னாலே எதையும் சும்மா விட்டுவிட முடியாதே. நான் தோண்டி துருவி பார்த்தேன். எனக்கு தெரிஞ்ச விஷயம் உங்களுக்கும் தெரியட்டுமே. ஒரு ஆளுக்கும் ஒரு பெண்ணுக்கும் தொடர்பு இருப்பதாக சிலர் சொன்னார்கள். அது சம்பந்தப்பட்ட ஆணே கிளப்பி விட்ட புரளி. 
கூலி ஆட்களை வைத்து புரளி கிளப்பி  வலை வீசி இருக்கிறார்.  ஆபீஸர் வீசின வலையில் அந்த மீன் சிக்கவில்லை. கொத்தனார், சித்தாள், மேஸ்திரி, வண்ணான், வடை சுட்டு விற்கிறவங்க. பிளாட்பாரமில் கூறு கட்டி கூவி விக்கிறவங்க என்று எல்லாரையும் வச்சு மிரட்டிப் பார்த்திருக்கிறான். ஏதும் நடக்கலே. மீன் மாட்டலே, உடனே மீன் மேலே சேறை வாரி இரைச்சான். மீனோ  அவன் வீட்டுப்பொம்பளைங்க மேலே அதே சேற்றை வீசி அடிச்சிட்டுது. கடைசி யில் ஒரு மார்க்கெட்டிங் ஏஜெண்டை பிடிச்சு உளவு வேலை பண்ண சொல்லி இருக்கிறான். (பெண்கள் மேகசினில் மார்க்கெட்டிங் பண்றவன், பெண்களையும் மார்க்கெட்டிங் பண்ணுவான்னு நினைச்சானோ என்னவோ. மீன் மாட்டலே. அதுக்குப் பதிலா, மார்க்கெட்டிங் பண்ணின மாமாவை வலையில் மாட்ட வச்சிட்டுது.. )
இவனுக்கு மார்க்கெட்டிங் பண்றவங்களை யாராவது கேள்வி கேட்டால் உடனே அவளை குடும்பத்தோட குளோஸ் பண்ணிடுவேன் என்பதுபோல அரிவாளைத்  தீட்டிக் கொண்டு அலைகிறானோ என்னவோ . 
அரிவாள் இன்னாரைத்தான் பதம் பார்க்கும்; பார்க்கவேண்டும் என்பதல்ல.  .  பிடித்த கையை பதம் பார்க்க ரொம்ப நேரம் ஆகாது. தனக்கு வேண்டாத கழுத்தைத்தான் அரிவாள் வெட்டும் என்பதல்ல; வேணுங்கிற கழுத்தை யும் பதம் பார்க்கும்.வெளியில் உள்ளவர்களை மட்டுமல்ல; வீசி எறிந்தால் வீட்டுக்குள் உள்ளவர்களைக் கூட பதம் பார்க்கும். இதுகூட தெரியாத முட்டாள்களே அதிகம் பேர் இருக்கிறார்கள். 
ஆத்திரக்காரனுக்கு புத்தி மட்டுனு சொல்வாங்க. அது உண்மைதாங்க; ரகசியமாக உள்ள ஒரு சம்பவத்தைப் பற்றி யாராவது வெளியில் சொல்வார்களா? சொல்கிறார்களே; அப்படின்னா இதன் பின்புலம் என்ன என்று கூட யோசிக்காமல், என்ன ஐடியாவில் எதிர் சைட்  இருக்கிறார்கள் என்பதைத் தெரிந்து கொள்ள இவன் மிரட்டுவானாம். உடனே அவங்க பதில் சொல்வார்களாம். இவன் உஷார் ஆயிடுவானாம்.
இப்படிப் பண்ணினால் இவன் இந்தந்த கிரிமினல் வேலை எல்லாம் பண்ணுவான் என்பதை மற்றவர்களுக்கு ப்ரூவ் பண்ணத்தான் அவர்கள் பதில் சொல்கிறார்கள் என்பதுகூட தெரியாமல் ஆர்வக்கோளாறில் இவன் கழுத்துக்கு நேராக இவனே கத்தியை வைத்துக் கொண்டான் என்பதுதான் உண்மை, 
இருந்தும் இந்த மாதிரி ஜென்மங்களை ஏன் விட்டு வைக்கிறார்கள் என்றால், ஒரு சிலருக்கு ஒருவிதமான கொள்கைகள் இருக்கும். நான் ஒரு நேர்மையான தாய் தகப்பனுக்கு பிறந்தவன். ஏதோ ஒரு சாக்கடை எதோ செய்தது என்றால் அதன் லெவலுக்கு நான் இறங்க மாட்டேன் என்கிற கொள்கைப் பிடிப்போடு இருப்பார்கள். அதனால்தான் சில கிரிமினல்கள் தப்பித்துக் கொண்டிருக்கின்றன.
இவர்கள் வெறும் வார்னிங்கோடு போகக்கூடாது. இவர்கள் குடும்பமே இவர்கள் மீது காரித் துப்ப வேண்டும். அதற்கான காலம் விரைவில் வரும். இப்போதுதானே அரிவாள் வந்திருக்கிறது. இனி ஒவ்வொன்றாக வரும் என்று கூட சந்தர்ப்பத்திற்காக வெய்ட் பண்ணிக் கொண்டிருக்கலாம்.
காலம் எவ்வளவோ வேகமாக மாறிக் கொண்டு வருகிறது. ஒரு விஷயத்தை ஒருவருக்கு ரகசியமாக சொல்ல வேண்டுமென்றால்  ஒரு பேப்பரில் எழுதி வாட்ஸ் அப்பில் அனுப்பினால் இரண்டாம் பேருக்கு தெரியாமல் விஷயம் போக வேண்டிய இடத்துக்கு போயிடும்.அதுகூட தெரியாமல் உளவு பார்க்கிறேனு   சொல்லி, சித்தாள் கொத்தனாரை நம்பி சொந்த செலவில் சூனியம் வைத்துக் கொள்கிற ஜென்மங்களும் இருக்கிறார்கள்.
காசைக் கொடுத்தால் அரிவாள் எல்லாருக்கும் கிடைக்கும். அதைப் பிடிக்க நான் நீ என்று போட்டி போட்டுக் கொண்டு ஆட்கள் கிடைப்பார்கள்.
ஆனால் அந்தக்காலம் மாதிரி சில பைத்தியங்கள் எலும்புத் துண்டுக்காக வேலை பார்க்கும் சித்தாள், கொத்தனார், மார்க்கெட்டிங் மாமாக்களை நம்பி இருப்பதை பார்த்தால் .... பரிதாபம்... அந்தோ பரிதாபம்.
இதையெல்லாம் ஏன் சொல்கிறேன் என்றால்,  மற்றவர்கள் அனுபவங் களில் இருந்தே நாம் பாடம் கற்றுக் கொள்ள வேண்டும். 
இவன் படிச்சவனாச்சே; நல்ல வேலையில் இருப்பவனாச்சே என்று எவனையும் நம்பி ஏமாந்து விடக்கூடாது. என்னதான் இருந்தாலும், அவன் உடம்பில் ஓடுகிற ரத்தத்துக்கு ஏற்றபடிதான் அவன் பழக்கவழக்கம் இருக்கும். அதை நினைவில் வைத்திருக்க வேண்டும் என்பதற்காகவே இந்தப் பதிவு. 
ஆரம்பத்தில் "வாரேன் : நான் வாரேன் " என்று பாடினவன் அதற்கு எந்த எபெக்ட்டும் இல்லாததால் "நீதானே என்னை அழைத்தது " என்று பாடலை மாற்றி பாடி.  இவன் ரொம்பவும் அப்பாவி மாதிரியும் இவனை யாரோ ஏமாற்றி விட்டதுபோலவும்  அழுது புலம்பி சேரி ஜனங்களிடம் போய் நியாயம் கேட்டுக் கொண்டிருக்கிறானாம் . 

No comments:

Post a Comment