உங்களிடம் ஒரு பணிவான விண்ணப்பம் .
ஏழைக்குடும்பங்களுக்கு இலவச எரிவாயு இணைப்பை அளிப்பதாக முன்பே அறிக்கை அளித்துள்ளீர்கள்.
நல்ல விஷயம்.
எங்களுக்கு இலவசம் தேவை இல்லை. காசு கொடுத்து வாங்குகிறோம். காசு கொடுத்துதான் வாங்குவோம். அதில் எந்த மாற்றமும் இல்லை.
பணம் கொடுத்து வாங்கும் ஒன்றை பயன்படுத்துவதில் ஏற்படும் சிரமம் சொல்லிமுடியாது. அதில் உங்கள் கவனத்தை கொஞ்சம் திருப்புங்களேன்
நான் பதிவு செய்வது எனது பிரச்னை மட்டுமல்ல. என்னைப் போன்ற பலரின் பிரச்னை. அதனால் விரிவாக எழுதுகிறேன்.
பொதுவாக எல்லா வீடுகளிம் இரண்டு Gas சிலிண்டர்கள் இருக்கின்றன. ஒன்று தீர்ந்ததும் அடுத்ததை எடுத்து மாட்டிவிட்டு உடனே மாற்று காஸ் சிலிண்டருக்கு புக் பண்ணுகிறோம். அது உடனே வந்து விடுகிறது. அநேக வீடுகளில் அதை வாங்கும்போது, ஸ்டவ்வில் மாட்டி செக் பண்ணும் வசதி இருப்பதில்லை. ஏனென்றால் சிலிண்டர் புக் செய்பவர்கள் அக்கம்பக்கத்து வீடுகளில் பணத்தைக் கொடுத்துவிட்டு அலுவலகம் ஓடுவார்கள். வீடு தேடி சிலிண்டர் வரும்போது அதை அவர்கள் வாங்கி வைப்பதே பெரிய விஷயம். அவர்களிடம் போய் "அந்த வீட்டுக் கதவை திறந்து விடு. ஸ்டவ்வில் மாட்டி செக் பண்ணனும்" என்று யாரும் சொல்லப் போவது இல்லை. சொன்னாலும் அது நடக்காது என்பது தனிப்பட்ட விஷயம். அடுத்து 40 அல்லது 50 நாட்கள் கழித்துதான் இந்த சிலிண்டரை மாட்ட வேண்டிய அவசியம் வரும்.
அப்படி மாட்டியதும், gas நாற்றம் வீடு முழுக்க பரவுகிறது. சிலசமயம் அக்கம் பக்கத்து வீடுகளுக்கு கூட போய்விடும். என்னவென்று விசாரிக்க ஓடி வருவார்கள். Gas லீக் ஆவது சாதாரண விஷயமில்லையே.
ஏஜென்ஸிக்கு போன் பண்ணினால் service engineer என்று ஒருவரை அனுப்புவார்கள்.
அவர் வந்ததும், ஸ்டவ், டியூப் எல்லாவற்றையும் ஒரு பார்வை பார்ப்பார்.
(சிலிண்டர், காஸ் டியூப், ரெகுலேட்டர் எல்லாமே நீங்கள் சப்ளை பண்ணினதுதான். கொஞ்சம் நிமிஷம் வரை எந்த பிரச்னையும் இல்லாமே இருந்தது. புது சிலிண்டரை மாற்றவும் இந்த ஸ்மெல் வருகிறது என்போம். பிரச்னை புது சிலிண்டரில்தான். ஸ்டவ்வில் இல்லை என்று சொல்வோம் தானே. )
உடனே சிறு ரப்பர் வளையம் ஒன்றை சிலிண்டரில் வாய்ப்பகுதியில் வைத்து அழுத்துவார். ஸ்மெல் நின்று விடும்.
அடுத்த நொடியே 150 ரூபாய் தரணும் என்பார்.
ஏனென்று கேட்டால் இதை செக் பண்ணினேனே அதற்குத்தான் என்பார்.
சப்ளை பண்ணினது நீங்கள். இந்த குறையை எல்லாம் சரி பார்த்து அனுப்பி இருக்க வேண்டியது உங்கள் பொறுப்புதானே என்று கேட்டால் அதை ஏற்றுக் கொள்ளாமல் அவர் கேட்ட மொய்யை எழுதியதுந்தான் அங்கிருந்து நகர்வார்.
சிலிண்டர், ரெகுலேட்டர் இரண்டையுமே Gas Agencies சப்ளை பண்ணுகிறார்கள். அவர்கள் அனுப்பும் சிலிண்டர், ஒரு ரெகுலேட்டரோடு பொருந்தவில்லை என்றால் அவர்கள்தான் அதை சரி பண்ண வேண்டும்.
ஆனால் அந்தப் பொறுப்பை நுகர்வோர் தலையில் கட்டி விடுகிறார்கள்.
இது அனைத்தையும் சொல்லி நான் கேட்பது என்னவென்றால், இனி சிலிண்டர் சப்ளை பண்ணும்போது அந்த ரப்பர் வளையத்தையும் சேர்த்து சப்ளை பண்ண வேண்டும் என்று Gas Agenciesக்கு நீங்கள் ஆர்டர் போடலாமே.
அதை மாட்டுவதற்கு யூனிவர்சிட்டி டிகிரி எதுவும் தேவை இல்லைதானே.
இந்த அனுபவம் இப்படியென்றால் வேறு ஒரு வீட்டில் நடந்த விஷயத் தையும் சொல்லி விடுகிறேன்.
அந்த வீட்டில் இருப்பது ஒரு வயதான அம்மா. ஆனால் சிலிண்டரை எப்படி மாற்ற வேண்டும் என்ற விவரம் தெரிந்தவர். புது சிலிண்டரை மாற்றும்போது, ரெகுலேட்டர் உள்ளே போய் செட் ஆகவில்லை. மாற்று வதற்கு ரொம்பவும் சிரமப்பட்டு விட்டு காஸ் ஏஜென்சிக்கு போன் பண்ணி இருக்காங்க. அவர்கள் ஒரு ஆளை அனுப்பி இருக்கிறார்கள். அவர் வந்து, சிலிண்டரின் வாய்ப்பகுதியில் ஏற்கனவே இருந்த ரப்பர் வளையத்தை எடுத்து எரிந்து விட்டு ரெகுலேட்டரை மாட்டிஇருக்கிறார். பின்பு 150 ரூபாய் கொடுங்கள் என்று டிமாண்ட் பண்ணி இருக்கிறார். நீ எந்த சர்வீசும் பண்ணாமல் பணம் கேட்கிறாயே என்று அவங்க கேட்டதற்கு, 250 ரூபாய் கேட்டிருக்கணும். போனால் போகுதுனு 150 கேட்டேன் என்று அடாவடி யாகப் பேசி பணத்தை வாங்கி கொண்டு போயிருக்கிறார்.
gasக்கு புக் பண்ணும்போது எங்கள் செலவில் காஸ் சம்பந்தப்பட்ட விஷயங்களை விளம்பரம் செய்கிறீர்கள்தானே. அதோடு சேர்த்து, இந்த விழிப்புணர்வு பிரச்சாரத்தையும் எங்கள் செலவில் நீங்கள் செய்யலாமே.
இந்த பிரச்னை அநேக வீடுகளில் அடிக்கடி நிகழ்கிறது.
இது விஷயத்தில் ஆவன செய்வீர்கள் என்று எதிர்பார்க்கிறோம்.
(குறிப்பு: இந்த விஷயத்தை சம்பந்தப்பட்ட நிறுவனங்கள் கவனத்திற்கு கொண்டு போயிருக்கலாமே என்று நீங்கள் / பலர் கேட்பது என் காதில் விழத்தான் செய்கிறது. அங்கிருந்து எந்த அளவுக்கு பொறுப்பான பதில் கிடைக்குமென்று எனக்குத் தெரியாது. ஆனால் "பாரதப் பிரதமரே பரம தயாளரே, உங்களிடம் ஒரு பணிவான விண்ணப்பம் " என்று நான் பதிவு செய்த சில விஷயத்திற்கு உடனடி தீர்வு கிடைத்தது. என்னுடைய பதிவுகளை முக்கிய பொறுப்பில் உள்ள யாரோ ஒருவர் படித்து அதை சம்பந்தப்பட்ட நிறுவனங்களுக்கு கொண்டு செல்கிறார் என்பதை என்னால் உணர முடிகிறது. அவர் யாரென்பது எனக்கு தெரியாது. ஆனால் முகந் தெரியாத அந்த மனிதருக்கு எனது மனம்கனிந்த நன்றியும் வணக்கமும்.)

No comments:
Post a Comment