Labels

About myself Name : Kumari S. Arunachalam alias Aruna S. Shanmugam Occupation : Form

Thursday, February 15, 2018

சாமீ எனக்கொரு உண்மை தெரிஞ்சாகணும் சாமீ !

Dhinesh Prabhu  மக்கள் கண்ணீரிலிருந்து உருவான இயக்கம்
Image may contain: 3 people, text
மேலே நீங்கள் பார்ப்பது face book ல் நான் பார்த்த படம்.
சாப்பிடற இந்த கூட்டத்தில் நாமளும் இருக்கிறதாக கற்பனை பண்ணிக் கொள்வோம். இது நம்ம வீட்டு சாப்பாடு என்றும் நினைத்துக் கொள்வோம்.
பயிரிட்டவனிடம்  இருந்து எதையும் நாம் நேராகப்போய்  அடித்துப் பிடித்து பறித்துக் கொண்டு வரவில்லை. சாப்பிடுகிற எந்த ஒரு பொருளையும் அதன் தரத்துக்கும்  அதிகமான விலையில் தான் வாங்குகிறோம். ஆனா அந்த பொருளுக்கான விலை உரியவனுக்கு போய் சேராததால்தான் அவன் பட்டினி கிடக்கிறான்.
அப்படியானால் நாம் கொடுத்த விலை எங்கே, யார் வீட்டு கஜானாவிலோ  சேர்ந்துள்ளது  ஒளிந்து கொண்டுள்ளது என்றுதானே அர்த்தம். அதை யாராவது வெளியில் கொண்டு வந்து உரியவர்களிடம் கொண்டுபோய் சேருங்களேன். ப்ளீஸ்....
அடிக்கடி டீவியில் நாம் பார்க்கிற செய்தி - செம்மரம் வெட்டுவது பற்றி / வெட்டும்போது பிடிபட்டவர்களைப் பற்றி. அவர்களை பார்க்கும்போது காசுக்காக சொன்ன வேலையை செய்யும் கூட்டம் என்பதை புரிந்து கொள்ள முடிகிறது.
அப்படி வெட்டப்படும் மரம் எங்கு போகிறது. அதைக்கொண்டு என்ன வேலை நடக்கிறது? யாருக்காக நடக்கிறது  என்பதற்கான தகவலை யாருமே சொல்வதில்லையே ஏன்?
சாமீ.... சாமியோவ்.. சங்கதி தெரிஞ்சா எங்களுக்கும் சொல்லுங்க சாமியோவ் ... (தெரிஞ்சதும் நாங்க அப்படி ஒண்ணும் பெரிசா கிழிச்சிடப்போறதிலே. அப்படியானு கேட்டுட்டு அடுத்த வேலையை பார்க்கக் கிளம்பிடுவோம்.)


No comments:

Post a Comment