இப்படியும் சில பேர்!
"வேலைவெட்டி இல்லாத, வயசான ஜென்மங்கள் எப்படிப் பொழுதைப் போக்கும் ?" என்று கேட்டார் ஒரு நண்பர். அவருக்கு என் காதில் விழுந்த - இரண்டு நண்பர்களுக்குள் நடந்த ஒரு சம்பாஷணையை சொன்னேன். அவர்கள் பேச்சின் முழு விவரமும் எனக்கு தெரியாது. தெரிஞ்சுக்க வேண்டிய அவசியமும் இல்லை. ஆனால் இப்படிக்கூடவா சில ஜென்மங்கள் இருக்கும் என்று சிந்திக்க ஆரம்பித்தேன்.

நண்பர்களின் டிஸ்கஷன் கீழே உள்ளது.
"என்ன சிந்தனை? எந்தக் கோட்டையைப் பிடிக்க இப்படியொரு ஆழ்ந்த யோசனை?"
"ஒருசில மனுஷங்க திறமையைக்கண்டு அப்படியே அசந்து போய் உக்காந்து இருக்கிறேன் "
"ஓஹோ. அதை எனக்கும் சொல்லேன் "
"நாலு பேர் வேலை பார்க்கிற ஒரு இடம். ஒரு ஆபீஸ்னு வச்சுக்கோயேன். அவங்க செய்ற வேலை, வாங்கற சம்பளம் எல்லாமே ராணுவ ரகசியம். இன்டர்போல் வந்தால்கூட எதையும் கண்டுபிடிக்க முடியாதுன்னா பார்த்துக் கோயேன் "
"அடடா ஆச்சரியமா இருக்கே !"
"அதை ஒரு சாதாரண ஆள் கண்டுபிடிச்சிட்டான்னா அது எப்பேர்ப்பட்ட திறமை "
"அதைக் கண்டுபிடிச்சு என்ன செய்யப்போறான். வேலைவெட்டி இல்லாத பைத்தியக்காரன் போலிருக்கு "
"இன்னும் கேளு.. அப்பேர்ப்பட்ட ராணுவ ரகசியத்தை கண்டுபிடிச்சு, அதை சாக்கடை ஓரம் வடை சுட்டு விக்கிறவங்ககிட்டே, பிளாட்போர்ம் ஓரம் கடை போட்டு கூவி விக்கிறவங்க கிட்டே போய் சொல்லி இருக்கிறான் "
"சந்தேகமே இல்லை, அவன் ஒரு பைத்தியக்காரன் தான். எவ்வளவு நல்ல விஷயம் இருக்கு பேச. அதை விட்டுட்டு வேலை வெட்டி இல்லாத வீணாப் போனவனைப் பத்தி பேசறே ?"
"அரசாங்கம் நூறு நாள் வேலைத்திட்டம் என்கிற பேரில் ஒரு சிலருக்கு படி அளக்கிற மாதிரி, இவனாலும் ஒரு சிலர் வயிறு நிறையுதே..அது என்னைக்கும் நிலைக்கணும்னு வேண்டிட்டு இருந்தேன்"
"உனக்கு ரொம்பவும் நல்ல மனசு. ஆனா அதே சமயம் எங்க தாத்தா அடிக்கடி சொல்வார், 'வேலைவெட்டி இல்லாத அம்பட்டன் பூனைக்கு சவரம் பண்ணினான்னு. இவன் அந்தக் கேஸ் போலிருக்குது " என்று சொல்லி தலையில் அடித்துக் கொண்டார் நண்பர்.

No comments:
Post a Comment