Labels

About myself Name : Kumari S. Arunachalam alias Aruna S. Shanmugam Occupation : Form

Tuesday, June 19, 2018

கதை கேளு ; கதை கேளு: (01)


ஆயிரத்தில் ஒருவன் திரைப்படத்தில்  "ஆடாமல் ஆடுகிறேன் ; பாடாமல் பாடுகிறேன் " என்று  பி.சுசீலா இனிமையாகப் பாடி இருந்தார்.
ஒரு சிலர் "வாழாமல் வாழுகிறேன்; சாகாமல் சாகிறேன் " என்று தங்கள் அவல நிலையை நொந்து கொள்வார்கள்.  
அந்த வரிசையில் " அழாமல் அழவைத்தார் !" என்று பிரபல திரைப்பட நடிகை சரோஜா தேவியை சொல்லலாம்.
கல்யாணப்பரிசு - இயக்குனர் ஸ்ரீதர் டைரெக்க்ஷனில் வெளியான தமிழ் திரைப்படம். 
இன்றைய தலைமுறைக்கு இந்தப் பெயரே புதிதானதாக இருக்கலாம். சென்ற தலைமுறையினர் இந்தப் பெயரைக் கேட்டாலே உருகிப் போவார்கள்.
படத்தின் கதை மிக சுருக்கமாக: ஜெமினியும் சரோஜா தேவியும் காதலர்கள். திட்டமிட்டே ஜெமினி (பாஸ்கர்), சரோஜாதேவியின் (வசந்தி) வீட்டில் வாடகை க்கு குடியேறுவார்.
சரோஜாதேவியின் அக்கா விஜயகுமாரி, ஜெமினியைக் காதலிப்பது தெரிந்து, சரோஜாதேவி தனது காதலைத் துறந்து, ஜெமினியின் மனதை மாற்றி அக்காவை ஜெமினிக்கு மணமுடித்து வைப்பார். சிறிது நாளில் ஜெமினி வேறு ஊருக்கு மாற்றலாகி செல்வார். அங்கு அவர்கள் திருமண வாழ்க்கை மகிழ்ச்சியாக இல்லை என்பது தெரிந்து, யதார்த்தத்தை ஜெமினிக்கு எடுத்துச் சொல்லி அவர்கள் மணவாழ்வை சந்தோஷமாக்குவார்.
அக்காவின் வளைகாப்பை முன்னின்று நடத்துவார். ஒரு சூழ்நிலையில் அக்கா வீட்டிற்கே  சென்று தங்கும் சூழ்நிலை வரும்.
மனதில் எந்த சலனமும் இல்லாமல் ஜெமினியும் சரோஜாதேவியும் ஒரே வீட்டில் வளைய வருவார்கள். ஆனால் விஜயகுமாரியின் சந்தேக புத்தியால் இரவோடு இரவாக வீட்டை விட்டு வெளியேறி, நம்பியாரின் கருணையால்  தனக்கான பாதையை அமைத்துக் கொள்வார். நாகேஸ்வரராவ், சரோஜா தேவியை விரும்புவார். ஆனால் அதை  இவர் நிராகரித்து விடுவார். ஆனால் அக்காவை பார்க்க விரும்பும் சரோஜாதேவி, நாகேஸ்வரராவை திருமண செய்த பின் அக்கா வீட்டிற்கு செல்ல திட்டமிடுவார்.
இதற்கிடையில் விஜயகுமாரிக்கு உண்மை தெரிய வந்து, உடல்நிலை மிகவும் மோசமான நிலையில், தான் இனி பிழைக்க மாட்டோம் என்பது தெரிந்து, தனது குழந்தைக்கு வசந்தியே மாற்றாந்தாயாக இருக்க வேண்டும் என்று ஜெமினியிடம் சொல்வார். சரோஜாதேவியைத் தேடி ஜெமினி ஓடுவார். அதற்குள் சரோ-ராவ் திருமண நடந்துவிடும். அவர்களுக்கு கல்யாணப் பரிசாக தனது குழந்தையைக் கொடுத்துவிட்டு ஜெமினி அங்கிருந்து வெளியேற, அதைப் பார்த்தபடி அனைவரும் நிற்க "சுபம்" போட்டு படம் முடிந்து விடும். 
படம் முழுக்க தனது காதலை நினைத்து எந்தவொரு சீனிலும் சரோஜாதேவி கண்ணீர் விட மாட்டார். அடுத்தடுத்து நகரும் காட்சிகள் நம்மை உருக்கும். இளகிய மனம் கொண்டவர்கள் அழுதே விடுவார்கள். 
ஆனால் இவர் அழவே மாட்டார்.
அதுவும் ஒரு சீனில்,  ஜெமினி-விஜயகுமாரி திருமணம் முடிந்து வெளியூர் போனதும், ஒரு காலத்தில் ஜெமினியோடு ஆடிப்பாடிய பார்க் ஒன்றில் வந்து உட்கார்ந்திருப்பார் சரோஜாதேவி. அவர் சந்தோஷமாக ஆடிப் பாடிய " ஆசையினாலே மனம், அஞ்சுது கெஞ்சுது தினம் " என்ற பாடல், வெறும் இசைக்கருவி ஒலியாக பின்னணியில் ஒலிக்கும். அந்தக் காட்சியைக் காண்போர் தங்கள் அடிவயிற்றை ஏதோ ஒன்று  பிசைவது போல உணர்வார் கள்.
எந்தவொரு சீனிலும் இவர் அழமாட்டார். ஆக படம் பார்ப்பவர்கள் ஒருசிலர் மனசுக்குள் அழுவார்கள். பலர் வெளிப்படையாக கண்ணீர் விடுவார்கள். 
இந்தப் படத்தை எத்தனையோ முறை பார்த்திருக்கிறேன். ஆனால் ஒவ்வொரு முறை பார்க்கும்போதும் மனதில் ஒரு பாரம் ஏறும்; ஏதோ அப்போதுதான் பார்ப்பது போல;
அந்த அளவுக்கு காதலை கண்ணியமாகப் படம்பிடித்துக் காட்டி இருந்தார் இயக்குநர் ஸ்ரீதர்.
இந்தப் படத்தைப் பார்த்த கண்ணால், காதல் என்ற பெயரில் சில கழிசடைகள், வயிற்றுக்கில்லாமல் எந்த வேலையையும் செய்யத் தயாராக இருக்கும்   பொறுக்கிக் கும்பலை கூட்டு சேர்த்துக் கொண்டு  செய்யும் சல்லித்தனத்தையும் பார்க்கிறோம் என்பதை நினைத்தால் தலையில் அடித்துக் கொள்ளத்தான் தோன்றுகிறது.
காதல் வசப்பட்ட ஜென்மங்களுக்கு -- அப்படி சொல்வது கூடத் தப்பு; காம வசப்பட்ட ஜென்மங்களுக்கு மூளை வேலை செய்யாது என்பது சரியாகத் தான் இருக்கிறது. இவர்கள்  அயோக்கியத்தனம் செய்வது அடுத்தவர் களின் பெயரில்தான். இப்போ சொல்றது கதை இல்லே; உண்மை சம்பவம். ஒரு மனநிலை சரியில்லாத நபர் ஒருவர் தன்னைப் பற்றி கொஞ்சமும் நினைத்துக்கூடப் பார்க்காத பெண்ணைப் பற்றி சேரிப் பெண்களிடம் புலம்புவார். அதுங்களுக்கு இதை பத்தி எந்த கவலையும் கிடையாது. கையில் காசு கிடைக்கிறது என்பதால் இந்தப் பைத்தியக் காரன் சொல்வதெற் கெல்லாம் தலையை ஆட்டும். அம்புட்டுதான்.
இதிலெல்லாம் பெரிய ஜோக் என்னன்னா,  இவனோட திருவிளையாடல் களை எல்லாம் வேறு யாரோ செய்வதாக நம்ப வைக்க, அந்தப் பெண்ணுக்கு சற்றும் வேண்டாத வேறு ஒரு பெண்ணிடம் போய் கதை கேட்டிருக்கிறான். அது காசுக்காக எதையும் செய்யும் கேஸ். ஊர் முழுக்க கடன் வாங்கி விட்டு, கடன்கார்களுக்கு  டிமிக்கி கொடுத்துவிட்டு ஓடி மறையும் கேஸ். அவங்க கண்ணில் இந்தப்பெண் படும்போது "ஏய் .. ஏ.. நில்லு " என்று கடனைக் கேட்க குரல் கொடுப்பார்கள்.  அந்த பொண்ணோட வீட்டினர் அதை நடை ஏற்றுவது கிடையாது.
ஆனால் இந்தப் பைத்தியக்காரனிடம், இவன் விரும்பற பொண்ணைப் பார்த்து எல்லோரும் "ஏய் .. ஏ.."னு கத்துவாங்க என்று அந்த ப்ராட்  சொல்ல, அதை நிஜம்னு நம்பி இந்த பைத்தியம், அந்தப் பொண்ணு போகிறவருகிற பாதையில் கூலிக்காரக் கூட்டத்தை நிறுத்தி கூவ சொல்வான். எப்பேர்ப்பட்ட ஆம்பிளை இவன். இவனுக்கு பொண்டாட்டி ஒரு கேடு 
அந்தப்பெண்ணும் எதற்கும் அசராது அவன் வீட்டுப் பெண்கள் மீது இவன் சொல்லும் அதே வார்த்தைகளைப் புரட்டிப் போட்டு விடுவாள்.  உண்மை தெரிய வரும்போது இவன் வீட்டுப்  பெண்களே  இவனுக்கு திருச்சாத்து சாத்துவார்கள்.
இவன் பேச்சை நம்பறவங்ககிட்டே போய் இவன் கதையை சொல்லி அழுவான் போலிருக்குது. சரி ; அப்படியே அழுதாலும், இவன் யார்கிட்டே போய் சொல்லி அழுகிறானோ அவங்க வீட்டு பொம்பளைங்களைத்தான் இவனுக்கு ஆறுதல் சொல்ல அனுப்ப முடியும். அதைத் தவிர வேறு ஏதாவது செய்ய முடியுமா?
படிக்கும்போதே அருவெறுப்பான விஷயமாகத் தெரியுது தானே; இதை ஒரு பைத்தியக்காரன் நாடகமாக நடத்துவதோடு அல்லாமல், இவன் பேரை சொல்லி யாரோ விளையாடறதாக போலீஸ் டிபார்ட்மெண்ட் டையே முட்டாள் ஆக்கிக் கொண்டிருக்கிறான். ஒரே ஒரு பெர்சென்ட் மூளை உள்ளவன்கூட இவன் சொல்றதை  நம்ப மாட்டான். ஆனால் ஒரு சிலர் நம்புகிறார்கள். உண்மை தெரியும்போது அவர்களே இவனை ஒரு பிடி பிடிப்பார்கள். உண்மையை வெளிப்படுத்த ஒரு நொடி போதும். ஒரு சாக்கடைக்கு எதிராக அந்த லெவலுக்கு இறங்க வேண்டாம் என்று அந்தப் பெண் நினைக்கிறாள். 
இந்த உண்மை சம்பவத்தை தொடராக எழுதும் எண்ணம் உள்ளது. நேரம் இல்லை; ஆனால் விரைவில் பிள்ளையார் சுழி போடுவேன்.
காதலுக்கும் காமத்துக்கும் வித்தியாசம் தெரியாத சாக்கடை !
அந்தப்பெண் ஏன் இவனை விட்டு வைத்திருக்கிறாள் என்ற சந்தேகம் உங்கள் மனதில் வருதுதானே? இருந்திருந்து ஒரு மனநிலை சரியில்லாத ஒருத்தனிடமா நாம் மல்லுக்கு நிற்க வேண்டும் என்கிற பரிதாப உணர்வுதான். சீறுகிற பாம்பை அடித்தால் அது வீரம். செத்த பாம்பை அடிப்பது......????????????????
திரைப்படப் பாடல் சம்பந்தப்பட்ட ஒரு தொகுப்பு அடுத்த வாரம் பதிவு செய்வேன். அதுவரை குட்பை.  

No comments:

Post a Comment