Labels

About myself Name : Kumari S. Arunachalam alias Aruna S. Shanmugam Occupation : Form

Thursday, November 30, 2017

ஹலோ வியூயர்ஸ்

Image result for cartoon of a teacher  beating a girl / boy
ஆசிரியர் என்றாலே ஒரு  மதிப்பும் மரியாதையும் இருந்தது.- ஒரு காலத்தில் !
இப்போது ஆசிரியர் - ஆ  சிறியர் ! என்ற நிலை வந்து விட்டது.
ஓரளவு விவரம் தெரிந்த பின்னரே குழந்தைகளை பள்ளிக்கு அனுப்பியது அந்தக் காலம்.   
பால்மணம் மாறாத பச்சிளங் குழந்தைகளை பள்ளியில் கொண்டுபோய் தள்ளி விட்டு வருவது இந்தக்காலம்.
இப்போதுள்ள குழந்தைகளுக்கு காலையில் அவர்கள் எங்கு போகிறார்கள் ஏன் போகிறார்கள் என்பதே தெரியாது.
அம்மா அப்பாவோ அல்லது ஆயாவோ, குழந்தைகள் கதறக்கதற  கொண்டு போய் ஒரு இடத்தில் விடுவார்கள். அப்புறமா வந்து கூட்டிட்டு போவாங்க என்பது மட்டுமே தெரியும்.
(எங்கள் வீட்டுக்குழந்தை கொஞ்சம் வித்தியாசமான குழந்தை . Sundays ல் கூட ஸ்கூலுக்குப் போக வேண்டுமென்று அழும். வீட்டைவிட ஸ்கூல் பெட்டர் என்று நினைக்கிறதோ என்னவோ !)
அப்போதெல்லாம்  வீட்டைவிட்டு வெளியில் போனால் சகவாச தோஷத்தில்  குழந்தைகள் கெட்டுப்போகும் என்று வீட்டுக்குள்ளேயே பொத்திப்பொத்தி வளர்ப்பார்கள். வீட்டில் இருக்கும் பெரியவர்கள் கண்கள் எப்போதும் அவர்கள் மேல் இருக்கும்.
இப்போது வீட்டில் உள்ள பெரிசுகளுக்கு டீவியில்  சீரியல் பார்க்கவே நேரம் போதவில்லை. அப்புறம் எங்கே குழந்தைகளை பார்த்துக்கறது?
நல்லது எது கெட்டது எது என்பதை பகுத்து அறியாத / தெரிந்திராத / தெரிந்து கொள்ள முயற்சி செய்யாத ஓரளவு வளர்ந்த குழந்தைகளை இப்போதைய மீடியாக்கள் / செல்போன்கள் வீட்டுக்குள்ளேயே வந்து திசை திருப்பி  விட்டு விடுகின்றன.
இப்படியெல்லாம் நடக்கக்கூடாது என்பதற்காகத்தான் காட்டுகிறோம் என்று ஒரு விவாதத்தை வேறு முன்வைப்பார்கள்.
இப்போ பார்த்ததை நாமும் செஞ்சா என்ன என்றுதான் இளம்பிஞ்சுகள் நினைக்குமே  தவிர , இதை செய்யக்கூடாது என்று நினைக்காது.
அந்தக்காலத்தில் குழந்தைகளை பள்ளியில் சேர்க்கும்போதே, "சரியா படிக்காட்டா, சொன்ன பேச்சு கேட்காட்டா முதுகுத்தோலை உரிச்சிடுங்க " என்று சொல்வார்கள்.
அடிபட்டு வீட்டில் வந்து சொன்னால் அதை கண்டு கொள்ளவே மாட்டார்கள்.
(படிக்கிற காலத்தில் நான் ஒரே ஒருமுறைதான் அடி வாங்கியுள்ளேன். அதுவும் மற்ற பிள்ளைகள் செய்த ஒரு தப்பை நான் டீச்சரிடம் சொல்ல வில்லை என்ற காரணத்துக்காக.)
இப்போ நிலைமையே தலைகீழாக இருக்கிறது.
குழந்தைகளை கெட்டுக்குட்டிசுவராக்க வலைத்தளங்கள் இருக்கின்றன. வீட்டில் காய்கறி வாங்க காசு இல்லாவிட்டாலும் குழந்தைகளின் மொபைலுக்கு ரீ சார்ஜ் பண்ணி விடுவோம். அவர்கள் படிக்கிற நேரத்தைவிட படம் பார்க்கும் நேரம் அதிகம். அவர்கள் என்ன செய்கிறார்கள் எங்கே போகிறார்கள் என்பதை கவனிக்க வீட்டில் உள்ளவர்களுக்கு நேரமோ அக்கறையோ இருப்பதில்லை.
குழந்தைகளை  நாங்க கண்டிக்க மாட்டோம். படிக்கப் போகிற இடத்திலும் கண்டிக்க கூடாது.
அடியாத மாடு படியாது என்று அனுபவஸ்தர்கள் சொன்னதை எல்லாம் எப்போதோ குப்பைத் தொட்டியில் போட்டாச்சு.
ஆனால் குழந்தைங்க நல்ல மார்க் வாங்கி எல்லாத்திலும் நம்பர் ஒன் ஆக வர வேண்டும்.
பொதுத்தேர்வில்  மார்க் குறைஞ்சிதுன்னா பெற்றோரும் கேள்வி கேட்பார்கள். வகுப்பு ஆசிரியர்களை தலைமை ஆசிரியரும் கேள்வி கேட்பார். அந்தப்பள்ளி மீது கல்வித்துறை நடவடிக்கை எடுக்கும்.
குழந்தைகளை மயில் மாதிரி வளர்க்கிறோம்.  மயிலே மயிலே இறகு போடுன்னு சொன்னா போடாது  . (படின்னு சொன்னா படிக்காது. அதற்காக கண்டிக்கவும் கூடாது). அதை வழிக்கு கொண்டுவர சில வித்தைகளை காட்டியே ஆக வேண்டும்.
மாவும் வச்சது வச்சபடி அப்படியே இருக்கணும்.ஆனால் பணியாரமும் வேணும்னு எல்லாரும் கேட்கிறாங்க. அது எப்படி முடியுங்கிற கலையை / வித்தையை  விவரம் தெரிந்தவர்கள் மற்றவர்களுக்கும் கொஞ்சம்  சொல்லித் தாருங்களேன்.
எங்கள் வீட்டில் நானும் எனது தங்கையும் தான் அலுவலக (மத்திய அரசு) வேலைக்கு வந்தோம். மற்ற எல்லோரும் டீச்சராக வேலை பார்த்தவர்கள். பார்க்கிறவர்கள்.
படிக்கிற காலத்தில் நாங்கள் வகுப்பறையை கூட்டி சுத்தம் செய்துள்ளோம். play ground ல் உள்ள குப்பைகளை அள்ளி இருக்கிறோம்.
எனது சகோதரி டீச்சர் ட்ரைனிங் படித்த காலத்தில் கழிவறையை சுத்தம் செய்யும் வேலையை இரண்டு வருடங்கள் இவர்கள் செய்ததாக சொல்வாள்.  . இன்றைக்குகூட அந்த பேச்சு வந்தபோது "மகாத்மா காந்தியே அந்த வேலையை செய்திருக்கிறார். ஆஸ்பத்திரியில் தினமும் யாரோ சிலர் அங்கு வரும் பலருக்காக  செய்கிறார்கள்." என்றாள் 
அடுத்தவனை கெடுத்து வாழ்வதும், பிறர் உழைப்பில் வாழ்வதும்தான் கேவலம். மற்றபடி எந்தவொரு  பணியும் இழிவானதல்ல என்று வீட்டிலும், பள்ளியிலும் சொல்லி  சொல்லித்தான் எங்களை ஆளாக்கினார்கள் .
இப்போது ?
அப்பப்பா !!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!
பாலும் திரியக்கூடாது. ஆனால் தயிர், வெண்ணெய் எல்லாமே எல்லாருக்கும்  வேண்டும்.
அது எப்படி முடியும் என்று நான் நினைக்கிறேன்.
கண்டிப்பா முடியும் ! என்னால் முடியும் !! எங்களால் முடியும் என்று மார்தட்டி சொல்பவர்கள், நீட்டி முழக்குபவர்கள் அந்தக்கலையை எனக்கும் மற்றவர்க ளுக்கும் சொல்லுங்களேன். ப்ளீஸ் ..ப்ளீஸ்ங்க .

No comments:

Post a Comment