இரண்டு நண்பர்கள் பேசிக் கொண்டிருந்தார்கள். அப்போது அந்த வழியாக சென்று கொண்டிருந்த ஒருவரை சுட்டிக்காட்டிய நண்பர், "அதோ போறாரே.. அவருக்கு கோபமே வராது. அவரை மட்டந்தட்டி யாராவது பேசினால் அவங்க சொல்ற வார்த்தையை வச்சே அவங்களை மட்டந்தட்டி அனுப்பிடுவார். கோபப்பட மாட்டார்." என்றார்.
"அப்படியா ? அவரை இப்போ நான் கோபப்பட வைக்கிறேன் பார் " என்று சொல்லி விட்டு, சென்று கொண்டிருந்த அந்த நபரின் மீது வேண்டுமென்றே மோதி கீழே விழுந்து விட்டு , "ரோடு என்ன உங்க அப்பன் வீட்டு சொத்தா ? ஓரமா போவதற்கு என்ன கேடு ? பிஞ்ச செருப்பாலே அடிப்பேன் " என்று சத்தமாக சொல்லி விட்டு நண்பரைப் பார்த்து "எப்பூடி ?" என்பது போல கண்ஜாடையால் கேட்டார்.
திட்டு வாங்கிய அந்த நபர், " உன் லெவலுக்கு உங்கிட்டே பிஞ்ச செருப்பு தான் இருக்கும். தங்கத்திலே செஞ்ச பிரம்பா இருக்கும் அடிக்கிறதுக்கு ?" என்று அமைதியாக கேட்டார்.
"இது எப்பூடி ?" என்று கேட்டார், இவை அனைத்தையும் தள்ளி நின்று வேடிக்கை பார்த்துக் கொண்டிருந்த மற்ற நண்பர்.
No comments:
Post a Comment