Labels

About myself Name : Kumari S. Arunachalam alias Aruna S. Shanmugam Occupation : Form

Monday, September 11, 2017

HELLO, U S A CITIZENS,

Image result for image of cyclone
புயல் உங்கள் பூமியைக் கடந்து விட்டது என்று நம்புகிறேன்.
உங்கள் அனைவருக்குமாக ஆண்டவனைப் பிரார்த்திக் கொண்டிருந்தேன்.
தலைவலியும் காய்ச்சலும் தனக்கு வந்தால்தான் தெரியும் என்பார்கள்.
இதே தலைவலியை இரண்டாண்டுகளுக்கு முன்பு நாங்கள் அனுபவித்து  
இருக்கிறோம்.
சொந்தபந்தங்களை நேரில் காண்போமா அல்லது அவர்கள் எங்கள் உயிரற்ற     உடல்களை காண்பார்களா என்ற பயம் இருந்தது.
வீட்டிலும் வீட்டை சுற்றிலும் மழைத் தண்ணீர் நின்றபோதும் குடிக்க தண்ணீர் இல்லாமல் வானில் பறக்கும் ஹெலிகாப்டரை நோக்கி தண்ணீர் பிச்சை கேட்டது இன்றும் நினைவில் இருக்கிறது.
படிக்கிறகாலத்தில் என்னுடைய பிரெண்ட்ஸ் சர்க்கிள் எல்லோருமே வேண்டு மென்றே மழையில் நனைவோம். ஆடிப்பாடுவோம்.
வேலைக்கு சென்ற நாட்களில் மழைக்காலத்தில் மழையில் நனைந்தபடி டூ வீலர் ஓட்டுவது எனக்கு மிகவும் பிடிக்கும். 
ஆனால் ஒரு புயலில் நாங்கள்பட்ட அடிக்குப்பிறகு வானிலை அறிக்கையில் மழை வரும் என்று சொன்னாலே பயமாக இருக்கிறது.
"கடவுளே! நீ எவ்வளவோ அற்புதங்களை செய்யக்கூடியவன். எந்த இடத்துக்கு மழை தேவையோ, ஆறு..கடல்..வயல்.. இங்கெல்லாம்மட்டும் மழை பெய்யும் படி செய்ய உன்னால் முடியுந்தானே. பகல் முழுக்க கூலி வேலை செய்து விட்டு இரவில் பிளாட்பார்மில் படுத்து தூங்கும் அத்தனைபேரும் தாங்கள் கட்டியிருக்கும் கைலிக்குள் உடம்பை மறைத்துக்கொண்டு குளிரில் ஏதாவது ஒரு சுவர் அல்லது தூணோரம் சாய்ந்து நிற்பார்களே .. அந்தக்காட்சி உனக்கு ரொம்பப் பிடித்தமான ஒன்றா? எங்கு தேவையோ அங்கு மட்டும் உன் கருணை யைக் காட்டு!" என்று இன்றுவரைகூட வேண்டிக்கொண்டிருக்கிறேன்.
இர்தாபுயல் பற்றி நியூஸ் பார்த்தபோதெல்லாம் என்மனதுக்குள் ஓடிய சிந்தனை. 
மனிதன் என்னதான் விஞ்ஞானத்தை வளைத்துப் போட்டாலும் இயற்கையை பஞ்சபூதங்களை வெல்ல அவனால் முடியவில்லை என்பதுதான். 
U S A என்ற பேரைக் கேட்டதுமே ஒரு சில அடாவடி நாடுகளுக்கு ஒருவித அச்சம் இருக்கிறது என்பது உண்மை. ஆனால் இந்த சிம்ம சொப்பனக்காரர்கள் அனைவரையும் நடுங்கவைக்கும் அங்குசமாக புயலும்மழையும் நெருப்பும் காட்டுத்தீயும் தனதுகைவரிசையை காட்டத்தானே செய்கிறது.  வரப்போகிறது என்று முன்கூட்டியே சொல்கிறார்கள். வந்தபின் நிவாரணம் அளிக்கிறார்கள். ஆனால் வராமல் தடுப்பது பற்றி  ஏன் இன்னும் ஆராய்ச்சி செய்யவில்லை. அது முடியாதஒன்று என்று பஞ்சபூதங்களிடம்  தங்களது தோல்வியை ஒப்புக் கொள்கிறார்களா?
இந்த பஞ்சபூதங்களை கையில் வைத்துக்கொண்டுதான் "அடே மனிதா ! நீ என்னதான் முயற்சி செய்தாலும், நீ மனிதன்தான் .. நான் கடவுள்தான் " என்று எல்லாம்வல்ல அந்த மாபெரும்சக்தி  மனித இனத்திடம் சவால்விட்டுக் கொண்டிருக்கிறதா  ?" 
(இதை பதிவு செய்துகொண்டிருக்கும்போதே மழை ஆரம்பித்து விட்டது. வீட்டுக்குள் தண்ணீர் வராதபடி  துணிகளைக் கட்ட வேண்டும். சோ குட் பை ! ) 

No comments:

Post a Comment