Labels

About myself Name : Kumari S. Arunachalam alias Aruna S. Shanmugam Occupation : Form

Sunday, March 11, 2018

DEAR VIEWERS,

Image may contain: textImage result for cartoon two wheeler

சில சமயங்களில் நான் என்ன நினைக்கிறேனோ அது மற்றவர்களின் மனதிலும் ஓடிக் கொண்டு இருக்கிறது என்பதை face book ல் மேலே உள்ள பதிவைப் பார்த்ததும் தெரிந்து கொண்டேன்.
நான் டூ வீலரில் ஆபீஸ் போய்க்கொண்டிருந்த நாட்களில்தான் ஹெல்மெட் அணிவது கட்டாயமானது.
அணிவதில் என்ன பிரச்னை என்று ஒருவர் கேட்டதாக செய்தி வெளியானது.
மற்றவர்களைப் பற்றி எனக்குத் தெரியாது. அந்த ரூல் வந்த மறுநாளே நான் பட்ட அவஸ்தையை சொல்கிறேன்.
எனக்கு wheezing problem உண்டு. ஹெல்மெட் மாட்டினதும் மூச்சு திணறி டென்ஷன் ஆயிடுவேன். ஹெல்மெட் போடுவதற்கு முன்பு ஒரு இடத்தை கிராஸ் பண்ணும் முன்பாக நமக்கு பின்னால் யாராவது வருகிறார்களா என்பதை பார்க்க முகத்தை லேசாக பக்க வாட்டில் திருப்பி ஓரக்கண்ணால் பார்த்தால் போதும். ஹெல்மெட் போட்டதும் ஹெல்மெட்டின் பக்கவாட்டு பகுதி விஷனை மறைப்பதால் கழுத்தை பின்பக்கம் திருப்பிப் பார்த்தால் மட்டுமே பின்னால் வருபவர்களைப் பார்க்க முடியும். அப்படி திரும்பும்போது கழுத்து சுளுக்கு ஏற்பட்டு பலநாள் அவஸ்தைப் பட்டேன்
நான் போகும் வழியில் four road junctions இரண்டு வரும். எங்கள் வீட்டுக்குப் பக்கத்திலேயே ஒன்று உண்டு. traffic rules பற்றி கவலைப்படாமல் wrong side ல் வருபவர்கள் அதிகம். நான் U - turn போட்டு திரும்பும்போது வேறொரு direction ல் அதுவும் wrong side ல் தலை தெறிக்க வருபவர்களை கவனிக்காவிட்டால் நம்ம கதை க்ளோஸ்.
ஹெவி வெஹிகில் ஓட்டறவங்க எத்தனையோ பேர். மற்றவர்களுக்கு இது சாதாரண விஷயம்.ஆனால் என்னைப் போன்று, சந்தர்ப்ப சூழ்நிலையின் காரணமாக / வேறே வழியில்லாமல் டூ வீலரில் போகிறவர்களுக்கு பெரிய அவஸ்தை.
என்னுடன் வேலை பார்த்த gents சிலரிடம் இதைப் பற்றி பேசியபோது, "ஒரு காலத்தில் நூல் உற்பத்தி பண்ணுற ஒருத்தன் ஒரு சாமியார் கிட்டே போய் "என்கிட்டே இருக்கிற பச்சைக்கலர் நூல் எல்லாம் விற்பனையாகாமல் அப்படியே தேங்கிக் கிடக்குது. என்ன செய்யட்டும் சாமீ"னு கேட்டானாம். உடனே சாமி, "எல்லாரும் பச்சைகலர் புடவை கட்டுங்க . இல்லாட்டா கணவன் உயிருக்கு ஆபத்துனு சொன்னதும், பக்தனின் குறை தீர்ந்து போச்சு. அதே மாதிரி ஹெல்மெட் கம்பெனிகாரன் எவனாவது, "என் கம்பெனி ஹெல்மெட் சேல்ஸ் ஆகாமல் அப்படியே மூலையில் கிடக்கு"னு சொல்லி கவனிக்க வேண்டியவங்களை கவனிக்க வேண்டிய விதத்தில் கவனிச்சிருப்பான். அதான் இப்படியொரு ரூல். ஏதாவது ஒரு phone அல்லது மெசேஜ் வந்து அவசரமாக வெளியில் போவோம். அப்போ ஹெல்மெட் எடுத்துக்கொண்டு ஓடவா தோணும். நாட்டில் உள்ள எத்தனையோ முட்டாள்தனங்களை நாம சகிச்சுட்டு தானே இருக்கிறோம். இதையும் அப்படி நினைச்சுக்கோங்க " என்று சிரித்துக்கொண்டே ஜோக் சொன்னார்.
ஒரே ஒரு வாரம் ஹெல்மெட் போட்டு வண்டி ஓட்டினேன். அதன்பிறகு ஹெல்மெட் என் வண்டியின் side hook ல் பயணிக்க ஆரம்பித்தது. யாராவது கேட்டால் நம்ம பிரச்னையை சொல்வோம்.அதை அவனுக காதில் வாங்காட்டா பெனால்ட்டி கட்டலாம் என்ற முடிவுடன் ஆபீஸ் போக ஆரம்பித்தேன்.
ஒரே ஒரு முறை ஒரு போலீஸ் காரர் வழிமறித்து ஹெல்மெட் எங்கே என்றார். அது இருக்கும் இடத்தை காட்டினேன்.
ஹெல்மெட் உங்க தலைக்கு மாட்ட, வண்டியில் தொங்க விடறதுக்கு இல்லே. என்றார்
என்னோட பிரச்னையை சொன்னேன். உடனே, "உங்க நல்லதுக்கு சொல்றேன்" என்றார்.
"உங்களை விட எங்கள் நலனில் எங்களுக்கு அதிக அக்கறை உண்டு. போடாமல் இத்தனை வருஷம் ஓட்டி இருக்கிறேன். எந்த பிரச்னையும் வந்ததில்லை. போட்ட ரெண்டு நாளில் கழுத்து வலி. இதுநாள் வரை நான் எந்த விபத்தும் ஏற்படுத்தியதில்லே. ஹெல்மெட் போட்டபிறகு எனக்கு உள்ள அவஸ்தையோட நான் வண்டி ஓட்டினால் கண்டிப்பா நானே ஒரு விபத்தை ஏற்படுத்தி விடுவேன் " என்றேன். அவர் எதுவும் பேசாமல் போய் விட்டார்.
அந்த ரூல்ஸ் வந்த புதிதில் விபத்து பத்தி செய்தி வரும்போதெல்லாம், ஹெல்மெட் போட்டும் எப்படி செத்தான்? என்னவோ ஹெல்மெட் ஒன்றுதான் எல்லார் சாவையும் தடுத்து நிறுத்தற மாதிரி ஸீன் கிரியேட் பண்ணிட்டு இருக்காங்க என்பேன்.
திருட்டு நாய்களுக்கு, (செயின் பறிப்பவர்களுக்கு) ஹெல்மெட் ரொம்பவும் கை கொடுத்தது. அவர்களுக்கு இது வரப்பிரசாதம்.
திருவெறும்பூர் சம்பவம் பற்றி இரவு நியூஸ் பார்க்கும்போதே, "பாதுகாப்பு இல்லாமே போறியே"னு சொல்லி படு அக்கிரமத்தை பண்ணி இருக்கிறான் என்று நினைத்துக் கொண்டேன். மறுநாள் நான் purchase பண்ண share auto ஒன்றில் போய்க்கொண்டிருந்தபோது, அதில் பயணித்துக் கொண்டிருந்த ஒருவர், "நாட்டில் பெண்கள் பாதுகாப்புக்கு உத்திரவாதம் இல்லை. பஸ், train ஏறி போனால் போக நினைத்த இடத்துக்கு ஒழுங்கா போய் சேருவோமா என்று கவலைப்படும் அளவுக்கு ரோடு படுமோசம். accident, கொலை, கொள்ளை, வழிப்பறி. எது எதுக்கோ மறியல் பண்றாங்க. ஒட்டு மொத்த டூ வீலரும் நாங்க ஹெல்மெட் போட மாட்டோம். எங்க உயிரைப் பத்தின கவலை உனக்கு வேண்டாம்னு சொல்லி புரட்சி பண்ணினா இவனுக என்ன - - - -- - - - - - - னுக ? வண்டியில் போறவன் பத்திரமா வீடு போய் சேருறதும், மேலே போய் சேருறதும் அவனவன் தலையெழுத்து. என்னவோ இந்த நாய்ங்கதான் எல்லார் சாவையும் தடுத்து நிறுத்தற மாதிரி பேசறானுக ?" என்று வழிநெடுக புலம்பிக் கொண்டிருந்தார்.
வீடு வந்து சேர்ந்தபின்னும் அந்த நபர் பேசினதை யோசித்துக் கொண்டு இருந்தேன்.
மக்களின் பாதுகாப்புக்காக செய்ய வேண்டிய நிறைய விஷயங்கள் கிடப்பில் கிடக்கிறது. அதைக் கவனிக்காமே, அநியாயமா ஒரு உயிரைக் கொன்னுட்டாங்களே என்று நினைத்துக் கொண்டிருந்தேன்.
இப்போது தமிழக அரசு மேலே உள்ள தகவலை வெளியிட்டுள்ளது.
அப்பாடா.. ஹெல்மெட் போடாவிட்டால் இனிமேல் யாரும் கொலை செய்ய மாட்டார்கள் என்று நிம்மதி பெருமூச்சு விடுகிறேன்.

No comments:

Post a Comment